Loading

 

அத்தியாயம் 2

 

கேண்டினில்  சாப்பிட்டு  முடித்து விட்டு வெளியே  செல்வதற்கு கைகளை வாஷ் செய்திட்டு கொண்டிருந்தாள்  மிதுன்யா… 

 

அந்த  சமயத்தில்  சமையல் செய்யும்  அம்மா, அவளிடம்  வந்து… மூன்று பேரை  காட்டிக் கொடுத்ததால் அவங்க வெளியில்  நின்னு  கொண்டிருக்கிறார்கள்… அதனால்  நீ பின்பக்கமாக  போ.   என்று கூறினார் சமையல்  செய்யும்  அம்மா… 

 

அம்மா, எப்போதும்  எமக்கு வரும்  பிரச்சனையைக் கண்டு பயந்து  போவதில்லை…அதை  எதிர்த்து தான்  பேசுவேன்… நீங்க  பயப்படாதீங்க, இன்னிக்கு  தான்  என்னை  பாக்குறீங்க, அதனால்  உங்களுக்கு ஒரு  சின்ன  பயம்  இருக்கும்… 

 

நீங்க  போய்  வேலை  பாருங்க, இந்த  பிரச்சினையை  சரிபார்த்துக்கிறேன்…. 

 

சாதனாவும்,ப்ரீத்தியும்  சேர்ந்து மெர்லினாவைக்  கூட  கொஞ்சம் வெறுப்பேத்தி பேசிக்  கொண்டிருந்தார்கள்… 


மெர்லினாவுக்குக் கோபம்  தலைக்கு மேல  ஏறியது… அவள்  வெளியே  வரட்டும்  அப்புறம்  இருக்கு என்று  கையை  பிசைந்து கொண்டு,கோபத்தை கண்ட்ரோல் ஆக வைத்திருக்க,

 

மிதுன்யா, வெளியே  வர… அவள் வருவதைக் கண்டு… 

  ஏய்!.. சாதனா  அங்க பாரு…. ஜாலியாக  வருகிறா, அதுவும்  பாட்டு  பாடிக்கிட்டே,… 

 

  “போடா!… போடா!… புண்ணாக்கு, 

  போடாத  தப்பு  கணக்கு  ,…

இருக்கு உனக்கு இருக்கு,.. ‘

 

மெர்லினா அவளது முகத்திற்கு  முன்பு  வெறித்தனத்தோடு  பார்க்க, 

   பயப்படாமல்  எதிர்க்கே  அவளை  நோக்க  ,

இருவரும் ஒருவரையொருவர்  பார்த்துக்  கொண்டு…. 

 

இதுவரைக்கும் என்னை  யாரும்  அவமானப்படுத்தியதே இல்ல,  ஆனால்  இன்னிக்கு  நீ எல்லாரும்  முன்னிலையில் அதுவும் மாஸ்டர் வச்சு  கெட்.. அவுட்  …என்று  சொல்ல வைச்சிட்டிள,.. 

 

“ஒன்ன  சும்மாவே  விடமாட்டேன்!… 

 

“தப்பு  பண்ண  அதான்  உங்கள காட்டிக் கொடுத்தேன்’… இதுல  என்ன  இருக்கு,..திமிராக  பேச… 

 

எங்க  மெர்லினாவை  எதிர்த்து பேசிறீயா,.. அருகில்  உளள  தோழிகள் கூச்சலிட்டார்கள்… 

 

மிதுன்யா,.அவர்களது  தோழிகளைப்  பார்த்து .. நீங்க  யாரும்  பேசாதீங்க, 

 

மெர்லினா அக்கா இப்படி  இருக்கிறதற்கு  காரணமே  இவுக  ரெண்டு  பேரும்…. தான்… 

 

இந்த  கல்லூரிக்கு வரும்  போதே  உங்கள  பத்தி எல்லாரும்  சொன்னாங்க!..மெர்லினா   நல்ல  படிக்கிற  பொண்ணு ,கூட  இருக்கிற  பிரண்ட்ஸ் தான்  அவள  கெடுக்கிறது  என்று  நிறைய  பேரிடம்  இந்த  பதில்  தான் சொன்னாங்க!… 

 

மெர்லினா அக்கா நீங்க  முதலில்  எப்படி  இருந்தீங்க!..இப்போம்  நீங்க  இப்படி இருக்கிறதுக்கு  என்ன  காரணம் அக்கா,

 

ஏன்டி,இன்னிக்கு வந்துட்டு  எங்க  மெர்லினாவை குழப்பி  விடுறியா!.. என்றாள்  ப்ரீத்தி…. 

