இரு மனங்கள் சங்கமிக்கும்
ஒரு அற்புத பந்தத்தின் உறவே
“திருமணம்”
கண்களில் காதலைத்தேக்கி, தன்னவளை கரம்பிடிக்க அவன் கை நீட்டி காத்திருக்க, பெண்ணவள் வெட்கத்தை கரம் பிடித்து நின்றிருந்த பொன்னிற சிலை மண்டபத்தின் வாயிலை அலங்கரித்து உறவுகளை வரவேற்று நின்றது.
‘ஆனா பாத்தீங்கனா, அதை கூட சைட் அடிச்சிட்டு நின்னான் ஒருத்தன்’
‘அவன் கபாலம் கலங்குற மாதிரி பின்னால இருந்து ஓங்கி ஒரு அடி….’
‘திரும்பி பார்த்தா….’
‘நம்ம ஹீரோ எழில்‘.
_________________________________
முதல் பக்கத்தில் “யாழினி லவ்ஸ் எழில்” என்று அழகாக எழுதப்பட்டிருந்ததை பார்த்தவன் இதழ்கள் மலர்ந்தன. அதே பக்கத்தில் கீழே இருந்த ஆண்டைப் பார்த்தவன் அதிர்ந்தான்.
“2011” என்றிருந்தது.
அவன் அடுத்த பக்கத்தை திருப்பியவாறு அதில் எழுதப்பட்டிருந்ததோடு மூழ்கிப் போயிருக்க, இருவரது நினைவுகளும் பத்து வருடங்கள் பின்னால் சென்றன….