Loading

கல்யாண வானில் 20

 

அத்தியாயம்  20

 

     ரவியும் ஆகாஷீடம்  எப்படி பேசுவது எனத் தெரியாமல் உருண்டு புரண்டு

படுத்திருக்க, அதைக் கவனித்த  ஆகாஷ்  எழுந்தான். 

 

ஆகாஷ, “என்னங்க, ரவி புது இடம் என்பதால் உங்களுக்குத் தூக்கம் வரலையா “?

 

ரவி ,”ஆமாம், ஆகாஷ்,எனச் சொல்லிக் கொண்டே எழுந்து,நீங்க எதுக்காக தூங்காமல்  உட்கார்ந்து இருக்கீங்க? “

 

ஆகாஷ், “எனக்கும் தூக்கம் வரல?”என  வருத்தமாக கூறினான்.

 

ரவி, “ஆகாஷ்  உங்களுக்கு ஏன்? தூக்கம் வரல என்பது எனக்கு தெரியும். 

 

ஆகாஷ், “என்னது, தெரியுமா? சொல்லுங்க பார்ப்போம். 

 

ரவி, “ஆகாஷ்  உங்களுக்கு என்னைத் தெரியாது? “ஆனால  எனக்கு உங்களை நல்லா தெரியும். அதுக்காக தான்  இந்த வீட்டுக்குள்ளேயே வந்துருக்கேன். 

 

ஆகாஷ், “நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க? “

 

ரவி ,”ஹாசினியும்  நீயும்  காதலிச்சது முதல் இப்ப பிரிஞ்சது வரையில் எல்லாமே நான் அறிந்தது என்றான். 

 

ரவி கூறியதைக் கேட்டு  அதிர்ச்சியான  ஆகாஷீம்  எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான். 

 

ரவி, “ஆகாஷ்… நான் தான்  ஹாசினியோட அண்ணன் 

ரவிச்சந்திரன். 

 

ஆகாஷ், “நீங்க ஹாசினியோட  அண்ணன்  சந்திரனா? “என்றவனோ  கட்டித் தழுவினான். 

 

ரவி, “உங்களுக்கு சந்திரன் என்றால் தான் தெரியுமா?”

 

ஆகாஷ், “அடிக்கடி ஹாசினி  என்னிடம் உங்களைப் பத்தி சொல்லியிருக்கிறாள். அதுவும்  சந்திரன் அண்ணா என்று தான்  சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆனால்  இப்போது அவளது குரலைக் கூட என்னால் கேட்க முடியாமல் போனது. 

 

ரவி, “ஆகாஷ், என்னுடைய தங்கைக்கு விருப்பமில்லாமல் நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது. அவளோ  எங்களுடைய  பாட்டியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறாள். 

 

ஆகாஷ், “எனக்கு ஹாசினியைப் பத்தி நல்லாவே தெரியும். அவ  மனசுல  நான் தான் இருக்குறேன். அவளால்  இன்னொருத்தவனை  கல்யாணம் செஞ்சுக்க கனவுல  கூட  நினைக்க மாட்டாள். 

 

ரவி, “நீ, என்னுடைய தங்கை மேல் இம்புட்டு பாசம் வச்சுருக்க? “அதனால்  அவளும்  நீயும்  வேற  எங்கயாவது போய்  கல்யாணம் செய்துட்டு நல்லா வாழனும் என்றான். 

 

ஆகாஷ், “நீங்க சொல்ற மாதிரி நாங்க பண்ணுனா? “உங்க பாட்டி தப்பான முடிவை எடுத்துருவாங்க? “

 

ரவி, “அது எப்படி தப்பான  முடிவை எடுப்பாங்கன்னு  இவ்வளவு கரெக்ட்டாக சொல்றீங்க? “

 

ஆகாஷ், “ஏற்கனவே   உங்க வீட்டுல இந்த சம்பவம் நடந்து அதனால் தான்  உங்க சொர்ணம்மாள்  மன வேதனையில் இருந்து இப்போது மீண்டு வந்துள்ளார்கள். 

