Loading

அத்தியாயம் 12

 

 பவதாரணியும்,நிவாஸ் வந்த  காரணத்தை அறிந்து கொண்ட  அவங்க அத்தை  தனியாக அழைத்து கண்டித்தாள்.

 

நீ  செய்கிற  ஒவ்வொரு விஷயமும் எனக்கு தெரியும்.. இப்போது உன்னை  எம் பொண்ணு வீட்டு பங்கஷனுக்கு தான்  வரவழைத்தேன். ஆனால் நீயோ வேற  ஒரு விஷயமாக வந்துருக்க அப்படித்தானே!… 

 

அது எப்போதும்  நடக்காது.என அதிகாரத்தோடு சொன்னாள் தேவநாயகி. 

 

அனைவருடைய வாழ்க்கையிலும் ஏராளமான  ஆசைகள்  இருக்கும்.. அந்த ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு நீங்க சொன்ன  ஒரு வார்த்தைக்காக பதினெட்டு வயதில் திருமணம் முடித்து வைத்தீர்கள்… 

 

அந்த வாழ்க்கையோ ஒரு வருடம் கூட என்  கணவனோடு வாழ விடாமல் விதி அவரின் உயிரை பிரித்து விட்டது… 

அவ்வளவு  தான்  என்னோட  வாழ்க்கை  என்று  நினைத்திருந்த  போது  என் வயிற்றில்  ஒரு  கரு  உருவாகியது.. அந்த  நேரத்தில்  இந்த  குழந்தையைப்  பெற்றெடுத்த மறு  வாரத்தில் நீங்க எனக்கு இன்னொரு கல்யாணத்திற்கு  ஏற்பாடு செய்தீர்கள்.. 

 

அந்த  திருமணம்  வேண்டாம் என  மறுத்தும்  கட்டாயப்படுத்தி என்னை சம்மதிக்க வைச்சுட்டீங்க!. ,..இறுதியாக நான்  பெற்றெடுத்த குழந்தையை என்னிடமா  தராமல்  நானே  வளர்த்துக்கிறேன் என்று  கூறியதால் உங்களிடம்  ஒப்படைத்தேன்..

 

ஆனால்  நீங்க  அந்த  குழந்தையை  ஒரு  ஆசிரமத்தில் போட்டு  வந்துட்டீங்க,.. அந்த குழந்தை  என்ன பாவம் செய்தது.. என்  அனுமதி  இல்லாமல் அந்த  குழந்தையை  ஆசிரமத்தில் போட்டது  உங்க தப்பு… எல்லா தப்பையும்  நீங்க பண்ணிட்டு இப்ப எங்கள  போக  வேண்டாம்  சொல்றதுக்கு நீ யாரு என்றாள் ..

 

அடியே,.. நீ யாருக்கிட்ட  பேசுறேனு  தெரிஞ்சு தான்  பேசுறீங்களா என்று கேட்டாள்.. ஆமாம் அத்தை நீங்க யாரென்று  தெரிந்து  தான்  பேசுறேன் என்றாள்..

நிவாஸ்,பேச வந்தவரை,தாரணி இன்னிக்கு நான் பேசியே  ஆகனும் என்று கூறினாள்… 

அவங்க அத்தை தேவநாயகியிடம் எம் பொண்ண தேடி கண்டுபிடித்து அவளை  என்  மூத்தமகளாக இருப்பாள்  அதை  யாராலும்  ஒன்னும்  சொல்ல முடியாது என 

கோபமாக பேசி விட்டு, அந்த மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் தாரணி…

 

இரவினில்  பஸ் போடிக்கு ,பஸ்  ஏறியதும் தம்  நண்பனுக்கு போன்  செய்து  தகவலைச் சொன்னான்..அவனும்  சரிடா,.. நானே  நேரத்தைக் கணக்கு காலையில் காரில் உங்களை  கூப்பிட  வந்துடுறேன்… 

 

அகல்யாவும், மரத்தடியில்  அமர்ந்திருந்தாள்.. வெகுநேரமாகியும் அவள்  வரவே இல்ல,..அப்புறம்  சஞ்சனா  வந்து  அவள்  உங்களை கிளாஸ்  ரூமுக்கு வரச்  சொன்னாள்…

 

அகல்யாவும்  வேகமாக ஓடினாள்… கரெக்ட்டாக.. அந்த நேரத்தில் ப்ரீத்தி பவர்  கட்  பண்ற  அறைக்குள்  நுழைந்து சுவிட்ச்சை  அமர்த்திவிட்டு வந்து விட்டாள் ..

