Loading

சமி சாப்பிட்டு விட்டு அனைவரிடமும் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள். அந்த மர்ம நபர் உள்ளே சமி வருவதற்காக ரெடியாக நின்று கொண்டிருந்தார். சமி உள்ளே நுழைந்து லைட் ஸ்விட்ச் போடுவதற்குக் கையைக் கொண்டு போகும் போது அந்த நபர் சமியின் வாயை மூடப் போக, வினாடியில் சுதாரித்த சமி அந்த நபரின் பிடியில் சிக்காமல் வேகமாக வெளியில் ஓடி கதவைச் சாத்தி விட்டு,”நந்து, ஜெய் சீக்கிரம் வாங்க.” என்று கத்த இருவரும் வேகமாக வந்தனர். ப்ரகாஷும், நளினியும் கூட வந்தனர்.

“யுகி என்ன ஆச்சு?? எதுக்கு கூப்பிட்ட?”

“சமி என்ன மா ஆச்சு??” நளினி கேட்டார்.

“ஆண்டி, நந்து யாரோ உள்ள இருக்காங்க. நான் அவன தள்ளிவிட்டுட்டு வந்துட்டேன்.”

“என்ன சொல்ற?? கனவு கண்டியா??”

“ஏய் லூஸூ ஜெய் நானே இப்ப தான்டா உள்ள வந்தேன்.”

“ரிஷி, சஞ்சய் வாயடிக்காம மொத உள்ள போய் பாருங்க.” என்று நளினி கூற, இருவரும் மெதுவாகக் கதவை திறந்து உள்ளே சென்றனர். உள்ளே இருட்டாக இருக்க லைட்டை போட்டார்கள். அங்கே ஒருவரும் இல்லை. இருவரும் சமியைப் பார்த்து முறைத்தனர்.

“ஏய் நான் தான் சொன்னேன்ல நீ கனவு தான் கண்டிருப்பனு. இப்ப அது சரியாப் போச்சு. உள்ள ஒருத்தரும் இல்ல.”

“நான் நிஜமா தான் சொல்றேன். யாரோ உள்ள இருக்காங்க. நீங்க நல்லா பாருங்க.”

“அதான் அவ இவ்ளோ சொல்றாள நல்லா பாருங்க. அந்த ஷெல்ஃப்க்கு சைட்ல, பாத்ரூம்குள்ள பாருங்க.” நளினி சொல்லச் சரி என்று சஞ்சய் பாத்ரூம் நோக்கியும், ரிஷி ஷெல்ஃப் நோக்கியும் சென்றனர். சஞ்சய் பாத்ரூமில் பார்த்து விட்டு,”இங்க யாரும் இல்லை. அண்ணா அங்க??”

“இரு டா பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு மெதுவாகச் சென்றான். ரிஷி அங்கு யாரோ நிற்பதைப் பார்த்து விட்டு சஞ்சயிடம் சமிக்ஞை செய்தான். சஞ்சயும் புரிந்து கொண்டு தயாராக இருந்தான். ரிஷி அங்கு இருக்கும் பெட் ஷீட் எடுத்து மெதுவாகச் சென்று அந்த நபரின் மேல் போட்டுப் பிடித்து விட்டான். சஞ்சயும் சேர்ந்து அவனைப் பிடித்து வைத்தான்.

“அம்மா சீக்கிரம் போய் கையறு எடுத்துட்டு வாங்க மா.” சஞ்சய் சொல்ல வேகமாக நளினி போய் கையறு எடுத்து வந்து தந்தார். சஞ்சயும் ரிஷியும் அந்த நபரை உட்கார வைத்து கை மற்றும் காலை(leg) கட்டினர். சமி சஞ்சயைப் பார்த்து,”இப்ப என்னடா சொல்ற??? நல்ல வேளை இவங்க யாரும் உன்ன நம்பல இல்லாட்டி என்ன ஆயிருக்கும்??”

