Loading

“காதலில் அன்பு பரிமாறிக்கொள்ளும் போது தான் நேரம் போவதே தெரியாது”.

எவ்வளவு நேரம் தான் அவர்களின் முத்த யுத்தம் நடந்ததோ ? இருவரும் அறியவில்லை. அவனின் வயிறு சத்தம் போட “அந்த சத்தத்தில் அவனை விட்டு விலகி மாமா நீ இன்னும் சாப்பிடவில்லை யா?”

         அவளின் கண்ணத்தை தன்னுடைய இரு கைகளால் பிடித்தவன் “சாப்பாடு தானே அப்புறமாக சாப்பிட்டு கொள்கின்றேன் எனக்கு இப்ப தேவை என்னுடைய காதல் தான் என்றவன் மறுபடியும் அவளின் இதழை வன்மையாக சிறைப்பிடித்து இவ்வளவு நேரம் பேசியதற்காக தண்டனையும் கொடுத்தான் தன்னுடைய இதழால் “. 

           சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் விலக ” வனஜா தான் இருவருக்கும் சாப்பாட்டை போட்டுக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றார்”.

       அவர் சென்றதும் தன்னுடைய கணவனைப் பார்த்து “மாமா இங்க பாரு என்னுடைய உதட்டை எப்படி கடித்து வைத்து இருக்க பாரு ? இப்ப நான் எப்படி சாப்பிடுவது ?”

         மருந்தை நானே போடுகின்றேன் டி என்றவன் “அவளின் உதட்டில் மென்மையாக முத்தம் வைத்தான் ” . மறுபடியும் அவனின் வயிறு சத்தம் போட , அவனின் தலையில் கொட்டு வைத்தவள் அவனை விட்டு விலகி அவனுக்கு சாப்பாட்டை எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள்.

இருவரும் கதை பேசிக்கொண்டே உணவை உண்டு முடித்து விட்டு வெளியே வந்தனர். அவனுடைய நண்பர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலிலே உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தனர். 

        உதி, “ஹாய் பிரண்ஸ் ” இவங்க தான் என்னுடைய மனைவி நுவாலி உதிரன் என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அனைவரையும் பார்த்து சினேகமாக புன்னகை செய்தாள். அவர்களும் மரியாதை செலுத்தும் விதமாக மீண்டும் புன்னகை செய்தனர். 

       நுவாலி, எல்லோரும் நன்றாக சாப்பிட்டீங்களா?

    “ம்”.

    சிங், “மச்சான்” என்னடா உன்னுடைய முகத்தில் ஒரு ஒளி வட்டம் தெரிகின்றது ? என்னவாக இருக்கும் ? ” தங்கச்சி அது என்ன ஒளிவட்டம் என்று நீயாவது சொல்லுமா?” 

      முதலில் சிவந்தவள் சில நொடிகளில் தன்னை தயார்படுத்திக் கொண்டு “அண்ணா நீங்க காலையில் கனவு கண்ட மாதிரி இதுவும் கனவாக தான் இருக்கும் . நீங்க மீண்டும் ஒரு முறை சரியாக பார்த்து சொல்லுங்கள் “

       சிங் , உதியை பார்த்து “அட சண்டாளா!என்னுடைய மானத்தை தமிழ்நாட்டு வரை கொண்டு வந்து கப்பல் ஏற்றிவிட்ட பாரு , அங்க நிக்கிற டா!”.

        ஈ….. ஈ.. ” மச்சான் ” மனைவி இடம் எதையும் மறைக்க கூடாது டா .

        உன்னுடைய உண்மையில் தீயை வைத்து கொளுத்த டா! “ஏம்மா தங்கையே! இவன் இதை மட்டும் தான் சொன்னானா ? இல்ல வேற எதையாவது சொல்லி வச்சி இருக்கானா?

          நீங்க உங்க காதலுக்காக அழுததை எல்லாம் சொன்னாரு அண்ணா! உங்க காதல் கதையை கேட்டு எனக்கு ரொம்ப வருத்தம் ஆகிவிட்டது. நீங்க பீல் பண்றேன் என்று உதியை தூங்க வைத்து விட்டீர்களாமே ! சிரித்துக்கொண்டே அவள் கேட்க.

