கல்யாண வானில் 10
ஆகாஷீம் நள்ளிரவு 12 மணியளவில் அங்குமிங்குமாக கைப்பேசியை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தான். ஏற்கனவே இன்னிக்கு எம் மேல காரணமே இல்லாமல் கோபமாக இருந்தா?, அவ கோபமாக இருந்தாலும் என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் இருந்ததே இல்லை என யோசித்து கொண்டே இருந்தான். அந்த நேரம் வோறொரு நம்பரில் இருந்து போன் ஒலித்தது. அதை அழுத்தி பேசினான் ஆகாஷ்.
ஹலோ ,”யாரு ஹாசினியா?, சொல்லும்மா ,உனக்காக தான் இவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கேன்.
, “ஹேய், எரும நான் தான் டா நந்தினி பேசுறேன் .போன் எடுத்தா நீங்க யாருங்க பேசுறீங்க?, என்றெல்லாம் கேட்கிறது கிடையாது. எடுத்தவுடனே சொல்லு ஹாசினி தானா,
ஆகாஷ், “ஸாரிம்மா, அவ தான் வேற நம்பரில் இருந்து கூப்பிட்டு எனக்கு ஷாக் கொடுக்கிறாளானு நினைச்சேன்.
நந்தினி, “அதெல்லாம் இல்லடா ,அவ உம் மேல கோபமாக இருக்குறா?, அதுவும் கல்லூரியில் இருந்து வந்ததில் இருந்தே சரியில்லை. இந்த நேரத்துல அவ உனக்கு வாழ்த்துக்கள் சொல்றது ரொம்ப கஷ்டம் தான்.
ஆகாஷ், “நீ எப்படியாவது அவளை எனக்கு விஷ் பண்ண வச்சுரும்மா?, ப்ளீஸ் தயவு செய்து எனக்காக இநத உதவியை மட்டும் செஞ்சுரும்மா?,
நந்தினி, “சரிடா!,ஏதோ என்னோட காலில் விழுந்து கேட்கிற மாதிரி நினைச்சுக்கிறேன்.அவளை சமாதானப்படுத்த ஒரே ஒரு வழி தான் இருக்குது.
ஆகாஷ், “ஏய்!அது என்ன வழி?
நந்தினி, நீ என்னிடம் ரொம்ப நேரமா பேசிக்கிட்டே இரு. அது போதும் .நான் உங்கிட்ட பேசுறது பிடிக்காமல் அவளே உனக்கு போன் பண்ணுவா?,
ஆகாஷ், “ஓ.. இதுவும் நல்ல ஐடியா தான். உன்கிட்ட பேச ஒன்னுமில்லையே என்றான் .
நந்தினி, “டேய் ஆகாஷ் இருக்குதுடா “
ஆகாஷ், ‘அப்படினா சீக்கிரம் சொல்லு, “
நந்தினி, “இன்னிக்கு யாரோ ஒருத்தரோட ரொம்ப நேரமாக பேசிட்டு இருந்தாயா?, அதுவும் டீ கடை அருகே என்றாள்.
ஆகாஷ், “ஆமா,அது எங்க அப்பா “ஹாசினியை எங்க அப்பா பார்க்கனும்னு சொன்னாங்க, அதுக்காக அவளை வரவழைத்தேன். எங்க அப்பாவும் பார்த்துட்டு எனக்கு ஒரு வேலை உள்ளது என்று கிளம்பி விட்டார்.
நந்தினி, “நீ அவகிட்ட உங்க அப்பா என்று அறிமுகப்படுத்தவில்லையா?,
ஆகாஷ் “இல்ல, எங்க அப்பா தான் இப்போதைக்கு அறிமுகம் வேண்டாமென்று சொன்னார்கள்.அதான் அவளிடம் சொல்லக்கூடாதென்று இருந்தேன். ஆனா அவளிடம் பொய் சொல்லி பழக்கமில்லாததால் அது எங்க அப்பா என்று தான் சொன்னேன். அதிலிருந்து எனது கையை உதறிவிட்டு சென்று விட்டாள். நானும்
பின்னாலயே வந்து அவளிடம் கேட்டேன். ஆனா அவளோ ஒரு ஆட்டோவைப் பிடித்து வேகமாக சென்று விட்டாள்.