“சரி சரி நீ ரொம்ப பெர்ஃபாமன்ஸ் பண்ணி எனக்குத் திட்டு வாங்க வைக்க ட்ரை பண்ணாத தாயே உனக்கு புண்ணியமா போகும்.”

“அது அந்த பயம் இருக்கட்டும்.” சமி சிரித்துக் கொண்டே கூறினாள்.

“ரிஷி வேகமா போலீஸ்கு கால் பண்ணுடா.” நளினி சொல்ல, ப்ரகாஷ் வேகமாக ரிஷியைத் தடுத்து,”மொதல்ல அது யாருன்னு பாருங்க அப்புறம் போலீஸ்கு ஃபோன் பண்ணிக்கலாம்.” என்று கூற, ரிஷி பெட் ஷீட்டை எடுத்தான். அந்த நபரின் முகத்தைப் பார்த்தவுடன் சமி ஷாக்கானாள். வேகமாக அந்த நபரிடம் போய் அவன் முடியைப் பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டினாள். இவளின் செயலில் அனைவரும் அதிர்ந்தனர். ரிஷி அவளிடம் சென்று,”ஏய் யுகி விடு அவன. நாம போலீஸ்கிட்ட ஹான்ட்ஓவர் பண்ணிரலாம்.”

“அதுலாம் ஒன்னும் வேண்டாம். இந்த ஜந்து என் அத்தைப் பையன் தான். அவுத்து விட்டுருங்க.” ப்ரகாஷ் தவிர்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“என்ன சொல்ற மா?? இந்த பையன் உன் அத்தை பையனா?”

“ஆமா ஆண்டி. நான் இந்த மேடத்தோட ஓட அத்தை பையன் தான். என் ஃபிரண்ட்ஸோட டூர் போயிருந்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நான் வந்தேன். இந்த மேடம்கு ஸர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு கோயம்புத்தூர் கூட போகாம இங்க வந்தேன். ஆனால் அது எனக்கே ஆப்பாகிடுச்சு.”

“என்ன பா இப்படிக் கொஞ்ச நேரத்துல எல்லாரையும் பயமுறுத்திட்டியே??”

“ஆண்டி அதுனால தான் நான் மாமாட்ட சொல்லி அங்கிள் கிட்ட சொல்ல சொன்னேனே!!!”

“அப்பா உங்களுக்குத் தெரியுமா?? அதுனால தான் ஃபர்ஸ்ட் முகத்த பாத்துடலாம்னு சொன்னீங்களா??”

“ஆமா ரிஷி. வாசு என்கிட்ட சொன்னாரு. இருந்தாலும் இந்த பையன் இப்படி வருவானு நினைக்கல. ஒரு டவுட்ல தான் சொன்னேன்.”

“எனக்கு பசிக்குது. மொதல்ல சாப்டுட்டு அப்புறம் விசாரணை வச்சுக்கோங்க.”

“அச்சோ தம்பி கீழ வா பா. நான் உனக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சமி கூட்டிட்டு வா மா.” என்று கூறிவிட்டு நளினியும் ப்ரகாஷும் கீழே சென்றனர்.

“என்ன மேடம் வந்ததுல இருந்து ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசல??”

“உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?? இப்படியா வருவ?? யாரோ திருடனு நினைச்சு உன்ன அடிச்சிருந்தா என்ன பண்றது?? அதுலாம் யோசிக்க மாட்டியா?? இதுக்கு தான் அத்தை உன்ன திட்டுறாங்க. இரு உன்ன நான் யாமினிகிட்ட மாட்டிவிடுறேன். உன் லட்சணம் அப்ப தான் தெரியும்.”

“ஏய் அத்தைகிட்ட சொல்லிடாத சமு. அப்புறம் உன் மாமா என் தோல உரிச்சுருவாரு.”

“அந்த பயம் இருக்கட்டும்.”

“சரி அதலாம் விடு. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்.”

