பாத்திரக்கலையை
கையிலெடுத்தேன் பெண்ணியம் பேசி சுதந்திரமளிக்க – என் கைப்பட்டு சிதறிய பாத்திரங்களோ பத்திரமாய் அவளிடம் சென்று குறைகூறியது என் சமையல் கலையை !
முந்திக்கொண்டு சமைப்பவளை மறித்து முந்தானையில் முகமறைத்து நான் கற்ற கலையெப்படி வீணாகக்கூடும் !
அன்னமளவு அறிந்திடாது – நான் வடித்த சாதத்தைக்காட்டி வசவு வாங்குமுன்னே முந்திக்கொண்டு சாதனையென்று என்னை நானே கள்வனாக்கி காட்டினேன் !
ரசம் வைத்த சாதனையில் உணர்வில்லா பலரது முகத்தில் நவரசமும் நாட்டியமாட நளினநடைக் கண்டேன் !
அறுத்தெடுத்த கோழி
அழகழகாய் பாத்திரத்தில் நிறைந்திருக்க – மீனாய் துள்ளி துள்ளாட்டம் போட்டது என் கைவரிசையில் சிக்கியதால் !
கண்ணாமூச்சி கண்கட்டு வித்தையாக
உப்பும் காரமும் கரைந்து விளையாட விதி வசத்தில் வென்றேன் – நான் சமையலறை மந்திரத்தில் வென்ற முதல் ஆடவனாக பெருமைக்கொண்டேன் என்னவள் முன்னே !
அழககளாய் அப்படியென்றால் என்ன..
ஒரு ஆணின் சமையல் கலையை சொல்லி இருக்கிறது உங்கள் கவிதை.. வித்தியாசமாக இருந்தது படிப்பதற்கு. வாழ்த்துக்கள் மா…
மன்னிக்கவும் மா… சிறு எழுத்துப்பிழை காரணத்தால் அர்த்தம் இல்லா வார்த்தையாகிவிட்டது…
மிக்க நன்றிங்க மா… தங்களின் கருத்திற்கு 🍫🍫🍫
சூப்பர் சிஸ்..ஆண் தன் மனைவியிடம் சமையல்கலையை காட்டிய விதமாய் அமைந்த கவிதை…
😁😁😁சிஸ் இல்லை சிஸ்…
ஐ ஆம் ப்ரோ…
மிக்க நன்றிங்க சிஸ்