அத்தியாயம் -16
” சாத்வி இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? “
“பேச புடிக்கலனு அர்த்தம் ” அவளிடம் இருந்து வந்த பதிலில் எரிச்சல் அடைந்தவன்,
” என்னமோ எனக்கு மட்டும் அப்படியே உன்கிட்ட கொஞ்சி கொலவனும்னு ஆச பாரு..! கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லனும் இப்படி விதான்டா வாதம் பேச கூடாது “
“உங்களுக்கு தேவ வரும் போது தானே என் நியாபகமும் வரும், எனக்கு தெரில. உங்க ஃபைல் நீங்க தானே வெச்சீங்க? அப்போ நீங்களே தேடி கண்டுபிடிங்க”
பீட்ரூட் பொரியலை கிண்டி கொண்டே வந்தது அவள் பதில்.
“பாத்துக்கறேன் டி..! எனக்கும் ஒரு காலம் வரும். அப்போ பாரு நானு உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டேன் ” சொல்லி விட்டு டிபன் பாக்ஸை கூட எடுத்து கொள்ளாமல் சென்று விட்டான்.
காலையில் கணவனுடன் நடந்த சண்டையை நினைத்து பார்த்தாள் சாத்விகா. இன்று அவள் பிறந்தநாள் எத்தனை பேர் வாழ்த்து கூறினாலும் அவளவனின் வாழ்த்துக்கு தானே மனம் ஏங்கி தவிக்கும்?
“சாத்வி ” என அவன் அழைத்ததும் ஆசையாய் ஓடி வந்தவளிற்கு பெருத்த ஏமாற்றமே..! அவசர அவசரமாக தயார் ஆகி கொண்டே இதை எடு அதை எடு என வேலை ஏவினால் யாருக்கு தான் கோவம் வராது.
“இவரு கிட்ட போய் எதிர்ப்பார்த்தேன் பாரு என்ன சொல்லனும் ” தன்னை தானே சமாதானம் செய்ய அவள் கூறிய வார்த்தைகள். என்ன தான் உன் நிராகரிப்பு என்னை பாதிக்காது என்று இறுமாப்பாக இருந்தாலும் உள்ளுக்குள் அவனின் வாழ்த்தை எதிர்ப்பார்த்த குட்டி மனம் உடைந்து தான் போனது..!
ஏற்கனவே நடந்ததை நினைத்து கோவத்தில் இருந்தவளை இன்னும் எரிச்சலூட்டியது அஷ்வினியின் செயல்.
அவள் ஒன்று சொன்னால் அந்த வேலையை வேறு மாதிரியாக செய்து கொண்டு வந்து நீட்டினாள் அஷ்வினி.
” நா ஒன்னு சொன்னா நீ என்ன பண்ணி வெச்சிருக்க அஷ்வினி? ப்ச் ஒரு விஷயம் தெரிலனா எப்படினு வந்து கேட்டு பண்ண மாட்டியா! இப்படியா கேர் லெஸ்ஸா இருப்ப? போ போய் மொத்தமா சேஞ்ச் பண்ணிட்டு வா. இன்னிக்கு இத முடிச்சிட்டு தான் நீ கிளம்பற சரியா..! ச்சே.. எனக்குனு வந்து சேருதுங்க பாரு “
அவள் திட்டியதில் சட்டென கண்கள் கலங்கி விட்டது அஷ்வினிக்கு. முகத்தை தொங்க போட்டு கொண்டு அவள் வெளியே வருவதை கவனித்த மாதவ் அவளிடம் வந்தான்.
“ஓய் பஞ்சுமிட்டாய் என்ன ஆச்சு “
அவள் அமைதியா தலை கவிழ்ந்து நிக்க,
” உன்ன தான் கேக்கறேன் ” என்றான் சற்று அதட்டும் குரலில்.
“அது நா மிஸ்டேக் பண்ணிட்டேனு சாத்வி மேம் திட்டிட்டாங்க” என்றாள் கரகரத்த குரலில்.
“தப்பு பண்ணா திட்ட தான் செய்வாங்க, பின் கொஞ்சவாங்களா?”