“நானும் தான்.” என்று சமி கூற, இத்தனை களேபரத்துக்குக் காரணமான ஆகாஷ் சமியை தோளோடு சேர்த்து அணைத்தான்.” இதை ரிஷி ஒரு வித ஆர்வத்துடனும், சஞ்சய் பொறாமையிலும் பார்த்தனர்.

“சரி வாங்க கீழ போகலாம்.” என்று சஞ்சய் கூறிவிட்டுச் சென்று விட்டான். அனைவரும் கீழே சென்றனர். ஆகாஷ் சாப்பிட்டவுடன் அவனை ரிஷியின் அறையில் தங்கிக்கொள்ளச் சொன்னார்கள். ஆகாஷும் அசதியாக இருந்ததால் படுக்கச் சென்றான்.

அடுத்த நாள் காலை, அனைவரும் தயாராகி கல்லூரி செல்ல வெளியே வந்தார்கள். ஆகாஷ் சமியிடம்,”சமு நான் 10 மணி ஃப்ளைட்கு(flight) வீட்டுக்குப் போயிட்டு ஒரு இரண்டு நாள்ல வந்துட்றேன். சரியா.”

“சரி ஆஷ், போய் அத்தை, மாமா அப்புறம் உன் அன்பு தங்கச்சி எல்லாரையும் பார்த்துட்டு வா.”

“இரு ப்ரீத்தியிடம் சொல்றேன்.”

“நீ யார்ட வேணாலும் சொல்லிக்கோ, ஐ டோண்ட் கேர்.”

“சரி சரி நீ கிளம்பு அப்புறம் உனக்கு லேட் ஆகிட போகுது.”

“ஓகே. நீ வீட்டுக்கு போய்டு எனக்கு கால் பண்ணு. அப்புறம் நான் சொன்னதுலாம் ஞாபகம் வச்சுக்கோ. சஞ்சய் என் பக்கம் தான் அதுல சந்தேகம் வேண்டாம். அதே மாதிரி நந்து ஆர்த்தியைப் பிடிச்சுலாம் அவளை கல்யாணச் செய்துக்க ஒத்துக்கல. ஏதோ வீட்டில சொன்னதால ஒத்துக்கிட்டான். அதுனால நமக்குப் பெரிய வேலைலாம் இருக்காது. நந்துக் கிட்ட இருந்து ஈஸியா ஆர்த்தியைப் பிரிச்சிரலாம்.”

“அதுலாம் நீ எதுவும் கவலைப்படாத நான் ஒரு வாரத்துல வந்துடுவேன். அப்புறம் நம்ம வேலைய ஸ்டார்ட் பண்ணலாம் சரியா.”

“ம் சரி. இது யாருக்கும் தெரிய வேண்டாம்.”

“ம் சரி. பை.” என்று கூறிவிட்டு ஆகாஷ் கேபில் ஏர்போர்ட் நோக்கிச் சென்றான். சமி ஆகாஷிடம் பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் ஆர்த்தி அவனைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாள். சமி வந்தவுடன் ஆர்த்தி அவளைப் பார்த்துச் சிரித்தாள். சமிக்கு அவள் சிரிப்பு சரியாகப் படவில்லை. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பதிலுக்கு அவளும் சிரித்துவிட்டு மனசுக்குள்,”சரியில்லையே, ஏதோ இருக்கு சமி. பி கேர்ஃபுல்.” என்று நினைத்துக் கொண்டாள். பின் எல்லோரும் காலேஜிற்குச் சென்றனர்.

ஒரு வாரம் சட்டென சென்றது. இந்த ஒரு வாரத்தில் ஆர்த்தி சமியிடம் நன்றாகவே பழகினாள். இதைப் பார்த்த ரிஷி மற்றும் சஞ்சய் மகிழ்ந்தார்கள். சமி, ஆகாஷிற்கு ஃபோன் செய்து எல்லாவற்றையும் கூறினாள். தனக்கு ஆர்த்தி மேல் சந்தேகம் இருப்பதையும் கூறினாள். ஆகாஷ் தான் வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறினான். சமியும் ஆகாஷ் வரும் வரை எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்