Loading

சூர்யாவினுள்ளே எழுந்த கோபம் அவளையே பொசுக்க சைட் மிரரில் தெரிந்த காவியாவின் கலங்கிய முகம் அதை மேலும் பற்றி எரியச் செய்தது.

அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் ஸ்கூட்டியில் இருந்து இறங்கியவள் ஒரு கையால் அவன் சட்டை காலரை பிடித்து இன்னொரு கையால் அவன் பைக்கை பிடித்தவாறு அதை காலால் எட்டி உதைக்க அதோடு சரிய போனவன் இவளின் பிடியில் தட்டு தடுமாறி நிற்க அவன் பைக் அருகிலிருந்த காரின் மேல் சரிந்து நின்றது.

“ஏய் என்னடி பண்ற அதுவும் நடுரோட்டுல வச்சு பொண்ணு மாதிரி நடந்துக்க சொல்லிட்டே இருக்கேன் கையை எடுக்க போறியா இல்லையா” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அதட்ட அவன் கன்னத்தில் பளாரென்று ஒன்றும் வைத்தாள் அவள்.

அந்நேரம் சிக்னலும் வழிவிட சில வண்டிகள் அவர்களை சுற்றிக்கொண்டு செல்ல அதற்குள் நடுரோட்டில் ஆண் பெண் வயது வித்தியாசமில்லாமல் சிறு கூட்டம் கூடியது அதன் நடுவே காவியா கைப்பற்றி அழைப்பதையும் பொருட்படுத்தாது தன் முன் நின்றவனின் சர்ட் கலரை இறுக்கிப் பிடித்து குலுக்கியவாறு “பொறுக்கி நாயே பொறுமையா இருக்கணும் பொறுமையா இருக்கணும் நான் யோகா கிளாஸ் எல்லாம் போய் வந்தா நீ நிமிஷத்துல அத எல்லாம் வீணாகிட்டு என்கிட்டயே எகுறுறியா நானும் பாத்துட்டே இருக்கேன் சும்மா வந்து ஒரசுனதும் இல்லாம என்ன பேச்சு பேசுற நீ என்ன பார்த்தா எப்படிடா தெரியுது உனக்கு ஒ வீட்ல அம்மா இல்ல போய் அவள கேட்க வேண்டிதானே” எகிறினாள் நிலவென முகத்தையும் அதில் சூரியனாய் கோபத்தையும் சுமந்து.

தான் அவளை சீண்டியதால் கூட்டம் கூடவும் ஏதும் பேசாமல் அமைதியாக நின்றவன் அவளின் கடைசி வார்த்தையில் “ஏய்” என்று அவனும் துள்ள தன் தோழியிடமிருந்து கையை பறித்தவள் அவன் கன்னத்தில் மீண்டும் தன் நான்கு விரல்களை பதித்தாள்.

“என்னடா என்ன ஒ வீட்ட சொன்னதும் ராசாவுக்கு ஏறியுதோ இன்னொரு தடவை நீ இப்படி பண்றது பார்த்தேன்” என்றவளின் விழிகள் ஒரு நொடி அவன் இடுப்பின் கீள் சென்று வர “அறுத்திடுவேன்” என்ற வார்த்தையுடன் தன் தோழியின் இழுவிசைக்கு ஏற்றவாறு நகர்ந்தாள்.

ஆனால் அவள் அவ்வாறு அமைதியாய் போவது இவ்வளவு நேரம் சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களுக்கு பொறுக்கவில்லை போலும் “இந்தக் காலத்து பொண்ணுகள என்ன சொல்றதுனே தெரியல சரியான பஜாரி கணக்கா திரியுதுக” என்று ஒருவர் தொடங்க அதைத்தொடர்ந்து அங்கிருந்த பெண்களும் ஆண்களும் ஒருவருக்கு ஒருவர் ஒவ்வொன்றும் பேச தொடங்கினார்.

“ஆமா நான் கூட இங்க பின்னாடிதான் இருந்தேன் அந்த பையன் தெரியாமல் இதுக ஸ்கூட்டிய அடிச்சிடுச்சு அதுக்கு போய் இந்த ஆட்டம் ஆடுது இந்த பொண்ணு”.