அவனின் இந்த பதிலை எதிர்ப்பார்த்திராத்தவள் விழுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
” இது ஒன்னும் உன் வீடு இல்ல. எல்லாரும் உன்ன செல்லம் கொஞ்சி பாதுகாத்து பாத்துக்க..! வெளி உலகம்னா இப்படி தான் இருக்கும், அத மொதல்ல ஃபேஸ் பண்ண பழகு. எப்பவுமே எல்லா சூழலும் நமக்கு ஏத்த மாறி அமையாது..! ஒரு சிட்டுவேஷன்ன போல்டா எப்படி ஹாண்டில் பண்ணுறதுனு தெரிஞ்சிக்கோ. சும்மா சும்மா எதுக்கு எடுத்தாலும் கண்ண கசக்கிக்கிட்டு “
அவன் திட்டியதில் இன்னும் அழுகை முட்டி கொண்டு வந்தது அஷ்வினிக்கு.
நிச்சயமாக அவனிடம் இருந்து ஆறுதல் சொற்கள் அவள் எதிர்ப்பார்க்கவில்லை தான். இருப்பினும் இப்படி அவனும் சேர்ந்து திட்டுவான் என்பதையும் அவள் எதிர்ப்பாக்கவில்லை..!
“நா ஒன்னும் சும்மா சும்மா அழல..!” அவள் சொல்லும் போதே இரண்டு சொட்டு கண்ணீர் அவள் கன்னத்தை நனைக்க,
‘ அச்சோ மை ஸ்வீட் பஞ்சுமிட்டாய்..!’ என அவள் கன்னம் கொஞ்ச பரபரத்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கியவன்.
அதே அதட்டும் தோரனையில், ” ஓஹ் அப்போ கண்ணுல இருந்து வரது என்ன சேமியா பாயாசமா? ” என்றான் நக்கலாக.
“ஹான்..!” அவள் விழிக்க.
“ஒன்னும் இல்ல போய் வேலைய பாரு போ “
அவள் சென்ற பிறகு தான் அவனிற்கு மூச்சே வந்தது.
“ஊஃப்ஸ்ஸ் ” என பெரு மூச்சு விட்டவன்,
“டேய்… மாதவா, ஸ்டெடி டா ஸ்டெடி..!! அவள பாத்தாலே இப்படி வழுக்கி விழுறியே டா, இதுல எங்க அவள மாத்தி, அப்றம் லவ்வ சொல்லி அப்றம் கைய பிடிச்சி அப்பபா.. பெரிய ப்ரோசஸ்ஸா இருக்கும் போலயே..! இருந்தாலும் அழுகும் போது சைட் அடிக்க கூடாதுனு ரூல்ஸ் இருக்கா என்ன? நம்மாளு நம்ம சைட்டு நம்ம உரிமை..!! “
சொன்னது போலவே அஷ்வினி வேலையை முடித்து விட்டு தான் எழுந்தாள். கண்மணியும் மாதவ்வும் அவளிற்காக காத்து கொண்டிருந்தனர்.
” வினி வேல முடிஞ்சிதா? வா போலாம் “
“ஹேய் நீங்க ஏன் எனக்காக வைட் பண்ணுறீங்க? மொதல்லயே கிளம்பி இருக்கலாம்ல..! “
” ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கு தான் போறோம் இதுல ஏன் தனி தனியா போய்கிட்டு. அது மட்டும் இல்லாம இன்னிக்கு என் கூட ஷாப்பிங் வரனு சொல்லிருக்க நியாபகம் இருக்குல்ல? இதான் சாக்குனு அப்படியே கலட்டி விட பாக்கறியா? “
“அச்சோ அப்படி எல்லாம் இல்ல, கண்டிப்பா வரேன் “
கண்மணியின் வீட்டிற்கு நேற்று தான் மாறினாள் அஷ்வினி.
கண்மணியும் அஷ்வினியும் ஸ்கூட்டியில் வர, அவர்களை பைக்கில் பின் தொடர்ந்தான் மாதவன்.
நைட் மார்கெட்டிற்கு தான் அஷ்வினியை அழைத்து வந்திருந்தாள் கண்மணி.
“வினி ரொம்ப நாளா இங்க ஷாப்பிங் பண்ணனும்னு ஆசை அப்போலாம் இந்த எருமைய கூப்பிட்டா வரவே வராது. இன்னிக்கு பாரு நா கூப்பிட்டாமயே பின்னாடியே வால் புடிச்சிட்டு வருது “
“எருமையா!? ஓஹ் அவர
சொல்லுறியா ” என்றவள் வாய் பொத்தி கம்முக்கமாக சிரிக்க,
“ம்ம்ஹ்ஹ்ம்” என தொண்டையை செருமியவன் இருவருக்கும் இடையில் புகுந்து நடந்தான்.
