ஆதவ் கிருஷ்ணன் தரையில் விழுந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தவாறே மீண்டும் தன் நாற்காலியில் அமர்ந்து ரிலாக்ஸாக கால்களை நீட்டி நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“கூல் என்ன விட வேற யாருக்கோ ரொம்ப பயப்படுற மாதிரி இருக்கு அந்த அப்பாடக்கர் யாருனு எனக்கும் சொல்லலாம்”.
“இல்ல சார் அது தப்பு”.
“ஓ அப்ப சார் பண்ணது தப்பு இல்ல”.
“இல்ல சார் அது தான் தப்பு இதுக்கெல்லாம் அலவ் பண்ண மாட்டாங்க”.
“அந்த மாட்டாங்க தான் யார்னு கேட்கிறேன்”.
“அது எனக்குத் தெரியாது சார் ஒருத்தருக்கு மேல ஒருத்தர்னு பெரிய நெட்வொர்க் சார் நான் இப்ப தான் சார் அதுல சேர்ந்திருக்கேன்” என்றவனது குரலில் ஏனோ முன்பிருந்த பயம் பாதியாக குறைந்திருந்தது ஏதோ ஒன்று இவனிடம் இருந்து தப்பிவிடலாம் என்ற எண்ணத்தை அவனுள் விதைத்ததே அதற்குக் காரணம்.
எதிரில் இருந்தவனுக்கு அது புரிந்ததோ என்னவோ இடக்கை விரல்களால் தனது நாடியைத் தடவி விட்டவாரே “அப்படின்னா உன்னை திருட்டு வேலைய மட்டும் பார்க்க சொல்லி இருக்காங்க அப்படியிருந்தும் ஏன் இப்படி பண்ண” என்று அழுத்தமாக கேட்டான்.
“சார் இன்னொருக்கா இப்படி பண்ண மாட்டேன் சார்”.
“நீ இப்படி பண்ணது உனக்கு மேல இருக்கவனுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க” என யோசனையாய் கேட்டவனின் கால்களை பாய்ந்து சென்று பிடித்துக் கொண்டவன் “சார் வேணாம் சார் அவங்கள மதிக்கலேனு சொல்லி நரகத்த காட்டிடுவாங்க சார் தொழில்பண்ண விட மாட்டாங்க சார்” என்று கெஞ்ச அடுத்த நொடி அவன் மகன் பார்க்கும் கார்ட்டூன்களின் தலைகளை ஸ்டார் சுற்றுவதுபோல் தன் தலையிலும் சுற்றுவதை உணர்ந்தான் எதிரில் நின்றவன் கைகளை மடக்கி முட்டியால் நடு உச்சியில் வைத்த குட்டினால்.
“ஏன்டா நாயே அந்தத் திருட்டு நாய்க்கு பயப்படுற, உன் முன்னாடி ஆறடி உயரத்தில காக்கிச்சட்டை போட்டு கம்பீரமான நின்னுட்டு இருக்கேன் என்ன பார்த்து உனக்கு பயம் வரல இல்ல” என்று குரல் உயர்த்த மற்றவனின் காதிற்கு அது சிங்கம் முழங்குவது போல் கேட்டாலும் அவன் நிற்க்கும் இடத்தை கணிக்க முடியாமல் தலை இன்னும் கிர்ர்ரென்று சுற்றியவாரே இருந்தது.
சில நொடிகளிலேயே அவன் நிலையை புரிந்துகொண்டவன் ஷூ கால்களால் அவன் வலக்கை விரல்களால் நசுக்க “ஆஆ..” என்று கத்தியவனின் கதறலில் அந்தக் கட்டிடமே ஆட்டம் கொண்டது போலிருந்தது. இந்த சத்தத்தில் வெளியே காவலுக்கு நின்றிருந்தவர் ஓடிவந்து தன் தோளிலிருந்த துண்டால் அவன் வாயை இருக்கமாக கட்டி சென்றார்.