 

நான்  ஒன்னு குழப்பி  விடல, தெளிய  வைக்கிறேன் என்று  கூறினாள்…. 

 

எமக்கு எல்லாமே தெரியும்…மெர்லினா அக்கா சொல்றத  கொஞ்சம்  கேளுங்க,… 

 

மிதுன்யாவிடம்  எதுவும்  பேசாமல்  வேகமாக  சென்றாள்…. 

 

ஏய்  ,..நீ யாரடி… அவளை  தெளிய  வைக்கிறதுக்கு  …நாங்களே  அவள  எங்க கண்ட்ரோல்ல வச்சிருக்கோம்  நீ..அவளுக்குத்  தெளிய வைக்கிறியா,.. ஒன்னால  அது  முடியாது  என  சவால்  விட்டார்கள்… 

 

இருவரிடமும் சவால்போட்டு பேச தொடர்ந்த  மிதுன்யா,   மெர்லினா  அக்காவை  முத  இருந்தபடி கொண்டு வருவேன்… நீங்களும்  முடிஞ்சா  தடுத்து பாருங்கோ  பாக்கலாம்…. 

 

ஒவ்வொரு  நாளிலும்  கல்லூரி  துவங்கும்  போது, இறுதியில்  தூங்க போகும்  முன்பு  கரத்தரிடம்  மன்னிப்புக்  கேட்டு தான் தூங்குவாள்  மெர்லினா… 

 

அதே  போல  அவள் அறையில்  கர்த்தரிடம்  பிராத்தனை  செய்து  கொண்டிருந்தாள் ..உற்று  பார்த்த  மிதுன்யா   மெர்லினா  அக்கா, சத்தம்  கொடுத்தாள்…. 

 

அக்கா உங்களோட  ரூம்  கதவைத்  திறங்க, கொஞ்சம்  பேசனும்… மெர்லினா மிதுன்யாவை ஜன்னல்  அருகே  பார்த்து  நீ  எதுக்கு என்னோட  அறைக்கெல்லாம் வர்ற…. 

 

ப்ளீஸ்  அக்கா, கதவைத்  திற..

 

நீ என்ன செய்தாலும், சொன்னாலும் காதில்  வாங்க மாட்டேன்… போ… என  எரிச்சலுடன்  பேசினாள் மெர்லினா…. 

 

மிதுன்யாவின்  அறைக்குச்  சென்றதும் ,புது தோழிகள்  அவளுக்கு  அறிமுகம்  ஆனார்கள்.. இருவர் இருந்தார்கள்.. அதில்  இருவரும் அவளுடைய  department,.  ஒருத்தி சஞ்சனா, இன்னொருத்தி வருணிகா….இவர்கள்  எல்லாரும்  பேசி  பழகிக்  கொண்டார்கள்.. 

 

வாழ்க்கையில்  எந்தவொரு  கஷ்டம்  வந்தாலும் துவண்டு  போகக்கூடாதுனு எங்க  அப்பா  அடிக்கடி சொல்லியிருக்காங்க!… அதனால்  நம்ம  ஹாஸ்டல்  நடக்கின்ற  பிரச்சினைகள் எதையும்  நாங்க  சொல்லமாட்டோம்… 

 

சரிடி…நமக்கு  இங்க  என்ன பிரச்சினை நடக்க போகுது. கேட்டாள் மிதுன்யா….