“போதும் போதும் என்ன பத்தி புகழந்தது. நீ ஆன்லைன்ல ஒரு செப்பல் பாத்து வேணும்னு சொல்லிட்டு இருந்தியே அதே மாதிரி ஒன்னு அந்த கடையில்ல பாத்தேன் போய் வேணும்னா வாங்கிக”
“அடபாவிஈஈ.. முன்னாடியே சொல்ல மாட்டியா எங்க எங்க? “
அவளின் தலையை பக்கவாட்டாக திருப்பி, “தோ.. அங்க பாரு அந்த பச்ச கலர் போர்ட் போட்டுருக்க கடை தான் “
அவன் சொல்லி முடித்த வேகத்தில் காற்றாய் பறந்திருந்தாள் கண்மணி.
‘ஹப்பாடா இவள பத்தி விட்டாச்சி ‘ என எண்ணியவன் அஷ்வினியின் புறம் திரும்பி,
“பஞ்சுமிட்டாய் இந்தா உனக்கு பஞ்சுமிட்டாய்..! ” என்றவன் அவன் கையில் இருந்ததை அவள் புறம் நீட்ட, யோசனையாய் அதை பெற்று கொண்டவள்,
“என்ன திடீர்னு?”
“இன்னிக்கு கரெக்ட்டா வேலயா முடிச்சில்ல அதுக்கு தான் ஒரு சின்ன பாராட்டு “
” நீங்களும் தான் திட்டுனீங்க” என்றாள் முகத்தை சுறுக்கி.
“அப்படி இல்லம்மா..! எப்போவுமே ஒரு விஷயம் நடக்குதுனா அது ஏன் நடக்குதுனு அதுக்கான ரீசன்ன ஃப்ரஸ்ட் பாத்துட்டு தான், அடுத்து அதுக்கு எப்படி ரியாட் பண்ணுறதுனு யோசிக்கனும்.
தெளிவும் நிதானமும் நமக்கு ரொம்ப முக்கியமான ஒன்னு “
அவன் எதை பத்தி கூறுகிறான் என புரிந்து கொண்டவள் தலை கவிழ்ந்து கொண்டாள். மறுபடியும் கண்கள் கலங்க அதை தடுக்கும் விதமாக கீழுதட்டை அழுந்த கடித்து கொண்டாள்.
“அழுகைய கண்ட்ரோல் பண்ணுறது சொல்யூஷன் இல்ல, அழுகையே வராத அளவுக்கு நம்மள ஸ்ட்ரோங்கா வெச்சிக்கனும் புரிஞ்சிதா? நீ ஸ்ட்ரோங் கேர்ள் தானே ” என்றவன் மெல்ல அவளின் தாடையை பற்றி நிமிர்த்தி அவனை பார்க்க வைக்க, அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளுள் ஊடுருவிச் சென்றது..!
“டேய்ய்ய் சாணி மாடே நீ சொன்ன கடை செப்பல் கடையே இல்ல. அங்க போய் அத கேட்டு ஒரே அசிங்கமா போச்சு குமாரு..!” என்ற கண்மணி மாதவின் உயரத்திற்கு எம்பி அவனின் தலை முடியை பிடித்து ஆட்ட,
“ஸ்ஸ்ஆஆ.. விட்றி வலிக்குது எல்லாரும் பாக்கறாங்க”
“நல்லா பாக்கட்டும் என்ன அவளோ தூரம் நடக்கவிட்டீல்ல ” என்றவள் இன்னும் நன்றாய் இறுக பிடிக்க,
“அச்சோ அவரு பாவம் கண்மணி வலிக்க போகுது விட்டுறேன் ” என்ற அஷ்வினியின் விண்ணப்பத்தை ஏற்று கொண்டவள், அவனை சிகையை சிறைப்பிடித்திருந்த கைகளுக்கு விடுதலை கொடுத்தாள்.
