Loading

அத்தியாயம் 5

மூவரும்  அறையை  விட்டு வெளியே வர,… அவங்க  ஹாஸ்டல்  மேம்   நாற்காலியில் அமர்ந்திருந்தாள்… .

சஞ்சனா,.. நீ  எம்  முன்னால  வந்து  நில்லு… ..

ம்ம்ம்.. சொல்லுங்க மேடம்… ..

காலையில்  எங்க  போன… .நீ என்னோட  பர்மிஷன்  இல்லாமல்  எங்கேயும்  போகக்கூடாது என தெரியும்.. அப்படி இருந்தும் நீ  ஹாஸ்டலை  விட்டு போயிட்டு வந்திருக்குற… ..

மேம்  அது வந்து, எங்க  சொந்தக்காரங்க ஒரு பங்கஷன் வச்சுருந்தாங்க… .

நீ  எனக்கு எந்த  காரணமும்  சொல்ல  வேண்டாம்… .நீ செய்த தவறுக்கு மூவரும் ஒரு மணி நேரம்  முட்டு போட்டு கையைத் தூக்கி இருக்கனுள் கடுமையான  தண்டனை விடுத்தாள்… .

அதற்கு  சஞ்சு… ப்ளீஸ்  மேம்.. நான்  செய்த தவறுக்கு  இவங்கள எதுக்காக தண்டிக்கனும்… 

என்னை  சஞ்சனா.. பேச்சு ரொம்ப  ஓவராக போகுது…மூன்று  பேரும். முட்டு போட்டு கையைத் தூக்குங்க என்றாள்…

இவுக மூன்று பேரும் முட்டு போட்டு இருப்பதைக் கவனித்த சாதனா,.. ப்ரீத்தியிடம்  கூற,.. அவளும்  வந்து ஓரமாக ரசித்தார்கள்… 

சாதனாவும் பிரீத்தியும் பார்ப்பதை  பார்த்த  மிதுன்யா,..   வருணிகாவின் காதில் முணுமுணுத்தாள்… 

அதையும் கவனித்த சிடுமூஞ்சி மேம்,… மிதுன்யாவை எழுந்திருச்சு இங்க வாம்மா… உன்னை பார்த்தா புதுசாக தெரியுது.. நீதான்  மிதுன்யாவா… 

ஆமாம்.. மேம்..என  புன்னகையோடு… .

உனக்கு என்னம்மா சிரிப்பு… .இவ்வளவு  தூரம்  செஞ்ச தவறுக்கு தண்டனை  கொடுத்துருக்கேன் அப்படிஇருந்தும் பயமே இல்லாமல் அவ  காதுல ரகசியம்  பேசிட்டு இருக்குற… ..

ரகசியம் பேசல மேம்… நீ  அவ  காதுல பேசுனதுக்காக உனக்கு இன்னும் அரைமணிநேரம் கையைத் தூக்கிட்டே நில்லு என சிடுசிடுவென…. 

சமையல்  மாஸ்டர் அந்த வழியாக வர,.   மூவரும் முட்டு போட்டு கொண்டிருந்ததைக் கவனித்தவர்,.. 

என்னாச்சு மேம்… என்ன  தப்பு செஞ்சாங்க… .

நேற்று  நான்  இல்லாத நேரத்தை தக்கவைத்துக் கொண்டு வெளியே போய்  ஊரைச் சுத்திக்கிட்டு வந்துருக்கா சஞ்சனா… .

இனிமேல்  என்னிடம்  சொல்லாமல்  போனால்  இது தான்  தண்டனை என்பதை இங்குள்ள  எல்லா மாணவிகளுக்கும் தெரியனும்.. அதான். சார்… இவங்களை  இப்படி தண்டித்தேன்.. 

ஒரு மணி நேரத்தைக் கடந்தது… .

வருணிகாவையும்,.. சஞ்சனாவையும்  எழுந்திருக்கச் சொல்லி அறைக்குள்ளே போகச் சொன்னாள்… 

மிதுன்யா மட்டும்,..சிடுமூஞ்சி மேடத்தைத் திட்டினாள்… .

சஞ்சனாவும்  ,வருணிகாவும்  அப்படியே போய். படுத்தார்கள்… .

ச்சே.. மிதுன்யா  பாவம்  ..அவளை  இன்னும் மேம்  விடவே மாட்டேங்குது என ஒரு பக்கமாக கருமினாள்… 

எத்தனையோ  பேர் இவங்கிட்ட  சொல்லாமல்  போயிட்டு தான் இருக்காங்க… நம்ம மட்டும் இவங்க கண்ணுல பட்டுடோம்மே!..   .

சரி.. விடுடி.. அவங்க பத்தி திட்டுனா,.. திட்டிக்கிட்டே தான்  இருப்போம்… முதலில் மிதுன்யா வரட்டும் என எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்…

சற்று நேரத்தில் மிதுன்யாவும்  வந்து.. ப்பா… கையெல்லாம் வலிக்குது.. 

உங்க  யாருக்காவது டீ வேணும்மா… .