 

சாதனா,அவளிடம்கேட்க..ம்ம்ம்.. வெற்றி  நமக்கே எனச்  சொல்லிட்டு இவளும்  கிளாஸ் அறைக்கு வெளியே நின்னு  மறைமுகமாக கவனித்தாள்… 

 

அகல்யா, உள்ளே  நுழைந்ததும் வெளிச்சமாக இருக்க, அப்போது  மைக்கை  ஆன்  செய்து  பேச ஆரம்பித்தாள். ஹலோ அகல்யாநான் மெர்லினா பேசுகிறேன்.. உன் முகத்தைப்  பார்த்து பேச  எனக்கு தைரியம்  இல்லை.. என்னை  மன்னித்து விடு.. உன்னை  சந்தேகப்பட்டு பேசியது  என்னோட  தப்பு தான்.. சாதனா, ப்ரீத்தி பேச்சைக் கேட்டு உன்னை  வெறுத்தது மிகப்பெரிய தப்பு என்பதை  நான்  உணர்கிறேன் ..அதுக்காக என்னை  மன்னித்து உன்  தோழியாக ஏற்றுக் கொள்வாயா,.. என்று கெஞ்சி அழுதாள்… 

 

பிறகு அகல்யா,அப்படியே உட்கார்ந்து இருக்க, மெர்லினா வந்ததும்  இருவரும் ஒருவருக்கொருவர் ஸாரி கேட்டு அழுது ஒன்றாக இணைந்தார்கள்.. 

 

இதைப்  பார்த்து கடுப்பாகி போன  ப்ரீத்தியும், சாதனாவும்  வேகமாக அவங்க அறையை நோக்கி நடந்து கொண்டிருந்த போது எதிர்க்கே  அகல்யாவும், மெர்லினாவும்  கைகோர்த்து நின்று  வெறுப்பேற்றினார்கள்… 

 

மிதுன்யா சாதனாவைப் பார்த்து, உன்னிடம் ஒரு  முக்கியமான விஷயம் சொல்லனும்.. நீங்க இருவரும்  சேர்ந்து ஒரு  பிளான்  பண்ணீங்களே அது  எப்படி  தோல்வியாச்சுனு  தெரியுமா!.. நான்  தான்  நீங்க என்ன  பண்றீங்கன்னு  தெரிஞ்சுக்கத்தான் உங்க பின்னாலேயே  வந்தேன்..  அதுக்காக தான் எல்லா சுவிட்ச்சையும்  ஆப்  பண்ணிட்டு வந்தேன்… ஆனால்  ப்ரீத்தி ஆப்புல தான்  இருக்குதுனு  நினைச்சு ஆன்  பண்ணிட்டா!.. இது  எப்படி  இருக்குது.. 

 

சூப்பர்.. டி.. என்று  வருணிகாவும், சஞ்சனாவும் பாராட்ட.. அகல்யாவும் மெர்லினாவும் அவளுக்கு நன்றி  சொல்லி புன்னகையோடு  அவங்க  கடமையைச்  செய்ய  தயராகினார்கள்..

 

மறுநாள்,தாரணியும்,நிவாஸ்.தம்  பொண்ணு இருக்கிற இடத்தை  சீக்கிரமாக கண்டுபிடிச்சிடுவோம் என்ற  உறுதியோடு என்று  காரில்  போய் கொண்டிருந்த  சமயத்தில் தேவநாயகியின்  கார்  குறுக்கே வந்ததும், காரை  நிறுத்தினார்கள்… 

 

வெளியே வா, தாரணி என்று அவங்க  அத்தை  அழைத்து,என்னை மன்னிச்சுடு.. நான்  செஞ்ச பாவம்  கொஞ்சம்  நஞ்சம் இல்ல… நான்  செய்த  பாவத்துக்கு கடவுள்  எனக்கு மிகப் பெரிய  சோகத்தை கொடுத்து விட்டார்.. 