 

ரவி, ‘ஆகாஷ்  ,எங்க குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக யாருமே எங்களிடம் சொல்ல வில்லையே? “

 

ஆகாஷ், உங்க குடும்பத்தில் சொர்ணம்மாள் பாட்டியின் மகள்  பவித்ரா  .அவர்களால் தான் அக்குடும்பமே  அவமானப்பட்டது. 

 

ரவி, “எங்க குடும்பத்துல நடந்த  சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது  “

 

ஆகாஷ், “உங்க குடும்பத்தோடு சேர்ந்த வாரிசு தான் எங்க அம்மா பவித்ரா. “

 

ரவி, “ஆஹஹ… உங்க அம்மா தான்  எங்க பாட்டியின் விருப்பமில்லாமல் கல்யாணம் செஞ்சுட்டாங்களா? “இத்தனை நாள் இத பத்தி  எங்க தாத்தா கூட சொல்ல வில்லையே? “

 

ஆகாஷ், “இந்த மாதிரி எங்க  அம்மா  தவறு செய்த தவறை  நானும் ஹாசினியும் செய்தால்  அது  அவங்களுக்கே நாங்க நம்பிக்கை துரோகம் செய்தது போல் ஆகி விடும். 

 

ரவி, “இப்ப என்னதான் பண்ணலாம்னு சொல்ற? “

 

ஆகாஷ், “ரவி  பிரிந்து இருக்கிற நம்ம குடும்பத்தை ஒன்னு சேர்க்கனும். அதுக்கப்புறம் தான் எங்களுடைய ஆழமான காதலை பாட்டியிடம் புரிய வைக்கனும் என்றான். 

 

ரவி, “ஆகாஷ், நீ சொல்ற பார்த்தா இதெல்லாம் நடக்கும்மான்னு? எனக்கே சந்தேகமா இருக்குது? “

 

இருவரும் பேசிக்கொண்ட நேரத்தில் சந்தோஷீம் நடுவே வந்து கட்டாயமாக நடக்கும் என்று  கூறினான். 

 

ஆகாஷ், “அண்ணே!,வா… .

 

ரவி, “உங்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் எனத் தயங்கினான். “

 

சந்தோஷ், “ரவி நீங்க பயப்பட வேண்டாம்.எனக்கும் எல்லாமே தெரிஞ்சது தான். என்னுடைய தம்பியிடம்  எங்க அம்மாவின் குடும்பத்தைப் பத்தி விபரத்தைச் சொன்னதும் நான் தான். 

 

ரவி, “அப்படியென்றால் உங்க தம்பியோட காதலுக்கு உங்களுடைய ஒத்துழைப்பு இருக்குது. “

 

சந்தோஷ், “என்னுடைய தம்பி எனக்காக  பல உதவிகள் செய்திருக்கிறான். எனக்கு இவனுடைய சந்தோஷம் தான் முக்கியம். 

 

ரவி, “சரி, நான் ஒன்னு நினைச்சுட்டு வந்தேன். இங்க எல்லாமே  வேற மாதிரி நடக்குது.’

 

ஆகாஷ், “மச்சான்  நீங்க கவலையே படாதீங்க? “ஹாசினிக்கு  நிச்சயதார்த்தம் யாருகூட நடந்தாலும்  அவ கழுத்துல தாலி கட்டப் போறது  நான் தான் என  காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே  கூறினான். 

 

சந்தோஷ், “நாளைக்கு  ஹாசினியோட நிச்சயதார்த்தம் இரவு தானே நடக்குது. “

 

ரவி, “ஆமாம்.. அதுவும்  ஏழு மணிக்கு மேல ,விருந்தினரோட வருகை அதிகமாக இருக்கும். “

 

சந்தோஷ், “நீங்க ஹாசினியை  கோவிலுக்குக் கூட்டிட்டு வர முடியுமா? “

 

ரவி, “அவளை  கோவிலுக்குக் கூட்டிட்டு வருவது ரொம்ப சிரமம்.. “

 

சந்தோஷ், “எப்படியாவது  ஹாசினியை. ஆகாஷ் சந்தித்தே ஆகனும் என்றான். “

 

ரவி, “அதுக்கு வேற  ஏதாச்சும் வழி இருக்கிறதா? “

 

ஆகாஷ், “ம்ம்ம்.. இருக்குது. 

