Loading

சுவையோடு சுவடு.

முன்னுரை :–

சுவடு என்றால் தடம்.

தடம் என்றால் பதிவு.

சுவையோடு சுவடு என்றாள் அறுசுவை உணவின் பதிவு.

நம் நாவால் உணரும் சுவையின் உணர்வுகள்.

ஒவ்வொரு சுவைக்கும் ஐம்பூத இயல்புகள் உள்ளது.

———————————————————

கவிதை

கதிரவனின் –
செங்கதிர் அலைகள் …..,

என் –
அகலிடம் –
புகுதல்
முன்,

கூகைக்கோழியின் –
கூக்குரல் …..
கேட்க,

கேணியில் –
இறைத்த
தண்ணீரில் நான் ..
முழுகி …,

வாயிற்கூட்தில –
சாணம்
கலந்த நீரை ..
தெளித்து ….,

அரிசி மாவினால்
திருப்பிண்டி –
இட்டு …

என் –
குலம் காக்கும்,

என் –
தெய்வத்தை,
தரிசித்துவிட்டு ….
நுழைந்தேன் …..

என் –
உலகில் – ஆம்!
என் –
சமையலறையில்!

 

காற்றோடு –
கலந்தது
நடனம் ஆடியபடியே …..,
காதில் –
புகுந்த, சுப்ரபாதம்!

அதன்
ரீங்காரதை …..
கேட்டுக்கொண்டே ….

காராம் பசு
மாட்டின் மடியில் . …
அமைதியாக . ..
பாலை
கரந்து …..

விறகு அடுப்பை
மூட்டி ….,

கும்பகோணம் –
ஐங்கரன் தோட்டத்திலிருந்து ……..,
புத்தம்புதிதாக …..
பறிததைப்போல …,
இளம்
துளிர் இலையில்,
போட்ட ….

தேநீரின்
கசப்புடன் கலந்த
இனிப்பின்,
சுகந்தம்……
கம … கம ……

என –
அழையா விருந்தாளியாக,
எல்லோர்
நாசியிலும்,
புகுந்து…

காற்றோடு –
காற்றாக,
தவழ்ந்து சென்று …..

அனைவரையும்
காலை வணக்கத்துடன்
எழுப்பியது!

கும்மி கொட்டி,
நெல்லைக் குத்தி …,
அரை வேக்காட்டில்
எடுத்து ….

காயவைத்து …,
உளுந்துடன்
சேர்த்து அரைத்து …,

தோய்த்தலில் –
பக்குவப்படுத்திய மாவில் …,

செப்பு பானையில்…,
தோய்ப்பமாக
அவித்து …,

அதற்கு –
தோதாக,
தென்னக்காயுடன்
பொட்டுக்கடலா ….
பருப்புடன்சேர்த்து ,

அம்மியில் –
நாவுக்கு
காரா சுவையை,
கூட்ட …

அதனுடன் ….,
கல் உப்பையும் ..
சேர்த்து …,
பஞ்சாக
அரைக்க ..,

உவர்ப்பு –
சுவையும், தன் …
பங்கிற்கு
தானாக ..,
சேர்ந்துகொள்ள ….

ஆஹா …,

நான் –
அரைத்த ..
அரையப்பம் ….
தோயப்பதுடன் கலந்து…,

சிரித்த …
முகத்தோடு
பரிமாறினேன்,

என் –
கொண்டவனுக்கு!

 

வயதான,
மாமனுக்கு –
நூல் புட்டும் ….

அதனுடன் –
இதயம் பலவீனதை
போக்க ….
மாதுளை கனியின் சாறும்,
சேர்த்து …..
அவர் …
சுவைக்க ,

ருசியோ .. ருசி
என –
சலிக்கவில்லை
அவர் நாவிற்கு!

 

வயதான மாமிக்கு –
ஆவாரம்பூ கஷாயம்,

இருமலை போக்கும்
வெந்தய கீரை
கொதிகஞ்சியுடன் அருந்த ..

என் …
புரிதலுக்கு
அவர்களின் முகத்தில் புன்னகையால்..,

என்னை ……
வாழ்த்திட,
பெரும் பாக்கியம் ….
கிட்டியதடி எனக்கு!

அத்தினம் ..
இனிய தினமாக
என் வாழ்வின் …..
புதியதோர்
தினமாக …
உதய ஆரம்பமானது!