“என்ன இப்ப நான் எங்க நிக்குறேனு தெரியுதா” என்று மீண்டும் ஒரு முழங்கலை கேட்டவன் கை நசுங்கும் வலியில் குறைந்திருந்த தலை உருட்டலை இன்னொரு கையால் பிடுத்து நிறுத்தியவாரே கண்களிலிருந்து கண்ணீர் வடிய அவனைப் பார்த்தான்.
அதற்குமேல் ஏதும் விளங்காத வகையில் அவனை போட்டு புரட்டி எடுக்க கத்தவும் முடியாமல் அவன் அடித்த அடியில் இருந்த இடத்தை விட்டு சற்று நகரவும் முடியாமல் அந்த இடத்திலேயே புழுவைப்போல் துடித்தான் அந்த கந்தன் என்பவன்.
இத்தனை நேரம் அவனைப் போட்டு புரட்டி எடுத்து அவனை அடித்த கைகளும் உதைத்த கால்களும் சிறிது நேரம் என்று கூறினவோ என்னவோ அவன் துடித்ததில் கீழே விழுந்து கிடந்த நாற்காலியை நேர வைத்தவன் சாவகாசமாய் அமர்ந்து தன் கால்கைகளை நெட்டி முரித்தான்.
“ம் வாயில இருக்க கெட்ட எடு” என்றவனின் கட்டளைக்கு இணங்கி சொல் பேச்சு கேட்காமல் விழுந்துகிடந்த கைகளை எப்படியோ வாய்க்கு கொண்டுசென்று ஏற்கனவே நழுவி இருந்த டவலை இன்னும் கொஞ்சம் இழுத்து விட்டான் ஆனாலும் அவன் வாயிலிருந்து ஒரு சத்தமும் வரவில்லை அதற்க்கு கூட அவனிடம் தெம்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
“அப்புறம் ரொம்ப நேரமா ஏதோ சொல்ல ட்ரை பண்ற மாதிரி இருந்துச்சு சொல்லு” என்றவன் நெற்றியில் பூத்திருந்த வேர்வையை துடைத்துவிட்டு எழுந்து சென்று தலை மேல் இருந்த மின்விசிறி ஆன் செய்து வந்தான்.
“நா ஹெல்ப் பண்றேன் சார் விட்டுடுங்க” என்று மூச்சு வாங்க அந்த ஒரு வாக்கியத்தை கூறி முடிக்கும் முன் ஆதவ் கிருஷ்ணன் தன் கை கால்களின் சோர்வை நீக்கி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி அவன் முகத்தின் அருகே குனிந்து கூரான கண்களால் அவனை குத்திக் கிழித்தவாரே “எனக்கு உன்னால என்ன பண்ண முடியும்” என் கேட்டான்.
ஆனால் வாங்கிய அடியில் பாதி மயக்கத்தில் இருந்தவனுக்கோ அவன் கண்களின் மொழியும் வார்த்தையின் தோணியும் விளங்கவில்லை “அங்க எல்லாரையும் நான் காட்டுறேன்” என்று முடித்து நொடி அவன் முகம் இன்னொரு பக்கமாய் திரும்பிக் கொண்டது கன்னத்தில் விட்ட ஓர் அறையில்.
“துரோகம் பண்றேனு என்கிட்டயே சொல்ற எவ்வளவு தைரியம்டா உனக்கு” என்று இம்முறை அவன் வாயை கட்டாமலேயே பூஜையை ஆரம்பித்தான்.
எப்போதும் விழிப்பது போல் ஆறு மணிக்கு எந்த அலாரமும் இன்றியே ஹேமாவின் தாய் கண் விழிக்க ஒருநிமிடம் அவரின் புருவங்கள் யோசனையுடன் இடுக்கி நேரானது கட்டிலில் சாய்ந்து சுவரை வெரித்திருந்த கணவரை பார்த்து.
