Loading

ஆர்த்தி கடும் கோவத்துடன் தன் அறையில் அமர்ந்திருந்தாள். சமி மற்றும் ரிஷியை ஒன்றாகப் பார்த்ததிலிருந்து அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்பொழுது அவளது தோழி அனு அழைத்தாள்.

“சொல்லு அனு. இப்ப தான உன்னை பார்த்துட்டு வந்தேன். அதுக்குள்ள எதுக்கு கூப்பிட்ட??”

“என்னாச்சு ஆர்த்தி?? ஏன் ஒரு மாதிரி பேசுற??”

“ப்ச் என்ன சொல்ல??? எல்லாம் அந்த சம்யுக்தாவால வந்தது!!! இன்னைக்கு அவளும் ரிஷியும் வெளில போயிருக்காங்க!!! என்னலாம் பண்ணாங்களோ, எங்களாம் போனாங்களோ!!! அதுவும் என்னைப் பார்த்ததும் அவ ரிஷி கையைப் பிடிச்சுட்டு போறா!!! அவ கையைப் பிடிச்சா இவனுக்கு எங்க போச்சு புத்தி?? அவ கையைப் பிடிச்சதும் எடுத்து விட்டுருக்கனும்ல!!! ஆனால் அவன் ஓன்னுமே பண்ணலை. எனக்குக் கடுப்பா வருது.!!”

“அவள எதாவது பண்ணனும் ஆர்த்தி. நாளைக்கு நம்ம கிளாஸ் பொண்ணு ரேணு ஓட பர்த்டே ஃபன்க்ஷன் இருக்குல. அதுக்கு அவளை கூட்டிட்டு வா. நம்ம கிளாஸ் பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி பண்ணிடலாம். நாளைக்கு நாம பண்ண போற விஷயத்துல அவ உன் பக்கமே வரக் கூடாது சரியா.”

“என்னடி பண்ணுறது??”

“நீயும் யோசி நானும் யோசிக்கிறேன். எதாவது ஐடியா கண்டிப்பா வரும். நாளைக்குப் பார்க்கலாம் சரியா.”

“ஹிம் சரிடி. இப்ப தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. நாளைக்கு அவளையும் கூப்பிட்டு வரேன்.”

“ஹிம் சரிடி. நாளைக்குப் பார்க்கலாம்.”

ஆர்த்தி இப்பொழுது தான் நிம்மதியாக உணர்ந்தாள். கீழே சென்று டீ குடித்த பின் ரிஷி வீட்டிற்குச் சென்றாள். அங்கு சமி ரிஷி மற்றும் சஞ்சயின் நடுவில் அமர்ந்து கதை அளந்து கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பொழுது ஆர்த்திக்கு கோவம் வந்தது. ஆனால் அதை காமிக்காமல் உள்ளே சென்றாள்.

“வா வா ஆர்த்தி. இப்ப தான் உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தோம்.” என்று சஞ்சய் கூற, ஆர்த்தி சந்தேகத்துடன்,”என்னைப் பத்தி என்ன பேசிட்டு இருந்தீங்க??”

“அது ஒன்னுமில்லை. உனக்கும் அண்ணாக்கும் மேரேஜ் நடக்கப் போகுதுல அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.”

“ஓ ஓ சரி சரி. சம்யுக்தா உனக்குத் தெரியுமா எனக்கும் ரிஷிக்கும் நிச்சயம் முடிஞ்சது??”

“எஸ் தெரியும். ஜெய் சொன்னான்.”

“ஓ அப்போ சரி. என்னோட படிப்பு முடியத் தான் காத்துட்டு இருக்காங்க எல்லாம். இல்லாட்டி எப்பயோ மேரேஜ் நடந்திருக்கும். இல்லை ரிஷி??”

“ம் ஆமா ஆமா.” என்று ரிஷி தலையாட்டினான்.

“அச்சோ நான் வந்த வேலையை மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாருங்க. என் கிளாஸ் பொண்ணுக்கு நாளைக்கு பர்த்டே. அவ எல்லாரையும் இன்வைட் பண்ணிருக்கா. நாம நாளைக்குப் போகலாம் சரியா. சம்யுக்தா நீயும் வா.”

