அத்தியாயம் 4
நாங்க வம்பு இழுக்க தான் வந்துருக்கோம்.. இப்ப என்ன பண்ணுவ வருணிகாவை நோக்கியவாறு பேச,.. அவள் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருந்தாள்…
சாதனா மேலும் மேலும் வார்த்தைகளால் சொல்ல மிதுன்யாவுக்கு கோபம் வந்ததும் கை ஓங்கினாள்…
கையை பிடித்து இத தான் நாங்க எதிர்பார்த்தோம் என சிரித்தார்கள்… கையை வளைக்க முயற்சி செய்த ப்ரீத்தி மூக்கடி பட்டு அவ கை ஓடிஞ்சது…
“ஆ… ஆ… என் கை.. விடுடி.. என சத்தமிட மாஸ்டர் வேகமாக வந்துவிட்டார்… ‘
யாரு சத்தம் போட்டது… ப்ரீத்தியை எதுவும் சொல்ல விடாமல் சைகையால் பேசாதே என்றாள் சாதனா… அறிந்த ப்ரீத்தி ஒன்னுமில்ல மாஸ்டர் ஏதோ வண்டு போனது அது எம் மேல வந்து விழுந்துடுச்சு..அதான்..
கொஞ்சம் கூட அறிவு இல்ல,.. நாங்க எல்லாரும் பதறி போய்ட்டோம்.. போங்க அவரவர் அறைக்கு செல்லுங்க என கூறினார்…
“மிதுன்யாவை முறைச்சு பார்த்துட்டு வெடுக்கென்று நடந்தார்கள்…. ‘
அறைக்குச் சென்ற ப்ரீத்தி கோபத்துடன் சாதனாவை பார்க்க, அவளும் பயந்தது போல இப்படி பார்க்காதே பயமாக இருக்கு என கிண்டலாக பேசிட்டு வாஷ் ரூம் சென்றாள்…
ப்ரீத்தி கையை தடவி கொண்டே இருந்தாள்.. வாஷ் ரூமை விட்டு வெளியே வந்த சாதனா.. ஸாரி.. டி… மாஸ்டருக்கு மட்டும் நம்ம சண்ட போட்டது தெரிஞ்சது அவரு மறுபடியும் நம்மள principal ரூமுக்கு கூட்டிட்டு போவாரு… அதான்.. வேண்டாம்னு சொன்னேன்…. இங்க கை காட்டு,.. அவ கையை சாதனா நீவி விட்டாள்…
ப்ரீத்தி அவள சும்மாவே விடக் கூடாது நம்மகிட்ட நல்லா பழகிட்டு இருந்த மெர்லினாவை தனியாக இருக்க வைத்தாள்.. இப்ப அவள் சர்ஜ்க்கு போய்ட்டு கர்த்தரிடம் அவளுடைய துயரத்தை இறக்கிட்டு ரிலாக்ஸாக வருகிறாள்..
மெர்லினாவைத் தெளிவாகவே இருக்கக்கூடாது.. அவளுடன் தான் நம்ம இரண்டு பேரும் துணையாக இருக்கனும் அப்போது தான் அகல்யாவுக்கு கோபம் அதிகமாக வரும் என இருவரும் பேசினர்…
அகல்யா வீட்டுக்குச் சென்றவுடன் மாடியில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.. கீழே அவங்க அம்மா நவதாரணி அகல்யா.. அகல்யா.. எனச் சத்தமிட எந்தவொரு பதில் கூறாமல் இருக்க ,..
நவதாரணி வெளியில் சென்று பார்க்க,.. அங்க இல்லை எனத் தெரிந்ததும் மாடியின் கதவு திறந்து இருந்ததைப் பார்த்து மேலே சென்றாள்…
அகல்யாவின் முகம் வாடிப் போன பூ போல இருந்தது… ஏன்டி.. ஒரு மாதிரியாக இருக்க கன்னத்தைத் திருப்பி பார்க்க, அவளது கண்களில் கண்ணீர் துளியாக வந்தது…
எதுக்காக அழுகிற, நீ எப்போதும் தைரியமாக பேசுற பொண்ணு, எந்த பிரச்சினையும் கண்டு அழ கூடாது..
