Loading

கல்யாண வானில்

 

அத்தியாயம் 19

 

   ”  அம்மா உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானா?”என்று குரல் நடுக்கத்துடன்  கேட்டாள். 

 

நளினி,” என்னுடைய சம்மதத்தை விடும்மா? “இதில் உனக்கு விருப்பம் தானே? “

 

ஹாசினி, “அம்மா  அதுவந்து..அது ..

 

நளினி, “உனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அத்தை எப்போதுமே செய்ய மாட்டாங்க? “

 

ஹாசினி.. ஹாசினி என  குரல் கொடுத்தாள் சொர்ணம்மாள். 

 

ஹாசினியும் தன்னுடைய பாட்டியின் குரலைக் கேட்டு  எழுந்தாள். 

 

சொர்ணம்மாள், “என்னம்மா  தூங்கிட்டீயா? “

 

நளினி, “அத்தை அவ  இப்ப தான் வந்து படுத்தாள். இன்னும் தூங்கல… 

 

ஹாசினி, “சொல்லுங்க பாட்டி? “

 

சொர்ணம்மாள், “இன்னிக்கு என்கூட வந்து படுத்துக்கோ? “என்று சொல்லி அன்பாக அழைத்து சென்றாள். 

 

பவித்ராவும்,அனிதாவும் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை நோக்கியபடி அமர்ந்திருந்தார்கள். 

 

கார்த்திகேயன், “தம்பி… வாப்பா  ..வாப்பா  .எனப் பரிவோடு உள்ளே அழைத்துச் சென்றார். 

 

பவித்ராவும்  பதற்றத்தோடு  அந்த பையனை ஏறிட்டாள். அவனைப் பார்த்த போது  அவளது மனதிலே இனம்புரியாத ஒரு  உணர்வு ஏற்பட்டது. அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல்  சோபாவிலேயே அமரச் சொன்னாள்.. 

 

கார்த்திகேயன், “பவித்ரா இந்த தம்பிக்கு  கையுல லேசான காயம். இவனால் பைக் அழுத்திவிட்டு வீட்டுக்குச் செல்ல முடியாத காரணத்தால்  நம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து விட்டேன். 

 

பவித்ரா, “ஏங்க நம்ம வீட்டுலயே தங்கட்டும். தம்பிக்கு காயம்  எப்படி ஏற்பட்டது. “

 

கார்த்திகேயன், “அதுவும் எம் மேல தான் தப்பு, என்னால் தான்  இந்த தம்பிக்கு காயம் ஏற்பட்டு விட்டது. 

 

பவித்ரா, “ஏங்க  உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். மெதுவாக போங்க என்று  காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டீர்களா? “

 

ரவி, “ஆன்ட்டி!அங்கிளை திட்டாதீங்க? “எம் மேல தப்பு, நானும் கொஞ்சம்  முன்னால வரும் போது கவனிச்சுட்டு வந்துருக்கனும். “

 

பவித்ரா, “தம்பி  நீயும்  அவரை காப்பாற்ற முயற்சி பண்ற? “

 

ரவி, “அப்படியெல்லாம் இல்த ஆன்ட்டி? “நானும் வேற  ஒரு கவனத்தில் வந்ததால் தான்  எதிரே வந்த பைக்கைக் கண்டு கொள்ளாமல் கீழே விழுந்து விட்டேன். 

 

பவித்ரா, “சரிப்பா!வா சாப்பிடலாம்.. 

 

ரவியும் தயக்கத்துடன் வேண்டாமென்று மறுத்தான். 

 

கார்த்திகேயனும்  வலுக்கட்டாயமாக அவனை  இழுத்து  டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். 

 

அனிதாவும் மனசுக்குள்ளே  வீட்டுல  யாரையாவது கூப்பிட்டு வந்து சாப்பாடு போட வேண்டியது. இதெல்லாம் பார்க்கும் போது  கடுப்பாக இருக்குது என்றவளே  அபிஷேக்கை  கூட்டிக் கொண்டு  அவளின் அறையை நோக்கிச் சென்றாள். 

 

பவித்ரா, “அபிஷேக்.. கண்ணா.. என அழைக்க… 

 

அதற்கு  ஆகாஷீம்  அவனை  அண்ணி மாடிக்குத் தூக்கிட்டுப் போயிட்டாங்க என்று கூறினான். 

 

சொர்ணம்மாளின்  அறைக்கு வந்த ஹாசினியும்  எதுவும் பேசாது மெளனமாக இருந்தாள். அந்த நேரத்தில்  பாட்டியின் கைப்பேசி ஒலித்தது. 

 

கைப்பேசி எடுத்து நம்பரை பார்க்க  ஜகநாதனின்  மனைவி  பத்மா  அழைத்தாள். 