           உதிரனை பார்த்து முறைத்து விட்டு “அப்போ ஒரு விசயத்தையும் மறைத்தும் வைக்கல? மறந்தும் தொலைக்கல?   

        ஆமாம் டா. 

   மணி, எல்லோரும் ஓய்வு எடுங்கள் எதுக்கு கதை அளந்து கொண்டு இருக்கிறீர்கள்? அனைவரும் ஓய்வு எடுக்க , அறையில் நுவாலியும் உதிரனும் நிறைய பேசிக்கொண்டே இருந்தனர். அவனின் கைவளைவிற்குள்ளே அவளும் தன்னுடைய நேரத்தை செலவிட்டு கொண்டு இருந்தாள். மாலை ஆனதும் அனைவரும் கிளம்ப “புன்னகையுடன் அனைவரையும் வழி அனுப்பி வைத்தாள்”. 

              அந்த தொழிற்சாலை இருந்த இடத்திற்கு சென்றவர்கள் தங்களுடைய பணியை பார்க்க ஆரம்பித்து இருந்தனர். 

 உதிரன் அங்கு கட்டப்படும் மேடையை கவனமாக பார்த்துக்கொண்டு இருந்தான். சில வீரர்கள் அந்த தொழிற்சாலையை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். சில வீரர்கள் யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் அணிந்து ” நீதிமானை ” பற்றி எவிடென்ஸ் தேடிச் சென்றனர். 

          என்ன சார் நாங்க செய்கின்ற வேலையையே பார்த்துக்கொண்டு இருக்கீங்க ? நாங்க எதாவது தப்பான வேலை செய்யுற மா என்ன? அங்கு மேடை அமைத்துக்கொண்டு இருந்தவர்களில் ஒருவன் கேட்டான்.

        உதி, அப்படி எல்லாம் எதுவும் இல்லை .

           அப்புறம் எதுக்கு சார் எங்களையே பார்த்துக்கொண்டு இருக்கீங்க? 

   நீங்க பாக்கிறது பார்த்தா எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக இருக்கு சார்.

       உதி, நீங்க செய்யுற வேலையை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை . மேடையை இப்படி தான் அமைக்க வேண்டும் என்றே எனக்கு தெரியாது? இப்ப தான் முதன்முதலாக பார்த்தேன் “அப்படியே ஆர்வத்தில் இங்கேயே பார்த்துக்கொண்டு நின்று விட்டேன் “. நான் பார்ப்பது உங்களுக்கு எதுவும் பிரச்சனையா? எதாவது பிரச்சனை என்றால் சொல்லுங்கள்!

        அண்ணே! அந்த கெடா மீசை கார மிலிட்டரியை போக சொல்லுங்கள். அவன் இங்க இருந்தா எப்படி நாம அண்ணன் கொடுத்த வேலையை சரியாக செய்வது ? எதாவது பேசி அனுப்பி விடுங்கள் அண்ணே! அங்கு வேலை செய்துக்கொண்டு இருந்தவன் “அங்கு தலைவன் போல காட்சி அளித்த ஒருவனின் காதில் மெதுவாக சொல்லிக் கொண்டு இருந்தான் “.

       கொஞ்ச நேரம் அமைதியாக இருடா! அவனை பார்த்தாலே தெரியுது ஒரு சுத்த கிராமத்தான் என்று ” அவன் என்கிட்டையே சொல்றான் இதுவரைக்கும் மேடை அமைப்பதை நான் பார்த்ததே இல்லை என்று ” இதை நம்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை டா. இது வரைக்கும் எத்தனை மேடையை அவன் பார்த்து இருப்பான்? எத்தனை மேடைக்கு காவல் இருந்து இருப்பான் ? ஆனா என்கிட்டையே பொய் சொல்றான். அவன் பேசும் தமிழை கவனித்தாயா? “பொறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடு தான்!”

          அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை அண்ணா! பார்க்க நல்லா இந்தி பட ஹீரோ மாதிரி இருக்கான். அவனைப் போய் தமிழ்நாட்டு பையன் என்று சொல்றீங்க?’ அவன் பேசுற தமிழ் கூட எனக்கு ஒழுங்காவே புரிய வில்லை .

       உனக்கு என்ன தான் புரியும். உன்னை மாதிரி தமிழையே தகராறா பேசினால் மத்தவங்க பேசுறது எல்லாம் சரியில்லாமல் தான் தெரியும். அவன் என்ன ஒரு மொழி தெரிந்தவனா? எனக்கு தெரிந்தவரை பல மொழிகள் தெரிந்தவனாய் இருப்பான் .இப்ப அமைதியா மேடை அமைக்கும் வேலையை மட்டும் பார்த்தால் போதும் புரிந்ததா ? அவன் போன பிறகு நம்முடைய வேலையை பார்க்கலாம். அவனுக்கு ஏதாவது சந்தேகம் வந்து விட்டது போதும் ” நாம் செய்த அத்தனை வேலையையும் வீண் தான் “. நீ உன்னுடைய நார வாயை அமைதியாக வைத்துக்கொண்டு இரு டா .

       சரி அண்ணே! என்பதை மட்டும் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான் .

      உதி, என்ன அண்ணே! நான் கேட்டதற்கு பதில் எதுவும் இல்லையா? 

           அது ஒன்னும் இல்லை சார்! நீங்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்க இருந்துக்கொண்டு பாருங்கள் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இங்க வேலை செய்யுற இடத்தில் இருந்து தூசி எதாவது உங்க கண்ணுல விழுந்து விட போகிறது சார் பார்த்து இருங்கள்”. ” போய் விட்டால் மறுபடியும் பார்வை கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான் ” உள் அர்த்தத்துடன் அவன் பேச,

       உதி , சிரித்துக்கொண்டே ” என்னுடைய கண்ணு போனால் நீங்க உங்க கண்ணை எனக்கு தர மாட்டீர்களா அண்ணா?” இவனும் ஒரு உள் அர்த்தத்துடன் கேட்க.

        தன்னுடைய மனதிற்குள் உதிரனை மெச்சி கொண்டான் அந்த தலைவன். வெளியே தம்பி நல்லா தமாசா பேசுது . அடேய் யாரு அங்கே சரியா வேலை செய்யுங்கள் டா ” அவர்களிடம் வேலை வாங்குவது போல அங்கிருந்து நகர்ந்தான் அவன் “.

               ‘டேய் மாப்பிள்ளை” நீ வீட்டுக்கு வந்தது ஏன்டா என்கிட்ட சொல்ல வில்லை? நீ எப்ப வீட்டுக்கு வந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு தானே வருவாய் இந்த முறை மட்டும் எதுக்கு டா என்கிட்ட சொல்லாமல் வந்த? என்னை அப்படியே மறந்து விட்டாயா டா? ராம் ஃபீல் பண்ணி பேசிக்கொண்டே போக,

          உதி, சார் நீங்க யாரு? நீங்க யாரையோ நினைத்து தவறாக என்னிடம் வந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் . நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை சார். 

      ராம்,உ …… எதையோ பேச வாய் திறக்க, அதற்குள் உதிரன் முந்திக்கொண்டு மிகவும் மெதுவாக “டேய் எரும பின்னாடி பாரு டா “

       அப்பொழுது தான் ராம் பின்னாடி ஓரக்கண்ணால் பார்த்தான் “அங்கு மேடை வேலைச் செய்துக்கொண்டு இருந்த அனைவரும் இவர்களையே தான் பார்த்துக்கொண்டு இருந்தனர் “. அவனுக்கு ஏதோ தவறாக இருப்பதாக தோன்ற உதியை பார்த்து ” சாரி சார் நான்தான் உங்களிடம் தவறாக வந்து பேசிவிட்டேன் “. போன் வராத தன்னுடைய போனை காதில் எடுத்துக் வைத்துக்கொண்டு “ஹலோ மாப்பிள்ளை எங்கடா இருக்க ? நீ நினைத்து இங்க ஒருத்தர்கிட்ட போய் பேசிட்டேன் டா” எல்லோரும் என்னையே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாங்க டா’ “ஓ அப்படியா நீ இன்னும் அங்கேயே தான் இருக்கியா? ” சரி மாப்பிள்ளை போனை வைக்குறேன் டா. 