நந்தினி,ஹாசினியின் குடும்பத்திற்கும் பிடிக்காதவர் தான் உங்க அப்பா கார்த்திகேயன். அதனால் அவளுக்கும் பிடிக்காது என சொல்லி விட்டாள்.
ஆகாஷ், “அவளா!அப்படி சொன்னா,என்னால் நம்ப முடிய வில்லையே?
நந்தினி, “ஆனா அவ மனசுல நீ ஆழமா இருக்குற, டா கண்டிப்பாக அவளால் உன்னிடம் பேசாமல் இருக்கவே முடியாது என உறுதியாக சொன்னாள்.
ஹாசினி வேகமாக எழுந்து மணியை பார்க்க 12 ஐ தாண்டியது. நந்தினியும் ஆகாஷீம் வெகுநேரமாக பேசுவதை கண்காணித்துக்கொண்டு இருந்தாள். அதை பொறுக்க முடியாமல் ஆகாஷீற்கு போன் செய்தாள்.
ஆகாஷ், “ஹேய் நந்தினி நீ சொன்ன மாதிரியே. அவ போன் செய்துட்டா?நீ கட் பண்ணு என்றான் .
ஹாசினி திரும்பவும் ஆகாஷீன் எண்ணிற்கு முயற்சித்தாள். அவனும் அழுத்தி பேச தொடங்கினான்.
ஆகாஷ், “சொல்லுடி ?உன் வாயால எனக்கு வாழ்த்துக்கள் சொல்லு என்றான்.
ஹாசினி, “விஸ் யூ மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன். ஆப் த டே”
ஆகாஷ்,”என்னுடைய பிறந்த நாளுக்கு விஸ் மட்டும் தானா?,
ஹாசினி, “வேற என்ன எதிர்பாக்குறீங்க “
ஆகாஷ் ,”நான் என்ன கேட்பேனு உனக்கு தெரியாதா?,
ஹாசினி, “மும்ம் புரியுது. புரியுது..அதெல்லாம் நாளைக்கு தரேன்.இப்போது போய் நல்லா தூங்கி எழுந்திரு.மற்றதை காலையில் பேசிக்கலாம் என போனை துண்டித்தாள்.
மறுநாள் காலையில் எழுந்தவளோ ஆகாஷீன் நினைப்பிலேயே இருந்தாள். என்னதான் இருந்தாலும் எங்க குடும்பத்திற்கும் அவங்க அப்பாவை பிடிக்காது.என்னோட காதல் விஷயத்தை நான் எப்படி எங்க வீட்டுல சொல்லப்போறோனோ?,என்ற குழப்பத்தோடு இருந்தாள்.
நந்தினி, “அடியேய்!அவனிடம் பேசமாட்டேனு சொல்லிட்டு ,நீயே அவனுக்குப் போன் செய்து பிறந்த நாள் விஸ் பண்ணியிருக்குற, உம் மனசுல ஆழமான காதலை வைச்சுட்டு உன்னுடைய குடும்பத்திற்காக உன் காதலை வேண்டாமென்று மறுக்கிறாயே?,
ஹாசினி, “அவளின் தோளில் சாய்ந்து அழுதாள்.
நந்தினி, “இப்ப எதுக்காக அழற “உங்க வீட்டுல உன் காதலை ஏத்துக்கமாட்டங்கன்னு அழுகிறியா?, நீ அத பத்தி கவலையே படாதே?,உம் மனசுல உள்ளதை ஆகாஷீடம் சொல்லு, அவன் ஏதாவது ஒரு ஐடியா சொல்லுவான். அவனும் உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்கவே மாட்டான் என்றாள்.
ஹாசினி, சரிடி, நீ சொல்ற மாதிரியே அவங்கிட்ட என்னோட குடும்பத்தைப் பத்தி சொல்லப் போறேன். அதுக்கப்புறம் என்ன முடிவு பண்றானு பார்த்துக்கலாம் என கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
நளினி, மாமா இந்தாங்க காபி, அத்தைய பாத்தீங்களா!,
ராஜவேல்பாண்டி,ஏம்மா,காலையிலேயே எங்கேயும் போக மாட்டாளே?, நீயும் நல்லா பாரும்மா, அவ பூஜை அறையில் இருக்கப் போறா என்றார்.
நளினி, ‘அட !,ஆமா மாமா நானும் மறந்துட்டேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை அத்தை கந்த சஷ்டி கவசம் பாடிட்டு தான் காபி குடிக்க வருவாங்க, என்றவளோ பரபரப்பாக கீழே சென்றாள்.
நிவேதிதா, “இப்ப கீழ போவதற்கே ஒரா மாதிரியாக இருக்குது.”எல்லாருடைய முகத்துல எப்படி விழிப்பேன் என்ற. வருத்தத்தில் நின்றிருந்தாள்.
ரவி, “ஏய்!இங்க நின்னுட்டு என்ன பண்ற கீழே வா” எப்போதும் பூஜையில் வெள்ளிக்கிழமை அவங்களோட கந்த சஷ்டி கவசம் படிப்பாயே?,இன்னிக்கு நீயும் படிக்கலயா?
நிவேதிதா, “ஏங்க நேற்று நடந்ததைப் பத்தி நினைச்சுட்டு இருந்தேன்.
ரவி, “நீ அத பத்தி கவலைப்படாதே?,நேற்று நடந்த விஷயத்தைப் பத்தி யாருமே உன்னிடம் கேட்க மாட்டாங்க!, நீ வா என்றழைத்தான்.
நிவேதிதாவும் தயங்கி தயங்கி வந்ததைப் பார்த்து நளினியும், லலிதாவும் அன்பாக அழைத்தார்கள்.
ஆகாஷ், “எப்போதுமே இந்த நேரத்துல கோவிலுக்கு வருவா?,இன்னிக்கு மட்டும் எல்லாமே தாமதமாக பண்றா?, என சற்று எரிச்சலோடு இருந்தான்.
ஹாசினியும் பரபரப்பாக கிளம்பி தயாராக இருக்க, அச்சமயத்தில் அவளுக்கு திடீரென்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவளால் கோவிலுக்குப் போக முடியாத காரணத்தை நந்தினியிடம் சொல்லி ஆகாஷீடம் சொல்லலாம் என்றிருக்க.. அங்கு நந்தினியும் இல்லை. வயிற்று வலி தாங்க முடியாமல் அப்படியே கட்டிலில் சுருண்டு படுத்து விட்டாள். ஹாசினியின் கைப்பேசியைக் கூட எடுக்க முடியாமல் அப்படியே படுத்து விட்டாள்.
ஆகாஷ், “கோவிலில் இருந்து திரும்பவும் ஹாசினியின் எண்ணிற்கு அழைத்தான் .எந்த பதிலும் அளிக்க வில்லை. அதனால் மன உளைச்சலில் கல்லூரிக்குச் சென்றான்.
ஆகாஷீன் வருவதைக் கண்டு ஆனந்த் மற்றும் நண்பர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்றனர்.
ஆனந்த்,”டேய்!, ஹாசினி உன்னோடு கோவிலுக்கு வரவில்லையா?,நீங்க இரண்டு பேரும் திரும்பவும் சண்டை போட்டாச்சா?,
ஆகாஷ், “அப்படியெல்லாம் இல்ல மச்சி,அவ நேற்று எங்க அப்பாவை பார்த்ததில் இருந்தே சரியில்லை. ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறாள். அந்த விஷயத்தை என்னிடம் சொன்னால் தானே?,அவளோட பிரச்சினையை. சரி பண்ண முடியும். எதுவுமே சொல்லவே மாட்டிக்கா!
ஆனந்த் ,”நீ போன் பண்ணா தானே எடுக்க மாட்டேங்கிறா?, என்னோட நம்பரில் இருந்து கூப்பிட்டு பார்க்கிறேன் என்றவனோ ஹாசினியின் எண்ணிற்கு அழைத்தான். அதற்கும் எந்த பதிலும் அளிக்கவே இல்லை.
ஆகாஷ், “சரிடா, வாங்க நம்ம எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம் என்றான்.
