Loading

சமி தன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தாள்,”என்ன இப்படி தலை வலிக்குது!!! ஸ் ஆ!!! ஆண்டிகிட்ட ஒரு காஃபி வாங்கி குடிச்சா தான் சரி ஆகும் போல.” தனக்குள் பேசிக் கொண்டே காலைக் கடன்களை முடித்து விட்டு பல் விளக்கி விட்டு கீழே வந்தாள்.

ரிஷி டைனிங் டேபிளில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். சஞ்சய் மற்றும் பிரகாஷும் அங்கு தான் இருந்தனர். சமி கீழே வருவதைப் பார்த்த ரிஷி ஏளன சிரிப்புடன்,”என்ன மேடம் சீக்கிரம் எந்துருச்சுட்டீங்க?? நீங்க வர ரொம்ப நேரமாகும்னு நினைச்சேன். பரவால வந்துட்டீங்க!!.”

“என்ன நந்து ஒரு மாதிரி பேசுறீங்க??”

“நான் எந்த மாதிரி பேசலை. இப்ப தான் உன்னைப் பத்தி ஒன்னு ஒன்னா வெளில வருது. இன்னும் என்ன என்னலாம் பார்க்கணும்னு இருக்கோ தெரியலை.”

“நந்து கொஞ்சம் புரியற மாதிரி பேச முடியுமா?? ஏற்கனவே தலை வலிக்குதுனு இருக்கேன். நீங்க இப்படி பேசி இன்னும் ஜாஸ்தி ஆக்காதீங்க.”

“ஆமா ஆமா தலை வலிக்கத் தான் செய்யும். நீ பண்ண காரியத்துல தலை வலிக்காம என்ன செய்யும்.”

“நந்து ஸாட்ப் இட். முதல்ல என்ன நடந்துச்சுனு சொல்லுங்க. அதுக்கு அப்புறம் உங்க நக்கல் பேச்ச வச்சுக்கோங்க.”

“முதல்ல என்னை நந்துனு கூப்பிடுறது நிறுத்து. உனக்கு எந்த தகுதியும் இல்ல என்னை அப்படிக் கூப்பிட.” ரிஷி கடுமையாகக் கூற சமிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

இவர்கள் இருவரையும் மாறி மாறி சஞ்சய் மற்றும் பிரகாஷ் பார்த்துக் கொண்டிருந்தனர். பிரகாஷ் ரிஷியிடம்,”ரிஷி என்ன ஆச்சு?? எதுக்கு இப்படி பிஹேவ் பண்ற நீ??”

“அப்பா உங்களுக்குத் தெரியாது. நீங்க நேத்து சீக்கிரம் தூங்க பேயிட்டீங்க. இப்ப ஆர்த்தி வருவா. அவளே அந்த கருமத்தை சொல்லுவா. என்னால சொல்ல முடியாது.” அவன் கூறி முடித்த நேரம் ஆர்த்தியும் கங்கா தேவி பாட்டியும் உள்ளே நுழைந்தார்கள்.

“ரிஷி எதுக்கு ஆர்த்தியை காலைலயே வரச் சொன்ன??”

“பாட்டி நேத்து பார்ட்டில நடந்த அந்த கருமத்தப் பத்தி சொல்ல தான் கூப்பிட்டேன்.”

“ரிஷி அத சொல்லியே ஆகனுமா??” என்று ஆர்த்தி கேட்க.

“கண்டிப்பா சொல்லித் தான் ஆகணும். அப்பத் தான இவளைப் பத்தி எல்லாருக்கும் தெரியும்.”

“அண்ணா என்ன தான் ஆச்சு?? நீ ஏன் சம்யுகிட்ட இப்படி பிஹேவ் பண்ற?? அந்த அளவுக்கு என்னாச்சு?? யாரவது சொல்லுங்க!!” பொறுமை இழந்து சஞ்சய் கத்த, அவன் சத்தத்தைக் கேட்டு நளினியும் வெளியில் வந்தார்.

“என்னாச்சு சஞ்சய் எதுக்கு இப்ப கத்துன??”

“அத அண்ணாகிட்ட கேளுங்க.”

“ஆர்த்தி நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா??”

“நானே சொல்றேன் ரிஷி. நேத்து நாங்க பார்ட்டிக்கு போனோம்ல அங்க சமி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு ஒரே ஆட்டம். எங்களுக்கு அவமானமா போச்சு. என் பிரண்ட்ஸ்லாம் ஒரு மாதிரி என்னை பார்த்தாங்க.” இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“நோ!!!” என்று சமி கத்த, ரிஷி ஏளனமாக அவளைப் பார்த்து,”என்ன உன்னைப் பத்தி தெரிஞ்சு போச்சுனு அதிர்ச்சியா??”