“இப்டி எல்லாம் டிரஸ் போட்டா எவனா இருந்தாலும் இடிக்க தான் தோணும் போட்டிருக்கிற டிரஸ்ஸ பாரு பசங்க டிரஸ்ஸை போட்டுட்டு” என அங்கிருந்து கலையும் மனசில்லாமல் பேசிக்கொண்டே நிற்க அந்த கேப்பில் அவனும் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவி விட்டான் ஆனால் சூர்யாவிற்கு தான் உடலெல்லாம் மிளகாயை அள்ளி பூசியது போல இருந்தது.

கவிதாவின் கெஞ்சல் பார்வைக்காக பொறுத்துக்கொண்டு ஸ்கூட்டியை எடுக்க “இந்த பொண்ண அந்த பையன் வேண்டானு சொல்லிடுச்சு போல அதான் நடுரோட்டுல வச்சு அசிங்கபடுத்தி அனுப்பிடுச்சு போல இந்த மாதிரி இப்போ எத்தனை பாக்குறோ” என்று சொல்ல மீண்டும் ஸ்கூட்டியை விட்டு இறங்கியவள் அந்த பெண்மணியின் முன்னே போய் நின்று அவள் மார்பின் நேரே கைநீட்டி “இப்படி வளர்ந்து நிக்குதுல்ல இத யாராவது தொட்டாதான் வளருமானு கேட்கிறான் அவன் கேள்விக்கு பதில் சொல்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை உங்கள எல்லாம் பாத்தா ரொம்ப பொறுமைசாலி தெரியுது நான் கூப்பிடுறேன் நீங்க பதில் சொல்றீங்களா” எனக் கேட்க அந்த பெண்மணியின் முகம் சிறுத்துவிட்டது.

அவள் சத்தமாக கேட்டிருக்க அங்கிருந்த அத்தனை பேரின் காதிற்க்கும் அந்த கேள்வி சென்றடைந்திருந்தது ஒருவரின் முகத்தை இன்னொருவர் பார்க்க சங்கடப்பட்டு அடுத்த நொடியே கலைந்து செல்ல மீண்டும் வந்து ஸ்கூட்டியை எடுத்த வேகத்திலேயே அவள் கோபத்தின் அளவு காவியாவிற்கு தெரிந்தது.

“பேபிமா” என்று சத்தம் கொடுத்தவாரே சூர்யா வீட்டினுள் நுழைய சற்று முன் இருந்த கோபத்தின் சுவடு எதுவும் இப்போது அவள் முகத்தில் இல்லை ஆனால் அவள் பின்னே வந்த காவியாவின் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது ஏதோ பிரச்சனை என்று.

“இன்னைக்கு காவியா சொன்னதுதான் உண்மையாய்டுச்சு போல இன்னைக்கு யார் பொசுங்குனது”.

“ரோட்டுல வரும்போது ஒருத்தன் ரொம்ப பேசிட்டான் அதான் என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை ஒரு காட்டு காட்டிட்டேன்”.

“இந்துக்கெல்லாம் வரக் கோவத்தை கண்ட்ரோல் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை சூர்யா அத விட்டு அடுத்த வேலைய பாரு”.

“பேபிமா நான் அத அங்கேய விட்டுட்டு வந்தாச்சு இந்த மேடம் தான் முகத்த நீட்டி வச்சுட்டு இருக்காங்க கொஞ்சம் சமாதானம் சொல்லுங்க” என்று கூற ஜெனிஃபரின் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் வெளியே வந்தாள்.

சூர்யாவின் விழி கேள்வியாய் அப்பெண்ணை பார்க்க ஜெனிஃபர் “என்னோட ஸ்டூடண்ட் இப்ப கிளம்பிடுவோம்” என்றார். அவர் முகம் கூறிய செய்தியில் வேறேதும் கேட்காமல் “ஹாய்” என்றவள் “ஓகே காயு நீ வீட்டுக்கு போய் பிரஷாய்டு வா நாம இன்னிக்கு ஜமாய்க்கலாம்” எனக்கூற அவளும் இத்தனை நேரம் இருந்த கவலை மறந்து புதுக்கவலையோடு “வெளியே வா இல்ல அப்பா ஒத்துக்க மாட்டாங்க” என்றாள்.