 

சந்தோஷ், “என்னடா வழி சொல்லுடா? “

 

ஆகாஷ், “அண்ணா நானே  அவுக வீட்டுக்குப் போறேன். “

 

சந்தோஷ், “உன்னால் எப்படி போக முடியும். அதுவும் அப்பாவுக்குத் தெரிஞ்சா? “அவ்வளவு தான்… 

 

ஆகாஷ், “அப்பாவுக்கே தெரியாமல்  தான் போகனும். 

 

ரவி, “நீங்க  சீக்கிரமா ஒரு முடிவைச் சொல்லுங்க? “அதுக்கப்புறம் தான் என் தங்கையிடம் பேச முடியும் என்றவனோ  படுத்தான். 

 

ஆகாஷ், “மச்சான்,நீங்க அப்படியே படுத்தாச்சு? “உங்க வீட்டுக்கு வருவதற்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க “

 

ரவி, “மாப்பிள்ளை நம்மா காலையில் பேசிக்கலாம். எனக்கு ரொம்ப சோர்வாக உள்ளது என்றான். 

 

சந்தோஷ் , “தம்பி.. இப்பவே மணி  பதினொன்று  ஆயிடுச்சு? “நீயும் தூங்கு, எனச் சொல்லிட்டு சென்றான். 

 

ஆனாலும்  ஆகாஷீற்கு தூக்கம் வராமல்  அறையிலேயே  அங்குமிங்குமாக

உலாவிக் கொண்டிருந்தவனோ? “தன் எதிரே ஹாசினியின் உருவம் நின்றது அவனின் கண்களுக்குக் கனவாக, அந்தக் கனவுக் காதலியின்  நிழல் உருவத்திலேயே அவனது கவிதையை  வர்ணித்தான.அச்சமயம் ஹாசினியின்  உருவம் மறைந்து மறைந்து தெரிய,.  அவனோ  கோபமுற்று மாடிக்குச் சென்றான். 

 

ஆகாஷ், “மாடிக்குச் சென்றிருந்தவனோ, நிலாவை ரசித்தபடியே நிற்க.. அவனது  அருகே வந்து  வெள்ளை நிற புறாவாக நின்றாள். 

 

வியப்பிலேயே அவளைக் கண்டதும், அக்கனவிலேயே  மூழ்கி மிதந்தான். அவளது கன்னங்களைத் தொட, வெட்கத்தில் முகம் சிவந்து தன்னவனின்  தோளில் சாய,சட்டென்று மறைந்தாள். 

 

ஆகாஷ், ‘ச்சே.. எனக்கு இங்க வந்தாலும் அவ நினைப்பாகவே இருக்கிறதே? நம் பேசாமல்  போர்வையை இழுத்து மூடி தூங்குவோம் என  நகல முயன்றான். 

 

ஹேய்.. மாமா.நில்லுடா,என்றவளின் குரல் கேட்டு திரும்ப, பிரகாசமான வெளிச்சத்தில் அவளின் முகம்  தங்கத் தாமரை போல ஜொலிக்க… 

 

கரங்களால் அவனைப் பற்றி இழுத்து அமர வைத்து மடியிலேயே தூங்க வைத்தாள். அவனும் நிஜம் என்று நினைத்து அப்படியே கண் துயில்ந்தான். 

 

ஹாசினியும்  தன்னுடைய காதலை மறக்க நினைத்தாலும்  ஆக்ஷன் நினைப்பினில் தான்  தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தாள். 

 

கண்களில் இருந்து கண்ணீர் வர, அத துடைத்தபடியே  அப்படியே படுத்திருந்தாள். அந்த நேரத்தில்  சொர்ணம்மாள் பாட்டியும்  அவளது தலையை வருடிக் கொண்டே இருக்க, ராஜவேல்பாண்டியும்  அவ்வறையினுள்ளே நுழைந்தார். 

 

ராஜவேல்பாண்டி ,”சொர்ணம்மா, கொஞ்சம் தனியாக பேசனும் என்றார். 

