Loading

­குட்டி குட்டி நிலாக்களாய் நீ..!
உனை உடைக்கும் நொடி என்
மனமுடைந்து ஏக்கமாய் நோக்கும் நான்..!
கவலையில் அல்ல களிப்பில்..!

என் மனதில் புதைந்து கிடக்கும்
ரகசியங்களாய்..
உனக்குள் புதைந்தன
கிழங்கு மசாலாக்களும்..
வெங்காய துண்டுகளும்..

கொட்டிய மழையில் நிறைந்து ஓடும்
குளமாய்.. உனக்குள் ஊற்றிய புதினா ரசம் வழிந்தோட..
அதனைக் கண்டு என் நாவில்
வழிந்தோடியது உமிழ்நீர்..!

என் சோகங்களை விழுங்கி சிரிப்பை
மட்டும் காட்டும் என் மனதைப் போல..
உன்னை அப்படியே விழுங்கினேன்
சிரித்துக்கொண்டே.. என் இதழ்களில் சிதறியிருக்கும் சிறு துளி கூட சிந்தாமல்..!

கண்கள் தானாக மூடி கொள்ள..
அதரங்கள் மெல்ல அசைபோட..
மெதுவாக கரையத் தொடங்கினேன்..!
உந்தன் ருசியில்..!

சொக்க வைக்கும் உன் ருசியில்..
சொர்க்கத்தைக் காட்டினாய்
என் பிரியத்திற்குரிய பானி பூரியே…!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. வாவ்..வாவ்.. அருமை..அருமை.. அழகான கவிதை வரிகள்.. உணவு விரும்பிகளின் மனதை அப்படியே காட்டும் கவிதை..

      பானி பூரி சாப்பிடும் அழகை அழகாக வர்ணித்து சொல்லி இருப்பது பிரமாதம்.. வாழ்த்துக்கள் டா…

      அதில் சொர்க்கம் தானே வரும். எழுத்து பிழை என்று நினைக்கிறேன்…

      1. Author

        மிக்க மனமார்ந்த நன்றிகள் அக்கா.. 😍😍😍😍😍
        பிழையை திருத்திக்கொண்டேன்..
        அதற்கும் நன்றி🙏😁

    2. ஆஹா..அருமையோ அருமை..பானிபூரியை ரசித்து உண்பது செம்ம பீல்…அற்புதம் சிஸ்

      1. Author

        மிக்க மனமார்ந்த நன்றிகள் சகி😍🙏