“அச்சச்சோ என் செல்லமே உன்னை போய் நான் ஈவினிங் வெளியே கூப்பிடுவேனா நாம வீட்டுலையே என்ஜாய் பண்ணலாம் சரியா” என்று அவள் நாடி பிடித்து கொஞ்ச அவள் கையை தட்டி விட்டவள் “நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டாள்.

காவியா வீட்டில் நுழைந்ததும் கண்ணில் பட்டது தந்தை சோபாவில் அமர்ந்திருக்கும் பின்புறமும் அவர் முன்னால் தாய் கையை பிசைந்து கொண்டு நிற்பதும் தான் இன்றைக்கு என்ன பஞ்சாயத்தோ என்று சலித்தவாரே கொஞ்சம் பயத்தோடு அவரின் முன் பக்கம் தன் தாயின் அருகே வந்து நின்றாள்.

தன் முட்டை கண்களால் அவளை முறைத்து பார்த்தவர் “உன்கிட்ட எத்தனை தடவ சொல்லியிருக்கேன் ஆபிஸ் விட்டதும் நேரா வீட்டுக்கு வரணும்னு இப்ப எதுக்காக எதிர்த்த வீட்டுக்கு போயிட்டு வர” என்று மிரட்டல் குறலில் கேட்டார்.

“அப்பா அது ஆன்ட்டி பார்த்துட்டு வந்தேன்”.

“உன் ஆன்ட்டி என்ன உடம்பு முடியாம படிக்கைலையா இருக்காங்க போய் பாத்துட்டு வரதுக்கு” என்று கோபம்கொள்ள அவள் கண்கள் கலங்கி விட்டது ஆனாலும் அவள் உதடுகள் தன்னையறியாமல் சொன்னது “சாரிப்பா” என்று.

“இன்னைக்கு நடுரோட்டுல அந்த பொம்பள பொறுக்கி எல்லாருக்கு முன்னாடியும் பஞ்சாயத்தை கூட்டி வச்சசுட்டு நிக்குறா உன் பொண்ணும் அறிவே இல்லாம அவ பக்கத்திலேயே நிக்குறா என் மானமே போச்சு எல்லாரும் என்னென்ன பேசியிருப்பாங்களோ” என்று தலையில் கை வைத்துக் கொள்ள அவளின் தாய் மகளைப் பார்த்தார் என்னடி இது என்பது போல்.

“இல்லப்பா ரொம்ப தப்பா பேசினாங்க”.

“ஏவனோ பேசினா நீங்க ஏன் அத கேங்குறீங்க நீங்க கேட்டதுனாலதானே அவ பேசுனது உங்க காதுல விழுந்துச்சு. காதுல கேட்டாலும் வாய மூடிகிட்டு வரணும்னு இல்லை ஆம்பளபசங்க கூட இப்பல்லாம் நடுரோட்டுல சண்டை போடுறதுக்கு அசிங்கப்படுவாங்க ஆனா அந்த பொறுக்கி வரிஞ்சு கட்டிக்கிட்டு போய் நிக்குது” என்று அவர் பொரிந்து தள்ள தாயும் மகளும் அமைதியாக கேட்டு நின்றனர்.

“எல்லாம் என் தலையெழுத்து இந்த காலத்துல இவள தனியா விட்டா இவ அக்கா மாதிரி காதல்னு நிப்பானு பயந்து அவகூட ஆபிசுக்கு போயிட்டு வரட்டும்னு விட்டா அவளே என் பொண்ணுக்கு பிரச்சனையே கொண்டுவருவா போல”.

“இதுல இப்ப எங்க மாப்பிளை பார்த்தாலும் வேலைக்கு போற பொண்ணு தான் வேணும்னு கேக்குறாங்க ஏன் அவனுக்கு சம்பாதிச்சு பொண்டாட்டிய காப்பாத்த முடியாத எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி அனுப்பி விட்டாதான் என் டென்ஷன் குறையும் சே என் நேரம் ரெண்டும் பொட்ட கழுதையா பிறந்து என் உயிர வாங்குது”.

