Loading

காஸோவரியும் மாக்பியும்

 

  டீஸர் – 1

 

வெண்மேகம் கருமை பூசி மென்சாரல் தூவிகொண்டிருக்க நிரனின் கண்களோ அக்னி ஜூவாலை ஏந்தியிருந்தது….

 

குரோதத்தில் காதுமடல் சிவந்திருக்க, இரும்பு கரங்கள் ஓர் காகிதத்தை அழுந்த பற்றியிருக்க, கருவிழிகளோ அம்மருத்துவமனை வளாகத்தின் வெளியில் அரச மரத்தடியில் வீற்றிருந்த விக்னஹர்த்தனை யே வெறித்திருந்தது….

 

அவனையும் அறியாமல் அவன் கண்கள் கண்ணீரை சுரந்து மழைதுளியுடன் கண்ணீர் துளியும் கலந்திருக்க, அவன் அணிந்திருந்த வெள்ளை அங்கியிலிருந்த ரத்தக்கரை மழை நீரில் மெல்ல கரைந்து அவன் அங்கியை ரத்ததில் ஊறி எடுத்தது….

 

அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் அப்பெண்ணின் கதறல் ஓசை ஒலித்துக்கொண்டே இருக்க, ஆடவனுக்கோ முதல் முறையாக தான் இழைத்த தவறின் வீரியம் புலப்பட்டது…

 

இப்போது புரிந்து என்ன பயன்? காலம் கடந்து உரைக்க படும் உண்மை ஒரு கொலைக்கு சமம் என்பதை விதியும் சதியும் சாட்டை அடியுடன் அவனுக்கு உரைத்து விட்டனவே….

 

நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு தன் கண்களை அழுந்த துடைத்து விட்டு, தன் எதிரிலிருந்த கணநாதனை திட்டி தீர்த்தவன், மனதை திடப்படுத்தி கொண்டு அவ்விடத்தை விட்டு நகர விழைய, ரத்த வெட்டுகளை தாங்கியிருந்த ஒரு மெல்லிய கரம் அவன் கன்னத்தை பதம் பார்க்க, நிரன் அதிர்ச்சியில் உறைந்தான் எனில், அமென்கரத்திற்கு சொந்தமானவளோ தன் இரு நாசிகளில் இருந்தும் குறுதி வழிய அவள் பெயருக்கு ஏற்றவள் போல் ருத்ரகாளியாய் அவதாரம் எடுத்திருந்தாள்….

 

அவள் நின்றிருந்த நிலையை கண்டு பதறிய நிரன், அவளது வெட்டு காயங்கள் நிறைந்த கரத்தை ஆராய்ந்து மருந்திட விழைய, பெண்ணவளோ அவனை தடுத்து, மீண்டும் அறைய விழைய,

 

” ருத்ராக்ஷி…. ” என்னும் ஓர் ஐம்பது வயது மதிக்க தக்க மனிதரின் அதிகார குரல் அவளை தடுத்திருந்தது.

 

இங்கே மூவுயிர்கள் வெவ்வேறு வழியில் ஓர் உயிருக்காய் போராடி கொண்டிருக்க, அவ்வுயிரோ தன் வதையா அழிவின் நாளை வரவேற்று நிரந்தர நித்திரைக்குள் புகுந்து கொள்ள தயாராகி கொண்டிருந்தது….

ஜனனமும் மரணமும் இறைவன் அளிக்கும் வரம்….

சிலருக்கு வரமே சாபமாய்….

சிலருக்கு சாபமே வரமாய்….

விரைவில்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்