 

சொர்ணம்மாள், “நீங்க என்ன பேச போறீங்கன்னு  தெரியும்.. “ஹாசினியின் கல்யாணம் விஷயம் தானே? “

 

ராஜவேல்பாண்டி, “இல்ல, நம்முடைய பொண்ணைப் பத்தி தான்.. 

 

சொர்ணம்மாள், “நமக்கென்ன  பொண்ணு? “

 

ராஜவேல்பாண்டி, “இங்க பாரு? “எதுவும் தெரியாதது போல நடிக்காதே? “

 

சொர்ணம்மாள், “ஏங்க  முடிஞ்ச போன விஷயத்தைப் பத்தி பேசாதீங்க? “எனக்கு தூக்கம் வருது என்று சொல்லி தூங்கச் சென்றாள். 

 

ராஜவேல்பாண்டி, “சொர்ணம்மா,நான் சொல்ல வருகிற விஷயத்தைக் கேளும்மா? “என்று சொல்ல சொல்ல  காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தாள். 

 

“ஹாசினியும் தூங்காமல் தனது தாத்தா  என்னச் சொல்லப் போறாங்க என்ற ஆவலில் இருந்தவளோ, பாட்டி பேசிக் கொள்வதையும் காதில் வாங்கிக் கொண்டே மெளனமாக இருந்தாள். 

 

ராஜவேல்பாண்டியும், தன்னுடைய பேத்தியின்  கல்யாணம்  விருப்பமில்லாமல் நடக்கப்போகிறதே என்று எண்ணி கவலையிலேயே தூங்காமல் கண் விழித்திருந்தார். 

 

மணியும்  2யைத் தாண்டியது. நாற்காலியில் அமர்ந்திருந்த  தாத்தாவைப் பார்த்து  அருகே சென்றாள். 

 

ஹாசினி, “தாத்தா.. எனக்காக நீங்க பாட்டியிடம்  பேசி நடக்கவிருக்கின்ற நிச்சயதார்த்தை நிறுத்தனும்னு  நினைக்கிறீங்க? “ஆனாலும் உங்களால் எதுவுமே முடியலயே, என்னுடைய விதி அவ்வளவு தான் தாத்தா.. இந்த நிச்சயதார்த்தம் முடிந்த மறு நிமிசத்தில் என்னுடைய உயிரை விடப்போறேன் என்றதும் ,சட்டென்று கண் விழித்தார். 

 

ராஜவேல்பாண்டி, “ஹாசினி  …ஹாசினி… இந்த தாத்தாவையும் உங்கூட கூட்டிட்டுப் போறீயாம்மா? “

 

ஹாசினி, “தாத்தா.. தாத்தா.. எனக் கண் கலங்கி மார்பிலே சாய்ந்து அழுதாள். “

 

ராஜவேல்பாண்டி,”நீ  தவறான முடிவை எப்போதுமே எடுக்கக்கூடாது. “

 

ஹாசினி, “தாத்தா, எனக்கு இத தவிர வேற வழி தெரியல? “இந்த குடும்பத்துக்கு ஏதாவது ஒரு அவமானம் என்றால் அதை பாட்டியால் தாங்கிக் கொள்ளவே முடியாது. “

 

ராஜவேல்பாண்டி, “அதுக்காக நீ  உன் உயிரை கூட விட்டுருவியா? “நீ செத்துப் போயிட்டால் எல்லாமே சரியாகி விடும்மா? “

 

ஹாசினி, “தாத்தா, நமக்கு புடிச்ச வாழ்க்கை கிடைக்க வில்லையென்றால் இந்த மாதிரி தான் முடிவு எடுக்கின்ற மனநிலை வருது.. 

 

ராஜவேல்பாண்டி, “ஹாசினி, நீ  குறும்புத்தனமான பொண்ணு, வாழ்க்கையில் நடக்கின்ற சின்ன சின்ன விஷயங்களைக் கூட  சாதாரணமாக எடுத்துக்கிட்ட நீ? இப்ப  உன்னுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல தீர்வை எடுக்க முடியலயா?”

