மொட்டை மாடியினிலே நிலாவின் பிரகாசமான ஒளியிலே,.. குடும்பத்தோடு ஒற்றுமையாக சேர்ந்து உணவை உண்டால் எந்தவொரு ஆனந்தம் என்ற மகிழ்ச்சியோடு கூறினான்….
டேய். அண்ணா,…உனக்கு கவிதை வரவில்லை என்றால் விடு… எதுக்காக இப்படி பேசி கடுப்பேத்துற… .
ஹேய்.. அகல்யா. அந்த நிலாவைப் பாரு.. எம்புட்டு அழகாக இருக்கு… அந்த அழகை ரசித்து கவிதையாக வருணித்தேன்… .
நவதாரணியின் சிந்தனை முழுவதும் மூத்தமகளின் நினைவில் மனம் தள்ளாடியது… .அருகில் இருந்த நிவாஸ் அவளை லேசாக தட்டி சுய நினைவுக்கு கொண்டு வந்தான்… பிறகு அனைவருக்கும் பரமாறி விட்டு அவளும் சாப்பிட்டாள்…
அகல்யாவும், சஞ்சீவும் அவரவர் அறையை நோக்கி சென்றார்கள்… நவதாரணி மட்டும் மெளனமாக இருந்தாள்… .
தாரணி என்னாச்சு… தூங்கலயா… .
இல்லங்க.. தூக்கம் வரல… .
நிவாஸ் தாரணியின் அருகில் அமர்ந்து, கரத்தை பிடித்து,.உன்னுடைய,மெளனம் தூக்கத்திற்கு காரணம் என்னவென்று புரிகிறது… .எதையும் மனசுல போட்டுக் குழப்பிக் கொள்ளாதே!. அவளை சீக்கிரமாக கண்டுபிடித்து விடலாம் என ஆறுதலாக கூறினார்… .
நவதாரணியும் தன்னுடைய கணவர் வார்த்தையை நம்பி. நிம்மதியாக கண் அசந்தாள்… .
விடியல் பொழுதிலேயே தூக்கம் கலைந்து போனதே என வருத்தத்தில் அமர்ந்திருந்தாள் மிதுன்யா…
வருணிகாவை எழுப்பச் சென்ற மிதுன்யா,… சற்று யோசித்து ச்சே. ச்சே.. இவ தூங்கட்டும் ஏற்கனவே தூக்கம் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்…சஞ்சு.. சஞ்சு.. என எழுப்பி பார்க்க அவளோ எழுந்திருக்கவே இல்லை… ..
மிதுன்யாவும் சோர்வாகி போய். வெளியே நடைப்பயணமாக நடந்து வந்தாள் .அந்த நேரத்தில் மெர்லினா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்…
மெர்லினாவின் அருகில் சென்ற மிதுன்யா,.. மெளனமாக அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தாள்…
இவ,. என்ன தான் பண்றா… .வாக்கிங் போறாளா!.. இல்லை சும்மா யாரும் வர்றாங்களா என பயந்து பயந்து பார்க்கிற மாதிரி தெரியுது மிதுன்யாவையே பார்வையிட்டாள்…
அக்கா.. அக்கா.. கொஞ்சம் இங்க வந்து உட்காருங்களேன்… .
இவ என்னதுக்கு நம்மள கூப்பிடுறா,.. ஏற்கனவே என்னிடம் அகல்யாவைப் பத்தி கேட்டு நான் சொல்லவே இல்லை.. ஒரு வேளை அத பத்தி கேட்க தான் கூப்பிடுறாளா!. நம்ம இப்பவே கிளம்பி போவோம் என நழுவிச் சென்றாள்… .
மெர்லினா அக்கா,..என்னிடம் பேசினால் அகல்யாவைப் பத்தி கேட்டு விடுவேனோ என்ற பயத்தில் ஓடுறீங்களா!…
நவதாரணியும் வெகு சீக்கிரமாக எழுந்து வீட்டினில் விளக்கேற்றி சாமியைக் கும்பிட்டாள்… ..
அகல்யா.. எழுந்து அவங்க அம்மாவைத் தேடி சமையல் அறைக்குள் நுழைந்தாள்… அம்மாவைக் காணேம்மே என்ற கவலையில் டைனிங் டேபிளிலேயே அமர்ந்தாள்..
சஞ்சீவும் அம்மா.. அம்மா… என அழைத்தபடியே வந்தான்… ..
அகல்யா…அம்மாவை எங்க… .நீ மட்டும் தனியாக உட்கார்ந்து இருக்குற என வினவினான்… .