“அது சரி மாதவா.. சப்போர்ட்டுக்கு எல்லாம் ஆள் வெச்சிருக்க போல? பெரிய ஆள் தான் போ “
” கடவுள் நல்லவங்கள சோதிப்பாரு ஆனா கைவிடமாட்டாரு . தர்மம் என்றும் தோற்காது மை டியர் சிஸ்டர் “
“வாயில நல்லா வந்துரும்..! ஒழுங்கா அந்த மாடல் செப்பல்ல நீயே ஆன்லைன்ல ஆர்டர் போட்டு வாங்கி தர புரிஞ்சிதா “
“சரி.. சரி வா..”
இன்று அலுவலகத்தில் துருவிற்கு பயங்கர வேலை. கிளையன்ட் மீட்டிங் என நான்கு மணி நேரம் அவனை வைத்து செய்துவிட்டார்கள்.
மீட்டிங் முடிந்து வந்தவன் போனை எடுத்து பார்க்க சாத்விகா தான் ஐந்தாறு முறை கூப்பிட்டு இருந்தாள்.
‘எதுக்கு இவளோ தடவ கூப்பிட்டு இருப்பா ‘ என்ற யோசனையிலேயே அவன் போனை நோண்ட, அப்பொழுது தான் வாட்ஸாப்பில் சாத்வியின் தங்கை அவளிற்கு பிறந்தநாள் வாழ்த்து ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை பார்த்தான்.
“அச்சசோ..! மறந்துட்டோமே, அப்போ இதுக்கு தான் காலையில இருந்து மூஞ்ச மூஞ்ச காட்டிட்டு இருந்தாளா? எதுக்கு கூப்பிட்டு இருப்பா? போன் பண்ணலாமா இல்ல நேர்லயே சப்ரைஸ்ஸா விஷ் பண்ணலாமா?” அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே போன் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. காலையில் சார்ஜ் போட மறந்திருந்தான்.
‘சரி.. ஈவினிங் எதாவுது கிப்ட் வாங்கிட்டு போய் கொடுத்து சமாதானம் பண்ணுவோம் ‘
நினைத்தது போலவே அவளிற்கு இது புடிக்கும் அது புடிக்கும் என கடை கடையாக ஏறி இறங்கி அவன் வாங்கி வீடு வந்து சேர சற்று தாமதம் ஆகி விட்டது.
அவன் உள்ளே வர அவனிடம் வந்தார் அவன் வீட்டில் வேலை செய்யும் அம்மா. எப்பொழுதும் சாய்ந்தரமே வேலையை முடித்து விட்டு போய் விடுவார், இவ்வளவு நேரம் ஏன் இங்க இருக்கிறார் என அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே அவர் அவனிடம்,
“என்ன தம்பி நீங்க போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா, பாப்பா வீட்டுக்கு வரும் போது வண்டில இருந்து கீழ விழுந்து கையில்ல பயங்கர அடி “
“அய்யயோ மகிக்கு என்ன ஆச்சி..!” என்றான் பதட்டமாக.
“மகி பாப்பா இல்ல தம்பி சாத்வி பாப்பாக்கு, ஆஸ்ப்பிதிரிக்கு போலாம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குது. என்ன ஏதுனு போய் பாருங்க போங்க”
சாத்வி வேலை முடித்து வழக்கம் போல் மகியை ஸ்கூலில் இருந்து பிக் அப் செய்ய ஸ்கூட்டியில் போய் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ராங் சைடில் ஒரு வண்டி வேகமாக வர சட்டென பிரேக் போட்டத்தில் தடுமாறி வண்டியோடு கீழே சாய்ந்தாள். கையில் நல்ல அடி. அதற்க்குள் அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடி விட, அவளிற்கு உதவி செய்தனர். அவள் ஸ்கூட்டி மறுபடியும் ஸ்டார்ட் ஆகவில்லை.
“இங்க பக்கத்துல்ல தான் ஒரு மெக்கானிக் ஷெட் இருக்கு அங்க வண்டிய கொடுத்து சரி பண்ணிக்கோ ” அருகில் டீ கடை வைத்திருந்தவர் சொல்ல அது போலவே செய்தாள்.
கை வலி ஒரு பக்கம் உயிர் போக, மகிஷாவை வேறு பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும். துருவ்விற்கு அழைக்க அவன் போனை எடுத்தப்பாடில்லை..!
