வீட்டிற்கு வந்ததில் இருந்து ஶ்ரீ அமைதியாகவே முக வாட்டத்துடன் இருந்தான். வழமையாக இல்லாமல் அவன் இருப்பதை பார்த்து என்ன ஆனது என்று அவனிடம் விசாரணை நடத்தினாள் அவனின் தங்கை அபிராமி.
“டேய் என்ன டா ஆச்சு.. காலேஜ்ல இருந்து வந்ததும் உர்ருண்ணு இருக்க? ஃபைல் ஆகிட்டியா? வாய்ப்பு இல்லையே இன்னும் டெஸ்ட் ஆரம்பிக்கவே இல்ல…”
அபியின் கேலி பேச்சை பொருட்படுத்தாமல் அமைதியாய் படுத்துக் கிடந்தான் ஶ்ரீ.
“இப்போ நீ சொல்லலை அடிப்பேன் டா.. என்ன ஆச்சு?”
வருத்தம் கலந்த குரலில் அவள் கேட்கவும் பெரும் மூச்சுடன் அவளை பார்த்தான்.
“காலேஜ்ல இருந்து சர்டிஃபிகேட் தர மாட்டாங்க.. போன வருசம் நடந்த பிரச்சினையினால ஃபாதர் தர மாட்டேன் சொல்லிட்டாராம்..” வருத்தத்துடன் கூறும் ஶ்ரீயை பார்க்கவே அவளுக்கு சங்கட்டமாய் இருந்தது. அவளுக்கு தெரியாதா அவள் அண்ணன் லட்சியம் என்ன என்று. அவனுக்கு அவள் ஆறுதல் கூறும் முன்பே அடுக்கையில் இருந்து டமார் என்று பாத்திரம் விலும் சத்தம் கேட்டது. இருவருமே பெரு மூச்சு விட்டார்கள்.
“அபி.. அவனை ஒழுங்கா படிச்சி முடிச்சிட்டு ஐடி கம்பனில வேலைக்கு போக சொல்லு.. அதுக்கு தான் அவனை மேற்படிப்பு படிக்க வைக்குறேன்.. ஏற்கனவே உங்க அப்பாவை நான் வாரி குடுத்தது பத்தாதா.. ஒழுங்கா அவனை படிக்குறதுல கவனம் செலுத்த சொல்லு..” சூடாக அடுக்கையில் இருந்து வார்த்தைகள் வெளிவந்தது. கஸ்தூரி, ஶ்ரீ மற்றும் அபியின் அம்மா. தன் மகன் முகத்தை பார்க்காமலே எட்டே இருந்து அவன் குரலை வைத்தே அவன் எவ்வளவு நொந்து இருக்கிறான் என்று கண்டுக் கொண்டார். தன் மகனின் ஆசை என்ன என்று தெரிந்தும் அவருக்கு அதில் விருப்பம் இல்லை.
“அபி.. நான் ஐடி கம்பனிக்கு வேலைக்கு போக மாட்டேன்.. வேணும்ன்னா இப்போவே என் படிப்பை நிறுத்த சொல்லு.. எனக்கு இன்னும் வசதியா இருக்கும்.”
கோவத்துடன் சொள்ளியவன் தலையணையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான். அம்மா மகன் இருவர் பிரச்சினைக்கும் இடையே அபி தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறாள்.
மேலே வந்தவனுக்கு அதீத எரிச்சல். கல்லூரியிலும் அவனுக்கு பிரச்சனை வீட்டிலும் பிரச்சனை. விட்டத்தை கோவத்துடன் வெறித்துக் கொண்டு இருந்தவனின் சிந்தனையை களைத்தாள் ஜூலி. அழைப்பை ஏற்ற ஶ்ரீ கோவம் குறையாமல் பேசினான்.
“என்ன டி குட்டி சாத்தான்.. இப்ப கால் பண்ணி இருக்க?”
“ஏன்டா எரிஞ்சி விழுற பன்னி இன்னும் ரெண்டு நாள்ல எக்சாம் டா.. நாளைக்கி குரூப் ஸ்டடி பண்ணலாமா?”
“அதை எல்லாம் நீயே பண்ணு நான் வரல..”
“சரி வராத.. உனக்கு தான் நஸ்ட்டம்.. அந்த புது பொண்ணு மேத்ஸ் சொல்லி தர சொல்லி கேட்டா அதான் குரூப் ஸ்டடிக்கு கூப்ட்டேன் நாங்களே படிச்சிக்குரோம்.” சிலுப்பிக் கொண்டாள். அதில் பட்டென்று எழுந்து அமர்ந்த ஶ்ரீக்கு கோவம் எரிச்சல் எல்லாம் காற்றோடு காற்றாய் பறந்தது..