ஆனந்த,”பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனாலும் உள்ளுக்குள் வருத்தமாக தான் இருந்தான். நம்முடைய பிறந்த நாளில் ஹாசினி இல்லாமல் போனது ஒரு ஏமாற்றத்தை அளித்தது.
கல்லூரிக்கு ஹாசினி வரவில்லை என்பது நந்தினி மூலமாக தெரிந்தது. ஆகாஷை சந்தித்த நந்தினி உன்னுடன் கோவிலுக்கு வருவதற்காக தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.நீ சொல்றத பார்த்தா அவ வரவே இல்லையா?,என்று கேட்டாள்.
ஆகாஷ், “ஆமாம், ஹாசினி அவளுக்கு என்னை விட்டு விலக மனசு வந்துடுச்சு, நீயும் அவகிட்ட எனக்காக பேச வேண்டாம் என சொல்லிட்டு சென்றான்.
நந்தினியும் ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள் அவளின் அறையை நோக்கி நெருங்கிய போது ஹாசினி கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்தவளோ, “என்னடி உனக்கு என்ன பிரச்சினை எதுக்காக இப்படி படுத்திருக்க “
ஹாசினி, “மெல்லமாக எழுந்து அமர்ந்து வயிற்றைப் பிடித்தபடியே எழுந்து உட்கார்ந்தாள்.
ஹாசினி, ஹேய் ,இதுக்கெல்லாம் எதுக்குடி ஹாஸ்பிட்டல் என்னால் எங்கும் வர இயலாது சொன்னா புரிஞ்சுக்கோ,
நந்தினி, நீ ஒரு வார்த்தை போன் பண்ணி என்னால் கோவிலுக்கு வர முடியாது என்று ஆகாஷீடம் சொல்லியிருக்க வேண்டியது தானே?,
ஹாசினி, “அச்ச்ச்சோ ,மறந்தே போயிட்டேன்.நான் கிளம்பிய தயாராகி இருந்தேன். அதுக்கப்புறம் கடுமையான வயிற்று வலி வந்ததும் உஷாராகிட்டேன். அப்புறம் அப்படியே படுத்துட்டேன்.
நந்தினி, ஆகாஷ் உனக்காக கோவிலில் ரொம்ப நேரமாக காத்துக்கிட்டு இருந்துருக்கான். அதுக்கப்புறம் தான் உனக்கு போன் செய்துருக்கான். நீ அவனை விட்டு விலகுறேனு தப்பா நினைச்சுட்டு இருக்கிறான்.
ஹாசினி, “இன்னிக்கு என்னால் பேச முடியாது. நீயே அவனிடம் சொல்லிடு,
நந்தினி, “என்னத்த நானா?, அவ்வளவு தான் என்னை திட்டியே தீர்த்துடுவான். இந்த பிரச்சினையை நீயே சமாளிச்சுக்கோ என நழுவினாள்.
சொர்ணம்மாள்,”அவரவர் வேலையை அப்படியே ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு எல்லாரும் இங்க வாங்க,
லலிதா, “ஹேய் நளினி,அத்தை கூப்பிடுறாங்க வா “
நளினி, “அக்கா இந்த அத்தை வேலையை பார்க்க விடாமல் ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்குது. “
லலிதா, “சரி வாடி”அது என்னத்த தான் சொல்லுது என பார்க்கலாம்.
சொர்ணம்மாள், “எல்லாரும் வந்துட்டாங்களா “
நளினி, “அத்தை நிவேதிதா மட்டும் வரல”
நிவேதிதா..நிவேதிதா.. என. ஓங்கி சத்தமிட, அப்பவும் கீழே இறங்கி வராமல் அவளுடைய அறையிலேயே காதில் கெட்போனை வைத்து பாட்டு கேட்டபடியே ஆடிக்கொண்டு இருந்தாள்
லலிதா, “தாரணி நீ போய் அவளை கூட்டிட்டு வா “
சரிங்க சித்தி என்றவள் மாடிக்கு வேகமாக சென்று பார்க்க, சமீதாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
தாரணி, “அண்ணி,, அண்ணி..
நிவேதிதா, “வாம்மா எனப் புன்னகையோடு அழைக்க..