“சொன்ன மாறியே பழி வாங்கறீங்கள” முட்டி வந்த கண்ணீரை அடக்க பாடுப்பட்டாள்.
கண்ணை துடைத்து கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து மகியை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டு வேலைக்கு வந்த அக்கா தான் அவள் கையை பார்த்து விட்டு,
“அய்யயோ என்ன கண்ணு கை இப்படி வீங்கி இருக்கு, வா ஒரு எட்டு ஆஸ்பித்திரிக்கு போய்ட்டு
வந்துருவோம் “
முடியவே முடியாது என மறுத்து விட்டாள் சாத்வி. ஏற்கனவே கை வலி இதில் குழந்தையை வைத்து கொண்டு மருந்துவமனைக்கு தனியே அவளால் எப்படி செல்ல முடியும்? வைராகியம் உள்ள பெண் அவள். யாரிடமும் சட்டென உதவி கேட்டு விட மாட்டாள். அதனால் தான் அவரின் உதவியையும் அவள் ஏற்று கொள்ளவில்லை.
இருந்தாலும் அவர் தான் பொருக்க மாட்டாமல் துருவ் வர வரைக்கும் துணையாக இருப்பேன் என மகியை வைத்து கொண்டு இருந்தார்.
இதை கேட்ட துருவிற்கு தலை சுத்தாத குறை தான்.
“ரொம்ப தேங்க்ஸ் கா ” என்றவன் அவரை வழி அனுப்பி விட்டு, உள்ளே வர கலைந்த ஓவியமாய் இருந்த மனைவியை பார்க்க அவனிற்கே கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக தான் இருந்தது.
வேலை செய்யும் அக்காவே இட்லி ஊற்றி சட்னி அரைத்து மகிக்கு ஊட்டி விட்டு சென்றிருக்க, குழந்தை தூங்கி கொண்டிருந்தாள்.
“வா ஹாப்பிட்டல் போலாம் “
அவளிடம் மௌனம் மட்டுமே,
“ம்ம்ச் சாரி டி, போன்ல சார்ஜ் இல்ல “
அவனை தீ பார்வை பார்த்தவள்,
“அப்போ நா செத்துட்டேன்னு போன் வந்தா கூட இப்படி தான் சொல்லுவீங்களா துருவ்..!”
“ஏய்.. ஏன் இப்படி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுற?”
“சம்மந்தம் இருக்கு துருவ் இருக்கு, ரோட்ல யாருமே இல்லாத அனாதை மாறி நின்னேன் தெரியுமா..!!?உங்கள நம்பிதானே நா இங்க வந்தேன். எனக்கு இங்க யார தெரியும்? நீங்களே சொல்லுங்க..! அடுத்து என்ன பண்ணுறது ஏது பண்ணுறதுணு ஒண்ணுமே தெரில, உங்களுக்கு போன் பண்ணா நீங்களும் எடுக்கல்ல..! பைத்தியம் புடிச்ச மாறி அப்படியே நின்னுட்டு இருந்தேன். போறவன் வரவேன் எல்லாம் ஒரு மாறி பாத்தாங்க தெரியுமா..!” சொல்லும் போதே அவள் குரல் உடைந்து தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.
உண்மையில் துருவிற்கு என்ன சொல்லி அவளை தேற்றுவது என்றே தெரியவில்லை. அவன் போன் எடுக்காமல் போனதன் விளைவு இவ்வளவு பெரிதாக அவன் தலையில் வந்து விடியும் என அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
“சாத்வி..” என்றவன் அவள் கையை பிடிக்க வர,
“தயவ செஞ்சு என்ன தொடாதீங்க..!” கோவத்தில் எரிந்து விழுந்தாள்.
அவன் போனை எடுக்காததால் தான் இந்த கோவமா என்று கேட்டால், இதுவும் ஒரு காரணமே, ஆனால் தொடர்ச்சியாக நடந்த வாக்குவாததின் முற்று புள்ளி இது. மனதிற்குள் அடக்கி வைத்திருந்த கோவம் அனைத்தும் இன்று எறிமலையாய் பொங்கி விட்டது அவ்வளவே..!
அவர்கள் இருந்த அப்பார்ட்மென்ட் பக்கத்திலேயே ஒரு கிளினிக் இருக்கிறது. மகிஷாவிற்கு எதுவாய் இருந்தாலும் அங்கு தான் காட்டுவார்கள்.