“எப்போ எழுந்தீங்க தூக்கம் வரலியா” என்ற மனைவியின் கேள்வியை அந்த நேரத்தில் எதிர்பாராது கொஞ்சம் தடுமாறி “இல்லமா ஒரு கேஸ் பத்தின யோசனை” என்றார்.
“கண்னென்ன இப்படி செவந்திருக்கு ராத்திரி முழுக்க தூங்கலையா கொஞ்ச நேரமாச்சு தூங்கி எந்திரிச்சா தானே வேலையை ஒழுங்கா பார்க்கமுடியும் சரி நீங்க தூங்குங்க நான் வேலைய முடிச்சுட்டு உங்களை எழுப்புறேன்” என்றவர் அவரின் பதிலுக்காக காத்திராமல் தனது கூந்தலை அள்ளி முடித்தவாரே அறையை விட்டு வெளியேறினார்.
பேசி செல்லும் தன் மனைவியை பார்த்தவாறே அடைப்பது போலிருந்த தன் நெஞ்சை நீவி விட்டவர் ‘முருகா நான் என்ன பண்ணுவேன் எப்டியாவது இந்த பிரச்சினைலேந்து எங்களை வெளியே கொண்டுவந்துடு அது மட்டும் இவளுக்கு தெரிஞ்சா” என்று மனதோடு அவர் மனைவியின் இஷ்ட தெய்வமான முருகனிடம் வேண்டியவர் அவ்வாறே அமர்ந்திருந்தார் அவர் மனைவி வேலைகளை முடித்து மீண்டும் வந்து பார்க்கும் வரை.
“என்னங்க இது தூங்கலையா இன்னும் அப்படியே உட்கார்ந்திருக்கீங்க மணியை பாருங்க ஏழரை தாண்டியாச்சு உங்க பையன் சாப்பிட்டு ஸ்கூலுக்கு போக ரெடியாகிட்டான் நீங்களும் உங்க பொண்ணு ஏன் தான் இப்படி பண்றீங்களோ” என்று புலம்பியவாறு அவர் கைபற்றி எழுப்பி விட்டவர் “சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க” என்றார்.
“ஹேமா இன்னும் எந்திரிகல”.
“இல்லங்க இந்த பொண்ணு ஏன் தான் இப்படி இருக்குனு தெரில நேத்து ராத்திரியும் சரியா சாப்பிடலை இன்னைக்கு இப்பதான் எழுப்பி விட்டேன் எனக்கு என்னமோ மனசு ஒரு மாதிரியா இருக்கு அவளுக்கு காலேஜ்ல ஏதாவது பிரச்சினையா இருக்குமோ நம்ம கிட்ட சொல்றதுக்கு பயப்படுறாளோனு தோணுதுங்க நீங்க அவகிட்ட பேசிப் பாருங்களேன் நான் கேட்டா எதுவும் சொல்லமாட்டா”.
“அப்படி எல்லாம் எதுவும் இருக்காது நீ தேவையில்லாம மனச போட்டு கொளப்பாத கடைசி வருஷல்ல அதான் டென்ஷனா இருப்பா” என்றவர் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தார் இவரும் பெருமூச்சு விட்டவாறே தன் மகளை காண சென்றார்.
மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு ஒரு வழியாக தந்தையையும் மகளையும் உணவருந்த வைத்துவிட்டு நிமிர்ந்த போது ஏதோ பெரிதாய் சாதித்த திருப்தி அவர் முகத்தில் தந்தை மகள் இருவருமே அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தனர் அப்போது அவர்களை கலைக்கும் வகையில் கிரிதரனின் அலைபேசி சத்தம் எழுப்ப ஒன்றும் கூறாமல் முகத்தில் விருப்பமின்மையை காட்டியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.
அழைப்பை ஏற்ற கிரிதரன் “ஓகே சார்” “எஸ் சார்” என்ற வார்த்தைகளை மகளை பார்த்தவாறே கூறிவைத்தவர் கண்களால் மனைவியை தேடி அறையில் இருப்பதை உறுதிசெய்தவர் “ஏசிபி தான்மா” எனவும் பதட்டத்தோடு தந்தையை பார்த்தாள்.