 

ஏய், உனக்கு விஷயம்  தெரியாதா,…இந்த  காலேஜில யாரோ மெர்லினா இருக்காங்களாம்.. அவங்க  ரொம்ப  தொந்தரவு  செய்வாங்களாம்… உன்கிட்ட யாருமே  சொல்லலயா,… 

 

“சஞ்சனா எனக்கு  எல்லாமே  தெரியும்… அப்படியா, எப்படிம்மா…….. என்றாள்  மறுபக்கம்  வருணிகா,… 

 

நீங்க ரெண்டு  பேரும்  அருகில்  வாங்க, என்று பிடித்து  இழுத்தாள் மிதுன்யா… 

ஏய், எனக்கு காது  வலிக்குதடி… என்று கத்தினாள் சஞ்சனா. ..

 

இந்த  விஷயம்  நமக்குள்ள இருக்கட்டும்… வந்த முதல்  நாளே  மெர்லினா அக்காவிடம் ஒரு  காட்டு  காட்டிடேன்…. 

 

அவுக  மூன்னு  பேருமா சேர்ந்து  என்னை  ரொம்ப  டார்ச்சர்  பண்ணுணாங்க!.. அதுக்கு தான்  மெர்லினா  அக்காவிடம்  இப்படியெல்லாம் பேசுனேன்… 

 

அவங்க அப்படியே  அமைதியாக  ஆகிட்டாங்க,… எனக்கே  ஆச்சரியமாக ஆச்சு, எதுவுமே…பேசாமல்  போய்ட்டாங்க,… ஆனால்  அந்த  இரண்டு பேர்  இருக்காங்களே  அவங்க வாயாலேயே மெர்லினாவை எங்க கண்ட்ரோலுக்குள்ள வச்சுருக்கோம்… இன்னிக்கு வந்தவ  மாத்திவிடலாம்னு  நினைக்கியா  என்று  ஏதோ  பேசுனாங்க,.. நான்  அப்படியே  அக்காவை  மாத்திக் காட்டுறேனு  சவால் விட்டுட்ட,… 

 

நீ  வந்த  அன்னைக்கே  இவ்வளவு நடந்திருக்கா,.. 

 

ம்ம்ம்… ஆமாம்…. இவ அவங்களுக்கு மேல…   என சஞ்சனாவும், வருணிகாவும் கிண்டல்  செய்தார்கள்….

 

சரிங்கடி…இரவு  நீங்க  எல்லாரும்  சாப்பிட  போங்க  எனக்கு பசியில்லை என்றாள்  வருணிகா …

 

தினமும்  ராத்திரியில் சாப்பிட்டு  தான்  தூங்கனும்..  இப்படி  சாப்பிடாமல் படுக்கக்கூடாது… வயிற்றில் நம்ம  எதிர்காலத்தில் சில  பிரச்சினைகள் நேரிடலாம் என்று  சொன்னாள்  மிதுன்யா..

 

இவ  வேற  இப்படி  சொல்றா, நான்  இரவு சாப்பிட்டதுக்கே  நீ  இப்படி  சொல்றியே, கோவிலுக்கு  விரதம் இருந்து  போகிறவங்க… ஒரு  நாளைக்கு  ஒரு  தடவ  மட்டும் தான்  சாப்பிடுவாங்க.. அவங்க  என்ன  நல்லா  தானே  இருக்காங்க… 

 

சஞ்சனா  நீ  சொல்றது  உண்மையா, விரதம்  எடுப்பாங்களா, சாமி கும்பிடுவாங்களா,.. நம்ம  வெளியுலகத்தில்  இவ்வளவு  நடக்குதா!… 

 

எனக்கு  தான்  ஒன்னுமே  தெரியல, ஹாஸ்டல்ல தான் வளர்ந்து  .சாப்பிட்டு அது  தான்  உலகம்  என்று  நினைத்தேன்… ஆனால்  இங்கே  எல்லாமே வேற  வேற  தான்… 

 

விரதம், பக்தி…. இப்படியெல்லாம் செய்றாங்களே,.. அதெல்லாம்  எதுக்காக.. என்று  கேட்டாள்… 

 

இத  பத்தி நீ  தெரிஞ்சுக்கனும்னா, சொல்றதுக்கு  ஒரு  நாள்  போதாது..  இன்னும்  தேவை ..

