“மிதுன்யா சிறு வயதில் ஆசிரமத்தில் வளரந்தவள்.. பிளஸ் 2 படித்து முடித்தவள் ..ஆசிரமத்தில் உள்ள சிஸ்டர் ,பாதர் கல்லூரியின் படிப்பை தொடரலாம்மே என கூறியுள்ளார்கள்…ஆனால் மிதுன்யாவே அவளுடைய நோக்கம் படிப்பதில் ஆர்வம் இல்லை என கூறிவிட்டாள். பிறகு இரண்டு வருடங்களில் ஆசிரமத்திற்குச் சேவை செய்வது என்ற எண்ணத்தில் ஓடியது…
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை கணித்தவள்.. நாமும் கல்லூரியில் சென்று படித்தால் குழந்தைகளுக்குத் தனியாக பாடம் கற்று கொடுக்கலாம்மே என்ற யோசனை எழுந்தது. இந்த ஆசிரமத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் நடத்தலாம்மே இங்குள்ள குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சிந்தித்து முடிவெடுத்தாள்…
சிஸ்டரிடம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அவளுடைய விருப்பத்தைக் கூறினாள்…
ஆசிரமத்தில் உள்ளவர்களும் அவளின் விருப்பத்திற்கு எதிரப்பு தெரிவிக்காமல் அனுமதி அளித்தனர்…
அவளின் ஆசையே கல்லூரியின் அனுபவங்களை அனுபவிக்கவும், நன்றாக படித்து பட்டம் பெறனும் என்ற நோக்கத்தில் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கிறாள்.
கல்லூரியில் பழகும் தோழிகள் மூலம் சில சண்டைகள் வர ஆரம்பித்தது… மிதுன்யா அன்பான பாசத்திற்கு கட்டுப்பட்டவள்… அவளுடன் பழகும் தோழிகள் மூலமாக மெர்லினா, அகல்யாவின் சேவைகள் செய்ததை அறிந்தாள்.. அவங்க இருவரையும் பத்தி முழுமையாக தெரிந்து கொண்டாள்.. … அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க சில முயற்சிகள் மேற்கொள்கிறார்… அந்த முயற்சியும் வெற்றியடைகிறது…
அகல்யாவின் அக்கா என்று கூட அறியாமலேயே இருவரும் பாசமாக பழகினார்கள்… அகல்யாவின் அம்மா பவதாரணியின் இன்னொரு மனநிலை தான் பத்து மாதம் வயிற்றில் சுமந்த குழந்தையை அவங்க அத்தை ஆசிரமத்தில் கொண்டு போட்டது அவளை ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் வருத்தியது… எப்படியாவது அந்த குழந்தையை கண்டுபிடித்து அவளிடம் மன்னிப்பு கேட்கனும் என்ற எண்ணத்திலேயே இருந்தாள் ..
இறுதிகட்டமாக குழந்தையைப் பத்தி ஆராயந்து காணும் போது அவங்க அத்தை தேவநாயகியின் மூலமாக மிதுன்யா தான் அவளுடைய குழந்தை என்ற உண்மை வெளிவருகிறது..
.எதிர்பாராத சூழ்நிலையில் அவளது உறவுகள் பத்தி தெரிய வருகிறது…மிதுன்யா ஆசிரமத்தில் குழந்தைகளுக்காக சேவையைத் தொடர்வாளா,.. அவள் சொந்தங்களோடு அவங்க அம்மா, அப்பா, தம்பி தங்கைகளுடன் இருந்துவிடுவாளா என்பதை இப்படைப்பு,.. ‘
டீசர்ல சில டவுட்ஸ் இருக்கு!!!.. கதையை படிச்சு தெரிஞ்சுக்கலாம்!!!..