“அண்ணா சம்யு அப்படிலாம் பண்ணிருக்க மாட்ட. நீங்க எதோ தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கனு நினைக்கிறேன்.”

“டேய் என்னடா அவகிட்ட கேள்வி கேட்காம என்னை சொல்லிட்டு இருக்க?? எனக்கு அவளுக்கும் என்ன முன் பகையா?? அவள் நேத்து அடிச்ச கூத்த தான் சொல்லிட்டு இருக்கேன்.” இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கக் கங்கா தேவி பாட்டி வேகமாகப் போய் சமியின் கண்ணத்தில் அடித்துவிட்டார். இதை எதிர்பார்க்காத எல்லாரும் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். ரிஷி கூட எதிர்பார்க்கவில்லை. சமி ஓர் அடி நகர்ந்து சென்று கீழே விழப் போக சஞ்சய் வந்து தாங்கிக் கொண்டான்.

“பாட்டி!!!” என்ற சத்தம் வாசல் பக்கமிருந்த வர எல்லோரும் அங்குப் பார்த்தனர். அங்கு ஆகாஷ் நின்று கொண்டிருந்தான். வேகமாக வந்து பாட்டியைப் பார்த்து,”எவ்ளோ தைரியம் இருந்தா சமிய நீங்க அடிச்சுருப்பீங்க?? இது தான் நீங்க பார்த்துக்குற லட்சணமா??”

“லட்சணத்தைப் பத்தி நீ பேசாத. சீ சீ அடிச்ச தோட விட்டேன் சந்தோஷ பட்டுக்கோ. இதுவே ஆர்த்தி இப்படி பண்ணிருந்தா அவளை சாகடிச்சு இருப்பேன்.”

“போதும் நிறுத்துங்க. உங்ககிட்ட பேச எனக்கு எதுவுமில்லை. (பிரகாஷை பார்த்து) ஸார் உங்களை நம்பி தான மாமா இங்க சமியை விட்டுட்டு போனாங்க!!! நீங்க எல்லாரும் இவங்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்குறீங்களா??”

“இங்க என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாத ஆகாஷ்.” ரிஷி கோவத்துடன் கூறினான்.

“இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். சமியை அடிக்க இவங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது?? நானும் இவங்க பேத்தி ஆர்த்தியை அடிக்கட்டுமா??”

“அடிப்ப அடிப்ப!!! என் பேத்தி என்ன இவளை மாதிரி குடிச்சுட்டு கூத்து அடிச்சாலா??” இதைக் கேட்ட ஆகாஷ் பயங்கர அதிர்ச்சி அடைந்தான்.

“என்ன சொன்னீங்க?? சமி குடிச்சாலா?? என்ன கதை இது??”

“கதை ஒன்னுமில்லை ஆகாஷ். நேத்து நாங்க பார்ட்டிக்கு போனோம். அங்க இவ ஆல்கஹால் குடிச்சா. இத நாங்க பார்த்துட்டு இவளை அங்கிருந்து கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.!!!”

“கண்டிப்பா இதை நான் நம்ப மாட்டேன். சமி அப்படிலாம் பண்ண மாட்டா!!”

“அப்புறம் நேத்து நடந்ததுக்கு பேரு என்னபா?? நல்ல குடும்பத்துல பிறந்த பொண்ணு செய்ற காரியமா இது??” என்று கங்கா தேவி கூற, ஆகாஷ் ஏதோ பேசும் முன் சமி,”போதும் நிறுத்துங்க. ஆகாஷ் இரு நான் என்னோட திங்கஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன். இங்கிருந்து போகலாம்.”

“சமி இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் இங்க இருக்க வேண்டாம். நீ தப்பு பண்ணிட்டு இங்கிருந்து போறதா தான் நினைப்பாங்க. உன் மேல எந்த தப்பும் இல்லனு இவங்களுக்கு ப்ரூவ் பண்ணிட்டு இங்கிருந்து போய்டலாம்.” ஆகாஷ் கூற. அதுவும் சரி என்று தலை ஆட்டினால்.

“என்ன இங்க டிராமா போட்டுட்டு இருக்கீங்களா??” பாட்டி நக்கலாகக் கேட்க!!