 

நீ  மண்டபத்தை விட்டு போன  பிறகு என்ன  நடந்துச்சுன்னு தெரியுமா?.. எம் பொண்ணுக்கு நிச்சயம்  செய்த மாப்பிள்ளைக்கு ஏற்கனவே  கல்யாணம் ஆகி ஒரே  ஒரு  குழந்தை இருக்கிறது  என்ற  தகவலோடு  ஒரு  பெண் போலீஸோடு வந்து நிறுத்திவிட்டாள்.. இது  எனக்கு மிகப்பெரிய சோதனை.. என் பெண்ணின் நிலைமையைக் கண்டு வருந்தி நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து இந்த கல்யாணம் நின்னுடுச்சு.. இதுவே கல்யாணம் முடிந்திருந்தால் அவ்வளவு தான்… 

 

அதனால்  நான்  செய்ததுமிகப்பெரிய  தப்பு  தான்.. உன்னோட  உன்னோட அனுமதி இல்லாமல் குழந்தையை ஆசிரமத்தில் விட்டது உண்மை தான் ,ஆனால் அவளை எப்போதும் என் பார்வையில்  தான் இருக்கின்றாள்.. 

 

ஆசிரமத்தில் போன்  செய்து  கேட்டால், உன்னோட  பொண்ணு  எங்க இருக்கிறாள்  என்று தெரிந்திடும்.. தேவநாயகி போன்  செய்து விசாரித்து அவளுடைய பொண்ணோட  போட்டோவை  அனுப்ப  அதை தாரணியிடம் காட்டி இவள்  சென்னையில்  உள்ள  கல்லூரியில் தான்  படிக்கின்றாள்.. அதுவும் அகல்யா படிக்கிறாளே அந்த கல்லூரி தான்.. 

 

ம்ம்ம்.. அத்தை  அவ பேரு.. அவளுடைய பெயர்.. மிதுன்யா.. 

 

இந்த பெயரை நான்  ஏற்கனவே கேள்விப்பட்டது போல்  தோன்றுகிறதே!.. என்ற யோசனையில் இருந்தாள்.. 

 

அவங்க அத்தை தாரணியிடம், பார்த்து போம்மா,. என்று  வழியனுப்பி வைத்தாள்.. காரில்  ஏறினார்கள்.போடியிலிருந்து பஸ் ஏறி சென்னை போகும்  பேருந்தில் ஏறினார்கள்… 

 

நிவாஸ், அகல்யாவுக்கு போன்  செய்ய, அவளது  போன்  ரீச் ஆக வில்லை ..மறுபடியும் முயற்சி செய்தாள்.. அகல்யாவே  கூப்பிட்டாள்.. 

 

அப்பா, இன்னிக்கு இரவு  வந்துடுவீங்களா!.. என்று  கேட்டாள்.. இதோ  வந்துகொண்டு  தான்  இருக்கின்றோம். இன்னிக்கு கல்லூரிக்குச் சென்றாயா!.. 

 

ஆமாம்.. பா.. மெர்லினாவும்,நானும் பேசிக்கிட்டோம்.. அதுக்கு அந்த  பொண்ணு மிதுன்யா தான்  காரணம் என்று  சொன்னதும்  அவங்க அப்பா, அம்மாவும்  சந்தோஷப்பட்டார்கள்..

 

ஏம்மா,.. அப்பா  ஒன்னு  சொன்னா,தப்பா நினைக்கமாட்டியே!..என்ன  விஷயம்னு சொல்லுங்கப்பா!..உங்க அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு  பொண்ணு  இருந்திருக்கிறாள்.. அவளைத் தேடி  கண்டுபிடித்து விட்டோம்.. அப்படியா.. பா.. எனக்கு புரியும் படியாக சொல்லுங்க என்று சஞ்சீவும்  அகல்யாவும் கேட்க அதற்குள்ளும் தமிழ்ச்செல்வி பாட்டி சொல்லி விட்டாள்.. 

 

அதைக் கேட்ட  இருவரின் கண்களும்  கலங்கியது.. இப்போது எங்களோட  அக்கா,எங்க இருக்காங்கன்னு  தெரியுமா.. பா.. 

