Loading

ஒரு மாதம் தங்கு தடையின்றி சென்றது அனைவருக்கும். இந்த ஒரு மாதத்தில் சமி மற்றும் சஞ்சய் நல்ல நண்பர்களாயினர். ரிஷி அவ்வப்போது சமியிடம் பேசுவான்.

சம்யுக்தா தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் அறையிலிருந்து கீழே வந்தாள். சமி தன் மாமா ராம்குமாரிடமும், தன் அத்தை லக்ஷ்மியிடமும் சொல்லிவிட்டு தன் அம்மா மற்றும் அப்பாவுடன் சென்னை கிளம்பினாள்.

ரிஷியின் வீட்டிற்கு வந்தவுடன் சமி மர்ம புன்னகையுடன் ஆர்த்தியின் வீட்டைப் பார்த்து விட்டு உள்ளே சென்றாள். நளினி அவர்களை வரவேற்று ஸ்நாக்ஸ் தந்தார். பின் சிறிது நேரம் பேசி விட்டு சமியிடம் கவனுத்தடன் இருக்கச் சொல்லி விட்டு வாசு மற்றும் யாமினி கோயம்புத்தூர் சென்றனர்.

அடுத்த நாள் காலை ரிஷி, சஞ்சய், சம்யுக்தா காலை உணவைச் சாப்பிட அமர்ந்தனர்.

“நேத்து நைட் நல்லா தூங்கினியா சம்யுக்தா?”

“ஹிம் நல்லா தூங்கினேன் அங்கிள்.”

“சரி மா. நீ சஞ்சய், ரிஷி கூடவே காலேஜ் போய்டு மா.”

“சரி அங்கிள். நேத்தே சஞ்சய் என்ட சொன்னான்.”

“ஓ சரி மா.” அனைவரும் சாப்பிட்ட உடன் எழுந்து சென்றனர்.

ரிஷி சென்று காரை எடுத்து வந்தான். சம்யுக்தா முன் பக்கமாகச் சென்று ரிஷியின் அருகில் அமர்ந்தாள். சஞ்சய் பின்னால் அமர்ந்தான். அதே நேரம் ஆர்த்தி வந்தாள். முன் பக்கம் அமர்ந்திருந்த சமியை பார்த்து முறைத்துக் கொண்டே நின்றாள்.

“ஆர்த்தி நேரமாச்சு உள்ள வா.”

“ரிஷி நான் தான எப்பவும் முன்னாடி உட்காருவேன். இப்ப இவ உட்கார்ந்திருக்கா??”

“ஆர்த்தி ஸிஸ் எனக்குப் பின்னாடி உட்கார்ந்தால் ஒரு மாதிரி இருக்கும். அதான் நான் முன்னாடி உட்கார்ந்து இருக்கேன்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ரிஷி பக்கத்தில் தான் உட்காருவேன்.”

“ஆர்த்தி சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத. வந்து உள்ள ஏறு.” ரிஷி சற்று கடுமையாகக் கூற ஆர்த்தி கப் சிப் என பின்னால் அமர்ந்தாள். சம்யுக்தா ஆர்த்தியைப் பார்த்து நக்கலாகச் சிரித்தாள். இதைப் பார்த்த ஆர்த்திக்குக் கடுப்பாக இருந்தது. சமியை ஏதாவது செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால் ரிஷி முன் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாதென அமைதியாக இருந்தாள்.

கல்லூரி வந்ததும் அனைவரும் இறங்கினர். சஞ்சய் சமியிடம்,”சமு இன்னைக்கு தான் உனக்கு முதல் நாள். கிளாஸ்லாம் நடக்காது. ஜஸ்ட் இன்ட்ரொடக்ஷன் ஸெஸன் தான். உனக்குப் போர் அடித்தால் எனக்குக் கால் பண்ணு சரியா. நான் வரேன்.”

“ஹிம் சரி ஜெய். ரேகிங்லாம் இருக்காதுல?”