அண்ணி உங்கள பாட்டியம்மா அப்போதிலிருந்து கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, நீங்க சீக்கிரம் வாங்க என்று சமீதாவை தூக்கிட்டு கீழே மெதுவாக நடந்தாள். .
நிவேதிதா, “சொல்லுங்க பாட்டி, நான் போனில் பாட்டு கேட்டுட்டு இருந்தேன். அதான் நீங்க கூப்பிட்டது எனக்கு கேட்கல “மன்னிச்சுக்கோங்க,
சொர்ணம்மாள், “நான் சொல்ல வருகிற விஷயத்தைச் சொல்லி முடிச்சுடுறேன். “நம்ம வீட்டுல எல்லாரும் சேர்ந்து புது வருடத்தைக் கொண்டாடுவோம்மா?.”நமக்கு புது வருடம் எப்போது பிறக்கப்போகுது எனக் கேள்வி கேட்டாள் சொர்ணம்மாள். “
தாரணி, “பாட்டி இன்னும் மூன்று நாள்கள் தான் இருக்குது..
ராஜவேல்பாண்டி,”புது வருடத்தில் அனைவரும் சேர்ந்து ஒன்றாக இதே வீட்டை நல்ல புதுப்பித்து அலங்காரம் செய்து வெகு சிறப்பாக இந்த ஊரே வாய் மேல விரலை வைக்கிற அளவுக்கு இருக்கனும். அதற்கு சில யோசனைகளை ஒவ்வொருவரும் கூறலாம். நாளைக்கு இதே நேரத்துல நம்ம எல்லாரும் என்னென்ன செய்யலாம். எந்த மாதிரி பண்ணலாம்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். அதனால் நல்லா யோசிச்சு வைச்சுக்கோங்க என சொல்லு முடித்ததும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றார்கள்.
நிவேதிதா திரும்பவும் மாடிக்கு ஏறினாள் .அந்த நேரம் சமீதா பசியால் அழ ஆரம்பித்து விட்டாள். தாரணியிடம் இருந்து சமீதாவை தூக்கினாள். அதன்பிறகு அடுப்பாங்கறைக்கு நுழைந்தாள்.
இரவு நேரத்தில் தூங்காமல் ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் நிவேதிதா. அதனைக் கவனித்த ரவியும் அவள் என்னதான் எழுதுறா?ஒரு வேளை எனக்காக கவிதை எழுதுவாளோ! இருந்தாலும் இருக்கலாம். நம்மகிட்ட மன்னிப்பு கேட்க கூச்சப்பட்டுட்டு பேப்பரில் எழுதிட்டு இருக்கிறாளோ?, சரி எதுவென்றாலும் இப்போதைக்கு கேட்க வேண்டாம். நம்ம காலையில் கேட்போம் என நினைத்து கண் அசந்தான்.
விடியற்காலையிலேயே எழுந்த ஹாசினி ஆகாஷின் புகைப்படத்தை ரசித்து பார்த்தபடியே இருந்தாள்.இப்ப இவனுக்கு போன் செஞ்சா எடுப்பானா? என்றே நினைத்துக் கொண்டிருந்தவள் ஆகாஷீன் எண்ணிற்கு டயல் செய்தாள்.
தலைமுடி தெரியாத அளவிற்கு போர்வையை மூடி இழுத்து படுத்திருந்த ஆகாஷீற்கு கைப்பேசியின் அழைப்பு தூக்கத்தைக் கலைத்தது.அதைப் பார்த்ததும் கடுங்கோபமுற்று அழைப்பை துண்டித்தான்.
ஹாசினி, “டேய் மவனே!,உனக்கு என்னை விட தூக்கம் ரொம்ப முக்கியமா?, உன்னை எப்படி பேச வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்.
