Loading

அத்தியாயம் 4

 

நானும்  ரொம்ப  நாட்களாகவே  இந்த  பேப்பரை  உனது  பர்ஸில் பார்த்திருக்கிறேன். ஆனால் எடுத்து பிரித்து பார்த்ததே இல்லை. நீயா என்னிடம் சொல்லுவ, என்று எதிர்பார்த்தேன். இதுவரைக்கும் சொல்லவும்  இல்லை. இப்ப  “நீயாக போறீயா”என்று கேட்டாள். 

 

அம்மா  இந்த  பேப்பரில் ஒன்னுமில்ல ,நீங்க முதலில்  என்னிடம் கொடுங்க என  டப்பென்று  இழுக்க வந்தான். 

 

ஹேய்.. ஹேய்..எதுக்குடா  இழுக்குற, விடுடா என்று  கூற பவித்ராவின்  கையில் இருந்த  பேப்பர்  காற்றில்  பறந்து சென்று  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்த  ஹாசினி முகத்தில்  விழுந்ததும் சருட்டுனு  நிறுத்தினாள். 

 

என்னது இது  எம் முகத்துல  ஏதோ  ஒரு பேப்பர் விழுந்த மாதிரி இருந்துச்சே  ,என  கீழே நோக்கியவள்  குனிந்து எடுக்க முயன்ற  போது  அதே  நேரத்தில்ஆகாஷீம் எடுக்க முயற்சி செய்தான். 

 

இருவரும் ஒரே சமயத்தில்  அந்த  பேப்பரை எடுக்கும்  ஒருவரையொருவர் பார்வையிட  ,இருவிழிகளும்  நோக்கியபடி  அப்படியே  ஒருபக்கம்  பேப்பரை ஹாசினி  பிடித்திருக்க, மறுப்பக்கம்  ஆகாஷ்  இரண்டுக்கும் இடையே ஒரு  காதல் பாடல்.. 

 

“என்னைக்  கொல்லாதே 

    தள்ளிப்  போகாதே கண்மணி 

  சொன்ன  என் சொல்லில்

      இல்லை  உண்மைகள் 

    ஏனோ  கோபங்கள்  கண்மணி”

 

இருவருக்கும் நடுவிலே  அந்த  பாடல்  ஒலித்துக் கொண்டிருக்க,அவனைப் பார்த்ததுமே  ஹாசினிக்கு  கண் கலங்க தொடங்கியது.அப்படியே ஸ்கூட்டியில்  ஏறி சென்று விட்டாள் .  பவித்ராவும்  ஆகாஷின்  தோள்பட்டையை தட்டியதும்  நினைவுக்கு வந்தான். 

 

“என்னடா ஆச்சு உனக்கு “

 

அம்மா  இப்ப ஒரு பொண்ணு நின்னுட்டு  இருந்தாளே?அவளை எங்க?

 

மும்ம் “அவ  கிளம்பி  ரொம்ப  நேரமாயிற்று “நீ  தான்  இப்படி சிலையாக நிக்குற  ,வா  சீக்கிரம்  போகலாம்  என்றாள். 

 

ஹாசினியும்  ஸ்கூட்டியை  அழுத்தி  சென்று  பஸ் ஸ்டாப்பில்  போய்  நின்றாள். அவளது சிந்தனை முழுவதும்  ஆகாஷின்  மேல்  தான்  இருந்தது .ச்சே  யாரு  முகத்துல பார்க்ககூடாதுன்னு இருந்தேனோ?அவனையே பார்த்ததுமே  எனக்கு  மனசெல்லாம்  ஏதோ  ஒரு மாதிரியாக படபடவென  அடிச்சது. அவனிடம்  இதுவரைக்கும் நான்  யாருன்னு  இன்னும்  தெரியாமல் இருக்கிறான்.அத தெரிஞ்சுக்கிட்டா கண்டிப்பாக அவனுக்கேப்  புரியும்  என  மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டாள். 

 

யோசனையில்  இருந்த  ஹாசினி பஸ் வருவதை கூட கவனிக்காமல் நின்று கொண்டிருந்தாள். அவளது அருகில் வந்த  பவானி  ஆசிரியர் அழைத்ததும், நிமிர்ந்து பார்த்தாள். 

 

“மேடம் எப்படி இருக்கீங்க? “உங்களை பார்த்து எத்தனை வருஷம்  ஆகுது என்றவளோ  கட்டி அணைத்தாள். பிறகு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். 

 

ஹேய் “நீ இன்னும்  இந்த பழக்கத்தை விடலயா?, என  கேட்க.. 

