Loading

வணக்கம் உறவுப்பூக்களே! தூரிகை தமிழ் நாவல்கள் தளம் நடத்திய காதல் வெப்சைட் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

முடிவு பெற்ற கதைகள் அனைத்துமே, ஒவ்வொரு விதத்தில் வாசகர்களைக் கவர்ந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

கிட்டதட்ட 238 வாசகர்கள், தங்களின் பங்களிப்பை அளித்துள்ளீர்கள். வாசகர்களின் வாக்குப்பதிவை முன்னிறுத்தி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அனைத்து கதைகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்றாலும், அதிலிருந்து சில நாவல்களே தேர்வு செய்ய இயலும் என்பதே போட்டியின் விதி. தேர்ந்தெடுக்கப்படாத கதைகளும் சிறந்த கதைகளே!

அதில், வாசகர்களின் ஓட்டு எண்ணிக்கையின் படி, முதல் நான்கு கதைகளில் இருந்து எழுத்துப் பிழை, கதையின் தன்மை, ஒற்றுப்பிழை, நேர்த்தியான கதைக்களம் இவற்றைக் கொண்டு, சிறு புள்ளிகளின் வித்தியாசத்தில் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

மூன்றாம் பரிசு : நந்தவனம் – பால்கோவா லவ் 143 ( பரிசுத் தொகை : Rs. 3000/- , பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழ், ஸ்பெஷல் கிஃப்ட்)

இரண்டாம் பரிசு: ஏகாந்தத் தூறல்கள் – பாணபத்திரக் காதலன் 643( பரிசுத் தொகை : Rs.5000/- , பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழ், ஸ்பெஷல் கிஃப்ட்)

முதல் பரிசு : காந்தர்வ காதல் – காதல் கியூபிட் 022( பரிசுத் தொகை : Rs. 6000/- , பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழ், ஸ்பெஷல் கிஃப்ட்)

சிறப்பு பரிசு: அகநக அழகே – அகநக அராத்து 305(பரிசுத் தொகை Rs. 1000/-, மின் சான்றிதழ்)

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தூரிகை தளம் சார்பாக வாழ்த்துகள்.

போட்டியில் பங்குபெற்று கதைகளை முடித்த அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

வாசகர்கள் போட்டி:

கதைகளுக்கு அழகான பின்னூட்டம் அளித்த இருவருக்கு புத்தக பரிசு வழங்கப்படுகிறது.

1. சாந்தி நாகராஜ்
2. சிவஶ்ரீ

போட்டிக்கு இடையில் நடைபெற்ற கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

1. சாந்தி நாகராஜ்
2. சரண்யா சுரேஷ்

எழுத்தாளர்களின் படைப்பை வாசித்து ஊக்குவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
21
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. congratulations to the authors who won. may we know the name of the authors who won the contest