அங்கிருந்து அப்படியே போய் விட்டான். அங்கு வேலை செய்துகொண்டு இருந்த அனைவரும் இவர்களைப் பார்த்து ஒரு திட்டம் தீட்ட கடைசியாக அந்த திட்டம் புஸ் என்று போய் விட்டது.  

        உதிரன், வேலை செய்யும் அவர்கள் கவனிக்காமல் இருக்கும்போது அங்கு இருப்பவர்களை வீடியோ எடுப்பதும் ,” அவர்கள் பார்க்கும் போது வீடியோ பார்ப்பது போல நடிப்பதும் ” என்று இருந்தான். நேரம் செல்ல … செல்ல வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு சென்றனர்.

இரவானதும் அங்கு இருந்து கிளம்பியவன் நேராக தன்னுடைய வீட்டிற்கு வந்துவிட்டான். நீதியின் ஆட்களுக்கு தான் அங்கு இருப்பது போலவும் ஆனால் கேர்லசாக இருப்பது போன்றவும் ஒரு நாடகத்தை போட்டு வைத்தான். தன்னுடைய வீரர்களிடம் மட்டும் ” அனைவரும் கேர்புல்லாக இருங்கள்! எவனாவது வந்து உங்களிடம் வம்பு செய்தாலும் அமைதியாக அந்த விடத்தை விட்டு சென்று விடுங்கள்”. அனைவரும் சீக்கிரமாக உறங்க சென்று விடுங்கள் ஆனால் எப்பொழுதும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இருங்கள் ” பாய் பிரண்ட்ஸ் ” என்று கூறிவிட்டு அவன் கிளம்பிவிட்டான். 

          சிங், தன்னுடைய அறையில் உட்கார்ந்துக் கொண்டு நீதியைப் பற்றி அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து கொண்டு இருந்தான். மாறுவேடத்தில் நீதிமானின் இடத்திற்கு சென்ற தன்னுடைய நண்பர்களுக்கு அறையில் இருந்தபடியே வழி சொல்லிக்கொண்டு இருந்தான். இவனின் ஆலோசனை படியே அவர்கள் ஒரு அடியாய் முன்னேறி சென்று கொண்டு இருந்தனர். அந்த வீட்டிற்குள் சென்றவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கமாக சென்று “கம்பியுட்டர் , பைல்ஸ் , சிடி ” போன்ற பலவற்றை சேகரித்து கொண்டு இருந்தனர். யாரோ ஒருவர் அந்த வீட்டின் உள்ளே வர ,” அனைவருக்கும் அதை அறிவித்தவன் அப்படியே அமைதியாக அனைவரையும் பதுங்க சொன்னான் “. வந்தவன் எதோ ஒரு டாக்குமென்ட்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். அவன் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு அனைவரையும் வேகமாக வெளியே வர சொன்னவன் “சீக்கிரமாக தங்களின் இடத்திற்கு வரும் படி சொன்னான் “. சிறிது நேரம் கழித்து ஒவ்வொருத்தராக சிங் இருந்த அறையில் நுழைந்து தாங்கள் எடுத்து வந்த ஆதாரங்களை அவனிடம் கொடுத்தார்கள். எல்லா ஆதாரங்களையும் வாங்கி பத்திரமாக தன்னுடைய பையின் உள்ளே வைத்தவன் அதற்கு ஒரு லாக் போட்டுவிட்டு தன்னுடைய ஆசை காதலி சோனாவிடம் பேச போன் எடுத்துக்கொண்டு அந்த அறையின் பால்கனிக்கு சென்றுவிட்டான். மற்றவர்கள் இவனின் செயலை கண்டு சிரித்துக்கொண்டே தங்களின் கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். 

