- மச்சான் அவ எங்கடா போயிருப்பா?
மச்சான் என்ன நம்பு அவ அங்க தான் இருப்பா….
இல்லடா தமிழு அவ நம்மளவிட்டு அங்க போக மாட்டாடா.
டேய் சரவணா அவள பத்தி உனக்கு தெரியாது, இந்த விசயத்துல அவ எவனையும் மதிக்க மாட்டாடா, எதிர்க்க எமனே வந்தாலும் ஏறி மிதுச்சுட்டு போய்ட்டே இருப்பாடா , நான் சொல்றேன்ல அவ கண்டிப்பா அங்க தான் இருப்பா…
இல்ல மச்சான் அவ மத்தவங்ககிட்ட வேணா அப்டி இருப்பா நம்மகிட்ட அப்டி இருக்க மாட்டாடா.
அட போடா பொடலங்கா ,அவள பத்தி சரியா தெரியாம அவளுக்காக சப்போட்டா பழத்தை வித்துகிட்டு இருக்கான் (அது சப்போர்ட் பண்றதத் தான் பயபுள்ள இப்புடி சொல்லுது), சரிடா ஈரவெங்காயம் அந்த உத்தமமான உலகநாயகி எங்க இருக்கானு போய் பாப்போம். அதுக்கு அப்புறம் வந்து அவளுக்கு வாழக்காய(வக்காளத்து) வாங்கு…. ம்ம்ம் என்ன ஏன்டா மொறைக்கிற நான் உண்மையைத்தான் சொல்றேன் வா போவோம்…. என்று கூறி தமிழ் சரவணனை இழுத்துச் சென்றான்…
ஹும் ம்ம்ம் ஹூம்ம்.. ஆஹா ஆஹா என்ன மணம் , என்ன மணம் இந்த காலேஜ் கேண்டீனோட சமோசாவுக்கு இணை இந்த உலகத்திலயே இல்ல…
அடடடடடா மசாலா வாடை ம்ம்ம்ம்ம்… இந்த கௌரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்….. ஹ ஹா ஹ ஹா ஹ ஹா …. என்று ரசித்துக் கொண்டே சமோசாவை வாயில் வைத்தாள் மித்ரா..
ஆஆஆஆ…ம்ம்ம்….ஆஆஆஆ…அட….ஆஆஆஆ… என்னடா இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டமாட்டேங்குதே என்று கூறி தன் கையை நோக்கினால். என்ன என் கை அந்தரத்தில தொங்குது. ம்ம்ம் அட என் கை யார் கையிலயோ மாட்டியிருக்க மாதிரி இருக்கு என்று யோசனையுடன் எழுவதற்க்கு முன்னே ஒரு குரல் வந்தது.
அடியே மாரியம்மா மாட்டுனது உன் கையில்லடி நீ தான்..
குரல் வந்த திசையை நோக்கினாள், கையால் வாயை மூடி சிரித்து கொண்டு இருந்தான் தமிழ்.
தன் கையை பிடித்து கோபத்தில் நின்றிருந்த சரவணனைக் கண்டால்..
(மித்ரா மைண்ட் வாய்ஸ்)
ஐய்யய்யோ பேரிக்கா மண்டையன் மொறைக்கிறானே, இவனுங்களுக்கு தெரியாம சமோமசாவை முழுங்க நெனச்சேன், இப்போ இவனுங்களுக்கு பங்கு குடுக்கனுமே . என்ன பண்ணலாம்🤔
அடிப்பாவி உன்னய காணோம் காணோம்னு தேடி அலஞ்சுகிட்டு இருந்தா, கொப்பன் மவளே இங்க உக்காந்து சமோசாவ அமுக்கிக்கிட்டு இருக்க, என் மச்சான் அப்பவே சொன்னான்,அவள நம்பாத அவ சோறுனு வந்துட்டா எவனையும் மதிக்க மாட்டானு.
நான் தான் நமக்கு அப்டி துரோகம் பண்ண மாட்டானு உனக்கு சப்போர்ட் பண்ணேன்.
ஆன நீ இப்படி ஒரு தெய்வக்குத்தம் பண்ணிருக்க எங்களுக்கு, இப்ப என்னடி யோசிக்குற தப்பு பண்ணிட்டேனா.
அட நீ வேற நம்ம வரலேனா சமோசாவ அவளே அமுக்கிருப்பா இப்ப நம்ம வந்ததுனால பங்கு குடுக்கனுமேனு யோசிக்கிறா, இவளாவது பீல் பண்றதாவது அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல மச்சான், அப்புடி தானடி அரவேக்காடு… என்று தமிழ் கூற…
அவள் மேலும் கீழும் தலையை அசைத்தவள் பின் அதன் பொருள் உணர்ந்து இடம் வலமாக தலையை அசைத்தால்..
மண்டைய மண்டைய நல்லா ஆட்டு சொல் பேச்சு மட்டும் கேட்காத, என்று காதை திருகினான்.
ஸ்ஸ் ஆஆஆ வலிக்குதுடா எரும விடுடா, அவ்ளோதான எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிட்டுறேன், என்று கூறி ஓடினாள்.
அடியேய் கஷ்டப்பட்டு அலைஞ்சு உன்ன தேடுனது நாங்க சமோசா மட்டும் நீ சாப்பிடுவியோ என்று கூறி தமிழ் அதை எடுக்க ஓடி…
அதற்க்குள் அவள் சமோசாவை எடுத்து வாய்க்கு கொண்டு செல்ல மீண்டும் கை அந்தரத்தில் தொங்கியது…
அப்புடி புடி மச்சான் இவள, செய்யுறதையும் செஞ்சுக்கிட்டு சமோசா வேணுமாம்ல, புடிங்க சார் இவள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் …
டேய் மச்சான் நான் புடிக்கலடா அவ கைய….
என்னடா சொல்ற நீ இல்லேன்னா அப்போ அது… என்று திரும்பிப் பார்க்க காவல் துறை பெண் ஒருவர் அவளை விசாரிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்..
தமிழ்( என்னடா இது ஒரு பேச்சுக்கு சொன்னா நிஜமா கூப்பிட்டு போறாங்க நம்ம பேச்சுக்கு அம்புட்டு பவரா)
டேய் சரவணா சமோசா வேணும்னா கேக்கலாம்ல அதுக்கு எதுக்கு விசாரணை என்று கேட்க..
அட பரதேசி நாயே அவ நமக்கு தெரியாம ஏதோ சம்பவம் பண்ணிருக்காடா, அதான் வந்து கூப்பிட்டு போறாங்க.அடங்காத குட்டி பிசாசு என்ன பண்ணானு தெரியலையே.
மச்சான் ஒருவேள இன்ஸ்பெக்டர்கிட்ட எதாச்சும் பிடுங்கி தின்றுப்பாளோ…
அட செத்த நாயே உன் யூகத்துல கல்ல விட்டு அடிக்க வேகமா வாடா போய் என்னனு பாப்போம், என்று கூறி காவல் நிலையத்திற்கு சென்றார்கள்….
என்னவா இருக்கும்?🤔
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.