“எப்போ எங்க எத்தன மணிக்கு மட்டும் சொல்லு..” ஒரெடியாக குட்டி கரணம் அடித்தான்.
“ச்சை.. கேவலமா நடிக்காத… நீ வரவே வேணாம் ஓடிரு.. நான் கூப்ட்டா வரல அவ வரான்னு சொன்னதும் வரியா.. பிகிரு வந்தா பிரிண்ட்டை கழட்டி விடரியே துரோகி.. வை டா போனை..” கோவத்தில் கூறியவள் அழைப்பை பட்டென்று துண்டித்தாள்.
“ஏய் ஏய்… குள்ள பிசாசு…” அவன் முழுதாய் முடிக்கும் முன்னே அழைப்பு துண்டிக்கபட பெரு மூச்சு விட்டான்.
“உனக்கு வாய்ல தான் டா சனி..” தன்னை தானே திட்டிக் கொண்டு படுத்தான். அவன் எண்ணம் முழுவதையும் ஒருவள் ஆக்ரமித்து இருந்தாள். அவளின் மிரண்ட விழிகள், பேசும் போது சிரிக்கும் கண்கள், சிரிக்கையில் அழகாய் உப்பும் கன்னம், என ஒவ்வொன்றும் அவன் கண் முன்னே படமாய் வந்து சென்றது.
“ஐயோ அவளை நினைச்சாலே எனக்கு ஜிவ்வுன்னு இருக்கே… கடவுளே நாளைக்கி அவ பக்கத்துல உக்காரணும் நினைச்சாலே அடடா..” குதூகலமாய் ஆடிக் கொண்டவன் நாளை போட வேண்டும் என்று வைத்து இருந்த சட்டையை அயன் செய்ய சென்றான். பாட்டு பாடிக் கொண்டே கீழே இறங்கி வந்தவனை வினோதமாய் பார்த்தாள் அபி.
“இவனுக்கு முத்திருச்சோ?? கோவமாக போனவன் பல்ல காட்டிட்டு வரான்.. சரி இல்லையே… அபி இன்வெஸ்டிகேசன் ஆரம்பிச்சிற வேண்டியது தான்”
அபியின் கழுகு பார்வையை கண்டுக் கொள்ளாமல் குஷி மோட்டில் சுத்தினான் ஶ்ரீ.
அடுத்த நாள் வழமை போல் டிரெய்னிங் முடித்து விட்டு ஶ்ரீ கேன்டீன் நோக்கி நடந்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அவர்களின் பேராசிரியர் ஒருவர் அவனை அழைத்தார்.
“ஶ்ரீகாந்த், உன் கிளாஸ்ல ருத்ரான்னு ஒரு ஸ்டூடண்ட் இருப்பான்.. அவன கூட்டிட்டு போய் ஷெஃபர்ட் ஆபிஸ்ல பார்மலிடி முடிச்சி விடு.. புது பையன் போல.. ஃபுல் நேம் மறந்துட்டேன்…” அவசர அவசரமாக கூறி அங்கு இருந்து சென்றார் பேராசிரியர்.
“இந்த ஆளு வேற அரைகுற.. roll நம்பர் கூட சொல்லல.. எவன் ருத்ராவா இருக்கும்?” யோசனை உடனே அவனின் வகுப்பை நோக்கி சென்றான்… இன்னும் வகுப்பு ஆரம்பிக்க நேரம் இருப்பதனால் பாதி பேர் வகுப்பில் இல்லை.. ஜூலியை பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள். அடுத்து அவன் கண்ணில் பட்ட காட்சி அவனுக்கு புசு புசுவென்று கோவத்தை குடுத்தது. அவனின் இதய கன்னி உடன் கார்த்திக் பேசிக் கொண்டு இருக்க நின்ற இடத்திலேயே எரிந்துக் கொண்டு இருந்தான். கோவத்தை மறைக்க முடியாமல் அதே கடுப்புடன் பேசினான்.
“ருத்ரா யாரு? இன்னும் ஷெஃபர்ட் ஃபோர்மலிடி முடிக்களை? உடனே என் கூட வா.. ஷெஃபர்ட் ஆபிஸ் போகனும்..” பசங்க பக்கம் திரும்பி ருத்ரா என்றவனை தேடினான் ஶ்ரீ. ஒரு நொடி அங்கு இருந்தவர்கள் அனைவரும் அமைதி ஆனர்கள்.