அண்ணா,.. நானும் அம்மாவைக் காணோம்மே என்ற அதிர்ச்சியில் தான் உட்கார்ந்து இருக்கேன்…
நிவாஸ் வாக்கிங் போயிட்டு வீட்டுக்குள். நுழைய,.. அகல்யாவும் ,சஞ்சீவும் கவலையாக இருந்ததைக் கவனித்து,.. ஹேய் , ..இரண்டு பேரும், காலையிலேயே சோகமாக இருக்கீங்க… .
அப்பா.. அம்மா எங்கப்பா போனாங்க… நானும் எழுந்ததில் இருந்து தேடுகிறேன்..
செல்லம் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை உங்க அம்மா பூஜை அறையில் இருப்பாள்..
அட.. ச்சே நானும் மறந்துட்டேன் என சொல்லிட்டு அமர்ந்தான் சஞ்சீவ்…
அப்பா ,..நீங்க உட்காருங்க…எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் வந்தா, அம்மா விடியற்காலையிலேயே பூஜை அறையினுள்ளே மெளன விரதம் எடுக்கிறாங்களே,… அது எதுக்காக என கேள்விகளை எழுப்பினாள் அகல்யா…
நானும் இத பத்தி அம்மாவிடம் நிறைய முறை கேட்டிருக்கிறேன்.. என்னிடம். சொல்லவே இல்லை.. நீங்களாவது சொல்லுங்க…. .அப்பா…
நிவாஸ் என. சொல்வதென்று புரியாமல் திருதிருவென்று முழித்தார்..
அப்பா.. அப்பா… என இருவரும் கேட்டுக்கொண்டே இருக்க,.
இந்த பூஜை நம்ம எதுக்காக என்கிற விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என அடிக்கடி சொல்லுவாள்…
நானும் இதே போல தான் ஒரு தடவை கேட்டதுக்கு எம் மேல கோபப்பட்டு கொண்டு பேசாமல் இருந்தாள்…
நீங்களும் அவளுக்கு நேராக போய் கேட்டு விடாதீர்கள்… அவ்வளவு தான் என அச்சுறுத்தினார் நிவாஸ்…
என்னப்பா..நீங்களும் இன்னும் அந்த காலத்திலே இருக்கீங்க…நம்ம வேண்டுதலை மறறவர்களிடம் சொன்னால் நிறைவேறாமல் போய் விடும்மா.. இதெல்லாம் மூட நம்பிக்கை என்றாள் அகல்யா… .
உன்னை பொறுத்த வரையில் மூடநம்பிக்கை.. ஆனால் உங்க அம்மாவுக்கு இது பெருமளவு நம்பிக்கை.. அவளுடைய நம்பிக்கையை நீங்க இந்த மாதிரி அவகிட்ட கேட்டு மனசை குழப்பி விடாதீர்கள் என்றார் கவலையோடு… …
அப்பா… நாங்க எதுக்குப்பா.. கேட்கப்போறோம்… நீங்க தான் தெளிவாக சொல்லிட்டீங்களே… .என சொல்லிக்கொண்டே பாத்திரத்தை எடுத்து வைத்து பால் காய்ச்ச துவங்கினாள்… .
நீ என்ன செய்ய போற… .
டேய்,.. அண்ணா… இன்னும். எப்படியும் அம்மா ஒரு மணி நேரம் கழித்து தான் பூஜை அறையை விட்டு வெளியே வருவார்கள்… .அதுவரைக்கும் சும்மாவே உட்கார்ந்துட்டு இருக்க.. வா…
நீ ஏதாவது சமைக்க போறீயா… எதுவும் பண்ண வேண்டாம்.. அகல்யா செல்லம் .
போன வாரம் எனக்கு சப்பாத்தி என்ற பெயரில் கல் சப்பாத்தி செஞ்சுகொடுத்தியே,..அந்த மாதிரி இன்னிக்கு செஞ்சு என்னை. கஷ்டப்படுத்தாதே,.
அண்ணா,.. எனக்கு கோபம் வருவதற்குள் எழுந்திருச்சு ஓடிரு.. இல்லைனா… .மீண்டும் சப்பாத்தி செஞ்சுருவேன்.
எம்மாடி. ஆள விடும்மா… .என ஓடிப் போனான் சஞ்சீவ்…
பூஜை அறையின் அருகில் சென்ற நிவாஸ்,.. தாரணியை நோக்கி பார்த்தான்… எங்களுக்கு எதுவும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தன்னையே வருத்திக் கொண்டு ஒவ்வொரு வாரமும் எங்களுக்காகவும், மூத்தமகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீ இந்த வேண்டுதலை செய்கிறாய்.. கட்டாயம் உம்முடைய வீண் போகாது.. நம்ம மூத்த பொண்ணு கட்டாயம் திரும்ப வீட்டுக்கு வருவாள் என நினைத்து கடவுளை மனசுக்குள்ளேயே நினைத்து வேண்டிக் கொண்டார்… .
இனியும் வருவாள்…
.
.