ஆமாம்… மா.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. எனக்கு பிரச்சினை வந்த போது கூட அழுததில்லை . ..என் மனசுக்கு கஷ்டமாக இருக்குதும்மா…
நீ மனசு கஷ்டப்படுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு….கேட்ட நவதாரணியின் கேள்விக்கு அகல்யா விளக்கம் தர முயன்றால்,..
கல்லூரியில் சேருவதற்கு முன்பே மெர்லினாவும் நானும் பெஸ்ட் பிரண்ட்ஸ் உங்களுக்கு தெரியும்ல,
ஆமாம்… டி.. காலேஜ் பஸ்ட் இயர் ல… அவள பத்தி சொல்லியிருக்கிறாய்..அவளை நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாயே அந்த பொண்ணா,
ஆமாம்.. மா… அவ பெயரு தான் மெர்லினா..
இப்போது அவளுக்கு உனக்கும் ஏதும் பிரச்சனையா எனக் கேட்டாள்..
அம்மாவிடம் சொல்லவா!.. வேண்டாமா சற்று யோசிக்க,.. அதற்குள் அவங்க அப்பா அம்மாவை கூப்பிடுவது அகல்யா காதில் ஒலித்தது ..
அம்மா, அப்பா கூப்பிடுவது போல இருக்கு.. என்னன்னு பாருங்க என்றாள் அகல்யா…
நவதாரணி,.. கீழே வேகமாக செல்ல,.. படியிலிருந்து நடந்து கொண்டே, ஏங்க.. எதுக்காக இப்படி கத்தி கூப்பிடுறீங்க.. கொஞ்சம் மெதுவாக சத்தம் கொடுக்கலாம்ல என்றாள் தாரணி…
உன்னிடம் நேற்று நம்ம மூத்த பொண்ண கூடிய விரைவில் கண்டுபிடிச்சிடலாம்னு சொன்னேன்… இப்ப அவள பற்றிய details தெரிஞ்சிருச்சு என்றார்…
நிவாஸ்.. உண்மையாக வா… என்னோட மூத்த பொண்ணு இருக்கிற ஆசிரமத்தை கண்டுபிடிச்சாச்சா.. என்ற ஆனந்தத்தில் கணவரை கட்டி அணைத்து விட்டு கடவுளிடம் மன்றாடினாள்…
தாரணி நம்ம தான் போடிக்கு கிளம்பனும் என்று கூறினார் நிவாஸ்…
உங்க அத்தை பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் பங்கஷனில் கலந்து விட்டு நம்ம இரண்டு பேரும் சேர்ந்து போனால் மட்டுமே அவளை கண்டு பிடிக்க முயலும் உறுதியாக சொன்னார்…
சரிங்க.. நிவாஸ் நிச்சயதார்த்தம் சென்னையில் போடிக்கு எப்படி போகுறது ..எங்க இருந்து போறது என்று தான் புரியல….
தாரணி அத பத்தி நீ கவலைப்படாதே, போடியில் என் நண்பன் வேணு இருக்கிறான்… அவனுடைய வீட்டிலேயே தங்கிட்டு மற்ற ஏற்பாடுகளை அங்க போய் பார்த்துக் கொள்வோம் என்றார்…
அகல்யா மாடியிலிருந்து கீழே வர, நிவாஸ் அவளை பார்த்து ..அகல்யா.. செல்லம் இங்கே வா என அழைத்தார்…
சொல்லுங்கப்பா,..ஒரு மாதிரியாக இருக்க.. ஏதாவது பிராப்ளமா..
நிவாஸ்… நானும் மாடியில் வைத்து இத பத்தி கேட்டேன்.. வாயைத் திறந்து சொல்லவே மாட்டிக்கா எனக் கூறினாள் தாரணி…
தாரணி சஞ்சீவ் எங்க,.. அவனுடைய அறையில் படிச்சுட்டு இருக்கிறான்.. சரி.. நீ போ.. தாரணி அகல்யாவிடம் பேசிக்கிறேன்…
நிவாஸ் அகல்யாவை தனியாக அழைத்து போய் கேட்டார்.. அதற்கு அகல்யா என்னன்னு தெரியலப்பா,என் கூட அவள் பேசாமல் போனதுக்காக நான் ஏன் இப்படி இருக்கனும் என்ற குழப்பத்தோடு பேசினாள்… இது தான் பாசம்,..