துருவிற்கு அவர் நல்ல பழக்கம், அதனால் அவரிடம் நிலையை கூறி வீட்டிற்கே அழைத்திருந்தான்.
“பெருசா ஒன்னும் பிரச்னை இல்லை. தசை பிரண்டுருச்சு அவ்வளவு தான், இப்போ க்ரிப் பேண்டேஜ் போட்டு விடறேன். இந்த ஆயின்மென்ட்ட டெய்லி அப்பளை பண்ணுங்க, பட் ஒரு வாரம் எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுங்க சீக்கிரம் சரி ஆகிரும். இப்போதைக்கு வலி குறையருக்கு இன்ஜெக்ஷன் போட்டு விடறேன்.”
அவரை வழியனுப்பி விட்டு அவன் வந்து பார்க்க படுத்திருந்தாள் சாத்வி. அவளிற்கு இன்னும் கொஞ்சம் இடம் விடும் படி மகளை தன் பக்கம் இழுத்தணைத்து கொண்டான்.
அவளின் சாயலில் இருக்கும் மகளை அவனிற்கு இன்னும் பிடிக்கும்.
அவள் இன்னும் தூங்கவில்லை என தெரிந்து மெல்லிய குரலில் அவளை அழைக்க, அவனிற்கு முதுகு காட்டி அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.
பெருமூச்சு ஒன்றை விட்டவன், விட்டத்தை பார்த்து கொண்டே கண்ணயர்ந்தான்.
அருகில் இருந்தும் தூரமாய்..
கரை சேருமா இவர்களின் காதல்…!?
சாத்வி ஒரு வாரம் லீவ் சொல்லி விட்டாள். அஷ்வினி தான் அனைத்தையும் பார்த்து கொள்ளும் படி ஆகி விட்டது.
வேலை பார்த்து கொண்டிருந்த கண்மணியை அவனின் கேபினிற்கு அழைத்தான் வருண்.
துள்ளல் மகிழ்ச்சியோடு அவன் முன்பு நின்றவள்,
” குட் மார்னிங் ” என்றாள் முகம் கொள்ளா புன்னகையோடு.
” என்ன இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்க போல? “
“சந்தோசமா இருக்க எல்லாம் காரணம் வேணும்மா? அப்படியே இருக்க வேண்டியது தான் “
அவனிற்காகவே அவள் சொல்வது போல் தோன்ற,
“ஆனா ” என ஆரம்பித்தவன் பிறகு பேச்சை மாற்றி, ” உன்ன எதுக்கு கூப்பிட்டேனா, நாம கேம்ப் நடத்துனதுக்கான செர்டிபிகேட்ஸ் வந்துருச்சு, நம்ம ப்ராஜெக்ட்ல நம்ம கூட அசோசியேட் பண்ண போற டாக்டர்ஸ்யும் நாம பைனல் பண்ணியாச்சி, சோ இனி ஹையர் அஃபிஷியல்ஸ் முன்னாடி நம்ம ப்ராஜெக்ட் ப்ரெசென்ட் பண்ணி அவங்க கிட்ட லீகல் அப்ரூவல் வாங்கனும், அதுக்கு சென்னை போகனும் “
“ஆனா இப்போவே வாங்கனும்னு ஒன்னும் அவசியசம் இல்லையே எல்லாமே முடிச்சிட்டு கடைசியா கூட வாங்கிகலாம்ல “
“ம்ம் கரெக்ட்டு தான். பட் இருந்தாலும் எனக்கு டைம் இல்ல கண்மணி, சீக்கரம் எல்லாம் முடிச்சிட்டா பரவாலனு நெனைக்கறேன்..!”
“ஓஓஓ இத சொல்லவா என்ன கூப்பிட்டேங்க?”
“ஆமா இந்த ப்ராஜெக்ட்ட எல்லார் முன்னாடியும் ப்ரெசென்ட் பண்ண போறதே நீ தான்..!”
“எதேஏஏஏஏ…” நெஞ்சில் கை வைத்து விட்டாள் கண்மணி.