“கமிஷனர் ஆபீஸ் வர சொல்றாரு நீ ஸ்கூட்டியில் வந்துடு அப்பா உன் பின்னாடி வர்றேன் சரியா இல்லைன்னா அம்மா தேவையில்லாமல் டென்ஷன் ஆயிடுவா” என்று கூற தாய் வருவதை கண்களால் காட்டி குனிந்து கொண்டாள்.
“என்ன இன்னும் தட்டுல வச்சது அப்டியே இருக்கு நைட்டும் ஒமுங்கா சாப்டல இப்பவும் பசிக்கலையா மரியாதையா தட்ட காலி பண்ணிட்டு எந்திரி” என்று தாய் சத்தமிட்டதும் தான் கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள் வேகவேகமாய் வாய்க்குள் திணித்து தண்ணீர் ஊற்றி முழுங்கியவள் “நான் போய் ரெடியாகுறேன்” என்று சென்றுவிட்டாள்.
“பாத்திங்களா உங்க பொண்ண இவ்வளவு நேரம் ஆற அமர இருந்துட்டு இப்போ ஓடுறா இவள என்னதான் பண்றதோ” என்றவர் “நீங்க என்ன என்னையே பாத்துட்டு இருக்கீங்க ம் சாப்டுங்க சீக்கிரம்” என கனவனை விரட்ட ஆரம்பித்தார்.
ஹேமா ஸ்கூட்டியிலும் கிரிதரன் தனது காவல்துறை வாகனத்திலும் முன்னும் பின்னுமாய் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சேர இருவரும் சேர்ந்து ஏசிபியின் அறைக்கு சென்றனர்.
உள்ளே வந்ததும் விரைப்புடன் சல்யூட் வைத்த கிரிதரன் ஏசிபியின் அனுமதிபெற்று மகளோடு இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
கந்தனின் மொபைலை அவன் மேசையில் வைக்க அதை அடையாளம் கண்டு கொண்டவளாய் ஹேமாவின் கண்கள் அதிலேயே நிலைபெற்று நின்றது “அவன் கிட்ட விசாரிச்சதுல இந்த போன தவிர எதுலயும் போட்டோ சேவ் பண்ணல கேமரா மாதிரி எதுவும் கிடையாது இந்த போனையும் நீங்களே டிஸ்போஸ் பண்ணிடுங்க” என்று கூற பாய்ந்து போனை எடுத்து தன் நெஞ்சோடு பற்றியவளின் உடலில் நடுக்கம் வந்து மறைய அதோடு நிம்மதியும் அவளை ஆட்கொண்டது அந்த உணர்வை கண்மூடி அவள் அவதானித்துக் கொண்டிருக்க தன் மகளை வாஞ்சையாய் பார்த்தவர் ஏதும் சொல்லத் தோன்றாமல் மீண்டும் தன் முன்னால் இப்போது கடவுளாய் தோன்றுபவனை பார்த்தார்.
“அந்தத் திருட்டு கேஸ் உங்களோட ஸ்டேஷன் தான் ஸோ மத்த எல்லாரையும் அங்க அனுப்பிட்டேன் இவன் ஜிகச் ஹாஸ்பிட்டல்ல இருக்கான் நாளைக்கு உங்ககிட்ட வந்துருவான் அதுக்கு மேல என்ன பண்ணணுமோ உங்க விருப்பம் அப்புறம் போன் டிஸ்போஸ் பண்றதுக்கு முன்னாடி உங்க பொண்ண ஒருவாட்டி செக் பண்ண சொல்லிடுங்க” என்றவன் விடை பெறும் வகையில் தலையசைக்க இவரும் எழுந்து சல்யூட் அடித்து இன்னும் கண்களை மூடியவாறு பிரச்சினையிலிருந்து தான் வெளிவந்து விட்ட உண்மையை தனக்குள் பதிய வைத்துக் கொண்டிருந்த மகளின் தலையில் கைவைத்து சுயநினைவுக்கு கொண்டு வந்தவர் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றார்.