 

ஹாசினி,”தாத்தா.. அது வந்து.. 

 

ராஜவேல்பாண்டி, “நீ காதலிக்கின்ற பையன் யாரு தெரியுமா?”

 

ஹாசினி, “தாத்தா, நீங்க ஆகாஷ் தானே கேட்குறீங்க? “

 

ராஜவேல்பாண்டி, “அந்த ஆகாஷீம் எனக்கு பேரன் தான். அவனும் நம் பரம்பரையைச் சேர்ந்தவன் தான்.. 

 

ஹாசினி, “தாத்தா, ஆகாஷ் நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவனா? “

 

ராஜவேல்பாண்டி, “ஆமாம்.. இப்ப இத பத்தி பேச வேண்டாம். எல்லாத்தையும் காலையில் பேசிக்கலாம்.முதலில் நீ  நல்லா தூங்கி எழுந்திரு? என்றார். 

 

கதிரவனின் பார்வை  ஆகாஷீன் மீது  விழ, சட்டென்று கண் விழித்து பார்த்தவனே, நாம எப்படி இங்க வந்தோம் என்ற சந்தேகத்தில் கீழே இறங்கி சென்றான்.

 

அம்மா… அம்மா… 

 

பவித்ரா, “டேய் எதுக்குடா காலையில் இப்படி கத்திக்கிட்டு இருக்குற? “

 

ஆகாஷ், “அம்மா நான் எப்படி மாடிக்குப் போனேன்.. 

 

பவித்ரா, “அத  நான் தான்  உங்கிட்ட கேட்கனும்.. “

 

ஆகாஷ், “நானாகவா போனேன் என யோசிக்க ஆரம்பித்தான். அப்போது தான்ஹாசினியின் நினைவினில் இருந்ததால் தான்  நானும் அப்படியே தூங்கி விட்டேன். 

 

பவித்ரா, “என்னடா? “ஞாபகம் வந்துடுச்சா? “

 

ஆகாஷ், “இல்லம்மா!”எனக்கே  தெரியல? “எனச் சொல்லிட்டுச் சென்றான். 

 

கார்த்திகேயன், “ஏன்டி அவனுக்கு என்னாச்சு? “

 

பவித்ரா, “ம்ம்ம்.. பைத்தியம் பிடிச்சிருச்சு? “என்றாள் கோபமாக… 

 

கார்த்திகேயன், “என்னடி உனக்கென்ன? காலையிலேயே  டென்ஷன் ஆகுற, 

 

பவித்ரா, “ஆகாஷோட நிலைமை  ரொம்ப மோசமாக போகுது .நேத்து  மாடியில் நின்னு தனியாக பேசிட்டு இருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அந்தப் பொண்ணை நினைச்சு  மடியில் தூங்குறான்.

 

கார்த்திகேயன், “நீ  அத பத்தி கவலைப்படாதே? “எல்லாமே சரியாகும். எனக்கு ஒரு முக்கியமான வேலை.. நானே வந்து சாப்பிடுறேன். 

 

சந்தோஷீம்  வேகமாக கிளம்பி வந்தான். 

 

பவித்ரா, “டேய்! உங்க அப்பா தான்  முன்னால போறாங்களே? “

 

சந்தோஷ்,”ஆமா? எனக்கு அப்பா கூட முக்கியமான மீட்டிங் எனச் சொல்லிட்டு விறுவிறுவென்று சென்றான். 

 

மணி  எட்டு ஆனது கூட தெரியாமல்  தூங்கிக் கொண்டிருந்தான், அவனின் உறக்கத்தைக் கலைத்தது அவனின் மனைவி நிவேதிதா.

நிவேதிதா, “நானும் இரவினில் இருந்தே இவுக நம்பருக்குப் போன் பண்ணிட்டேன் இருக்குறேன். அதை அழுத்தி பேச எவ்வளவு நேரம் ஆகப்போகுது எனப் பொருமிக் கொண்டே திரும்பவும் முயற்சித்தாள். 

 

தூக்கம் கலைந்தவனோ  மணியைப் பார்க்க,… பட்டென்று எழுந்தான். 