“முடியாது.. முடியாது முடியாது.. என்னால சத்தியமா முடியாது..! எவ்வளோ நேக்க இந்த வேலைய என்கிட்ட தள்ளி விட பாக்கறீங்க? எதாவுது கொஞ்சமா சொதப்புனாலும் மொத்தமா காலி..! அப்றம் என் தலைய போட்டு எல்லாரும் உருட்டுவாங்க.. எதோ நான் கொஞ்சம் இன்னசென்ட்டா இருக்கனால நீங்க என்ன சொன்னாலும் மண்டய மண்டய ஆட்டுவேன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா? “
இங்கயும் அங்கயும் நடந்து கொண்டே அவள் பேச,
“கண்மணி ஒரு நிமிஷம் நா”
“மாட்டேன் மாட்டேன் மாட்டேன்..!! நீங்க என்ன காரணம் சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். எனக்கே ஆயிரத்தெட்டு வேல இருக்கு..! நா போய் அத பாக்கறேன் பை”
அவளை போக விடாமல் தடுத்தவன். அவள் தோளை பற்றி சேரில் அமர வைத்தான்.
“ஷ்ஷ்ஷ்..! நா பேசி முடிக்கற வரைக்கும் எதுவும் பேச கூடாது. நீ சொன்னது கரெக்ட் தான், நீ இந்த வேலைய பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல தான். நானே கூட பண்ணிரலாம், பட் இருந்தாலும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கலாம்னு இருக்க கண்மணி”
அவனின் கேள்வி புரியாமல் அவள் விழிக்க,
“ஐ மீன் கரியர் வைஸ் உன்ன நீ இம்ப்ரூவ் பண்ணிக்கனும்னு நினைக்கலையா? உன் கிட்ட நல்ல கம்யூனிகேஷன் ஸ்கிள் இருக்கு..! உன்னோட டேலேண்ட் கூட அது தான், எல்லாருக்கும் இது அமஞ்சராது. இத நீ நல்ல படியா முடிச்சேனா கண்டிப்பா நீ நெஸ்ட் லெவல் போக இந்த அச்சீவ்மென்ட் உனக்கு ஹெல்ப் பண்ணும். சோ கண்டிப்பா இத நீ பண்ணுற அதுனால நாளைக்கு நாம சென்னை கிளம்பறோம் அவ்வளவு தான்.”
அவள் கண் பார்த்து அவன் பேச அவன் கண்ணுக்குள்ளயே மூழ்கி போனாள் கண்மணி..!
இது வரை யாரும் அவளிடம் இப்படி
பேசியது இல்லை, ஏன் அவளை பாராட்டியது கூட இல்லை. அவன் சொன்னதை நினைத்து பார்த்தவளிற்கு நெஞ்சில் ஒரு பரவசம் உண்டாக அவனை பார்த்து நெகிழ்ச்சியாக புன்னகைத்தாள். அவன் மேல் இருந்த காதல் இன்னும் ஒரு படி அதிகம் ஆனது போல் ஒரு உணர்வு.
நான் அறியா என் பக்கங்களை கண்டவன் நீ..!
அதற்கு வண்ணம் பூசி
அழகு பார்ப்பவனும் நீயே..!
என்னை அறிந்த உன்னால்
என் காதலை அறிய முடியவில்லையோ?
சென்னையில் இருக்கும் அவன் அகாடமியில் இருந்து வெளியே வந்த கார்த்தி, பக்கத்து பேக்கரியில் அமர்ந்து டீ வாங்கி குடித்து கொண்டிருந்தான்.
அவன் முன்னே வந்தமர்ந்தான் வருண் குடும்ப லாயரின் மகன் செந்தில். அவனும் லாயர் தான். இப்பொழுது வருண் குடும்ப தொழில் ரீதியாக அனைத்து லீகல் வேலைகளும் அவன் தான் பார்த்து கொள்கிறான்.
அவனை தெரியும் ஆனால் அவனிடம் பேசியது இல்லை. இன்று அவனே வந்து வழிய பேசினான்.
” என்ன கார்த்தி நல்லா இருக்கியா? இன்னுமா வருண் மேல கோவமா இருக்க? அவன் கிட்ட போய் பேசலாம்ல”
“ஹலோ நான் என்ன பண்ணனும் ஏது பண்ணனும்னு நீ ஒன்னும் சொல்ல தேவ இல்ல சரியா? வந்துட்டான் பெரிய பருப்பாட்ட..! அவன் பண்ண துரோகத்துக்கு சொம்பு தூக்கிட்டு “
“சும்மா சும்மா துரோகினு சொல்லாத கார்த்தி, அப்றம் உண்மை தெரியும் போது நீ தான் ரொம்ப வருத்தப்படுவ”
“உண்மையா என்ன?”