என்றுபோல் அன்றய நாளையும் முடித்திருந்த தோழிகள் தங்களது வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்க எப்போதும்போல் காவியா தன் தோழியின் தோளைத் தட்டி “வேகமாபோ சூர்யா” என்றுக்கூற ‘இவ என்ன இப்போவே தொடங்கிட்டா போலீஸ் ஸ்டேஷன் இன்னும் வரலியே’ என்று எண்ணியவாறே தன் கண்களால் துளாவியவள் “உன்னோட ரோதனையா போச்சுடி இது ட்ராபிக் போலீஸ் இவங்களுக்குமா பயப்படுவ” என்று கூறி முடிக்கும் முன்னே நாற்பது வயதை ஒத்த டிராபிக் போலீஸ் ஒருவர் இவள் வண்டியின் முன் கை நீட்டி நிறுத்தி பேபர்ஸ் என்று கையை நீட்டினார்.
அதற்கே பயந்துபோன காவியா நடுங்கிக்கொண்டே அமைந்திருக்க ஸ்டேண்ட் போட்டு இறங்கியவள் தன் தோழியையும் இழுத்து இறக்கிவிட்டு எப்பொழுதும் தன் வண்டியிலேயே வைத்திருக்கும் லைசன்ஸ் மற்றும் பேபர்ஸை எடுத்து காட்டினாள் சிறிது நேரம் அதனை மாற்றி மாற்றி பார்த்தவர் “இன்சுரன்ஸ் ரினியூ பண்ணவே இல்ல” என்று கேட்க சூர்யா தன் முட்டை விழிகளை உருட்டி அருகில் நின்று தோழியை பார்த்தாள் ஏற்கனவே பயத்தில் நின்றவள் இப்போது அழுதுவிடுவது போல் நோக்க அவளின் கையைப்பற்றி சமாதான படுத்தியவள் “என்ன சார்” என்றாள்.
“நான் என்ன வேற லேங்குவேஜா பேசுறேன் இது முடிஞ்சு ஒரு வாரமாயிடுச்சு இன்னும் ரினியூ பண்ணல”.
“சாரி சார் கவனிக்கல” என்று கூற அந்நேரம் அதே வெள்ளை நிற சீருடையில் முப்பதுக்குள் இருக்கும் ஒருவன் வந்து “என்ன பிராப்ளம் சார்” என்று கேட்டான் ஆசை பொங்கும் விழிகளால் சூர்யாவை பார்த்தவாரே.
அதைம்பார்த்த காவியாவிற்கு தான் ஒரு நொடி இதயம் நின்று துடித்தது ‘கிருஷ்ணா இப்ப ஏன் இவன் ஏழரைய கூட்டுறான்’ என நொந்தவாரே சூரியாவை பார்க்க அவள் ஏற்க்கனவே சூரியனான் கொதித்து கொண்டிருந்தாள்.
“இதப்பாருமா ரினியூ பண்ணாம விட்டுட்டு முறைக்க வேற செய்றியா” என்றார் சூடாய் அவள் முகத்தை பார்த்து.
“இங்க பாருங்க சார் தப்பு உங்கமேல” என்றதும் என்று என்பது போல் அவர் முழிக்க “நீங்க உங்களோட டியூட்டிய கரெக்ட்டா பண்ணி அடிக்கடி செக் பண்ணிங்கன்னா இந்த மாதிரி ஒன்னு இருக்குனு எங்களுக்கு ஞாபகம் இருக்கும் நீங்கள் வருஷத்துக்கு ஒருவாட்டி தீபாவளி வரமாரி ஒரு வாட்டி வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு எப்படி கரெக்ட் டேட் தெரியும்”.