 

சொர்ணம்மாள், “சொல்லு பத்மா? “

 

பத்மா, “அம்மா  நாளைக்கு எங்க சொந்தக்காரங்க அதிகமாக வருவாங்க?”அதான்  வந்தவங்கள  குறையில்லாமல் பார்த்துக்கனும் என தயக்கமாக சொன்னாள். 

 

சொர்ணம்மாள், “நீங்க ஒன்னும் வருத்தப்பட வேண்டாம்.இந்த சொர்ணம்மாள் அரண்மனைக்குள்ளே வந்துட்டாலே! அவர்களை  மன நிறைவோடு தான் அனுப்புவேன் எனக் கம்பீரமாக சொன்னாள். 

 

பத்மா, “சரிங்க நீங்க சொன்ன வார்த்தையை எப்போதுமே மீறியது இல்லை. எனக்கு இப்போது தான் ரொம்ப சந்தோஷமா இருக்குது என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

 

சொர்ணம்மாளும்  ஹாசினியிடம் பேச முயற்சித்த போது  அவளோ  தூங்கி விட்டாள். இப்ப இவளை தொந்தரவு பண்ண வேண்டாமென்று போர்வை இழுத்து போர்த்தினாள். 

 

ராஜவேல்பாண்டியும்  தூங்காமல்  ஹாலில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். அப்போது  வேலையை முடித்து வந்த கணேசனும், ரத்னாவும்  அவங்க அப்பாவின் முன்னே நின்றனர். 

 

கணேசன்,”அப்பா, மணி  வேற  பத்து ஆகப் போகுது, நீங்க இன்னும் தூங்காமல் இருக்கீங்க? “

 

ராஜவேல்பாண்டி, “எனக்கும் தூக்கமே வரல? “எனச் சலிப்பாக.. 

 

ரத்னா, “என்னப்பா சொல்றீங்க?நாளைக்கு  நம்ம ஹாசினி  நிச்சயதார்த்தத்தை வைச்சுட்டு தூக்கம் வரலனு சொன்னா எப்படி? “

 

லலிதா.. லலிதா  ..

 

சொல்லுங்க ?

 

ரத்னா, “அப்பாவுக்கு தூக்கமே வரலயா? நல்லா சாப்பிட்டாங்களா? “

 

லலிதா, “இல்லங்க மாமா எதுவும் சாப்பிடல, “

 

கணேசன், “அப்பா எதுக்காக சாப்பிடாமல் இருக்கீங்க “?

 

ரத்னா ,”லலிதா நீ போய் இட்லி வைச்சுட்டு வா? “

 

ராஜவேல் பாண்டி, “எனக்கு எதுவும் வேண்டாப்பா? 

 

கணேசனும், ரத்னாவும் சேரந்து மாறி மாறி ஊட்டி அன்பை வெளிப்படுத்தினார்கள். 

 

நிவேதிதாவும் கடிகாரத்தின் மேல்  விழிகளைப் பதித்த படி இருந்தாள். ரவியின் நம்பருக்கு அழுத்தினாள். 

 

எதிர்ப்பக்க அழைப்பில் அவனும் ஒழுங்காக பதில் கூறாமல் அழைப்பைத்  துண்டித்தான். 

 

நிவேதிதா, “இவுக  எதுக்காக போனை கட் பண்றாங்க? “என்ற யோசனையில் இருக்க, திடீரென்று சமீதா தூக்கத்தில் எழுந்து அழுது கொண்டிருந்தவளோ அப்படியே கண் அசந்து தூங்கி விட்டாள். 

 

சந்தோஷீம் தனது  அக்கெளவுண்ட்ஸ் அனைத்தையும் சரிப்பார்த்தபடி இருந்தான். அவனைக் கண்காணித்த அனிதாவும் அவனருகில் வந்து அமர்ந்தாள். 

 

அனிதா, “ஏங்க  நீங்க எப்போதுமே வேலை பார்த்துட்டு தான் இருக்கீங்க?நானும் உங்ககூட கடையில் வந்து கொஞ்ச நேரம்  வந்து இருக்கட்டும்மா? “

 

சந்தோஷ், ‘இவகிட்ட  வேண்டாமென்று சொன்னால் திரும்பவும் இத பத்தி என்னிடம் கேட்டு தொந்தரவு செய்வாள்.’

 

அனிதா, “ஏங்க நான் கேட்டுக்கிட்டே இருக்குறேன். நீங்க எதுவும் சொல்லாமல்  இருக்கீங்க?” என்றாள். 

 

சந்தோஷ், “சரிம்மா, நாளைக்கு நீயும்  என்கூட வந்துடு? “

 

அனிதா,’ஜாலி.. ஜாலி.. என உற்சாகத்தோடு  படுக்கச் சென்றாள்  ..

 

ரவியும், ஆகாஷீன் அறையிலேயே படுத்திருந்தான். எப்படியாவது ஹாசினியைப் பத்தி பேசியே ஆகனும் என்று  நினைத்திருந்தான். 

 

வானில் தொடரும்  …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்