“ஹேய் யுகி அப்படி யாராவது உன்ன ரேகிங் பண்ணா சொல்லு. நான் பார்த்துக்கிறேன்.” ரிஷி சொல்ல சமி சிரித்த முகத்துடன் பவ்வியமாக, “சரிங்க சார்.” என்றாள். ரிஷியும் சிரித்துக் கொண்டே அவள் தலையில் கொட்டிவிட்டு,”வாலு” என்று கூறிவிட்டுச் சென்று விட்டான். இதை அனைத்தையும் பார்த்த ஆர்த்திக்கு சமி மேல் பயங்கர கோவம் வந்தது. வேகமாக தன் கிளாஸுக்குச் சென்றாள்.

இதையெல்லாம் பார்த்த சஞ்சய்க்கு ஏனோ ஆர்த்தியின் மேல் சிறு வருத்தம் உண்டானது. சமியிடம் சென்று,”சமு நீ இதெல்லாம் பெரிசா எடுத்துகாத. ஆர்த்தி, ரிஷியைப் பயங்கரமா லவ் பண்றா. அதான் ஒரு பொஸஸிவ்ல இப்படி பண்றா.”

“என்ன சொல்ற நீ?? ஆர்த்தி நந்துவை லவ் பண்றாலா? ரிஷிக்குத் தெரியுமா?”

“ஏய் உனக்கு தெரியாதுல ரிஷிக்கும் ஆர்த்திக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சுடிச்சு.”

“அப்படியா?? நந்து ஏன் என்ட சொல்லல? இன்னைக்கு இருக்கு நந்துக்கு.”

“ஏய் என் அண்ணா பாவம். அவனை என்ன பண்ண போற?”

“அதுவா நந்துவ அவாய்டு பண்ற மாதிரி ஆக்ட் பண்ண போறேன். நீ நந்துகிட்ட சொல்லிடாத சரியா.”

“சரி சரி என்னமோ பண்ணு. இப்ப வா உன்ன நான் உன் கிளாஸ்ல விட்டுட்டு போறேன்.”

“ஏய் நீ வழி மட்டும் சொல்லு. நான் போய்கிறேன்.”

“சரி” என்று சொல்லி சஞ்சய் வழி சொன்னான். சமி அவனிடம் பை சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்.

சமி போகும் போது,”ஜெய் தப்பு பண்ணிட்ட, என்கிட்ட நீ ஆர்த்தி நந்துவ லவ் பண்றத சொல்லிருக்கக் கூடாது. இனி இந்த சமியோட முதல் வேலை ஆர்த்தியை ரிஷிகிட்ட இருந்து பிரிக்கிறது தான். சமி கேம் ஸடாட்ஸ் நவ்.” என வன்மமாக நினைத்தாள்.

தன் கிளாஸில் வந்தமர்ந்த ஆர்த்தி மிகவும் கோவமாக இருந்தாள். ஆர்த்தியின் தோழி அனு,”ஆர்த்தி இன்னைக்கு என்ன இவ்ளோ கோவமா இருக்க?”

“நான் சொன்னேல ஒரு பொண்ணு ரிஷி வீட்டில் தங்கிப் படிக்க வரானு.”

“ஆமா. அவ கூட ரிஷி சார் கூட குளோஸா இருக்கானு சொன்னல?”

“ஆமா அவ தான் என்னோட கோவத்துக்கு முழு காரணம்.”

“என்ன பண்ணா அவ?”

“இன்னைக்கு அவ ரிஷி பக்கத்தில் உட்கார்ந்து வந்தாள். நான் அவளை எந்திரிக்க சொன்னதுக்கு ரிஷி என்னைத் திட்டினான். அதைப் பார்த்து அவ சிரிக்கிறா. எனக்கு எவ்ளோ கோவம் வந்துச்சு தெரியுமா?”

“ஏய் அவல எதாவது நீ பண்ணிருக்கனும். சும்மா ஏன் விட்டுட்டு வந்த?”

“என்ன பண்ண சொல்ற?? ரிஷிக்கு அப்புறம் என் மேல நல்ல அபிப்பிராயம் இருக்காது. அதான் நான் சும்மா வந்துட்டேன்.”