ஆமாம் ..மிதுன்யா… டீ குடிக்கனும் போல  இருக்குது… ஆனால்  இங்கிருந்து கேண்டினுக்கு நடந்து போகனும்மே… .

நம்ம போகாமலேயே டீ நம்ம  இடத்துக்கே வரும்… ..

அது  எப்படி என  வியப்போடு கேட்டாள்  வருணிகா…. .

கொஞ்சம்  அங்க  பாருங்க கையை நீட்டினாள் மிதுன்யா.. 

சாதனாவும், ப்ரீத்தியும்  கையில்  டீ டம்ளரோடு வருவதைப் பார்த்து வியப்போடு பார்த்தனர்.. 

மிதுன்யா கையை  சைகையால்  அசைக்க,.. இருவரும் பேசாமல்  சென்றனர்… .சஞ்சனாவும், வருணிகாவும்  தேநீரை  பருகியவாறே. கேள்வி எழுப்ப வர… .

அதற்குள்ளேயும்  மிதுன்யாவே  இவுக இருவரும்  நமக்கு எதுக்காக டீ கொண்டு வந்து கொடுக்கிறாங்களே என  ஆச்சரியமாக இருக்குதா!.. 

ஆமாம்.. டி… .எனக்கும்  அதே  சந்தேகம்  தான்  என. வருணிகா கூற… 

நீங்க இரண்டு பேரும்  உள்ளே வந்த பிறகு, சாதனாவும்  ப்ரீத்தியும்  ..நான் முட்டு போட்டு இருக்கிறத  பார்த்து கிண்டல்  செஞ்சாங்க…

 

ஹேய்.. அந்த  நேரம். சிடுமூஞ்சி சித்ரா மேம்  எங்க போனாங்க….

அவுக ரெஸ்ட்  ரூம் வரைக்கும்  போயிட்டு வந்தாங்க,…  

அதுமட்டுமல்ல உன்னோட.தோழி சஞ்சனா,காலையில்  யாருக்குமே  தெரியாமல்  போன  அனைத்து விஷயங்களையும் மேம்கிட்ட போட்டுக்கொடுத்ததே  நாங்க தான் என  வினவ,.. ,சஞ்சனா வெகு விரைவாகவே வந்து விட்டாள்… ஆனால் ரிஜிஸ்டரில் அவளுடைய பெயரை  நீக்கியது நாங்க தான்.. தக்க சமயத்தில் மேம் அவுக சொல்றத  கேட்டு விட….

இதெல்லாம் உங்க வேலை  தானா… .அதான்  நினைச்சேன்… ரிஜிஸ்டரில்  அந்த பக்கமே இல்லை  எனச் சந்தேகப்பட்டேன்… அப்பவே சுதாரிச்சிருக்கனும்… .

மிதுன்யா.. நீ  எழுந்து நில்லும்மா..

தலைகுனிந்த நின்ற சாதனாவும், ப்ரீத்தியும்  மன்னிப்பு கேட்டார்கள்…

நீங்க  இரண்டு பேரும்  மிதுன்யாவோட ப்ரண்ட்ஸ்க்கு டீ  கேண்டினில்  இருந்து வாங்கிக் கொடுக்கனும். இது தான்  தண்டனை… 

ஓ.. இது  தானா… அவுக இரண்டு பேருக்கும்  நல்லா வேணும்டி… .நம்மல கண்டு சிரிச்சாங்கள… தேவை தான்… .என  தேநீரை பருகியவுடன். டம்ளரை  போய்  வைச்சுட்டு வாரேன் என்று  கூறிய,.. வருணிகா.. எதிரே வந்து நின்று  டம்ளரைக் கொடுங்க எனப் பரிவாக வாங்கிட்டுச் சென்றார்கள்… .

அகல்யா மொட்டை மாடியின்  நிலவை ரசித்தபடியே இருந்தாள்..அதனைக் கவனித்த நவதாரணி.. மும்… என்னடி நிலாவையே  பார்த்துட்டு இருக்குற.. 

அம்மா.. நாங்க  சின்னபுள்ளையா இருக்கும் போது  நிலாவைக் காட்டி தானே  சோறு  ஊட்டுவீங்க…  நிலாவுக்குள்ள பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்குனு  அழகான ஒரு பொய்  சொல்லி நாங்க சின்னபுள்ளையா இருக்கும் போது ஏமாத்துனீங்க… .

அடியேய்  அது அறியாத வயசு..மா என செல்லமாக  கூற… 

அம்மா.. இப்ப  நம்ம  எல்லாரும் சேர்ந்து நிலாச்சோறு  சாப்பிடுவோம்மா… 

அம்மாவால் மேலேயும்  கீழேயும் ஏறி இறங்க முடியாது.. மா… 

அம்ம்.. நீங்க இறங்க வேண்டாம்… நானும்  அண்ணனும்  போய்  சாப்பாட்டை எடுத்துட்டு வாரோம் எனச் சொல்லிட்டு கீழே விறுவிறுவென. சென்றாள்… 

இனியும்  வருவாள்… .

 

..

 

  •  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்