“என்ன பாத்தா உனக்கு எப்படிமா தெரியுது” என்று இப்போது அவரும் தன் கண்களை அவளுக்கு சமமாய் உருட்ட காவியா அடுத்து பேசுப்போன தோழியின் கைகளை இறுகப் பற்றி கண்களால் கெஞ்சினாள்.
இவ்வளவு நேரம் அவள் அழகில் மயங்கி முகத்தில் தெரிந்த கோபத்தில் ஜர்க்காகி நின்றவன் ஒரு நொடி அமைதியில் நிதானித்து “சார் ஏசிபி ஜீப் வருது பேசாம அனுப்பிடுங்க இல்ல ஈவ்டீசிங்னு சொல்லி உங்களையே உள்ள தூக்கிப் போட்டுருவாரு” என்றவன் கண்கள் மீண்டும் சூர்யாவின் பக்கம் திரும்ப இன்னும் அவள் முகத்தில் இருந்த முறைப்பில் பார்வையை திருப்பிக் கொண்டான்.
“டேய் நான் என்ன வம்பா பேசிட்டிருக்கேன் என் வேலையதானேடா செய்றேன்”.
“இல்ல சார் தூரத்தில் இருந்து பார்க்க எப்படி தெரியும்னு தெரியாதுல்ல அதோட இந்த பொண்ண இங்க நிருத்தி ரொம்ப நேரம் ஆச்சு சார் பத்தி தான் நமக்கு தெரியுமே ஈவ்டீசிங்கு புது டெபனிஷன் சொல்றவரு” என்று அவர் காதுக்குள் முனுமுனுக்க இவரும் முறைத்தவாறே “இந்தாம்மா இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் இனிமே இந்த மாதிரி பண்ணா வண்டிய ஸ்டேஷனுக்கு அனுப்பிடுவேன்” என்று கூறி பேப்பர்ஸை வண்டின் மேல் வைக்க அதை எடுத்து பத்திரப் படுத்திக்கொண்டவள் “ரீனியூ பண்ணலைனா பைன் தான் போடனு வண்டிய துக்க கூடாது” என்று அவர்களின் காதில் விழுமாறு கூறிவிட்டு தன் தோழியோடு அங்கிருந்த சில அடி தூரம் நகர்ந்து ஓரமாய் வண்டியை நிறுத்தினாள்.
அப்போதுதான் ஆசுவாசம் மூச்சுவிட்ட காவியா மீண்டும் வண்டி நின்றதும் மறுபடியுமா என்று பதரி சுற்றிப் பார்க்க அவர்கள் பக்கத்தில் எந்த போலீஸும் இல்லை மீண்டும் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு “என்னாச்சு” என்று கேட்டாள்”.
“இரு அந்த ஏசிபிய பாத்துட்டு போலாம்” என்றவள் ஸ்கூட்டியில் இருந்தவாறே சற்று எழுந்து நின்று தாங்கள் சற்று முன் நின்ற இடத்தை நோட்டம் விட்டாள்.
“அவர எதுக்குடி நீ பார்க்கணும் விட்டாங்கனு சந்தோஷபட்டு போவியா”.
“அந்த ஜொள்ளு சொன்னத நீ கேட்கலை அவர் வரலேன்னா இந்நேரம் நம்மகிட்ட இருக்கத உருவிட்டுதான் விட்டிருப்பாங்க” என்றவளின் பார்வை இப்போதும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.
“நான் எதுவும் கேக்கல எதுவும் கேட்கவும் வேண்டாம் இப்ப வண்டிய எடுக்க போறியா இல்ல நான் ஆட்டோ புடிச்சு போகட்டுமா”.
“எதுக்கெடுத்தாலும் நடுங்கிட்டே இரு” என்றவள் அங்கே பார்வையை வைத்தவாறே தன் ஸ்கூட்டியை கிளப்ப அந்த நேரம் சரியாக இவர்களை கடந்து சென்ற ஏசிபியின் ஜீப் ட்ராபிக் போலீஸின் அருகில் வந்து நின்றது.