சற்று நேரம் கழித்து, அவனுடைய நண்பனிடம் இருந்து அழைப்பு வந்ததும் உடனே அழுத்தி சொல்லு, டா ஆனந்த் என மெல்லமாக,
ஆனந்த், “ஏன்டா ஹாசினி போன் பண்ணும் போது எதுக்காக எடுக்க மாட்டேங்கிறாய்?” உனக்கு என்னடா பிரச்சினை, நேற்று அவளுக்கு நீ பண்ணுன, அவ எடுக்கல.. இப்ப அவ உனக்கு பண்றா நீ எடுக்கல, உங்க ரெண்டு பேருக்கும் வேலையே இல்லையா?,
ஆகாஷ், “டேய், “ஆனந்த் அவளை எனக்கு போன் பண்ணக்கூடாதுனு சொல்லிரு,உனக்கே தெரியும், அவ மேல செம கோபத்துல இருக்கேன்டா,
ஹாசினி, ஓ..சார் எம் மேல கோபமாக இருக்காங்களா?, சொல்லப்போனால் நான் தான் அவன் மேல கோபப்படனும் என இடையே நுழைந்தாள் கான்ப்ரன்ஸ் அழைப்பில் ,.
ஆகாஷ், “அவளை எதுக்காக கான்ப்ரன்ஸ் அழைப்பில் இணைத்தாய், முதலில் அவளைப் போகச் சொல்லு…
ஹாசினி, “நான் எதுக்காக போகனும், உனக்குப் புடிக்கலனா, நீ போடா என பட்டாசு போல வெடிக்க ஆரம்பித்தாள்.
ஆகாஷ், “என்னது டா, வா!,அப்புறம் உனக்கு மரியாதை இருக்காது என அதட்ட,
இருவரது வாக்கு வாதங்களைச் சமாளிக்க முடியாமல் அழைப்பைத் துண்டித்தான் ஆனந்த்.
அப்ப்பப்பா, ‘இவுக இரண்டு பேரும் எதுக்காக சண்டை போடறாங்கன்னு தெரியலயே? என்ற குழப்பம் தீர்வதுக்குள் திரும்பவும் அழைப்பில் ஹாசினி.
ஆனந்த், “என்னம்மா உம் பிரச்சினை?, நீ பேசுறதா இருந்தா?, அவனுக்கே போன் செய்து பேசு, அத விட்டுட்டு என்னைத் தொந்தரவு செய்யாதே என்றான்.
ஹாசினி, “ச்சே!, அவனுக்குப் போன் செஞ்சா, செம கோபத்துல இருக்குறான் .அவனை எப்படி சமாளிப்பது என்ற யோசனையிலேயே இருந்தாள்.
நந்தினி,” ஹாய் குட் மார்னிங் “நீ ஊருக்குப் போகலயா?, நேற்றே உங்க பாட்டியிடம் நாளைக்கே வாரேனு சொல்லிட்டு நீ இன்னும் கிளம்பாமல் இருக்குற,
ஹாசினி, நேற்றைக்கு முந்தைய நாளே தான் பாட்டியிடம் வாரேனு சொன்னேன்.நேற்று ஒன்னும் பாட்டிக்கிட்ட சொல்லவும் இல்லை என. கடிந்து பேசினாள்.
நந்தினி, “ஏம்மா இம்புட்டு. கோபமாக இருக்குற “
ஹாசினி, “நேற்றே நீ ஆகாஷீடம் என்னுடைய பிரச்சினையைச் சொல்லியிருந்தா?, அவனும் அத புரிஞ்சுக்கிட்டு என்னிடம் பேசியிருப்பான். நானும் காலையில இருந்தே அவங்கிட்டபேச முயற்சி பண்றேன். அவன் என்னடானா போனை எடுக்கவே மாட்டேங்கிறானே?,
நந்தினி, “நீ தானா என்னோட ஆகாஷை நானே சமாளித்து விடுவேனு, அவனைத் தேடி நீயே போ? அவனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்து என்று கூறினாள்.
ஹாசினி, “இப்ப அவன் எங்க இருப்பானு தெரியலையே?”
நந்தினி, “வேற எங்க நம்ம காலேஜ் கேண்டினில் தான் சாப்பிட்டு இருப்பான். நீ போய் நேராக அவனிடம் எடுத்துச் சொல்லி புரிய வையும்மா? என அனுப்பி வைத்தாள்.
வானில் தொடரும்..
Iva poi pesuna problem solved…. Aakash purunjupan… Aana iva poi pesuvalannu thn teriyalaye…