“நேரம் ஆகுது ருத்ரா இங்க இருக்கானா இல்லையா? இல்லனா அவன தனியா போக சொல்லிக்கோங்க” கடுப்பாக கூறியவன் யாரும் வராத எரிச்சலில் நின்றான். ஜூலிக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
கார்த்திக் அருகே அமர்ந்து இருந்தவள் எழுந்து ஶ்ரீ பக்கம் வந்தாள். ஶ்ரீக்கு இதயம் தாறுமாறாக துடித்தது. அவள் அருகே வர வர படபடப்பு அதிகம் ஆக அவளை பார்க்க தவிர்த்தபடியே தொண்டையை செருமினான்.
“டேய் எவனாவது பதில் சொல்லுங்க டா.. ருத்ரா எவன்? இருக்கானா இல்லையா?”
பதட்டத்தை மறைக்க கோவமாக கேட்ட ஶ்ரீ அனைவரையும் முறைத்தான்.
“நான் தான் ருத்ரா.. போலாமா?” அமைதியான குரலில் புதிதாய் வந்தவள் கூறிட ஸ்ரீக்கு அதிர்ச்சியில் காது கேட்காமல் போனது. அவளையே இமைக்காமல் பார்த்தான். அவன் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.
“என் பேரு ருத்ரா தாரா..” அமைதியான குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணத்தில் கூறினாள். ஶ்ரீ உறைந்து விட்டான்.
“டேய் ஶ்ரீகாந்த்” சத்தமாய் ஜூலி அழைக்கவும் தான் நடப்பிற்கே வந்தான். ருத்ராவை பார்த்தவன் சிரிப்பதா இல்லை எப்படி முகத்தை வைத்துக் கொள்வது என்று தெரியாமல் அமைதியாய் முன்னே நடந்தான். ருத்ரா அமைதியாக அவன் பின்னே சென்றாள்..
“ஐயோ இவ பேரு தான் ருத்ராவா அந்த ஆளு பையன்னு சொன்னானே.. விவஸ்த்தை கெட்டவன்.. அவனால என் ஆளு முன்ன அசிங்கமா போச்சு.. ச்சே… ஐயோ தனியா ஷெஃபர்ட் ஆபிஸ் வரைக்கும் போனுமே…” மனதில் புலம்பியவாரே நடந்தான் ஶ்ரீகாந்த்.
“என் பேர பாத்தா உனக்கு பையன் மாதிரி இருக்கா?” அவள் தானாக முன்வந்து பேசுவதை கண்டு லேசாய் அதிர்ந்தான் ஶ்ரீ.
“இல்ல சார் முழு பேரு சொல்லலை.. பையன்னு சொன்னாரு அதான் நான் கன்பூஸ் ஆகிட்டேன்.. சாரி எனக்கு உன் பேரு தெரியாது..” அமைதியான குரலில் கூறினான்.
“இட்ஸ் ஓகே.. எனக்கு ஷெஃபர்ட் பத்தி சொல்றியா? எனக்கு இது என்னனு தெரியாது” சகஜமாக பேசுபவளை பார்க்க அவன் இதழில் லேசான புன்னகை ஒட்டியது.
“பெருசா ஒன்னும் இல்ல சுத்தி இருக்குற கிராமப்புற இடத்துக்கு போய் அங்க இருக்குற ஸ்கூல், ஹாஸ்பிடல், அப்பறம் பொது மக்களுக்கு நம்ம ஹெல்ப் பண்ணனும்.. ஃபர்ஸ்ட் விசிட் போகுறப்போ என்ன பண்ணனும்னு சொல்லுவாங்க.. உனக்கு அப்போ புரியும்..” அதில் சம்மதமாய் தலை அசைத்தாள். ஶ்ரீக்கு கனவில் இருப்பது போல் இருந்தது. அவளிடம் இயல்பாய் பேசவும் முடியவில்லை, அவனின் உணர்வுகளை அவளிடம் காட்டாமலும் இருக்க முடியவில்லை. அவள் அருகே நடப்பதற்கு கூட அவனுக்கு நடுங்கியது. ஷெஃபர்ட் ஆபிஸில் வேலையை முடித்ததும் அவனின் NCC சார் அவனை அழைத்தார். ருத்ராவை வகுப்பு வரை அழைத்து சென்றான்.