என்னவன் –
வயலுக்கு செல்ல..,
மாமனும் …,
மாமியும் ..,

என் –
பிள்ளைகளோட, கொஞ்சி விளையாடி..,
நேரம் –
கழித்துக் கொண்டிருக்க..,

பின்னேரமாம்,
அனைவருக்கும்
பசியைப் போக்க. – நான்
மீண்டும்
தொடங்கினேன்….,
என் –
களப்பணியை!

கரும் எள்ளில்
பிரித்து ..
ஆட்டிய
எண்ணெயை சூடாக்கி,

சிறு வெங்காயத்தை
வெட்டியதில்,
சிந்தியதடி…..
என் –
விழிநீர்!

வழிந்து
ஓடிய – என்..,
விழிநீரை –
பாராமல் …,

அம்மியில் –
மஞ்சளை அரைத்து,
குண்டு மிளகாய் வற்றலில் …
தண்ணீரை தெளித்து ….

அதனுடன் –
காய்ந்த மல்லியையும் ..
சேர்த்து கர.. கரவென்ன ..
அரைக்க …

சத்தம் எழுப்பிய
மல்லியுடன்..,
சிறிது வென்பூண்டையும்
நசுக்கி …
அரைத்து….,

சீராக –
கல் உப்பையும்,
தூவியதில் …,

பானையில் …
கொதி தண்ணீரில் …
தத்தளித்து கொண்டு …..,
மேலே –
எட்டிப் பார்த்த
குமிழிகள்..,

அதில் –
என் –
தோட்டத்தில் …
நான் –
வளர்த்த,
என் –
பிஞ்சு கண்மணிகள்…
அழகாக….
வெந்து கொண்டிருந்தன ….
என்னுடைய –
சீதன பானையில்!

வெண்ணையில் இருந்து கடைந்தெடுத்த ….,
பால் – மோரும்,

அதில் –
ஓடமாய் மிதந்துகொண்டிருந்த, சிகப்பு
குண்டு மிளகாயுடன் ..

ஒய்யாரமாக –
கருவேப்பிலையும்
மல்லித் தழையும்..,
ஒன்றுகூடி நடனமாட ….,

அதில்
காயமும் ….,
தன் பங்கிற்கு….,
தானாக …
சேர்ந்துகொள்ள …

ஒய்யாரமாக –
அனைவரும்
குளிர தொடங்கின …
என் வீட்டு ..,
மண் குவளையில்!

உச்சிவெயில் –
வெப்பத்தை உமிழ,
என் –
இல்லவன் …
இல்லம் வந்து சேர …..,
அனைவருக்கும் …

சத்துடன் –
என் –
அன்பையும் …,
கலந்து, சேர்த்து ..
பார்த்து .. பார்த்து …,
நான் –
சமைத்த …,

கம்பஞ்சோறு,

துவரையுடன் –
கலவை காய்களுடன் குழம்பு,

கண்டத்திப்பிலி சாறு,

அங்காயப்பொடியுடன் …,

பிரண்டைத் துவையல் ..,

அத்திக்காய் கூட்டுடன்,

பால் – மோரும்,

சேர்ந்து …
அனைவரும் ..,
புசித்த பின்பு,

என் –
மாமனும் ..,
மாமியும் …,

வெத்தலை சீவலை
மென்றுகொண்டே …
திண்ணையில்..,
கதை கதைக்க …

என் –
மணாளன் …
ஒத்தையடி பாதை வழியாக
நிலத்துடன் ….
பணியாட செல்ல ….

நான் –
வீட்டை கூட்டி ..
மொழுகி …,
பாத்திரங்களை கழுவிய..,
பின்பும் …..
நேரம் –
இல்லையடி – எனக்கு,
சிறிது
ஒய்யாரமாக ….
சாய!

நேரத்தின் –
முட்களோ, நிற்காமல்
ஓடிக்கொண்டே இருக்க …..

கதிரவன் –
கண்ணுறங்க செல்ல ….

என் –
கொண்டவனோ ..
அகலிடம் புக …,
பின்புறத்தில் உள்ள
கேணியில் ….
நீரை இறைத்து …
குழந்தைகளுடன் …
நீராடி …
விளையாடி..
தன் –
தாய் …
தந்தையுடன் …
சேர்ந்து ….
அமர்ந்து ..
பாட்டு –
கேட்கும்
பெட்டியின் காதை
மெல்ல …..
திருகி …. பாட்டை
ரசித்துக் கொண்டிருந்தனர்.

