ஆறுதல் படுத்த தான் வார்த்தைகள் இல்லாமல் போனது அவனுக்கு. அவள் கூறுவதும் நியாயம் தானே..! எல்லா பெண்களுக்கும் தன்னுடைய கணவனுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு சரியானது தான்.அவனுக்கு தான் என்ன பதில் கூறி அவளை சமாதானம் படுத்துவது என்பதை புரியாமல் மெளனத்தை கடைபிடித்து கொண்டு இருந்தான்.
சில கேள்விகளுக்கு மனிதரால் விடை கண்டுபிடிக்க முடிவதில்லை, விடையை அறிய ஆவல் கொண்டு தேடினாலும் விடை கிடைப்பதில்லை. உதிரனுடைய வாழ்க்கைக்கு இப்படி தான் என்றாகி விட்டது. மனிதனின் அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாதது என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல அடுத்த நிமிடம் நம்முடைய வாழ்க்கை எப்படி மாறும் என்பதை யாராலும் கூறமுடியாது என்பதும் உண்மை.
அவளின் கண்ணீர் துளிகள் அவனின் ஆடையை தாண்டி , அவனின் உடலில் பட, இதுவரை யோசித்துக்கொண்டு இருந்தவன் ‘ அவளின் கண்ணீர் துளிகள் மின்சாரம் பாய்ந்தது போல உடலில் ஏதோ செய்ய ‘ அவளை தன்னிடம் இருந்து வேகமாக பிரித்தவன், அவளின் கண்ணீரை தன் கை கொண்டு துடைத்து விட ஆரம்பித்தான்.
நுவலி, அவனின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு , தன்னுடைய தலையை அவனின் மார்பில் சாய்த்துக் கொண்டு “அவனின் மூச்சு காற்று வெளியிடும் சத்தத்தை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள் ” .அவளுக்கும் இந்த வாழ்க்கை எதற்கு..? ஏன் இந்த வாழ்க்கையில் என்னை இணைத்து வைத்து உள்ளது. நான் கேட்ட வாழ்க்கை என்ன.? கடவுள் எனக்கு கொடுத்த வாழ்க்கை என்ன.?. மற்ற பெண்களைப் போல நானும் சந்தோசமாக இருக்க வேண்டும், கணவனின் முகத்தை தினமும் காலையில் பார்க்க வேண்டும், அவளின் மார்பை என்னுடைய தலையணையாக இருக்க வேண்டும் , என்னுடைய சின்ன… சின்ன சந்தோசங்களும் துக்கங்களும் அவனுடன் இருக்க வேண்டும் என நினைத்தது குற்றமா.?. அவளின் இதயத்தில் எரிமலையே வெடித்து சிதற வெளியே கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தாள்.
அவளின் கண்ணீரை பார்க்க முடியாதவன் , அவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. அவளுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது அப்பொழுது. அவளும் அவனின் நெஞ்சினிலே புதைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அவளின் கைகளில் ஏதோ பிசுபிசுப்பாய் ஒட்ட ‘ தன்னுடைய கையை பார்த்தவள் அதிர்ச்சியாகி , இரத்தம் வருது …. இரத்தம் வருது , அவளோ அலற .
அவனோ பொறுமையாக “இரத்தம் தானே வருது .இதுக்கு ஏன்டி இப்படி அலற ”
அவள் சுத்தமாக மறந்தே போயிருந்தாள் .நேற்று தானே அவனுக்கு கத்தி குத்து பட்டது, இப்பொழுது நாம வேற அந்த அடிபட்ட இடத்தில் இவ்வளவு நேரமாக கையை வைத்து அழுத்தி இருக்கேன்.அவனுக்கு எப்படி வலித்ததோ…? முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் எப்படி கல்லு மாதிரி இருக்கான் பாரு ‘ மனதிற்குள் அவனை திட்டிய படி , வெளியே அழுகையுடனே அவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.
அவனோ தனக்கு அடியே படவில்லை என்ற ரீதியில் அவளின் தலையை மறுபடியும் தன் தோளின் மீது சாய்த்துக் கொள்ள , இவளுக்கு தான் கோவம் …. கோவமாய் வந்தது. வேகமாக அவனிடம் இருந்து விலகியவள் ‘அவனின் மேல் ஆடையை கழற்ற சொல்லிவிட்டு மருந்து எடுத்துவர சென்றாள்’.
அவனோ சாவகாசமாக கட்டிலில் அமர்ந்து இருக்க . மருந்தை கொண்டு வந்தவள் இவனின் கோலத்தைக் கண்டு காளியாக மாறிவிட்டாள். பின்ன என்ன.? போகும் போதே மேலாடையை கழற்ற சொல்லிவிட்டு சென்று இருந்தாள் , அவனோ எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறானே.’
கொண்டு வந்த மருந்தை கட்டிலில் வைத்துவிட்டு சென்று அறை கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்தவள் , அவனின் தலைமுடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்….
“ஆ” வலிக்கிறது டி .விடு டி ராட்சசி. ஏன்டி இப்படி பண்ற..?