 

அப்படியெல்லாம் இல்ல  இது  உங்ககிட்ட மட்டும்  நான்  வாங்குவது. அதுவும் ஸ்பெஷல் மேடம்  எனச் சொல்லியவள்  ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். நீங்க பயமில்லாமல் உட்காருங்க, உங்களை  பத்திரமா வீட்டுல போய் விடுறது தான்  என்னுடைய வேலை .

 

மேடம் நீங்க இந்த பூஜைக்கெல்லாம் வருவீங்கன்னு  கொஞ்சங்கூட எதிர்பார்க்கல, 

 

பவானி, “நானும் முதலில் அப்படித்தான்  நினைச்சேன். ஆனா  சொர்ணா  அம்மா உனக்கும்  அப்படியே நிச்சயம்  செய்து  ஒரு வாரத்துல  கல்யாணம் என்று சொன்னார்கள்  அதான்  யோசிக்காமல்  கிளம்பிட்டேன். 

 

வேகமாக பிரேக்  பிடித்து  நிறுத்த, ஷாக்கில்  என்னது எனக்கு கல்யாணமாம், என்று  கேட்டாள். 

 

ஆமாம், இந்த  விஷயத்தை உன்னிடம் யாரும் கூற வில்லையா?, 

 

எனக்கு  நீங்க  சொன்ன பிறகு தான் தெரியுது?, என  சோகமாக  அழுத்தி வீட்டை. நோக்கி நெருங்கினாள். 

 

தன்னறைக்குச் சென்ற ஆகாஷ்  வேகமாக  பஸ்ஸில் இருந்த பேப்பரை  எடுத்து  பிரித்தான். அதை  பார்த்தவனோ  மூன்று வருடங்களுக்குப் பின்னோக்கி சென்றான். 

 

….பிளாஷ்பேக்… ..

 

தியேட்டர்  வாசலில்  நின்றுகொண்டு  அங்குமிங்குமாக சுற்றி சுற்றி பார்த்து  தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள் ஹாசினி. கைக்கடிகாரத்தை  பார்த்து இன்னொரு பக்கம்  வெளியே பார்க்கவும் இப்படியே நேரம் போய் கொண்டிருந்தது. 

 

தியேட்டரின்  உள்ளே  படம் ஆரம்பிக்கிற  சத்தம்  வெளியே  ஹாசினி நிற்கும் வரை கேட்க, அவளது  தோழிகள்  மூவரும்  சீக்கிரம்  வாடி, உன்னோட ஆளு  வருவானு  எனக்கு  நம்பிக்கை இல்லை.” நீ  வாடி  நம்ம  சூப்பர் ஸ்டார் படம் போட்டாங்கம்மா”, எனப் புலம்ப ஆரம்பித்தார்கள். 

 

ஹேய் “ஹாசினி ,ஹாசினி என்று  அழைக்க, இவளும்  வேகமாக அவுக முன்பு நின்றாள். 

 

எதுக்காக இப்படி கத்துறீங்க, என்னோட ஆளுக்கு  ஏதாவது வேலை இருந்திருக்கும். அதனால் கூட  வருவதற்கு தாமதம் ஆகலாம். நீங்க  வேணுமென்றால்  உள்ளே  போய்  பாருங்க என எரிச்சலோடு பேசினாள் ஹாசினி. 

 

“ஏன்டி கோபப்படுற “

 

ஹாசினி, கொஞ்ச நேரம் உங்களால்  வெயிட் பண்ண முடியாதா,படம் போட்டாச்சு என  கத்தி  கூச்சல் போடுறீங்க, 

 

சரிடி, இப்ப  என்ன?  உன்னோட ஆகாஷ் வருகிற வரைக்கும் நாங்க எல்லாம்  காத்திருக்கனும். அப்படித்தானே, இருக்குறோம். அவனுக்காக அல்ல, உனக்காக மட்டும் தான் எனக் கூறி விட்டு  அப்படியே அமர்ந்தார்கள். 

 

ஹாசினி  அரை மணி நேரமாக  காத்துக் கொண்டிருக்க, ஆகாஷ்  வந்தபாடில்லை. சற்று நேரத்தில் ஹாசினியின் போன்  ஒலித்தது. மறுபக்க அழைப்பில்  என்னால் வர இயலாது எனச் சொல்லி அழைப்பை துண்டித்தான். 

 

ஆகாஷ்  வர வில்லை எனத் தெரிந்தால்  இவர்கள்  எம் மேல கோபப்படுவாங்க, அதனால்  வேற  மாதிரி தான் சொல்லி சமாளிக்கனும் என யோசித்தாள். 

 

வானில் தொடரும். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Ennathuhashini ku kalyanama? Athu avaluke teriyalaye… Enna nadakka poghutho… Pappom…