“சாரி ஆர்த்தி. நான் நாளைக்கு என் பிரண்ட்ஸோட வெளில போறேன். ஸோ என்னால வர முடியாது.” என்று சஞ்சய் கூற.

“என்ன சஞ்சய் இப்படி சொல்ற?? உன்னைத் தான் என் பிரண்ட்ஸ் ரொம்ப ஆர்வமா எதிர்பார்ப்பாங்க. நீ வரலைனா எப்படி??”

“ஆர்த்தி அதான் அவன் பிரண்ட்ஸோட வெளில போகனும்னு சொல்லிட்டான்ல அப்புறம் எதுக்கு புரிஞ்சுக்காம பேசுற??” ரிஷி சற்று கோவத்துடன் கேட்க, ஆர்த்தி அமைதியாக,”அச்சோ என்ன ரிஷி நான் அவனை வந்து தான் ஆகனும்னு சொல்லலையே. இப்ப எதுக்கு நீ கோவப்படுற??”

“சாரி ஆர்த்தி. நீ அவனை கம்பெல் பண்ண மாதிரி இருந்துச்சு அதான்.”

“சரி அத விடு. சஞ்சய் வரலனா விடுங்க. நீயும் சம்யுக்தாவும் கண்டிப்பா வரனும். ஒகே வா?? பீள்ஸ் முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க.” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல ரிஷி சரிப்புடன்,”நான வரேன். போதுமா.”

“தாங்க்ஸ் ரிஷி. ஸோ ஸ்வீட்.” என்று அவன் இரு கண்ணத்தையும் கிள்ளினாள். ரிஷி ஒரு வினாடி முகத்தைச் சுளித்தான். ஆனால் அதை சமியை தவிர்த்து யாரும் கவனிக்கவில்லை. இதிலே சமி புரிந்து கொண்டாள் ரிஷிக்கு ஆர்த்தி மேல் காதல் இல்லை என்று.

“சம்யுக்தா நீயும் கண்டிப்பா வரனும்.” என்று ஒரு மாதிரி குரலில் கூற சமிக்கு ஏதோ சரியில்லை போல் தோன்றியது. இருந்தும் ஆர்த்தி என்ன செய்யப் போகிறாள் என்பதை அறிய ஆவலாக இருந்ததால்,”நானும் வரேன்.” என்று கூறினாள். அதன் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

சமி தன் அறைக்கு வந்தவள் யோசனையுடன் அமர்ந்தாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்னையும் நந்துவையும் பார்த்துட்டு கோவமா போனா. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே வந்து நாளைக்கு பார்ட்டிக்கு கூப்பிடுறா!!! ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ!! இருக்கும் இல்லாட்டி இப்படி சிரிச்சு பேசிட்டு போவாளா?? சமி பீ கார்ஃபுள்.” என்று தனக்கு தானே கூறிவிட்டு தன் மொபைல் எடுத்து அவள் வீட்டிற்குப் பேசினாள்.

அடுத்த நாள் சாயந்தரம் ஆர்த்தி,ரிஷி மற்றும் சமி பார்ட்டிக்கு கிளம்பினார்கள். ஆர்த்தி அவளாகவே முன் வந்து சமியை முன் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு அவள் பின்னாடி அமர்ந்தாள். சமிக்கு இப்பொழுது கண்டிப்பாக ஆர்த்தி ஏதோ பிளான் செய்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று அசால்டாக இருந்தாள்.

பார்ட்டி புகழ் பெற்ற ஹோட்டலில் நடந்து. இந்தப் பார்ட்டிக்கு அந்த ஹோட்டலில் ஒரு பிரைவேட் ஹால் ஒன்று புக் செய்திருந்தார்கள். ஆர்த்தியை அழைத்துக் கொண்டு போக அவள் தோழி அணு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

ஆர்த்தியைப் பார்த்தவுடன் அணு சென்று அவளை அனைத்துக் கொண்டாள். பின் ரிஷியிடமும் சமியிடமும் மரியாதை நிமித்தமாக அவர்களைப் பார்த்து தலை அசைத்து வரவேற்றாள். பின் அனைவரையும் பார்ட்டி நடக்கும் ஹாலிற்க்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஆர்த்தி தன் தோழிகளைப் பார்த்தவுடன் அவர்களிடம் சென்றாள். ரிஷியும் சமியும் மட்டும் தான் இருந்தார்கள். சமி தன் பார்வையை சுழல விட்டாள். பின் ரிஷியைப் பார்த்து,”நந்து இங்க ட்ரிங்க்ஸ் பார்ட்டிலாம் இருக்கு போல!! காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான இவங்க!!”