நான் என்ன சொல்லிட்டு போனேன் நீ என்னடா இப்படி கல்லு மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்க?. சட்டையைக் கழட்டு டா.
ஏன்டி …! புருசனை இப்படி மிரட்டுற. அவன் மெதுவாக சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றி , இவளுக்கோ பொறுமை காற்றோடு பறந்து போனது. விட்டாள் அவனின் சட்டையை கிழித்து விடுவது போல வேகவேகமாக பட்டன்களை கழற்றியவள் அவனின் பனியனையும் கழற்றிவிட்டு , தான் கொண்டு வந்த பஞ்சினால் அவனின் இரத்தத்தை துடைத்தவள் வேகமாக மருந்தை வைத்து கட்டு போட்டு விட்டாள்.
கட்டு போட்ட பிறகு தான் அவளுக்கு சற்று வலி குறைந்த மாதிரி இருந்தது.
அடிப்பட்டது என்னவோ அவனுக்கு ‘அவனோ யாருக்கோ அடி பட்டது போல அமர்ந்து கொண்டு இருந்தான்.
நுவலி , தனக்கு தான் அடிப்பட்டது என்பது போல வலியால் துடித்துக்கொண்டு இருந்தாள். அடியோ அவனுக்கு , வலியோ இவளுக்கு ஏற்பட்டது அவளின் இதயத்தில்.
ஏன்டி , இது உனக்கே நியாயமாக உள்ளதா.? இந்த சின்ன காயத்திற்கு இவ்வளவு பெரிய கட்டு தேவையா.? இப்ப வந்து யாராவது என்னை பார்த்தாங்கனா ஏதோ எனக்கு தையல் போட்ட மாதிரி பரிதாபம் பட்டுவிட்டு , நலம் விசாரித்து விட்டு போவாங்க. ஏன்டி இப்படி பண்ற.? என்னை வெச்சி தான் கட்டு போட கற்றுக்கொள்கிறையா.? சொல்லு டி. உனக்கா இன்னொரு கத்தி குத்து கூட நான் வாங்கிக் கொள்கிறேன். அவளை சமாதானம் படுத்தும் விதமாக அவன் பேசிக்கொண்டு இருக்க.,
அவளுக்கோ கோவம் மட்டுமே அவன் மேல் அதிகரித்துக் கொண்டு இருந்தது. அவனின் கையை பிடித்து கடித்து வைத்தாள்.
அவனோ சிறிது கூட சத்தம் போடாமல் அவளின் குழந்தை தனமான நடவடிக்கைகளை கண்டு சிரித்துக்கொண்டு இருந்தான். அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “இங்க பாரு டி ” நான் எந்த பிறப்பில் புண்ணியம் பண்ணனோ தெரியவில்லை.? நீ எனக்கு மனைவியாக கிடைத்தது. உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் ,அதேபோல என்னுடைய வேலையையும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். நீ என்னுடைய இதயம் .என்னுடைய வேலையோ என்னுடைய மூளை போன்றது, இதில் நான் யாரையும் விட்டு விலக முடியாது. இதில் எதாவது ஒன்றை விடுகின்றேன் என்றால் அதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னாடியே என்னுடைய உயிர் என்னைவிட்டு போயிருக்கும். நுவலி, வேகமாக அவனின் வாயில் கை வைக்க.
உதிரன், அவளின் கையை தன்னுடைய வாயில் இருந்து எடுத்து விட்டு , அவளின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு “இரு டி நான் பேசி முடித்து விடுகின்றேன் ” அதுக்கப்பறம் நீ பேசு.
மறுபடியும் அவன் பேச தொடங்க, நான் உன்னை ஏமாற்ற வேண்டும்னு எப்பவும் நினைக்கல’ . உங்க வீட்டில் சொல்லி இருப்பாங்கனு நினைத்தேன். நானும் உன்கிட்ட கல்யாணத்திற்கு முன்னாடி ஒரு முறையாவது சந்தித்து என்னைப் பற்றி கேட்டு இருக்கனும் அப்படியே உன்னைப் பற்றியும் தெரிந்துகொண்டு இருந்து இருக்கனும் .நம்ம கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கு எனக்கும் தண்டனை உண்டு .நான் எதையும் வேண்டும்னு பண்ணவில்லை. நீ இப்படி கஷ்டப்படுவதை பார்த்தால் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. அப்படியே என்னோட இதயத்துல யாரோ ஆணி வைத்து அடிப்பது போல இருக்கிறது. நீ அமைதியா இருக்கிற நேரம் எல்லாம் யாரோ என்னை தீயால் சுடுவது போல உடம்பு எல்லாம் எரியுற மாதிரி இருக்கு .உன்னுடைய நிராகரிப்பு என்னை என்னவோ பண்ணுது. நான் எவ்வளவு பெரிய அடியை கூட வாங்கிக் கொள்வேன். அந்த அடி தர வலியையும் கூட சாதரணமாக தாங்கிக்கொள்வேன் ஆனால் உன்னோட சிறு வலி கூட என்னால தாங்கிக்கொள்ள முடியாது.