“நீ பண்ணது சரி தான். இனிமே நீ அந்த சம்யுக்தா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு. நாம எத்தன படம் பார்த்துருக்கிறோம். அதுல ஹீரோயின் வில்லி பண்றத ஹீரோகிட்ட சொல்லுவா ஆனால் ஹீரோ ஹீரோயின நம்பாமல் வில்லியை நம்புவார். அதனால ரிஷி சார் முன்னாடி நீ அந்த பொண்ணுகிட்ட மூஞ்சி காமிக்காத. ஒரு நாள் அவளே மாட்டுவா அப்ப வச்சு செய்வோம்.”

“கரெக்ட் அனு. ரொம்ப தேங்க்ஸ். இனி அவகிட்ட கேர்ஃபுல்லா இருக்கேன்.”

இங்கே சம்யுக்தா தன் கிளாஸிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கே சில பசங்கள் அவளை அழைத்தார்கள்.

“ஏய் நீ ஃபர்ஸ்ட் யியர்(year) ஆ?”

“ஆமா!!”

“சந்தோஷம். அப்ப நம்ம வேலையை காமிச்சிர வேண்டியது தான்.”

“இந்த காலேஜ்ல ரேகிங் இல்லன்னு சொன்னாங்க.”

“நாங்களும் ரேகிங் பண்ணல. இது ஜஸ்ட் ஃபார் ஃபன். ஸோ நாங்க சொல்றத நீ செஞ்சு தான் ஆகணும்.”

“சரி சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?”

சுற்றும் முற்றிப் பார்த்து விட்டு,”அதோ அந்த பையன்கிட்ட போய் ப்ரோபோஸ் பண்ணு.”

“அட என்ன ப்ரோ, இன்னும் இப்பிடியே தான் ரேகிங் பண்றீங்களா?”

“ஏய் நாங்க சொல்றத செய்யல அப்புறம் நாங்க என்ன பண்ணுவோம்னே தெரியாது.”

“அட உங்களுக்கே என்ன பண்ணுறதுனு தெரியலையா. அப்பச் சரி, நீங்க யோசிட்டு சொல்லுங்க என்ன பண்ணுவீங்கனு சரியா.” என்று கூறி அங்கிருந்து நகரச் சென்றாள். ஆனால் அந்த மாணவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி,”ஏய் என்ன வம்பு பண்ணனும்னே வந்துருக்கியா?”

“ஹலோ பாஸ். சும்மா போன என்னைக் கூப்பிட்டு வச்சு வம்பு பண்றது நீங்க தான்.”

“அதான் வம்பு பண்றோம்னு தெறியுதுல. ஒழுங்கா நாங்க சொல்றத செஞ்சுட்டு போய்டே இரு.” என்றனர். அந்த வழியாக வந்த ரிஷி இதைப் பார்த்து விட்டான். அவர்களிடம் செல்லலாம் என்று தோன்றிய பொழுது சமியின் பாவங்களைப் பார்த்தான். அவள் தைரியமாக இருந்ததால் அங்கேயே நின்று பார்த்தான். பிரச்சனை வந்தால் போகலாம் என்று.

இங்கு சமியோ அவர்களிடம்,”சரி இப்ப என்ன செய்யனும்?”

“ஏய் அதுக்குள்ள மறந்துட்டியா?? அதான் அந்த பையன்கிட்ட போய் ப்ரோபோஸ் பண்ணுனு சொன்னேன்ல.”

“ஓ ஆமால. சரி. ஆனால் பாஸ் எனக்கு முன்ன பின்ன யார்கிட்டயும் ப்ரோபோஸ் பண்ணதில்லையே. ஸோ நீங்க அதோ அந்த அக்காக்கு ப்ரோபோஸ் பண்ணுங்க நான் போய் அந்த பையன்கிட்ட நீங்க ப்ரோபோஸ் பண்ற மாதிரியே பண்றேன். டீலா??” இதைக் கேட்ட அந்த மாணவன் சமியை முறைத்தான். ரிஷி இவர்களின் அருகிலிருந்ததால் இவர்கள் பேசியது கேட்டது. ரிஷிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் பார்த்த பெண்கள்(அவனின் அம்மா, ஆர்த்தியின் அம்மா, ஆர்த்தி) யாரும் இவ்ளோ தைரியமாக இருந்ததில்லை. அதனால் ஓர் ஆர்வத்துடன் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

“என்ன லந்து பன்றியா?? இந்த வேலைலாம் என்கிட்ட வச்சுக்காத.”