 

ஆகாஷ், “ஹாய், மச்சான்  குட் மார்னிங் “

 

ரவி, “மாப்பிள்ளை என்னைக் கொஞ்சம்  சீக்கிரமாக எழுப்பி விட்டுருக்கலாம்ல? “

 

ஆகாஷ், “இப்ப என்னாச்சு மச்சான்!ஏதாவது முக்கியமான வேலையா? “

 

ரவி  ‘அதெல்லாம் இல்லை, என்னோட மனைவி  பத்து முறை கால் பண்ணிட்டா?அவகிட்ட என்ன சொல்றது அதான் புரியல, 

 

ஆகாஷ், “மச்சான்  இதுக்கு தான் பயப்படூறீங்களா? “

 

ரவி, “உனக்கென்ன  அவகிட்ட பேசி சமாளிக்கவே முடியாது, 

 

ஆகாஷ், “என்னிடம் கொடுங்க நான் எப்படி சமாளிக்கிறேனு தெரியும் எனப் போனை வாங்கினான். 

 

ஹலோ  ,சொல்லுங்க… 

 

நிவேதிதா, “ஹலோ !நீங்க யாருங்க? 

 

ஆகாஷ், “ஏங்க  சார்  ஒரு முக்கியமான மீட்டிங்ல  இருக்கிறாரு? அவரே வந்து கூப்பிடுவாங்க? எனச் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

ரவி, “எப்படிப்பா? ஒரே வார்த்தை தான் பேசுன? அவ  என்ன மீட்டிங் கூட கேட்காமல் போனை வைச்சுட்டாள். “

 

ஆகாஷ், “மச்சான் நானோ  மீட்டிங்ன்னு சொல்லிட்டேன். ஆனால் வீட்டுக்குப் போய்  அவங்க உங்ககிட்ட கேள்வி கேட்டாங்கன்னா? “

 

ரவி, “”ஆஹஹாம்… என வியந்து நின்றான். 

 

அனிதாவும்  ,அபிஷேக் கிளப்பி விட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து  மகனுக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தாள். 

 

பவித்ரா, “எங்கம்மா கிளம்பி இருக்குற? “

 

அனிதா, “அத்தை உங்க பையன விஷயத்தைச் சொல்லவே இல்லையா? “

 

பவித்ரா, “என்னிடம் ஒன்னும் சொல்ல வில்லையே? “

 

அனிதா, “அத்தை எனக்கும் வீட்டுலயே இருக்கப் போர் அடிக்குது, “அதனால்  தான்  சந்தோஷ்  கடையில் இருப்பான். அவருக்கு நானும் கொஞ்ச நேரம் ஒத்துழைப்பாக இருந்துட்டு வரட்டும்மா?”

 

பவித்ரா, “ம்ம்ம்.. தாராளமாக போயிட்டு வாம்மா? “

 

அனிதா, “சரிங்க அத்தை வாரேன்.. 

 

பவித்ரா, “இன்னிக்கு  முழுவதும் நம்ம வீட்டுல  தனியாக தான் இருக்கனும்மோ?”என நினைத்து தலையில்  கை வைத்தபடியே அமர்ந்திருந்தாள். 

 

ஆகாஷ், “அம்மா என்னாச்சு? உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? “

 

பவித்ரா, “அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்ல? “

 

ஆகாஷ், “நீ  இப்படி கவலையாக உட்கார்ந்து இருக்கிறத பார்த்தா எனக்கு கவலையாக உள்ளது. “

 

பவித்ரா, “டேய், ஆகாஷ்  நீயா  இப்படி பேசுற? “இத்தனை நாளும்  பூட்டிய அறையினுள்ளே  அடைந்து கிடப்பாய். நான் பேசினாலும்  கூட நீ பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வாய். “

 

ஆகாஷ், “அம்மா  இத்தனை நாளும்  அப்பா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல சுயநலத்துடன் இருந்து விட்டேன். ஆனால்  எனக்கு நம்முடைய சந்தோஷத்தை விட  சுற்றியிருக்கிறவர்களுடைய சந்தோஷம் மட்டும் தான்  போதும் என நினைக்கிறேன். 