“உங்ககிட்ட எனக்குப் பேச எதுவுமில்லை. நான் சமி எதுவும் செய்யலைனு ப்ரூவ் பண்ணிட்டு அப்புறம் இருக்கு உங்களுக்கு.” கோவமாகக் கூறினான் ஆகாஷ்.

“பாட்டி கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு சமி அப்படி பண்ணிருக்க சான்ஸே இல்லை.”

“அப்ப நாங்க சொல்றது பொய்யா?? உன் அண்ணன் சொன்னதை விட இவ மேல நம்பிக்கை உனக்கு அப்படிதான??” என்று ஆர்த்தி நக்கலாகக் கேட்க, ரிஷி சஞ்சயை முறைத்துப் பார்த்தான்.

“அப்படி தான் வச்சுக்கோ. நான் சமியை நம்புறேன்.” என்று சஞ்சய் கூற ரிஷி உடைந்து போனான். அதற்குள் ஆகாஷ் சமியிடம் அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.

ஆகாஷ் ரிஷியிடம் திரும்பி,”சமி எந்த தப்பும் செய்யலை. அங்க இருக்க வெய்டர் தான் ஏதோ பண்ணிருக்கான்.”

“என்னை என்ன லூசுன்னு நினைச்சுட்டீங்களா?? ஒரு வாட்டி குடிச்சுருந்தா பரவால. ஆனால் நான் பார்த்த போதே 3 கிளாஸ் உள்ள போயிடுச்சு. அவகிட்ட போகும் போது கைல ஒரு கிளாஸ் வச்சிருந்தா. இதுக்கு என்ன சொல்ற??”

“சோ நீ சமிய நம்பலை. சரி என் கூட வா. போய் அந்த வெய்டர்கிட்ட கேட்போம். என் சமி தப்பானவ இல்லனு ப்ரூவ் பண்ணிட்டு இருக்கு கச்சேரி இங்க.” என்று கங்கா தேவி பாட்டியைப் பார்த்து முறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

“ஆகாஷ் நானும் வரேன்.” என்று சஞ்சய் கூற நால்வரும் ஹோட்டலுக்கு சென்றனர்.

ஹோட்டலில் இறங்கி உள்ளே சென்றனர். அங்கு ரிசப்ஷனில் இருந்த ஆளிடம் வந்த ஆகாஷ்,”ஹலோ சார் உங்க மேனேஜரை பார்க்கனும்.”

“சார் நீங்க யாரு?? எதுக்கு மேனேஜரை பார்க்கனும்?? அப்பாயின்மென்ட் இருக்கா??”

“இல்ல மேடம். ஆனால் கண்டிப்பா பார்க்கனும்.”

“சார் அப்படிலாம் நீங்க நினைச்ச டைம் பார்க்க முடியாது.”

“ஓ அப்படியா. இப்ப உங்க மேனேஜரே எப்படி எங்களைத் தேடிக்கிட்டு வராருனு பாருங்க.” என்று சொல்லியபடி ஆகாஷ் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அந்த ஹோட்டல் அவன் நண்பனின் அண்ணனின் மாமனாருடையது தான். அதனால் அவன் நேரே அவன் நண்பனின் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் கூறியதை போலே அந்த ஹோட்டலின் மேனேஜரே அங்கு வந்தார்.

“சார் இப்ப தான் எங்க சார் ஃபோன் பண்ணாரு. நீங்க எம்.டி. க்கு தெரிஞ்சவங்கனு எங்களுக்குத் தெரியாது அதான் சார்.”

“சரி சார். எங்களுக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்.”

“எம்.டி. சொன்னாங்க சார். ஆனால் நைட் ஷிஃப்ட் வேலை பார்த்தவங்க இன்னேரம் கிளம்பிருப்பாங்க சார்.”

“ஓ அப்படியா. சரி முதல்ல சிசிடிவில பார்க்கலாம். அதுல கூட எதாவது தெரியும் சார்.”

“சரி வாங்க சார். நாம் செக்யூரிட்டி ரூம்கு போகலாம்.” என்று கூறி அனைவரையும் அழைத்துச் சென்றார்.

அங்கு நேத்து நடந்த பார்ட்டி ஹால் சிசிடிவி பதிவைப் பார்த்தார்கள். ஆனால் அதில் எதுவும் தெரியவில்லை.”

“இப்ப என்ன சொல்ற ஆகாஷ்??”

“ரிஷி எதுக்கு இவ்ளோ அவசரம்?? வெயிட் பண்ணு சரியா.”

“சார் எனக்கு அந்த வெயிடரோட அட்ரெஸ் வேண்டும்.”