வானில் –
நிலவு
உலா வரும்
நேரத்தில் …..,

எல்லோரும் –
ஒன்றாகக் கூடி …
அமர ….

கேப்ப ரொட்டியும்
பால் கஞ்சியும் அருந்திவிட்ட ..
என் –
மாமனும் …
மாமியும் …
எழுந்து …,

என் –
மக்களுக்கு..,
பால் அன்னத்தை ..,
மாமி ஊட்ட …,

நிலவை காட்டி
மாமனோ …
கதை சொல்ல …,

என் –
மக்கள், ஆனந்தமாக
விளையாடிய….,
பின்பு,
தாலாட்டை பாடி,
தூங்கவைத்தனர்..
என் –
செல்வங்களை!

கொண்டவனுக்கு –
நான்..,
செய்த ..,

நெய் அப்பம்,
காரப் பணியாரம்,
அவித்த புட்டுடன் …
கடலை கூட்டுடன்,
பழங்களுடன் சேர்த்து
பரிமாற ..,

ருசித்து
உண்ட, மாமனோ
என்னை
பார்க்க ..,

நாணத்தால்
வெட்கி
நான் தலை குனிய ..,

மாமநோ .,
என் – கைகளைப்
பற்றி ..,
பக்கத்தில்
அமரச்செய்தவருடன் ..,
நானும் –
அவருடன் சேர்ந்து ..,
புசித்த பின்பு ..

சிறிது நேரம் –
நிலா வெளிச்சத்தை ..
ரசித்தபடி …
அனைவரும் –
ஒன்றுகூடி
அமர்ந்து…..
கதைத்தபடியே ..,
சந்தோஷத்துடன் …..
சிறிது நேரத்தை
ஒன்று கூடி கழித்த,. பின்பு …

மெல்ல –
மெல்ல …,
அனைவரது –
கண்களில் –
உறக்கம் வந்து ..,
நிழலாட …..
இறைவனுக்கு…..
நன்றி ..,
சொல்லி
நம்பிக்கையுடன்,
உறங்கலாநோம்!

அனுதினமும் –
உணவில்
ஊட்டச்சத்து மற்றும்
இரும்பு சத்தும் ..,
குறையாமல் இருக்க ..,
உணவையே –
மருந்தாக்கி –
நோயை தடுத்து –
ஆரோக்கியமாகவும் …
நலமாகவும் …
சந்தோஷமாகவும் ..
வாழ –
இயற்கை உரத்தில் …
விலைந்த ..,
காய் – கனிகள் ….,
மற்றும்
சிறுதானியங்களை
உண்டு …,
அனைவரும் ….,
ஆரோக்கியத்துடன்
வாழ வேண்டும் …
என்று ……

அன்போடு
எடுத்து உறைபவள் ….
நான் …,

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. deiyamma

    வாவ்..வாவ்.. சுப்பர்.. அழகான கிராமத்து மண் வாசனை உங்கள் கவிதை வரிகளில்.

    கண்முன்னே காட்சிகள் அழகாய் விரிகிறது. காலை எழுந்தது முதல் துயில் கொள்ளும் வரை நடக்கும் நிகழ்வுகளை.. சமையல் செய்முறையோடு அழகாய் வடித்திருக்கிறீர்கள்.

    கொஞ்சம் நீண்ட பெரிய கவிதை. தாளம் தப்பாமல் இயற்கை உணவுகளை பற்றி எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.

    வித்தியாசமான ஆழமான கவிதை. வாழ்த்துக்கள் மா..

  2. அருமையான, மனம் விரும்பும் கிராமத்து சுவையுடன் களம் புகுந்து மிகமிக சுவாரஸ்யமாய் கவிதை படைத்துள்ளீர் சகி ….கிராமத்தில் ஒருநாள் பொழுதியின் சமையல் அனைத்தையும் நீண்டதொரு கவிதையில் உடல்நிலையை முன்னிருத்தி எடுத்து சொல்லியுள்ளீர் …அருமை …!!

    வாழ்க வளமுடன்..

  3. நான் ரசித்த வரிகள்

    என் உலகில்
    ஆம்
    என் சமையலறையில்

    சிரித்த முகத்தோடு
    பரிமாறினேன்
    என் கொண்டவனுக்கு

    என் மணாளன்…

    நீங்க ரசித்து எழுதியதை நானும் ரசனையோடு வாசித்தேன்..அற்புதம் சிஸ்