Loading

அத்தியாயம் 10

 

ச்சே… சாதனாவும்,ப்ரீத்தியும் இந்த மாதிரி இருப்பாங்கன்னு. கொஞ்சங்கூட எதிர்பார்க்கல… .

 

அகல்யா அக்கா,. மெர்லினாவிற்காக அவங்களுக்கு வந்த வாய்ப்பை  விட்டுக்கொடுத்துருக்காங்க,.இதை அறியாத மெர்லினா அக்கா,.அகல்யா மேலயே சந்தேகப்பட்டாங்களே,.  இதுக்கெல்லாம் காரணம்,..அந்த  இரண்டு கேடி ரவுடி புள்ளைங்க… அவங்க இரண்டு பேரையும் சும்மாவே விடக்கூடாது… .

 

நானே  எப்படியாவது முயற்சி செய்து அகல்யா அக்காவையும், மெர்லினா அக்காவையும் சேர்த்து வைப்பேன்… .

 

வருணிகா, “உன்னால முடியுமா மிதுன்யா,.  

 

ம்ம்ம். கட்டாயமாக என்னால முடியும்.மெர்லினா அக்காவிடமே  நானே.அவங்களுக்கு புரிகிற. மாதிரி எடுத்துச் சொல்லி அகல்யாஅக்கா  மேல  தப்பு இல்லை என்பதை புரிய வைக்க  போறேன்… 

 

உடனே சஞ்சனா,   நீ  என்ன  சொன்னாலும்  கேட்கிற நிலைமையில் அவங்க  இல்லாத போது அவங்கள நீ எப்படி சமாதானப்படுத்தவாய்,.  

 

அவங்ககிட்ட பேசி மெர்லினா அக்கா  மனசை மாற்றி,.  புரிய வைப்பேன்… அந்த வேலையை இப்போதே தொடரப்போகிறேன் என்றவளோ  ஓடினாள்… .

 

ஹேய்,.  மிதுன்யா.. நில்லுடி… 

 

நீ  எத்தனை முறை கூப்பிட்டாலும் அவளுக்கு கேட்காது,.. ஏனென்றால் அவ போயி ரொம்ப நேரமாகுது…. 

 

அதற்குள்ளும் சஞ்சுவின் போய் ஒலித்தது.. அறையை விட்டு வெளியே சென்றாள்… .

 

மெர்லினாவின்அறையை  நோக்கிச் சென்ற. மிதுன்யா.. சாதனாவும், ப்ரீத்தியும் திட்டம் தீட்டியதைக் கவனித்து ..விட்டாள் ..

 

இவுக பேசியத பார்த்த திரும்பவும் அகல்யா அக்கா மேல  வெறுப்பு வருகிற அளவுக்கு உண்டாக்க  போறிகளா,  இந்த  திட்டத்தை நானே  முறியடிப்பேன்… 

சஞ்சனா உள்ளே வந்ததுமே… யாரிடம் இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தாய் என்ற  சந்தேகத்தோடு கேட்டாள் வருணிக்க.. 

 

படுத்துக்கொண்டே,..எங்க அப்பா தான் பேசுனாங்க.. சும்மா தான்  போன்  பண்ணிருக்காங்க,.. வேற  ஒன்னும்  இல்லை.. டி.. என்று இருவரும் படுத்துக்கொண்டே  பேசினார்கள்… 

 

பிறகு மிதுன்யா வந்து கதவை தாழ்ப்பாள்  போட்டாள்.. என்னடி.. எதுக்காக அப்படி ஓடுன… 

 

அடியே!.. இன்னும் இரண்டே  நாளில்  அகல்யா அக்காவும்,மெர்லினா அக்காவும்  பேசிக் கொள்ளப் போறாங்க,.. 

 

படுக்கையில் இருந்து வேகமாக எழுந்த வருணிகா.. என்னடி.. சொல்ற  உண்மையாக வா… 

 

ஆமாம்.. டி.. இப்போது  நான் எங்க  போனேன் தெரியுமா!.. மெர்லினாவுக்குத் அக்கா அறைக்குச் சென்றேன்.. அந்த அக்கா அறைக்குள்  இருவரும்  நுழைந்ததைப்  பார்த்தேன்.. அவங்க மெர்லினா அக்காவிடம் இப்போது  ஸ்போர்ட்ஸ் டே… வருதுல.. அதுல.. அகல்யா கலந்து கொள்ள  போறாங்க என்று  ஒரு  பொய்யான  தகவலைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.. 

 

அந்த சமயத்தில் உள்ளே போய், ஏம்மா.. இது எப்போது  நடந்துச்சு… என்று அவர்களிடம் கேட்டேன்.. 