        அண்ணே! அந்த மிலிட்டரி ஆட்கள் யாரும் வெளியே இல்லை. எல்லோரும் எப்பவோ ரூம்க்கு உள்ளே சென்று விட்டனர். இந்நேரம் ரூம் கதவை மூடிவிட்டு உறங்க சென்று இருப்பார்கள் .

          சரி…சரி நீங்க எதையும் அவசர குடுக்கையாட்டம் செய்து வைக்காதீர்கள் புரிந்ததா? நமக்கு இன்னும் நேரம் நிறைய இருக்கு. நாம பண்ற பிளான் மற்றவர்களுக்கு தெரிய கூடாது புரிந்ததா? இந்த பிளான் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே கசியவே கூடாது. அப்படி ஒரு நிலைமை வந்தால் நீங்கள் யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க! நீதிமான் அண்ணன் என்ன செய்வாரு என்று உங்களுக்கு தெரியும் நான் எதையும் தனியாக சொல்ல வேண்டியது இல்லை. ஆனாலும் ஒரு முறை நினைவுபடுத்துறேன்” உங்க குடும்பத்தில் இருக்கும் ஒரு சிறு உயிர் கூட உயிர் சற்ற பொருளாகிவிடும் புரிந்ததா? அந்த குரல் சற்று கோவமாக எச்சரிக்கை செய்துக்கொண்டு இருந்தது. இதை எல்லாத்தையும் மெதுவாக அவனின் சற்று தொலைவில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தான் சிங். யாருக்கும் தெரியாமல் வந்த வழியே தன்னுடைய அறைக்கு வந்து படுத்துக்கொண்டான். 

         இங்கு வீட்டிற்கு வந்தவன் மெதுவாக வீட்டின் உள்ளே செல்ல “அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு உறங்க சென்று கொண்டு இருந்தனர் “. உதிரனைக் கண்ட மணி பாட்டி “என்னடா பேராண்டி ? என்று நமட்டு சிரிப்பு சிரிக்க”.

      வனஜா, வா பா வந்து உட்காரு நான் சாப்பாடு எடுத்து வைக்கின்றேன்.

        உதி, நீங்க போய் படுத்துக் கொள்ளுங்கள் நானே எனக்கு சாப்பாடு போட்டு சாப்பிடுறேன்.

         மணி, நான் போய் உன்ற பொண்டாட்டியை கூப்பிட வா டா ! 

          பாட்டி நீ எந்த ஆணியும் கழட்ட வேண்டாம் போய் அமைதியாக உறங்கு . அவர்கள் இருவரும் உறங்க சென்றுவிட, கண்ணன் தனக்கு உறக்கம் தான் முக்கியம் என்று எப்பொழுதோ சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்க சென்றுவிட்டார். இந்நேரம் அவர் செவ்வாய் கிரகத்தை தாண்டி வியாழனை நோக்கி சென்று கொண்டு இருப்பார். தனியாகவே உணவை சாப்பிட்டு முடித்தவன் சிறிது நேரம் தன்னுடைய மொபைலை பார்த்துவிட்டு “சிங் அனுப்பி இருந்த ஆதாரங்களை எல்லாம் பார்த்தவன்” போனை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றான். 

      கதவு தாழ்ப்பாள் போடாமல் சாத்தி மட்டும் வைக்கப்பட்டு இருந்தது. விளக்கு அணைக்கப்பட்டு , கட்டிலில் தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு நுவாலி உறங்கிக் கொண்டு இருந்தாள். சத்தம் வராமல் கதவை தாழ்ப்பாள் போட்டவன் நுவாலியின் அருகில் சென்று அந்த தலையணையை எடுத்து தூரமாக வைத்தவன் ,அவளின் அருகில் படுத்துக்கொண்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.  

முதலில் பயந்தவள் தூக்க கலக்கத்தில் கண்களை மெதுவாக திறந்து பார்க்க “தன்னுடைய கள்வன் தான் என்பதை அறிந்ததும் அவனின் நெஞ்சிலே தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டு மறுபடியும் உறங்க ஆரம்பித்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்