“ஜூலி கூடவே இரு உனக்கு ஹெல்பா இருப்பா..” என்று கூறியவன் NCC சாரை பார்க்க விரைந்து ஓடினான். கார்த்திக் உடன் அவள் பேசுவதில் அவனுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் உள்ளுக்குள்ளே எங்கே அவளுக்கு அவன் மேல் விருப்பம் வந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு.
நேரம் கடக்க மதிய வேளையில் வகுப்பு முடிந்ததும் ஜூலி உடன் ஒன்றாய் படிக்க கிரவுண்ட் பக்கம் சென்றாள். ஜூலி பேசிக் கொண்டே வந்தவள் அவர்கள் வளமையாய் இருக்கும் இடத்தில் ஶ்ரீயும், ராஜேஷும் அவர்களுக்கு முன்பே வந்து அமர்ந்து இருப்பதை பார்த்து காரி துப்பினாள். ஶ்ரீ தனக்கு கூச்சமே இல்லை என்பது போல் துடைத்துக் கொண்டான்.
ஜூலியின் நண்பர்களும் வருவார்கள் என்று ருத்ரா எதிர் பார்க்கவில்லை. ஶ்ரீ அமர்ந்து இருப்பதை கண்டு லேசாய் அதிர்ந்தாலும் அதனை அவள் வெளி காட்டிக் கொள்ளவில்லை.
ஜூலியும் ருத்ராவும் ஒன்றாய் அமர்ந்தார்கள். ருத்ரா தீவிரமாய் கணக்கை பார்த்துக் கொண்டு இருக்க ஶ்ரீ சைகையால் ஜூலியை அழைத்தான்.
“இங்க உக்கார வேண்டியது தானே குட்டி சாத்தான்… நானும் பேசுவேன்ல”
“ஏன் இப்போ மட்டும் கிலோமீட்டர் தூரத்தில இருக்கியா? தையிரியம் இருந்தா நீ வந்து பேசு டா..”
அவள் நக்கல் பேச்சில் அவளை முறைத்தான். எப்படி பேச்சை தொடங்குவது என்று அவனுக்கு தடுமாற்றம்.
“இங்க ஆரம்பிக்கவே நாக்கு தல்லுதாம் இதுல பக்கத்துல வந்தா அப்படியே பக்கம் பக்கமா பேசி கிழிச்சிருவ” அவன் போனுக்கு மெசேஜ்யில் அனுப்பினாள் ஜூலி. ஶ்ரீ எப்படியாவது அவளிடம் பேசிட வேண்டும் என்று துடித்தான். முன்பு சென்ற போதும் அவளாக தான் பேசினால். அவள் கேட்ட கேள்விக்கு பதிலை தவிர வேறு எதையும் அவன் பேசவில்லை… கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடன் பேசி பழகிட துடித்தான். ஆனால் அவளின் சுடர் விழியில் பதட்டம் கொள்பவனுக்கு நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
“சாப்டியான்னு கேப்போமா? ச்சே இது பழசா இருக்கு… படிச்சிட்டியான்னு கேக்கவா? இல்ல அம்பி மாறி இருக்கும்.. இப்போ என்ன கேட்டு என்ன பேசுறது? சொல்லி குடுக்குற அளவு நமக்கு அறிவு இருந்தா அப்படி ஆச்சும் பேசலாம் ஆனா நமக்கே ஒன்னும் தெரியாது..” மனதில் புலம்பியவன் அவளை அழைக்க வாயெடுக்க வேறு ஒரு குரல் ருத்ராவை அழைத்தது.
“நீ இங்க இருக்கியா.. உன்ன தேடி எங்க எல்லாம் போறது?” கேட்டபடியே கார்த்திக் அவள் அருகே வந்து அமர்ந்தான். ஶ்ரீக்கு முகம் சுருங்கியது. அவள் பக்கம் அவன் செல்லலாம் என நினைக்கும் போதே கார்த்திக் குறுக்கே வந்து விட்டான். ஶ்ரீயின் முகம் வருத்தத்தில்
சுருங்குவது போல் ஜூலியின் முகமும் சுருங்கியது. அவளுள் வெளி காட்டிட முடியாத உணர்வுகள் எழுந்தன.
Appo avanga pesikirathu julykkum pidikkala engaiyo idikkuthe 🤔🤔🤔super daarlu waiting next epi ❤️❤️
Thanks darling 😍