“பெருசுக்கு கல்யாணம் நடத்தி துரத்திவிடுறதுக்குள்ள என் பாதி உயிர் போயிடுச்சு இவளுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பறதுக்குள்ள அந்த பொருக்கி என் முழு உயிரையும் வாங்கிடும் போல” என்று மூச்சு வாங்கியவர் “எனக்கு மூச்சுவாங்குறது கண்ணுக்கு தெரியல தண்ணி எடுத்து தறக்கூட ஒருத்தர் சொல்லனுமா” என்று அதற்கும் மூச்சைப் பிடித்து கத்த நடுங்கியவாறே அவர் முன்னிருந்த தண்ணீர் கப்பை எடுத்து நீட்டினாள்.

ஒரே மடக்கில் தண்ணீரை குடித்து முடித்தவர் “இங்க பாரு ஆபீஸ்க்கு அவளோட ஸ்கூட்டியில் போகனும் வரனும் அவ்ளோதான் வேர எந்த பழக்கமும் அவ கூட வச்சுக்க கூடாது புருஞ்சதா அவ வெளிய ஏதாச்சும் பிரச்சனை பண்ணினாலும் அவளுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஒதுங்கி நிக்கனும் என்ன” எனக் கேட்க ஆம் என்பது போல் தானாய் அவள் தலை ஆடியது.

“வாய திறந்து சொன்னா முத்து உதிர்ந்துடுமா உனக்கு” என்று மீண்டும் அவர் கத்த தன் தோளில் குறுக்காகப் போட்டுருந்த பேக்கின் வாரை இருக்கமாக பிடித்து தன் நடுக்கத்தை குறைத்தவாறு “சரிப்பா” என்றாள்.

“சரி நான் கடைக்கு கிளம்புறேன் பொம்புளையா அடக்கமா வீட்லயே இருக்கனும் அங்க இங்க போய் கதை பேசினீங்கனு தெரிஞ்சது அவ்வளவுதான் அம்மாவுக்கும் மகளுக்கும்” என்றவர் தனது காரின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் அப்போதுதான் தாய்க்கும் மகளுக்கும் சீராக மூச்சு விடவே முடிந்தது.

“இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ணா உன் ஃப்ரெண்ட்” என்று தாய் ஆயாசமாய் கேட்க “என்னமா நீயும் இப்டி பிருச்சுபேசுற” என்று முகம் சுருக்கினாள்.

“சரி சரி விடு போய் மூஞ்ச கழுவிட்டு வா உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று கிச்சன் பக்கம் செல்ல அவர் கையைப் பிடித்தவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.

“என்னடி மூஞ்சில டன்டன்னா பால் வடியுது என்ன சூர்யா வெளிய கூப்டாளா இங்க பாரு அதுலாம் சரி வராது உனக்கே தெரியும்” 

“வெளியே எல்லாம் இல்லம்மா ஆன்ட்டிக்கு ஏதோ வேலை வெளிய போறாங்க நான் அவ கூட வீட்ல இருக்கேனே”.

“என்னடி பேசுற உன் அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் ஆபீஸ் கூட அப்பறம் அவ கூட அனுப்ப மாட்டார்”.

“மா என்னமா நீ கதவு திறந்து இரண்டு அடி சூர்யாவோட வீடு கீழே வாட்ச்மேன் அங்கிள்ட சூரியாவ சொல்ல சொல்றேன் அப்பா வந்ததும் போன் பண்ண அப்பா வீட்டுக்கு வரும் முன்னாடி நான் இருப்பேன் சரி சொல்லுமா ப்ளீஸ்” என அவர் யோசனையோடு நின்றார்.

“ப்ளீஸ்மா இன்னைக்கு சூர்யா பர்த்டே தனியா இருந்தா ஃபீல் பண்ணுவா” எனக் கெஞ்ச “யாரு உன் பிரண்டு பீல் பண்ணுவா” என்று முறைத்தார் பதிலுக்கு.

“ஐயோ நான் எப்போமா அவ ஃபீல் பண்ணுவான்னு சொன்னேன் அவ தனியா இருந்தா எனக்கு ரொம்ப பீலிங்கா போயிடுமா வீட்டுக்கு தானே வேற எங்கேயும் போகமாட்டேன் வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு வந்துடுவேன்.