என்னப்பா சொல்றீங்க!..பாசமா…
ஆமாம்.. நமக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தவர்கள் நம்மைவிட்டு பிரியும் தம்மிடம் சண்டையிடும் போது தான் அதனுடைய வலியை உணரமுடியும்.. உனக்கு வந்திருப்பது கூட அந்த பாச உணர்வு தான்…
யாரு உன் கூட பேசாமல் போனா, கொஞ்சமா விவரமாக சொல்லு.. செல்லம் என அருகில் உட்கார வைத்து தலையை மெதுவாக வருடினார்…
அனைத்து சம்பவங்களையும் ,கதை கதையாக கூறினாள்..
செல்லமே.. இவ்வளவு நடந்திருக்கிறது.. இத பத்தி அப்பாவான என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்துட்டியே என்றார்.. அப்பா அதான் இப்போது சொல்லிட்டேனே,.. இந்த பிரச்சினையை நீங்க என்னோட மெர்லினாவுக்குச் சொல்லி புரிய வைக்கனும் என்றார்…
இந்த பிரச்சினையை நடந்த மறு நொடி அப்பாவிடம் சொல்லியிருந்தா.. இவ்வளவு தூரம் போயிருக்காது ,.என நிவாஸ் சொல்ல,
அப்பா எனக்கும் அவ மேல கோபம் இருந்தது.. திடீரென்று எனச் சந்தேகப்பட்டு பேசாலாமா,.. அதான் நானும் திட்டிவிட்டேன் என்றாள்…
அகல்யா.. செல்லம் ஒவ்வொருத்தருக்கும் கோபம் தான் முதல் எதிரி..உன்னோட மெர்லினாவுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்..அதுக்கு அவ என்ன பண்ணுவாள்…
டாடி…. நீங்க அவளுக்கு சப்போட் பண்றீங்களா இல்ல,.. எனக்கு சும்மா சிங்சாங் பண்றீங்களா என பேசினாள் வெகுளியாக,..
செல்லம்,.. இருவரின் சூழ்நிலையை அறிந்து தான் கூறுகிறேன்… நீயும் வருத்தப்பட்ட மாதிரி…
அவளும் உன்னை பேசிட்டேனே என்று வருத்தப்பட்டிருப்பாள்..கண்டிப்பாக இருவரும் ஒன்றாக இணைந்து கல்லூரியில் படிப்பீங்க,..ஸ்போர்ட்ஸ்ல இரண்டு பேரும் சண்டையிடாமல் பங்கு கொள்வீர்கள் என்றார்…
ஓ.. கை.. வா.. செல்லம்…
ஓ.. கே. டியர்..
அகல்யா…உங்க அப்பாவிடம் எல்லாத்தையும் சொல்லியாச்சா,..
ம்ம்ம்.. எஸ்.. இப்போது தான் மனசு ஹேப்பியாக இருக்குது எனச் சொல்லிட்டு படிக்கச் சென்றாள்…
நிவாஸ்..அவ உங்களிடம் என்ன சொன்னா,. ஏன்டி தாரணி அது எனக்கும் அகல்யாவுக்கும் உள்ள சஸ்பென்ஸ் என்றார்…
சரி.. சரி.. நீங்களும் உங்க பொண்ணும்… சொல்லிட்டு சென்றாள்….
சஞ்சீவ் அவங்க அம்மாவை கூப்பிட்டான்.. ஏன்டா எதுக்கு கூப்பிட்ட, டா…
அம்மா..நாளைக்கு காலேஜீக்குப் போக வேண்டியிருக்குது,..கால்டிக்கெட் வாங்கனும்..
சரிடா.. கால்டிக்கெட் தானே வாங்கப் போற இத ஏன் இவ்வளவு தயக்கமாக சொல்ற எனக் கேட்டாள் நவதாரணி…
கால்டிக்கெட் வாங்கிட்டு அப்படியே என்னோட நண்பன் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்.. அவன் என்னை ரொம்ப நாளா கூப்பிட்டு இருக்கிறான்…
டேய். சஞ்சீவ்.. இதெல்லாம் போய் அம்மாட்ட கேட்டுட்டு ,..உனக்கு என்ன தோணுதோ அத செய்யுடா, என்றாள் தாரணி…
மிதுன்யா வருணிகாவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்… சஞ்சனா போன் பேசி முடிச்சுட்டு மிதுன்யாவை பார்த்து, ஏன்டி எதுக்காக என்னை விட்டுட்டு இங்க வந்துட்டீங்க,..