 

பவித்ரா, “நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், என் செவியில் தேன் வந்து பாய்வது போல  இருக்கின்றதே? இந்த சந்தோஷத்துல  எனக்கு கோவிலுக்குப் போகனும்னு போல தோணுகிறதே? “

 

ஆகாஷ், “அம்மா   நானும்  கோவிலுக்குப் போகிறத பத்தி தான் உன்னிடம் பேசனும்னு வந்தேன். வாங்கம்மா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்மா? “

 

ரவி, “அப்படியென்றால்  நானும் உங்களோடு வரலாம்மா? “

 

பவித்ரா, “தாராளமாக நீயும் வாப்பா? “எனப் புன்னகையோடு கூறினாள். “

 

ஆகாஷ், “ம்ம்ம்..நம்ம நினைச்சபடியே நடக்குது.. நீங்க  ஹாசினிக்குப் போன் பண்ணீங்களா?”

 

ரவி, “ஆகாஷ், அவளுக்குப் போன் பண்ணல, நம்ம  முதலில் கோவிலுக்குப் போயிட்டு  அம்மாவை  அங்க இறக்கிவிட்டுட்டு  எனக்கு அவசர வேலை என்று கிளம்பி விடுவேன். அதுக்கப்புறம்  போனை என்னிடம் இருக்கிறதென்று காரணத்தைச் சொல்லி  நீங்களும்  உங்க அம்மாவைக கூட்டிட்டு வந்துடுங்க? “

 

ஆகாஷ், “அம்மா  அங்கவருவதால் பிரச்சினை எதுவும் ஏற்படாதே? “

 

ரவி, “அதெல்லாம் ஒன்னும் ஏற்படாது, எங்க தாத்தா எனக்கு ஒத்துழைப்பாக இருப்பாரு,நானும் அவருகிட்ட இப்போது தான் பேசினேன்.”

 

பவித்ரா, “ஆகாஷ்  ,ரவி  நீங்க ரெண்டு பேரும் வாங்க நம்ம கோவிலுக்குப் போகலாம். “

 

சொர்ணம்மாள், “நளினி, ஹாசினி தூங்கி எழுந்திருச்சுட்டாளா? “

 

நளினி, “அத்தை  இன்னும்  அவ எழுந்திருக்கவே இல்லை. “

 

சொர்ணம்மாள், “ஏம்மா  அவளைச் சீக்கிரம் எழுப்பி விடும்மா? “வீட்டுக்கு விருந்தாளிகள் வரும் நேரம், அவளை  தான் கேட்பாங்க?, 

 

நளினி, “இதோ  நானே போய் எழுப்பி விடுறேன். “

 

ஹாசினியின்  அறையைத் திறக்க, அவளோ  சோகமாக இருந்தாள். நளினியும்  அவளின்  முகத்தைப் பார்த்து அருகே சென்று அமர்ந்தாள். 

 

ஹாசினி, “அம்மா  என்றவளோ  தோள் மீதிலேயே சாய்ந்தாள். 

 

நளினி, “என்னடா செல்லம், “இன்னிக்கு  உன்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், இப்படி முகத்தை கவலையாக வச்சுட்டு இருக்குற? “

 

ஹாசினி, “அம்மா, உங்க எல்லாரையும் விட்டுட்டு வெகு தூரமாக போகிற மாதிரி இருக்குதும்மா? “

 

நளினி, “அப்படியெல்லாம்  இல்லம்மா, நம்ம ஊருக்குப் பக்கத்துல தான்  மாப்பிள்ளையோட ஊரு உன்னைப் பார்க்கனும்னு தோணுச்சுனா? நாங்களெல்லாம் காரை எடுத்துட்டு வந்துடுவோம். “

 

நீ  சொல்றதெல்லாம்  கேட்கிறதற்கு நல்லாதான் இருக்குது.. ஆனால் இந்த மாதிரியெல்லாம் நடக்கும்மா? என்பது தான்  சந்தேகம் என  பேசினாள் ஹாசினி. 

 

வானில் தொடரும்.. 

 

வார்த்தைகளின் எண்ணிக்கை :1612

  . 

 

      

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்