அவருக்கே மகள் பக்கத்து வீட்டிற்கு செல்வதற்கு இப்படி கெஞ்சுவது வருத்தமாய் இருந்ததோ என்னவோ “சரி போய் மூஞ்சி கழுவி டிரஸ் மாத்திட்டு வா நான் ஏதாவது பலகாரம் செய்து வைக்கிறேன் அதையும் கொண்டுபோ” என்றவரை இருக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவள் “அம்மானா அம்மா தான்” என கொஞ்சி விட்டு தன்னை சுத்தம் செய்ய அறைக்குள் புகுந்து கொண்டாள்.

திருக்கடையூர் கைலாசநாதர் கோயிலில் சிவன் பார்வதி சிறப்பு பூஜை முடிந்திருக்க அந்த பூஜையின் பலனாய் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு அமைதி தென்பட்டது. அப்போது அங்கிருந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாது ஒரு பக்கத்திலிருந்து “பிக்கப் மீ பிக்கப் மீ” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்க அருகில் உள்ளவர்கள் அனைவரும் திரும்பி திரும்பி பார்த்தனர்.

“கோயிலுக்கு வந்தா போனை சைலண்டுல போடுனு உனக்கு எத்தன தடவ சொல்றது கண்ணா” என்று மகனை கண்டிப்புடன் பார்த்தார் சிவகாமி.

“சாரிமா” என்று கூறியவன் காலை கட் செய்ய நினைக்க அதிலிருந்த பெயரை பார்த்துவிட்டு சைலண்டில் போட்டு “போன் ஸ்டேஷனிலிருந்துமா என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று அங்கிருந்து நகர்ந்து சென்று அழைப்பை ஏற்றான்.

“சொல்லுங்க மிஸ்டர் கிரிதரன்”.

“சார் அது நான் உங்கள பாக்கறதுக்காக கமிஷனர் ஆபீஸ் வந்திருக்கேன் இங்க நீங்க இல்ல.. அது உங்களை இப்ப பார்க்க முடியுமா”.

“ஏன் உங்க வாய்ஸ் ரெஸ்ட்லெஸா இருக்கு எனி பிராப்ளம்”.

“சார் அது என் பொண்ணு விஷயமா… உங்கள நேர்ல பாக்கணும்”.

“வெயிட் பண்ணுங்க நான் வந்துடறேன்” என்று அழைப்பை துண்டித்தவன் தாயிடம் சென்று “மா நான் கேப் புக் பண்றேன் அதுல போய்டுங்க” எனக்கூற அவனை முறைத்தவர் “கேப் எதுவும் வேண்டாம் மூர்த்தி அண்ணா ஆட்டோக்கு சொல்லு” என்றார்.

அவரிடம் தலையசைத்து விடை பெற்றவன் ஆட்டோவிற்க்கு அழைத்தவாரே காரின் அருகே வந்து நின்றான் அந்தப்பக்கம் அழைப்பை ஏற்றதும் “மூர்த்திணா அம்மா கௌரிவாக்கம் சிவன் கோயில்ல இருக்காங்க வந்து பிக் பண்ணிக்கோங்க” என்று சொல்லி அங்கிருந்து பதிலை கேட்டு வைத்தான்.

அவன் பார்வை கார் கதவில் ஏற்பட்டிருந்த விரிசல் விழுந்தது இடக்கை ஆள்காட்டி விரலால் அதை ஒருமுறை வருடியவனின் கண்கள் ஏனோ பளிச்சென்று மின்னியது. பின் ஏதோ யோசித்தவனாய் காரை சுற்றி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கிளப்பினான்.

இவன் கமிஷனர் அலுவலகத்தில் நுழையும்போதே பார்த்துவிட்டான் இவன் அறையில் முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் கிரிதரன் அவ்வப்போது தன் கைகளால் முன்னெற்றியை ஒற்றி எடுத்தவாறு.

இவன் அருகில் சென்றதும் விரைப்பாய் அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடித்தவர் தளர்ந்ததும் தலையசைப்போடு “உள்ள வெயிட் பண்ணி இருக்கலாமே வாங்க” எனக்கூறி கதவு திறந்து சென்றான்.