“ஐயோ என்ன பாஸ். இந்த பச்ச குழந்தையைப் பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே. எனக்கு தெரியாதனால தான கேட்டேன். இல்லாட்டி கேட்டிருக்க மாட்டேன்.” குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டாள். இவர்கள் அடுத்துப் பேச வருவதற்கு முன் அங்கு சிவில் டிபார்ட்மெண்டின் ஹச்.ஓ.டி வந்தார். சமியிடம்,”வாட் ஆர் யூ கைஸ் டூயிங் ஹியர்? (சமியை பார்த்து) வேர் ஸ் யுர் ஐடி கார்ட்?”

“சார் ஐ யாம் ஃபர்ஸ்ட் யியர் ஸ்டூடண்ட்.”

“ஓ, ஆர் தீஸ் கேஸ் ரேகிங் யூ?” அந்த மாணவர்கள் பயத்துடன் சமியைப் பார்த்தனர். ஏன் என்றால் அவர் மிகவும் கடுமையான வாத்தியார். அவரின் தண்டனைகளும் கடுமையாக இருக்கும். ப்ரின்ஸ்பாலே இவரைக் கேள்வி கேட்கக் கொஞ்சம் தயங்குவார். ஆனால் இவர் மோசமானவர் கிடையாது. இவர் தப்பு செய்தால் மட்டுமே தண்டிப்பார். இவரின் மேல் அனைவருக்கும் மதிப்புண்டு. இவர் ஹச்.ஓ.டி. ஆன பிறகு தான் சிவில் டிபார்ட்மெண்ட் எல்லா போட்டிகளிலும் வென்றது. மாணவர்கள் நிறையப் பேர் யூனிவர்சிட்டி ரான்க்கிங் வாங்கினார்கள். அதனால் இவரை யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

“நோ சார். தே வேர் வெரி ஸ்வீட். ஆக்சுவலி தே வேர் கைடிங் மீ சார். அண்ட் ஆல்ஸோ தே வேர் ஸேயிங் அபௌட் யூ ஒன்லி சார். தே ஸெட் வென் அவர்(our) ஹச்.ஓ.டி ஸ் தேர் நோ ஒன் கேன் ட்ரபுள் யூ. ஹீ ஸ் லைக் அவர் காட்ஃபாதர்.” இதைக் கேட்டவுடன் அவருக்கு ஏனோ கர்வமாக இருந்தது. ஆனால் அதைக் காட்டாமல்,”தே ஸெட் த ட்ருத் ஒன்லி. இஃப் எனிஒன் ட்ரபுள் யூ தென் கம் டூ மீ. நவ் எவ்ரிஒன் கோ டூ யூவர் கிளாஸ்.” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் சென்றவுடன் தான் அந்த மாணவர்கள் மூச்சே விட்டனர்.

“நல்ல வேளை எங்க எங்களை மாட்டிவிட்ருவியோனு பயந்துட்டோம்.”

“அட போங்க பாஸ். நீங்க ஃபன்காக தான பண்ணீங்க. அதுவுமில்லாம இதலாம் காலேஜ்ல தான் பண்ண முடியும். லிமிட் தான்டாம என்ன சேட்டை வேணாலும் பண்ணலாம் என்ன பெருத்த வரைக்கும். இப்ப போகலாமா??” அவர்கள் கை எடுத்துக் கும்பிட்டு,”தாராளமா போமா.” என்று கூற சமியும் சிரித்துக் கொண்டே சென்றால். இவளின் குறும்புதனத்தைப் பார்த்த ரிஷி சிரித்துக் கொண்டே தான் போக வேண்டிய கிளாஸிற்கு சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்