 

அதற்கு இரண்டு பேரும் ஷாக் ஆகி.. உன்னை  யாரு மெர்லினா அறைக்குள்  வரச் சொன்னா.. இங்கிருந்து கிளம்பு என்று சத்தமிட்டார்கள்… மெர்லினா அக்கா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. அவங்க இருவரும் ரொம்ப  கூச்சலிட்டார்கள்.. என்னை வெளியே தள்ள பார்த்தார்கள்… 

 

அவங்க இரண்டு பேரும்  கையைத் தடுத்து, அக்கா.. உங்களுக்கு என்  மேல் கோபம்  இருக்கலாம்..நான்  வந்த  புதுசில்  உங்களிடம்  அப்படி  பேசியது  தப்பு தான்  ..அதுக்காக நான் சொல்ல  வருவதை மட்டும் கேட்காமல்  இருக்காதீர்கள்.. தயவுசெய்து அக்கா, கொஞ்சம்  கேளுங்க!..என்றாள் மிதுன்யா.. 

 

சாதனா, ப்ரீத்தி… கொஞ்சம்  அவளை  உள்ளே  விடுங்க..என்ன தான் சொல்றானு  பார்ப்போம்… 

 

ரொம்ப  நன்றி..மெர்லினா அக்கா… 

 

ம்ம்ம்.. நீ  எத பத்தி வேணும்னாலும்  பேசலாம்.. ஆனால்  அகல்யாவைப் பத்தி மட்டும் பேசாதே.. என்றாள் வெறுப்புடன்… 

 

சாதானாவும்,ப்ரீத்தியும் மிதுன்யாவைப் பார்த்து நக்கலாக சிரித்தார்கள்.. சொல்லுடி.. சொல்லு.. நீ  என்ன  சொன்னாலும் அவ நம்ப மாட்டாள் என்று இருவரும் மனசுக்குள்ளேயே நினைத்தார்கள்… 

 

  அக்கா, இவுக இப்ப  வந்து ஸ்போர்ட்ஸ்.. டே   நடக்கப்போகிறது என்று  சொன்னாங்களே அது  பொய் என்றாள்.. 

 

என்னது பொய்யா!.. அவங்க பொய் தான்  சொல்றாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்… அக்கா,நீங்கள் எப்போதும் அகல்யா அக்காவோடு பேசாமல் போனீங்களே, அன்றிலிருந்து இன்று வரை ஸ்போர்ட்ஸ் எதிலும்  கலந்து கொள்ள  மாட்டேன் என்று  உறுதியாக சொல்லிட்டாங்க என்று கூறினாள்  மிதுன்யா… 

 

அதனைக் கேட்டதும் மெர்லினா  அதிர்ச்சியாகி கட்டிலில் அமர்ந்தாள்… தலையில் கை வைத்து என்ன இவ ஒன்னு  சொல்றா, அவங்க ஒன்னு  சொல்றாங்க யாரு சொல்றது நிஜம் என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தாள்… 

 

சாதனாவும், ப்ரீத்தியும் இவ  சொல்றத நம்பாதே, மெர்லினா.. இவ  இப்ப  வந்தவள்.. நாங்கள் உன்னுடன் ஒன்றரை வருடமாக கூட  இருக்கிறோம்.. உன்னையும் அகல்யாவையும் சேர்த்து வைப்பதற்காக  ஏதோ  ஒரு திட்டத்தோடு  கூறுகிறாள்… 

 

இல்லக்கா, நான்  இப்ப வந்தவள்  தான்.. கல்லூரியில்  நடக்கின்ற விஷயங்கள் எல்லாம் எனக்கும்  தெரியும்…ஸ்போர்ட்ஸ் நம்ம கல்லூரியில்  நடத்தவே இல்லை… இது  எல்லாம்  மாணவிகளுக்கு  தெரிந்த ஒன்று.. உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது. அது  தான் எனக்கும்  புரிய வில்லை…

 

அனைத்திலும்  கவனமாக உள்ள  நீங்க அகல்யா விஷயத்தில் மட்டுமே கண்ணை மூடிட்டு இருக்கீங்க… நீங்க எப்போதும்  இவுக பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளும் விதம் இந்த கல்லூரியில் உள்ள எல்லாருக்குமே சந்தேகமாக இருக்குது…உங்களுக்கென்று சுயமாக யோசிக்க தெரியாதா,. என  அதிகமாக பேச பேச மெர்லினா அக்கா மெளனமாக இருந்தாள்… 

 சரிங்க..கா. நான் கிளம்புறேன்..என்று விடை பெற்றாள்…

 

இனியும் வருவாள்… .

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்