“அதலாம் அப்படி தான் யுகி. இப்ப இதலாம் ஒரு விஷயமே இல்லை.”

“என்ன பாஸ் நீங்க ஒரு ஃப்ரொஃபஸர். நீங்களே இப்படிப் பேசலாமா??”

“நீ வேற!! அதலாம் காலேஜ்ல மட்டும் தான். இங்க அதலாம் பார்க்க மாட்டாங்க. அவங்களுக்கு அது கெட்டதுனு தெரியும் இருந்து குடிக்குறாங்க. நம்ம சொல்லத் தான் முடியும் அவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும். நீ இதலாம் கண்டுக்காத.”

“ம் சரி. அப்படி என்ன தான் இதுல இருக்குனு இவங்கலாம் இப்படி அடிக்ட் ஆகுறாங்க??”

“அது எதுக்கு நமக்கு??”

“இல்லை சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்.” என்று கூற ரிஷி அவளை முறைத்தான். சமி பேசும் முன் ஆர்த்தி அவள் தோழிகளுடன் அங்கு வந்தாள்.

“ஹலோ பிரண்ட்ஸ். இவ தான் நான் சொன்ன சம்யுக்தா. ரிஷி வீட்டுல தான் ஸ்டே பண்றா.” என்று ஆர்த்தி கூறிவிட்டு அவர்களுக்குச் சைகை செய்தாள். அவளின் சைகையிலே புரிந்தது இவள் தான் இவர்களின் தோழிக்கு இடைஞ்சலாக இருப்பது என்று. அவர்களும் புரிந்து கொண்டு தலை அசைத்தனர். பின் சிறிது நேரம் அவளுடனும் ரிஷியுடனும் பேசி விட்டு ஆர்த்தியின் தோழிகள் அங்கிருந்து சென்றனர்.

பின் ஆர்த்தியின் தோழி கேக் கட் செய்யப் போக அனைவரும் அவளருகில் சென்றனர். கேக் கட் செய்த பிறகு ஆர்த்தி ரிஷியையும் சமியையும் அழைத்துக் கொண்டு உணவு அருந்தச் சென்றாள். அப்பொழுது சமிக்கு ஃபோன் வரவும் அவள் அங்கிருந்து எழுந்து சென்றாள்.

“ரிஷி சமி போய் ரொம்ப நேரமாச்சு இன்னும் ஆளை காணோம்.”

“ஆமா நானும் அவளைத் தான் பார்த்துட்டு இருக்கேன். ஆனால் காணோம். சரி இரு நான் போய் பார்த்துட்டு வரேன்.”

“ரிஷி நானும் வரேன். வாங்கப் போய் பார்க்கலாம்.” என்று ஆர்த்தியும் அவனுடன் சென்றாள்.

அவர்கள் இருவரும் சிறிது தூரம் சென்றனர். அங்கு சமி மதுக் கோப்பை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்தவுடன் ரிஷிக்கு கடும் கோவம் வந்தது. வேகமாக அவளிடம் வந்து அவளின் கையிலிருந்த கிளாசை வாங்கி கீழேப் போட்டான். சத்தம் கேட்டு அனைவரும் இவர்களைத் தான் பார்த்தனர். பின் அவளின் கையைப் பற்றி,”சம்யுக்தா என்ன பண்ணிட்டு இருக்க?? கொஞ்சமாவது அறிவிருக்கா?? உன் வயசென்ன??” என்று கண்ட மேனிக்குத் திட்டிக் கொண்டிருந்தான். ஆனால் இதை எதுவும் கேட்கும் நிலைமையில் சமி இல்லை. ஆர்த்தி ரிஷியின் கையைப் பற்றி,”ரிஷி எல்லாரும் நம்மலை தான் பார்க்கிறாங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம்.” என்று கூறினாள். சூழ்நிலை உணர்ந்து கொண்டு அவனும் சமியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். பின் அவளை காரினுள் தள்ளி விட்டு வேகமாகக் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்