 

அவள்  உன்  அருகிலேயே தான்  இருக்கிறாள்..வேற  யாரும்  இல்லை.. மிதுன்யா தான் என்று  சொன்னதும் மிக மிக சந்தோஷப்பட்டாள் அகல்யா.. சரிங்கப்பா இந்த விஷயத்தை அவளிடம் சொல்லி நானே  கூட்டிட்டு வருகிறேன் என்றாள்..நீங்க வரும் போது  அவள் இங்கு தான்  இருப்பாள் எனச்  சொல்லிட்டு ஓடினாள்… தாரணியும், நிவாஸ் இருவரும்  பேருந்தில் சென்னையை நோக்கி சென்று  கொண்டிருந்தார்கள்.. 

 

போகும் போதே  விஷயத்தை மெர்லினா மூலமாக விஷயத்தை மிதுன்யாவிடம் சொன்னதும் அவளும், அம்மாவை  சந்திக்கனும் என்று  ஆர்வத்தில்  இருந்தாள்..

 

தாரணியும், நிவாஸ்  இருவரும்  மிதுன்யாவைக் கட்டி பிடித்து அழுதார்கள்.. மிதுன்யாவின்  ஏக்கம் அவங்க அம்மாவைக் கண்டதும் பறந்தது.. 

 

தாரணியும் மிதுன்யாவைப்  பார்த்த மகிழ்ச்சியில் அவளால்  சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம்… 

அனாதையாக வாழ்ந்த மிதுன்யாவிற்கு இவ்வளவு சொந்தம்  இருக்கும் என்பதை  அவள்  எதிர்பார்க்கவே இல்லை… 

 

இப்போது தாய், தந்தை இல்லாத  மிதுன்யாவிற்கு ஒரு  குடும்பமே  கிடைத்து விட்டதே என்ற  ஆனந்தத்தில்  கண்ணீர் சிந்தினாள்… 

 

அவங்க அம்மாவைப் பற்றி, அப்பா நிவாஸ்  உங்க  அம்மா  ஒவ்வொரு நாளும் உன்னைப் பத்தி பேசாமலும், நினைக்காமலும்  இருந்ததே இல்லை… உன்னை எப்படியாவது  பார்த்து கூட்டிட்டு வந்திரனும் என்ற  நம்பிக்கையில்  தான்  கிளம்பினாள்… தாரணியின்  நம்பிக்கை  வீண்போகல.. நம்ம  பொண்ணு இனியும்  நம்ம கூடவே தான்  இருப்பாள்  என  அவளுடைய  கையைப் பிடித்து அழைத்தார்கள்… 

 

அவர்களின்  கையை விட்டாள் மிதுன்யா.. 

 

என்னம்மா, கையை விட்டுட்ட… நீ  எங்களோடு வீட்டுக்கு  வாம்மா என்று. எல்லாரும்  அழைத்தார்கள்… 

 

அதற்கு மிதுன்யா கூறிய பதில் தாரணிக்கு வியப்பை தந்தது… 

 

அம்மா.. நான்  எப்போதும்  ஆசிரமத்திலேயே  வளர்ந்து பழகி விட்டேன்… இரு வருடங்களாக அங்கு உள்ள  குழந்தைகளுக்கு என்னால்  முடிந்த சில உதவிகளை செய்து கொண்டிருந்தேன்… 

 

அந்த  குழந்தைகளுக்கு நானே இலவசமாக பாடம் கற்று கொடுக்கனும்  என்று  விரும்பினேன்… அதுக்காக தான்  இங்க  படிக்க வந்தேன் …எனக்கு அந்த  குழந்தைகளோட. புன்னகையும், அவங்களுடைய பாசமும்  அங்கு நிறைந்துள்ளது… எனக்கு அதுவே போதும்…எனக்கு புதியதாக வந்த உறவுகள்  எதுவும் வேண்டாம் என்றாள்  ..

 

மிதுன்யாவின்  நல் உள்ளங்களை நினைத்து பெருமை கொண்டாள்  தாரணி….

..

..முற்றும்… 

.

 

.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்