 

So,  நீங்க போய்  சாப்பிட்டுட்டு வாங்க… நான்  ரூமிலே இருக்கேன்… 

 

இரவினில்  நவதாரணி  சமைத்து  விட்டு  அனைவரையும்  அழைத்தாள்… அகல்யா  வேகமாக  வந்து அம்மா.. அம்மா  பசிக்குது… சீக்கிரமாக வையுங்க என்று  பிளேட்டை  நீட்டினாள்…

 

அகல்யா, அப்பா, அண்ணன் எங்க  ,..அவங்கெல்லாம்  வரட்டும்.அம்மா அவுங்கள இன்னும் காணோம்… எனக்கு  ஒரு  சப்பாத்தி வையுமா!..சாப்பிட்டுட்டு இருக்கேன்..

 

அம்மா, வந்துட்டேன்… என்னை  நாங்க  வருவதுக்குள்  சாப்பிட்டு முடிச்சுட்டாளா..என்றான்  சஞ்சீவ்… 

 

அவங்க  அப்பாவும் வந்து  காதைத்  திருகி… நாங்க  வருவதுக்குள்  எதுக்கு  சாப்பிட்டாய்…

 

அப்பா… அப்பா..  காது  வலிக்குது… எனக்கு  பசிக்குதுல டாடி… அதான்… 

 

ம்ம்ம்.. இதுவே  நாங்க  மட்டும் சாப்பிட்டா நீ  எங்கள  சாப்பிட்டு  முடிக்கிற  வரைக்கும்  திட்டுவில .. அதுக்கு தான்  அப்பா  உன்னோட  காதை  திருகிடுச்சு…

 

இதுவே  நான்  வந்தேன்  உன் மண்டையிலே  ஒரு  கொட்டு  வைச்சுருவேன்… என்று  சிரித்துக் கொண்டேன்  சொன்னான் சஞ்சீவ்… 

 

நிவாஸ்  தாரணியை  சாப்பிட  சொன்னான்… ஆனால்  அவள்  நீங்க  சாப்பிடுங்க அப்புறம்  சாப்பிடுறேன் என்றாள்  சலிப்பாக…. 

 

மம்மி… இது  என்ன  புதுசாக இருக்கிறது…எப்போதும் எங்க  எல்லாரிடமும் ஒவ்வொரு ஆ.. வாங்குவீங்க,.. அதுவும்  நீங்களா  கேட்டு  இன்னிக்கு  நாங்க உங்களுக்கு  ஞாபகம்  படுத்த  வேண்டியிருக்கு  ..

 

என்னாச்சு  …மாம்.  ஒரு  மாதிரியாக  இருக்கீங்க,.. உடம்புக்கு எதுவும் சரியில்லையா,.. 

 

ச்சே… ச்சே… அதெல்லாம் ஒன்னுமில்ல…. 

 

“ஏதோ  சிந்தனையில் மறந்து  விட்டேன்.”.. 

அம்மாவுக்கு ஒரு  வாய்  கொடுங்க  செல்லங்களா!… என்று  வெளிப்படையாக சந்தோஷமாக வாங்கினாள்….. 

 

“நிவாஸ்… தாரணியை  அழைத்து  அவளுக்கும் ஊட்டி  விட்டார்கள்…அவளும்  போதும்  போதும்  நீங்க சாப்பிடுங்க, அம்மா  அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்றாள்… 

 

சாப்பிட்ட முடித்ததும் அவரவர் ரூமுக்குள்  தூங்கச்  சென்று  விட்டார்கள்… தாரணி போகாமல்  சமையல் அறையில்  உட்கார்ந்து  யோசனையில்  இருந்தாள்… 

 

நிவாஸ்  தாரணியைக் கூப்பிட்டான்… அவளும்  நீங்க  எதுக்கு இங்க  வந்தீங்க, வாங்க  நம்ம  ரூமுக்கு  போகலாம் என்று  படபட பேச. 