நுவலி, அவன் பேசுவதையே அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாலே தவற எதுவும் பேசவில்லை.
உதிரன், உன்னோட நிலமை என்னனு எனக்கு புரியுது. எதுவா இருந்தாலும் , எந்த முடிவா இருந்தாலும் நீயே எடு. இப்ப நீ எடுக்க போற முடிவு எதுவா இருந்தாலும் அதற்கு நான் சம்மதிக்கிறேன்.
நுவலி, வார்த்தையில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாது , நான் என்ன முடிவு எடுக்கனும்.?. நீங்க எதைப் பத்தி இப்ப பேசுறீங்க..?
உதிரன், நம்ம கல்யாண வாழ்க்கையில் இருந்து உனக்கு நான் விடுதலை கொடுத்து விடுகின்றேன். உனக்கு யாரை பிடித்து இருக்கோ அவங்களை கல்யாணம் கோ.அவன் தன்னுடைய மனதை கல்லாக்கி கொண்டு இந்த வார்த்தைகளை கூறினான்.
கல்யாணம் பண்ண என்ன பண்ணனும் ?.நான் யாரை கல்யாணம் பண்ணிக்க வேண்டும்னு நீங்க நினைக்கிறீங்க…? அதையும் சொல்லிவிடுங்கள். அப்பறம் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்னை விட்டு பிரிந்தால் என்னுடைய உயிர் பிரிந்துவிடும்னு சொன்னீங்க.இப்ப என்னடான்னா என்னை பிரிந்து விட சொல்றீங்க?. அப்ப நீங்க இறந்துவிடலாம்னு முடிவு பண்ணிவிட்டீங்களா.? அவளின் வார்த்தைகள் அவனின் இதயத்தை ஈட்டி போல தைக்க……
அவனோ ,கலங்கிய விழிகளுடன் அவளையே பார்க்க. அடுத்து என்ன பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை. வார்த்தைகளும் கிடைக்கவில்லை அவனுக்கு.
ஏன்டா ..!நீ என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோனு மட்டும் சொல்ற ஆனா எனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க .இதை நான் எந்த கணக்கில் சேர்க்கட்டும். இரண்டு நாள் முன்னாடி உனக்கு தெரியும் தானே ..! நீ என்ன வேலை செய்யுறனு எனக்கு தெரியாதுனு , அப்பவே இந்த முடிவு எடுக்க வேண்டியது தானே.சாருக்கு இவ்வளவு பெரிய மனசு இப்பதான் வந்ததா இல்ல எப்பவுமே கூடவே இருக்கா..? அவள் நக்கலா அவனைப் பார்த்து கேட்க.
அவனோ என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க.
சொல்லுடா …சொல்லு..? நான் என்ன பைத்தியமா உன்கிட்ட கேள்வி கேட்டுவிட்டு அமைதியாக இருக்க. நீ எல்லாம் ஒரு புருசனா டா , கல்யாணம் பண்ண பொண்டாட்டி கிட்ட வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்ற ..? உனக்கு ஊருக்கு நடுவுல ஒரு சிலைதான் வைக்கனும். எம்புட்டு தைரியம் இருந்தா என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்வ.? அவளின் வார்த்தைகளில் கோவம் வெளிவர.,
உன்னுடைய சந்தோசத்திற்காக தான் அப்படி சொன்னேன். அந்த வார்த்தையை சொல்லும் போது எனக்கு எப்படி தெரியுமா மனசு வலிச்சது.?. நீ என்னையே பழி சொல்ற?.
அடேய் மாங்காய் மடையா..! நான் எப்பவாவது உன்னை பிடிக்கவில்லைனு சொன்னேனா.?.
இல்லை.
எப்பவாவது உன்கிட்ட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொன்னேனா.?.
இல்லை.
அவளின் கை அவனின் கண்ணத்தில் பதிந்து இருக்க. அவனோ அமைதியா அவளையே பார்த்துக்கொண்டு இருக்க..,
அவனின் தலைமுடியை பிடித்து ஆட்ட , …
ஹேய் விடுடி ,வலிக்கிறது. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இப்படி வன்முறை எல்லாம் செய்யக் கூடாது.
இந்த வெங்காய பேச்சுக்கு எல்லாம் ஒரு குறைச்சலும் இல்ல. நான் என்ன நினைக்கிறேன் என்றெல்லாம் எதுவும் யோசிக்கிறதே இல்லை. நீயா ஒரு முடிவு எடுத்துக்கொண்டு, நீயா எதாவது பண்ண வேண்டியது. உன்னை என்னப் பண்ணலாம் ‘சுற்றும் முற்றும் எதையோ அவள் தேட…
அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு , நீங்க எதுவும் பண்ண வேண்டாம். இப்படியே காலம் முழுவதும் என்னோட நெஞ்சில் தலைசாய்த்து இருந்தாலே போதும்…..
Last ah sonnathu nalla iruku athaye pannalamm… Aana border ku poita ena panrathu🤔🤔🤔
Thank you sago 🥰