ஜீப்பில் இருந்து இறங்கியவனின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ “சார் அது விசாருச்சுட்டு இருந்தேன்” என்று கூற அவரை ஒரு பார்வை பார்த்தவன் கடந்து சென்றான்.
“இப்ப இந்த மனுஷன் நான் உன்கிட்ட கேட்டேனானு பார்த்தாரா இல்லை சந்தேகப்பட்டு பாத்தாரானு தெரியலையே” என்றவாறு தன் தலையில் இருந்த தொப்பியை கழட்டி லேசாய் வழுக்கை ஆரம்பித்தது தலையை தடவினார்.
“விடுங்க சார் அவர் சும்மா பாத்துட்டு போனதுக்கு இப்படி டென்ஷனாகுறீங்க அவ்ளோ பயமா”.
“ஏன்டா வயசுக்கு கூடவா மரியாதை இல்ல எனக்கு அந்த பொண்ணு அப்பா வயசுடா நான் போய் ஈவ்டீசிங் பண்ணுவேனா” என்று அவர் தன் ஆதங்கத்தை வெளியிட அவரின் மறு பக்கம் வந்த இன்னொருவன் “சார் உங்களுக்கு தெரியாதா இப்ப டிரெண்டிங் நியூஸே எங்கள மாதிரி வயசு பசங்கள கூட நம்பலாம் ஆனா உங்கள மாதிரி வயசானவங்கள நம்ம கூடாதுங்குறது தான்” என்றான்.
“டேய் என்ன பேசுற மரியாதை முக்கியம்”.
“என்ன சார் ஏசிபிய போய் உங்களுக்கு மரியாதை குடுக்க சொல்றீங்க”.
“நான் எப்படா சொன்னேன்” என்றவர் குழப்பமாக பார்க்க மறுபுறம் நின்றவனும் “என்னதான் இருந்தாலும் நீங்க இப்படி சொல்லிருக்க கூடாது சார்” என்று அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தான்.
“நான் என்னடா சொன்னேன்”.
“எனக்கு தெருஞ்சு ஏசிபி சார் மட்டும் தான் மரியாதையா அவருக்கு கீழே இருக்கிறவங்கள கூட மிஸ்டர் போட்டு கூப்டுவார் அவரையே மரியாதை இல்லாமல் பேசுறானு சொல்லிட்டீங்களே”
“டேய்”.
“விடு மச்சான் சாருக்கு அவனே இவனேனு பேசுறவங்கள தான் மரியாதை கொடுக்குறாங்கனு நினைக்கிறார் போல”.
“டேய் என்னங்கடா”.
“வா மச்சான் நாம போய் நம்ம வேலையை பார்ப்போம்” என்று மாற்றி மாற்றி அவரை திணற வைத்தவர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டவாறு அங்கிருந்து நகர்ந்து செல்ல அவரோ பரிதாபமாய் போகும் அவர்களைப் பார்த்து விட்டு தன்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஆதவ் கிருஷ்ணனைப் பார்த்து பேய்முழி முழித்தார்.
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
கடைசிலே ட்ராஃபிக் போலீஸே கதி கலங்க வெச்சிட்டாங்களே🤣🤣🤣🤣🤣
அடப்பாவிகளா….இன்ஷுரன்ஸ் முடிஞ்சிடிச்சுனு சொன்னது ஒரு குத்தமாடா…அதுக்கு ஏன்டா அந்த மனுஷன இந்த பாடு படுத்திட்டீங்க!!!
Aadav super… Hema happy na nangalum happy… Ithu ennada thillalankadi ya iruku…. Surya baby pona episode la irunthe nee sari ila …. Mokka padathukkaga pona epi la sanda potta… Ipo ennana un thappa maraikka police ke aapu vakira… Sari ilaye…. Pathu suthanam ah irunthukko…. Nan Vera un fan nu solluthu tiriyuren…. Pathukko….