“சொல்லுங்க என்ன பிரச்சனை”.

“சார் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே இப்போ ரீசண்டா ரெண்டு மூணு திருட்டு எந்த எவிடன்ஸும் இல்லாம நடந்துட்டு இருக்கு”.

“யா ஐ நோ ஒரு வாரத்துக்கு ஒன்னுன்னு பண்ணிட்டு இருக்காங்க லாஸ்ட் வீக் உங்களோடு விடு தானே”.

“எஸ் சார் திருட வந்தவன் எவனோ பொண்ண” என்று சொல்லத் தொடங்கி சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க கண்கள் கலங்கிவிட்டது அவருக்கு. தண்ணீரை கிளாசில் ஊற்றி அவர் பக்கம் நகர்த்தியவன் அமைதியாக அமர்ந்து கொண்டான்.

தண்ணீரை குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் “பொண்ண தப்பா போட்டோ எடுத்து மிரட்டுறாங்க சார் இன்னைக்கு தான் எனக்கு தெரிய வந்துச்சு என்ன பண்றது ஒண்ணுமே புரியல”.

“டீடைலா சொல்லுங்க மிஸ்டர் கிரிதரன்” என்று அவன் பொறுமையாய் விளக்கம் கேட்க அவரும் இன்று தன்னை கல்லூரிக்கு அழைத்தது தொடங்கி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டது வரை அனைத்தையும் பகிர்ந்தார்.

“ஓகே மிஸ்டர் கிரிதரன் இதை நான் பார்த்துக்கிறேன் அதுக்கு முன்னாடி நான் உங்க பொண்ணு கிட்ட பேசணும் அவங்கள கூட்டிட்டு வாங்க”.

“சார்” என்றவர் தயக்கமாக பார்க்க “நீங்களும் போலீஸ் டிபார்ட்மென்ட்ல தான் இருக்கீங்க இவ்ளோ பயம் தேவையில்லை உங்க பொண்ணு பேர் எங்கேயும் வராது நான் பாத்துக்குறேன்”.

“ஓகே சார்” என்று எமுந்து சல்யூட் வைத்தவர் ஒரு நிமிடம் தயங்கி “சார் பொண்ணோட ஹச்ஓடியும் உங்களை பார்க்கும்போது பொண்ணோட வரேன்னு சொன்னாங்க” என்று கேட்க தலையசைத்து சம்மதித்தான்.

வெளியே வந்தவர் உடனே ஜெனிஃபருக்கு அழைத்து “நான் சார பாத்து பேசிட்டேன் நீங்க ஹேமாவ கூட்டிட்டு உடனே கமிஷனர் ஆபீஸ் வர முடியுமா இல்ல நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா” என்று கேட்க அதற்கு மறுத்தவர் தானே வருவதாக கூறி வைத்தார்.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. சூப்பர் எபி சகி😍😍😍😍😍 இன்னும் ரெண்டு அப்பு அப்பிருக்கலாம் அவனே😤 அந்த நாயோட பைக்கு ஆதவ் வண்டிலே தான் ஸ்கிராட்ச் ஆகி விட்டுடுச்சா😄.

    2. என்ன நடந்துச்சு,என்ன பேசினானு தெரிஞ்சிக்காம பெண்ணே பெண்ணை தரம் தாழ்த்தி பேசவேண்டியது🙂🙂🙂🙂🙂….காவ்யாவோட அப்பா என்ன இப்படி பேசுறாங்க..என்ன பேசினாலும் பேசட்டும்னு சகிச்சுகிட்டு எப்படி வர்றது😠😠😠..

    3. Eppa Surya na kokava…. Ponnunga amaithiya iruntha company kudukura athn varan nu sollurathu…. Surya mathiri iruntha pakari ya iruka athn varan nu solrathu…. Cha ….. Enna manusangalo…. Niyatha thatti kekatuyim ipdi viteriya pesa kudathu…. Antha pompala ya pathu surya ketta parunga oru kelvi eppa…. Manam rosam iruntha angaye uyir poirukanum…. Intha mathiri ooruku niyam pesura VIP ku la surya thn venum…. Title ku semma porutham….