சோத்துக்கான அலப்பறை … 🤩
இடம் : 1
” டேய் ஆரவ் இந்த ஒரு வாய் சாப்பிட்டு போடா … செல்ல குட்டி ல . கல்யாண அவசரத்துல காப்பி வைக்க முடியல தங்கம் . ப்ளீஸ் டா ” என்று தன் செல்ல மகன் ஆரவ் ஐ கெஞ்சி கொஞ்சி சாப்பிட வைத்துக் கொண்டு இருந்தார் காயத்ரி .
( அப்படி என்ன நம்ம ஆரவ் சாப்பிடாம இருக்கான் 🤔 )
ஆரவின் அத்தை மகன் அபிநந்தனுக்கும் அவனது தோழனின் தங்கைக்கும் நேற்றும் இன்றும் திருமணம் . இன்றைய அவசரத்தில் காலைக்கு காப்பி வைக்க முடியல .
நம்ம ஆரவ்க்கு எல்லா சாப்பாடும் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் . ஆனால் நேற்றும் இன்றும் திருமண வைபோக அலைச்சலால் அவனுக்கு சாப்பாடு செய்ய முடியவில்லை . அதற்குத் தான் இந்த அக்காப்போரு …
” எய்யா தம்பி சொன்னா கேளுயா … இந்தா நேற்றைக்கு பார்ட்டி ல வச்ச பிரியாணி இருக்கு டா … என் செல்லம் இல்ல … ப்ளீஸ் டா … சூடு பண்ணி வச்சுருக்கேன் சாப்பிட்டு போயா ” காயத்ரி
” போமா நம்ம அரசி அத்தை வீட்டுல சாப்பிட்டுக்குறேன் .பை பை ” என்று விட்டு ஆரவ் கிளம்பினான் .
( பயபுள்ள ரொம்ப சீனு போடுதே … சரியில்லையே … ஆப்பு எங்கிருந்தாவது வந்தா நல்லா இருக்குமே … 😌 இதுக்கு நீ அனுபவிப்படா … திஸ் இஸ் சில்வியா’ஸ் சாபம் … 🤩 😎 )
சஞ்சீவ் : அம்மா சாப்பாடு
அம்மா : சஞ்சூ .. இண்ணைக்கு அபியோட கல்யாணம் ல . சோ இண்ணைக்கு இட்லி & சட்னி தான் .
சஞ்சீவ் : என்னது சாம்பாரா … 😳 … நோ … முடியாது போமா … எனக்கு சாப்பாடே வேண்டாம் .
அம்மா : கிளம்பு 2 இட்லி மிச்சம் ஆகும் . நாளை அதையே உப்புமா ஆக்கி தர்றேன் . எனக்கு வேலையும் மிச்சம் . டாடா …
( ஓவரா பண்ணுனா இப்படி தான் நடக்கும் கிளம்பு ராசா … கிளம்பு )
அம்மா : சசி நில்லுடா … ஒரு 2 மினிட்ஸ் வெயிட் பண்ணு அம்மா முட்டை தோசை ஊத்தி தர்றேன் டா …
சச்சின் : அட போமா ஆரவோட அரசி அத்தை வீட்டில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் . பை பை
அம்மா : டேய் அங்க ஒண்ணும் இண்ணைக்கு வைக்கல டா … அவங்க கல்யாண பொண்ணு வீட்டுக்கு எதோ சம்பிரதாயம் செய்ய போய் இருக்காங்க டா … 🙆
அம்மா : அட படுபாவி பயலே … சொன்னா கேட்டா தானே … இண்ணு தின்னாம கிட …
( வாய் கூடுது … டேய் அம்மா பேச்சையா கேக்க மாட்டுற … இதுக்கு தண்டனை கிடைக்கும் டா 🤧 )
மூன்று தடியன்களும் வீட்டில் அடி நடத்தி விட்டு வர ஆரவோடு அரசி அத்தை வீட்டிற்கு வீடு பூட்டி இருந்தது .
ஆரவ் : அய்யோ வயிறு அழுகுதே… சவுண்ட் பலமா வருதே …
சஞ்சீவ் : ஐடியா
சச்சின் : என்னடா 🙄
சஞ்சீவ் : அபி வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் .
ஆரவ் : அதுதான் கிளம்புவோம்
….
அபி : வாங்கடா …
அபி அம்மா : வாங்கப்பா … அம்மா வரலையா …
ஆரவ் : அவங்க சேந்து வருவாங்க ஆண்டி …
அபி அம்மா : ஓ ஓகே பா ... அபி சீக்கிரம் ரெடி ஆகு .
அபி : அம்மா அரசி அத்தை எங்க …
அபி அம்மா : அவங்க பெண் வீட்டுக்கு போய் செய்ய வேண்டிய சடங்கு செஞ்சுக்கிட்டு நேரா மண்டபம் வந்துடுவாங்க …
அபி : ஓ…
அபியின் அம்மா கிளம்பியதும் …
ஆரவ் : மச்சி சாப்பாடு போடுடா … வயிறுல பல அலாரம் அடிக்குது டா … 😥
மற்ற இருவரும் : ரொம்ப டா . ப்ளீஸ் சாப்பாடு கொடுடா …
அபி : அச்சச்சோ சாரி மச்சி சாப்பாடு இப்ப தான் தீந்துச்சு . அம்மா கிட்ட கேக்குறேன் .
அபி அம்மா : அச்சச்சோ சாரி பா . நேத்து மீஞ்சபாதி தான் இருக்கு வீட்டுல .
ஆரவ் : ஓகே ஆண்டி … நாங்க சாப்பிடுறோம் .
ஆரவ் மைண்ட் வாய்ஸ் : மீனும் சப்பாத்தியும் . ஆண்டி ஸ்பெஷல் நெத்திலி மீன் தான் . சூப்பர் .
சஞ்சீவ் மைண்ட் வாய்ஸ் : மீன்சப்பாத்தி . எதோ புது டிஸ் போல . ஓகே டன்
சச்சின் : எதோ கொண்டு வர்றத தின்னுறோம் கிளம்புறோம் .
சிறிது நேரத்தில் சாப்பாடு வர மூவரும் வாயைப் பிளந்தனர் . பிகாஸ் வந்த சாப்பாடு 🤭🤭🤭😌🤣🤣🤣
சச்சினின் ஸ்பெஷல் பழஞ்சி … 😎 …
அபியும் அவன் தாயும் அவசரமாக கிளம்பிட வேறு வழி இல்லாது உண்ண தொடங்கினர் .
ஆரவ் : மச்சி வீட்டுல பிரியாணி ….
சஞ்சீவ் : வீட்டுல இட்லி தோசை
சச்சின் : வீட்டுல முட்டை தோசை பட் மை ஸ்பெஷல் 😁 பழஞ்சி …
🙃 💃🏻 🙃 💃🏻 🙃 💃🏻 🙃 💃🏻 🙃 💃🏻 🙃💃🏻 🙃 💃🏻 🙃
அம்மாக்கள் , தங்கைகள் , தமக்கைகள் , மனைவிகள் ஆசையா செஞ்சு பாத்து பாத்து தர்றத தூக்கி போட்டு நான் பெரிய அப்பாடக்கருனு குதிச்சா இப்படி தான் ஆகும் ஜாக்கிரதை …. 👍😎 😎 😎 😎
ஓகே பை பை … சோறு தான் ஆல்வேஸ் முக்கியம் 🙈
லாஸ்டா …
🤣🤣🤣 செம காமெடி சிஸ்…
🙈🙈😜😜
ரொம்ப நன்றி அக்கா ☺️