 

நிவாஸ்… தாரணியிடம்  ரிலாக்ஸ்…மா… ஏன்… பதற்றப்படுற… 

 

வா… உட்காரு.. தண்ணீய  குடி… 

 

நீ …எதுக்கு இப்படி  இருக்கிற… உம் மூத்த  பெண்ணை  கண்டுபிடிக்கனும்  அப்படித்தானே,.. 

 

அதற்கான  ஏற்பாடுகளை செய்து  முடிச்சுடேன்… இன்னும்  இரண்டு  மாசத்துல நம்ம பொண்ணு  நம்ம கூட  இருப்பாள்..  

 

அப்படியே  ஆனந்தமாக  கணவனை  கட்டி  அணைத்துக் கொண்டாள்… அந்த  சமயத்தில் அகல்யா  உள்ளே  நுழைந்து..நீங்க இன்னும்  தூங்காமல்  தான்  இருக்கீங்களா,… 

 

ஆமாம்… டி… சொல்லு…. 

 

ஓ…. மம்மி… உங்க  ரொமான்ஸ் நான்  டிஸ்டப்  பண்ணல….

 

இந்த  போன்  தான்  …இந்தாங்க  …மா..  உங்க  ..அத்தை  லையனில்  இருக்காங்க,.. பேசுங்க…. .

 

போனை  கையில  வச்சுட்டு தான்… இப்படி பேசிறீயா,… உன்ன… இரு…

.

ஹலோ…  தேவநாயகி அத்தை  நல்லா இருக்கீங்களா,.. 

ம்ம்ம்… நல்லா இருக்கேன்…நீ.. எப்படிம்மா இருக்க… என்ற  மறுபக்க எதிரோலியில் 

கேட்க…

நானும்  நல்லா இருக்கிறேன்… அங்க  வீட்டுல  மாமா… பிள்ளைங்க  நலமா… என  தாரணி பேச  …எல்லாரும்  நலம்.. 

 

சொல்லுங்க அத்தை..  ஏதாவது  விஷயமா,… 

 

ஆமாம்.. மா… எம்  பொண்ணுக்கு நிச்சயம்  பண்ண  போறேன்… நீங்க  எல்லாரும் குடும்பத்தோடு  வந்திருங்க….

 

கண்டிப்பாக  அத்தை… வந்துருவோம்… சரி… உன்னோட  கணவர்  இருந்தா கொடும்மா,.. 

 

அத்தை  நானே.. சொல்லிக்கிறேன்… அவங்களுக்கு இந்த  பார்மால்டிஸ்ட்  பிடிக்காது… நாங்க அனைவரும்  வந்துருவோம்… 

 

இரண்டு நாளைக்கு  முன்கூட்டியே வந்திடும்மா…

 

அத்தை …தப்பா  நினைக்காதீங்க,.  சஞ்சீவுக்கும்,அகல்யாவுக்கும்  எக்ஸாம் நடக்குது… 

 

அதனால நானும்  என்  கணவரும்  கட்டாயம் வந்திடுவோம்  என்று  சொன்னாள்… 

 

தாரணியும்  வெகுநேரமாக  பேசிக்கொண்டே  இருந்தாள்… அகல்யாவுக்குத்  தூக்கம்  வந்ததும்  தூங்கி  தூங்கி விழுந்தாள்…

 

பார்த்த நிவாஸ்… அகல்யா  போ… ரூமில்  போய்  படு… அம்மா பேசிட்டு  போனைக்  கொண்டு  வரும்…


டாடி… எனக்கு  படிக்க வேண்டியது  நிறைய  இருக்கு… சோ.. டவுட்  பாக்கனும்னா… போனில்  தான் செக் செய்து  பார்ப்பேன்… அப்போது  தான்  கிளியர் ஆகும்… 

 

சரிம்மா,… நேரம்  ஆயிடுச்சு,. காலையில் எழுந்து  படிக்கலாம்… நேரமாச்சுடா!… போடா,.. பேபி… செல்லமாக கூறினார்  ..

இனியும் வருவாள்… .

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்