தான் உளறியதை நினைத்தவன் தடுமாற்றத்துடன், “நா அப்படி சொல்லல எதுவும் பேசாம இருந்தா எப்படி தெரியும் நீ போய் பேசி என்ன ஏதுனு பொறுமையா விசாரினு சொன்னேன் ” என்றான் சட்டென எழுந்து நடக்க ஆரம்பித்தான். ஒரு நிமிடம் ஆழ்ந்த ஆலோசனைக்கு பிறகு அவனை போய் வளைத்து பிடித்து சுவற்றில் சாய்த்து, அவன் கழுத்தை பிடித்து, ” உண்மைய சொல்லுறியா? இல்ல உன் கழுத்த திருப்பி போட்டுட்டு நா போய்ட்டே இருகக்கவா? “
“கை எடு சொல்லறேன் சொல்லறேன் “
என்றான் மூச்சு வாங்க.
” நாளைக்கு தான் ப்ரெசென்டேஷன்ல? என்ன தான் பிரிப்பேர் பண்ணி இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி கரெக்ட்டா சொல்லிருவேனானு எனக்கு படபடனு வருது ஆதி “
சென்னையில் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் கார்டனில் நின்று பேசி கொண்டிருந்தாள் கண்மணி.
“அதுலா நீ சூப்பரா பண்ணிருவ..! நீ உன் மேல வெச்சிருக்க நம்பிக்கைய விட நா உன் மேல அதிகமா வெச்சிருக்கேன்”
‘ஹையோ இப்படி பேசி பேசியே என்ன உருக வைக்கறீங்களே ஆதி..! இது தான் கரெக்ட்டான டைம் டக்குனு கை புடிச்சி ப்ரோப்போஸ் பண்ணிரலாம்!’ என எண்ணியவள்,
“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. அது வந்து… நா..” அவள் பேசி முடிப்பதற்குள், வருணை சப்பென அறைந்திருந்தான் கார்த்தி.
“ஹேய்..!” கண்மணி அடுத்து பேச வருவதற்குள்.
“நீ இதுல தலையிடாத தள்ளி போ ” என ஒற்றை விரலை நீட்டி எச்சரித்த கார்த்தி வருணை கீழே தள்ளி அவன் முகத்திலேயே நன்கு குத்தினான்.
“என்ன டா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? எல்லாத்துக்கும் நல்லது பண்ணிட்டு நீ போய் சேந்துட்டேனா, தியாகினு நெனச்சி எல்லாரும் உன்ன கொண்டாடுவாங்கனு நெனப்போ..?? ஏன் டா மறச்ச ஏன்? ” என்றவன் அவனை சராமாரியாக அடிக்க,
இதழோரம் வழிந்த ரத்ததை துடைத்து கார்த்தியை பார்த்தவன் , “எப்படினாலும் நா சாக போறவேன் தானே என்ன கடவுள் என் கணக்க சீக்கரம் முடிச்சிட்டாருனு நெனச்சிக்க வேண்டியது தான் “
“அவளோ சீக்கிரம் எல்லாம் உன்ன விட மாட்டேன், செத்து போறேன்னு சொன்னே நானே உன்ன
கொன்றுவேன் “
” ரெண்டும் ஒன்னு தான டா ” என்றவன் விரக்தியாக சிரிக்க,
“மயிரு.. சிரிச்ச ரெண்டு ஆப்பு சேத்தி விழும் ” என்றவன் இப்பொழுது அவனை கட்டி அணைத்திருந்தான்.
இருவரின் சம்பாஷனத்தையும் கேட்ட கண்மணிக்கு அவளின் உலகம் இருண்டு கீழே விழுவது போல் இருந்தது.
இத்தனை நாளாக தினமும் வருண் சொல்லும் வாக்கியம், ” எனக்கு டைம் இல்ல கண்மணி ” அதற்கு இப்பொழுது தான் அர்த்தம் புரிந்தது.
கண்கள் கரித்து கொண்டு வர, சிலையாக உறைந்து நின்றாள் கண்மணி.
ஆம் வருண் அவன் நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான்.