அடியே சஞ்சு.. மணியைப் பாரு…
“சஞ்சனா மணியைப் பார்த்துட்டு, ஐய்யயோ,.. இவ்வளவு நேரமாக பேசியிருக்கேன் என தன்னையே திட்டிக் கொண்டாள்… ‘
உன்னோட ஆள்கிட்ட இவ்வளவு நேரமாக பேசிட்டு இருப்ப, காது வலிக்காத,. இல்ல வாய் வலிக்காத,.எனக் கேட்ட மிதுன்யா..
அவளுக்கு தானே ஒன்னுமே தெரியாது.. காதல் கண்கட்டுதேனு சொல்வாங்களே!.. அது இவ விஷயத்துல கரெக்ட்டாக இருக்குதடி எனக் கிண்டலோடுரூமுக்குள் நுழையும் போது பேசிக் கொண்டே வந்தாள் வருணிகா…
“சஞ்சனாவும் அமைதியாக வெட்கத்தோடு ஒரு புன்னகையோடு மிதுன்யாவை ஏறிட்டு பார்த்துட்டு குனிந்தாள்…’
அடடடடா..இவ வெட்கப்படுறத பார்க்க முடியல, தயவு செய்து இத பார்க்க முடியலடி என்றாள் இன்னொரு பக்கம் மிதுன்யா…
இரண்டு பேரும் இப்படி பேசாதீங்க, எனக்கு வெட்கமாக உள்ளது எனப் போர்வையை போர்த்திக் கொண்டு தலையணையில் தலையைசாய்த்தாள் சஞ்சனா…
வருணிகா,ரூமுக்கு வந்ததும் அகல்யா அக்காவைப் பத்தி சொல்றேனு சொன்னியே சொல்லும்மா!.. “ஐ யம் வெயிட்டிங்!..’
இங்க வா,.. என் அருகில் வந்து உட்காரு என்றாள்…
மிதுன்யாவும் அமர, அகல்யாவின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்….
அகல்யாவும் மெர்லினாவும் ஒரே டிபார்ட்மெண்ட் தான்.. அவங்க எங்க போனாலும் ஒன்னா தான் போவாங்க, ஒன்னா தான் வருவாங்க.. அவங்க இரண்டு பேரையும். பார்க்கும் போது இந்த கல்லூரி ஸ்டூடண்ட்ஸ் பொறாமையுடனும் ஆச்சரியத்துடனும் நோக்குவார்கள்…
இவங்க படிச்ச டிபார்ட்மெண்ட்ல தான் சாதனாவும், ப்ரீத்தியும் இருந்தாங்க.. அவங்க இவுக இரண்டு பேரையும். பிரிக்கிறதுக்கு என்னன்னமோ செஞ்சாங்க, அதுக்கெல்லாம் அசையாமல் தான் இருவரும் கல்லூரியில் பல நன்மைகள். செய்தார்கள்…
அவள் சொல்லிக் கொண்டிருக்க இடையினில் கேள்விதனைக் கேட்ட மிதுன்யா ,வருணிகாவிடம்,..அவங்க என்ன செஞ்சாங்க,..
ஒவ்வொன்றாக இப்போது தானே சொல்லிட்டு இருக்கேன்.. அதுக்குள்ளே ஏன் அவசரப்படுற என்று சொல்லி மிதுன்யாவின் தலையில் கொட்டினாள் ..
தலையைத் தடவிக் கொண்டே வலிக்குதடி…
ஓ.. ஸாரி.. டி… விறுவிறுப்பாக கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கும் போது தொந்தரவு பண்ணாதே என்றாள்…
அடுத்ததாக என்ன சொல்லப்போகிறாள் என எதிர்பார்த்து இருக்க,..
ஹாஸ்டல் மேடம் உள்ளே நுழைந்து நீங்க மூவரும் எழுந்து வெளியே வாங்க என சொல்ல, இந்த மேம் எப்போதும் உள் நுழையமாட்டாங்க,.. எதுக்காக கூப்புடுறாங்கன்னு தெரியலயே,..
மூன்று பேரும் பயத்துடன் வெளியில் செல்கிறார்கள்…