“சார் ஒரு நிமிஷம். நான் லெட்ஜர் பார்த்து சொல்றேன்.” என்று அங்கிருந்து சென்றார். அனைவரும் ரிசப்ஷனில் காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த ஒரு வெயிட்டர் சமியை அடையாளம் கண்டு அவளிடம் வந்தான்.

“மேடம் நேத்து நீங்க இங்க நடந்த பார்ட்டிக்கு வந்தீங்கள?”

“ஆமாம். நீங்க என்னை பார்த்தீங்களா??”

“ஆமாம் மேடம். நான் பார்த்தேன். அது மட்டுமில்லாம இத எப்படி சொல்றதுனே தெரியலை மேடம்.”

“என்ன அண்ணா?? எதனாலும் சொல்லுங்க.”

“மேடம் நேத்து நானும் அந்த ஹால்ல இருந்தேன் மேடம். அங்கு இருந்தவங்க என்கிட்ட அவங்க கேமிரா குடுத்து வீடியோ எடுக்க சொன்னாங்க மேடம். நானும் எடுத்தேன் மேடம். அப்போ!!” என்று நிப்பாட்ட.

“சொல்லுங்க அண்ணா என்னாச்சு??” என்று சமி கேட்க.

“அது இரண்டு பொண்ணுங்க உங்களுக்கு சரக்கு ஊத்தி தரணும்னு அங்கிருந்த இன்னொரு வெயிட்டர்கிட்ட காசு குடுத்தாங்க மேடம்.” இதைக் கேட்டதும் எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“இதை ஏன் நீங்க இவங்ககிட்ட நேத்தே சொல்லல??” என்று ரிஷி கேட்க.

“சார் அதை நான் பார்க்கலை. நான் சும்மா இருக்கிறத பார்த்து திட்டுவாங்கனு கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு கொஞ்ச நேரம் வீடியோ எடுத்தேன். நான் வேலை செய்யும் போது இன்னொருத்தன் கிட்ட சொல்லி தான் எடுக்க சொன்னேன். அப்போ தான் அவன் இரண்டு பொண்ணுங்க உங்களுக்கு சரக்கு ஊத்தி தரணும்னு சொன்னத பார்த்திருக்கான். அது மட்டுமில்லை அதை அவன் ஃபோன்லையும் படம் பிடிச்சு வச்சுருக்கான். எனக்கே இப்ப காலைல தான் தெரியும். நீங்க எல்லாம் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன். எனக்கும் 5 வயசுல பொண்ணு இருக்கா. அதான் மனசு கேட்காம உங்ககிட்ட சொல்ல வந்தேன்.”

“ரொம்ப நன்றி அண்ணா. நீங்க எங்ககிட்ட சொன்னதே பெரிய விஷயம். உங்ககிட்ட அந்த வீடியோ இருக்கா??”

“என்கிட்ட இல்ல சார். ஆனால் அவன்கிட்ட இருக்கு. இருங்க அவனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்றேன்.”என்று அங்கிருந்த நகர்ந்தார். அவர் சென்றவுடன் ஆகாஷ் ரிஷியைப் பார்த்து,”இப்ப என்ன சொல்ற ரிஷி??? சமி மேல எந்த தப்பும் இல்லை. அவர் வீடியோ காமிகட்டும் அந்த இரண்டு பொண்ணுங்களுக்கும் இருக்கு.” என்று ஆகாஷ் கூற, ரிஷிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. குற்றவுணர்விலிருந்தான்.

சிறிது நேரத்திலே அந்த வெயிட்டர் இன்னொருவருடன் அங்கு வந்தார்,”சார் உங்க நல்ல நேரம் இவன் பக்கத்துல தான் இருந்தான். அதான் கூப்பிட்டவுடனே வந்துட்டான். இந்தாங்க சார் அந்த வீடியோ.” என அவர் மொபைலை தர. அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அதிலிருந்தது ஆர்த்தியும் அவள் தோழி அனுவும் தான். ரிஷி பயங்கர கோபத்தில் இருந்தான். மண்ணிப்புடன் சமியைப் பார்க்க அவள் அவனைப் பார்க்காமலே வெளியில் சென்றுவிட்டாள். சஞ்சயும் ரிஷியை முறைத்துவிட்டு சமியின் பின்னால் சென்றுவிட்டான்.

இங்கு ஆகாஷ் அந்த வீடியோவை அவனது மொபைலிற்கு அனுப்பிவிட்டு அவரது மொபைலில் இருப்பதை டெலிட் செய்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்