Loading

      கெட்டி மேளம், கெட்டி மேளம்….

  மாங்கல்யம் தந்துனானேனா………..என்று ஐயர் மந்திரம் ஓத…. 

மக்கள் வாத்தியங்கள் முழங்க…

பெற்றோர்களின் முகம் கொள்ளாப் பூரிப்புடனும், மன நிறைவுடனும, பல்லாண்டு வாழ வேண்டும் என்ற ஆசியுடனும்… மங்கல நாணை தன் மனம் கவர்ந்தவளுக்கு வேண்டா வெறுப்பாக பூட்டினான் நம் நாயகன்… 

இதை அறியாத பேதையோ தன் மணாளனின் கைப்பற்றி ஆசையுடன் வலம் வந்தாள் அக்னியை……

பூரிப்புடன் மாங்கல்யத்தை தொட்டுப் பார்த்தாள்…கண் கலங்கி நின்றாள் ஆனந்தத்தில். எத்தனை பேருக்கு அமையும் இந்த பாக்கியம் தன் மனம் கவர்ந்தவனையே மணவாளனாகப் பெற. தன் கண்ணீரால் நன்றி செலுத்தினால் மாங்கல்யத்திற்க்கு…

இந்த மஞ்சக்கயிறு உன் கழுத்துல நான் கட்டுனா மட்டும் உறவு வந்துருமா…என்று கூறி தான் காலையில் அணிவித்த மாங்கல்யத்தை இரவு தன் கைகளாலே கழற்றி எறிந்துவிட்டு .. அவள் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்டு குரூரமான புன்னகையை வீசிச் சென்றான் ‌அவன்..

முகம் முழுவதும் அவனிடம் கைகளால் வாங்கிய தடங்களும், தன் மனதில் இன்று அவன் பதித்த தடங்களும் மாற்றி மாற்றி வேதனையைத் தந்தன. உன்னை மட்டுமல்ல என்னையும் சொற்களால் அரிந்து கூறு போட்டுவிட்டார் என்று, அங்கு அறுந்து தொங்கிய மாங்கல்யத்தை கண்டு கதறினாள் பேதை.. 

காலையில் மகிழ்ச்சியால் ஆராதனை செய்தவள் இப்பொழுது உயிர் போகும் வலியுடன் ரத்தக் கண்ணீரை வடிக்கின்றாள்…

என்ன தான் நடந்தது???

ஒருத்தி வேதனையுடனும், ஒருவன் வெறியடனும் கடக்கின்றார்கள் இந்த இரவை நாளைய விடியலை நோக்கி…

நாளைய விடியல் யாருக்கானதாக இருக்கும்???

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments