Loading

அன்று காலை மதுவந்தி நேர்காணளுக்காக கிளம்பி கொண்டிருந்தாள்.அப்போது அவள் தங்கை ஏன் அக்கா இந்த வேஷம் கொஞ்சம் மாற்றிக்கொள்ள கூடாதா என்று கேட்டாள்.

 

அதற்கு போ பாலா போய் அப்பாக்கு வேண்டிய மருந்தை கொடுத்துவிட்டு வா உன்னை கல்லூரி அருகே விட்டு விட்டு நான் நேர்காணலுக்கு போக்கிறேன்.

 

பாலாவும் எதுவும் பேசாமல் மது கூறியது போல் செய்துவிட்டு கிளம்பினாள் . மீண்டும் ஒரு முறை தன் அலங்காரத்தை சரி பார்த்துவிட்டு இருவரும் கிளம்பினர்கள்.

 

அந்த உயர்ந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்து மது சற்று கருத்த நிறம், பெரிய கண்ணாடி, இறுக்கிகட்டிய கொண்டை,30வயது தோற்றம் கொண்ட சேலை  அணிந்து கொண்டு நேர்காணல் நடைபெறும் தளத்தில் தானக்கான அழைப்பிற்க காத்திருந்தாள்.

கண்மூடி அமர்ந்தவளுக்கு தன் தங்கையின் வருங்கால செலவுகளும் தன் தந்தையின் மருத்துவ செலவுகளுக்கு என்ன செய்வது என யோசித்தாள்.

 

அப்போது தானக்கான அழைப்பு கேட்கவே அந்த அறைக்குள் நுழைந்தாள்.அங்கு மூன்று பேர் இருந்தார்கள். முதலில் இருந்தவர் சூர்யா கம்பெனியின் பங்குதாரர், இரண்டாவது மேனேஜர், அடுத்து கம்பெனியின் md வசீகரன் (நம் நாயகன்) அன்று நடப்பது அவன் pa காண நேர்காணல் சூர்யாவும் மேனேஜருமே கேள்வி கேட்டார்கள் வசி அமைதியாக கவனிதான்,சில கேள்விகளுக்கு பிறகு ஏன் முன்பு செய்த வேலையை விட்டு விலக்கியது காரணம் என்ன என்று சூர்யா கேட்ட போது மது முகம் இறுக்கம் ஆனது.நொடியில் அதை மறைத்து பர்சனல் ரீசன் சார் சம்பளம் போதவில்லை என்று கூறினாள்.

 

சூர்யா இதை நம்பவில்லை எனவே உங்களுக்கு தகவல் தருகிறோம் என்றான் ஆனால் சற்று வெளியே காத்திருங்கள் வேலைக்கான ஆர்டர் வரும் என வசி கூறிவிட்டு சென்றான்.நன்றி கூறி காத்திருந்து ஆர்டரை பெற்றுக்கொண்டு மதுவும் தானக்கான பேருந்தில் வீட்டிற்கு விரைந்தாள்.

 

அவள் செல்வதை அவன் அலுவலகத்தின் ஜன்னல் அருகில் நின்று கொண்டு வசி கவனித்தான் அப்போது அங்கு வந்த சூர்யா ஏன் வசி வேலை தந்தாய் என கேட்டான் ஒரு நிமிட அமைதிக்கு பின் வசி என் மதி பற்றி எனக்கு தெரியும் டா வேறு ஏதோ காரணம் உள்ளது.உன் மதியா உனக்கு ஏற்கனவே மதுவந்தி பற்றி தெரியுமா?

ஆமா டா அவள் கல்லூரி படிக்கும் போது பார்த்து இருக்கிறேன் அப்போது இப்படி இல்லை டா கண்ணில் ஒளி இல்லாமல் ஏதோ ஒன்று உள்ளது என்னவென்று கண்டுபுடிக்க வேண்டும என்று கூறினான்.

 

வீட்டிற்கு நுழைந்த மது தந்தையுடன் சேர்ந்து உண்டு முடித்தால் அப்போது தான் தனக்கு வேலை கிடைத்து பற்றி கூறி நாளை முதல் போக வேண்டும் என்று கூறினாள். அதற்கு அவள் தந்தை ரவி மன்னித்துவிடு மா மது ஏன்னாள் உனக்கு உதவ முடியவில்லை உனக்கு ஒரு கல்யாணத்தை செய்து பார்க்க வேண்டும் மா என்றார்.என்னப்பா இப்படி என்ன பேச்சு முதலில் பாலா படிக்கட்டும் அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து நல்ல வாழ்கை அமையட்டும் பிறகு பார்க்கலாம் என்று கூறி அறைக்குள் சென்று தன் வேஷத்தை கலைத்தால்.

 

நாமும் நம் கதாநாயகியை பற்றி பார்க்கலாம். மதுவந்தி 23 வயது மங்கை கோதுமை நிறம்,மீன் போன்ற கண்கள் , வில் போன்ற புருவம், சற்று பூசின உடல் ,இடை தாண்டும் முடி.சுருக்கமாக அவளை கடப்பாவர்கள் நிச்சயம் ஒரு முறை திரும்பி பார்க்கதூண்டும் அழகு, ஆனால் அந்த அழகே அவள் பல வேலைகள் மாற காரணமாய் அமைகிறது, இதற்கு முன் இருந்த கம்பெனியின் மேனேஜர் தவறாக நடக்க முயன்றதே அந்த வேலை விட காரணம் இப்பொது அவனை விட இளமையான ஒருவருக்கு pa வாக வேலை செய்ய வென்று என்று நினைக்கும் போதே மதுக்கு மலைப்பக இருந்தது.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்