1. நாம்ம எப்படி இருக்கணும்னு ஆசைபடுறோமோ அப்படி இருக்க இந்த சமுதாயம் யாரையும் இப்படி இருக்க விடுறதில்ல. ஆனா நம்ம சூர்யா அப்படி இருக்குறது இந்த கதைக்கே தனி ரேங்கிங் கொடுக்க வைக்குது.
2. கதாபாத்திரத்திங்கள் எல்லோரும் செம்ம…
3. ஆதவ் கோபம் , அவன் கொடுக்குற ட்ரீட்மெண்ட் எல்லாம் அட்டகாசம்.
4.ஒரு ப்ரபெஸர்னா பாடம் நடத்துறதோட சரின்னு இல்லாம சூர்யா அம்மா அவங்க ஸ்டூடெண்ட ப்ரொடக்ட் பண்ண விதம்னு இந்த கதையில் ப்ளஸ் ரொம்ப அதிகமா இருக்கு.
குறைன்னா
1.இப்பல்லாம் சூர்யா சப்ப விசயத்துக்கு சண்ட போடுற மாதிரி இருக்கு.
2.நீங்க இப்போ யூடி போடுறத ஸ்டாப் பண்ணிட்டிங்க. ஏன்… பாவமில்லை யா நாங்க…
3. சூர்யாகிட்ட என் எதிர்பார்ப்பு அதிகம். கொஞ்சம் கம்மியாகுற மாதிரி ஃபீல்….
‘சூரியனின் மங்கை’ செம ஆக்ஷன் ப்ளாக் இருக்க, வேற லெவல் ஸ்டோரி.
இதோட பாசிட்டிவ்ஸ்,
1. யோசிக்கவே வேணாம், ஸ்டோரியோட ஃபர்ஸ்ட் பாசிட்டிவ் சூர்யா தான். இவளோட கேரக்டர் வேற லெவல். செம மாஸ் ஹீரோயின் சூர்யா…
2. செகண்ட் பாசிட்டிவ் ஆதவ். இவனோட கேரக்டர், ப்பா… செம மேன்லி…
3. ஜெனிஃபர், சூர்யா இடைல இருக்க பாண்டிங் செமயா இருக்கு. அம்மா, பொண்ணு எவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருக்காங்கன்னு ஆச்சரியப்பட வைக்கிறாங்க.
அப்புறம் நெகட்டிவ்ஸ்,
1.குட்டி, குட்டி டைப்பிங்க் எரர்ஸ் இருக்கு.
2. டையலாக்ஸ் எல்லாம், பன்க்சுவேஷன் மார்க்கிங்கே இல்லாம ஒரே வரியா, அப்டியே லென்த்தா இருக்குப்பா.
3. ஒரு சில இடத்துல, லைக் இந்த அண்ணாத்த மூவி பாக்குற இடம் மாதிரி, சில இடத்துல டையலாக்ஸ் அன்வான்ட்டடா இருக்க மாதிரி தோணுது.
மொத்தத்துல ஸ்டோரி செம மாஸா இருக்கு. படிக்கிறவங்களுக்கு விறுவிறுப்ப ஏற்படுத்துற வர்த்தான ஸ்டோரி…
வாவ்… வாட் அ ஸ்டோரி… ஹீரோயின் அல்டிமேட்.. சூப்பர் ஹீரோ.. ஜாடிக்கு ஏத்த மூடி ரெண்டும். செம்மயா போகுது.சின்ன சின்ன எழுத்துப்பிழை தவிர எல்லாமே டாப் டக்கர்.. காமெடி கூட சூப்பர். வாழ்த்துக்கள் ❤️
சூர்யா செய்யுவா தியானம், அவளக் கோவப்படுத்துனா போற எடம் மயானம்…
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுல, கந்தனுக்கு தலையே சுத்திடுச்சு ஆதவனோட ஒரு கொட்டுல…