Loading

சஞ்சய் ப்ரீத்தியைப் பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் சிலையாக நின்றான். ப்ரீத்தியோ சொல்ல முடியாத ஒரு உணர்வுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சஞ்சய், ப்ரீத்தியிடம் வந்து,”ஓய் உன்னை நான் இங்க எதிர்பார்க்கவே இல்லை. நீ எப்படி இங்க??”

“அதை நான் கேட்கனும். நீ எங்க இங்க??”

“மேடம் மறந்து போச்சா?? நான் இந்த ஊர் தான். நீங்க தான் வெளி ஊர்.”

“ப்ச் அது தெரியாத எனக்கு?? நீ இங்க என்ன பண்ணுற??”

“ஓ ஓ இந்த வீட்டுல என்ன பண்ணுறனு கேட்குறியா?? இது என் ப்ரண்ட் வீடு. சரி சொல்லு நீ இங்க என்ன பண்ணுற??”

“உன் ப்ரணடா?? யாரது??”

“ஆகாஷும் சமுவும் தான்.”

“என்னது ஆகாஷும் சமியும் உன் ப்ரண்டஸா??”

“ஆமா இதுல ஷாக்காக என்ன இருக்கு??” ப்ரீத்தி அடுத்த சொல்ல வருவதற்குள் ஆகாஷ் அங்கு வந்து விட்டான். இவர்கள் பேசுவதைப் பார்த்து இவர்களிடம் சென்றான்,”அதுக்குள்ள நீங்களே அறிமுகம் ஆகீடீங்களா??”

“ப்ச் ஆகாஷ் முதலில் நீ சொல்லு. இவன் உன் ப்ரண்டா??”

“ஏய் என்ன நீ அவன் இவன்னு பேசிட்டு இருக்க??”

“அட ஆகாஷ் அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு என்ன அப்படி பேச!!”

“என்னது உரிமை இருக்க?? என்னடா நடக்குது இங்க?? உங்க இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் முன்னாடியே தெரியுமா??”

“ஆகாஷ் இவன் தான் நான் சொன்ன சென்னை ரோமியோ.”

“என்னது அது சஞ்சயா???”

“ஆமா இந்த சஞ்சய் தான்.”

“அட மச்சான் அது நீ தானா???”

“என்னது மச்சானா??” சஞ்சயும் ப்ரீத்தியும் ஒரே நேரத்தில் கூறினர்.

“டேய் உன்கிட்ட விஷயத்தைச் சொல்லும் போது என்னடா சொன்ன நீ?? ஆள காட்டு மாறு கை மாறு கால் வாங்குறேனு சொல்லிட்டு இப்ப மச்சானு சொல்ற??”

“அது ஆள் யாருன்னு தெரியாது. ஆனால் இப்ப சஞ்சய்ல அதான் ஓகே சொல்லிட்டேன்.”

“ஏய் உன்னோட சம்மதத்தை யாரு கேட்டா?? அண்ணனாச்சே சொன்னா இவனை உண்டு இல்லைனு பண்ணவனு பார்த்தா இப்படி பேசுற??”

“ஏய் வெயிட் வெயிட்!!! ஆகாஷ் உன் அண்ணனா??”

“ஆமா!!” சஞ்சய் கூறும் முன் அங்கு வந்த சமி,”என்ன இங்க ஒரே கூட்டமா இருக்கு??”

“மூணு பேர் தான் இருக்கோம் உனக்கு இது கூட்டமா??” என்று ப்ரீத்தி கேட்டாள்.

“பின்ன நீயே ஐந்து ஆளுக்குச் சமம்.”

“ஏய் உன்னை!!” என்று சமியை லைட்டாக அடித்தாள் ப்ரீத்தி.

“ஓய் உனக்கு ஒரு ஷாக்கிங் நியுஸ் சொல்லட்டா??” என்று ஆகாஷ் சமியிடம் கேட்டான்.

“என்ன விஷயம்??”

“நம்ம ப்ரீத்தியோட சென்னை ரோமியோவை பார்த்தாச்சு.”

“என்ன ஆகாஷ் சொல்ற?? எங்க எப்ப பார்த்தீங்க?? என்னை விட்டுட்டு எங்க போனீங்க நீங்க??”

“நாங்க எங்கயும் போகலை.”

“பின்ன எப்ப நீங்க பார்த்தீங்க??”

“மக்கு நம்ம சஞ்சய் தான் அந்த சென்னை ரோமியோ!!”

“என்னது சஞ்சையா???” பாவமாகச் சஞ்சையைப் பார்த்தாள்

“ஒரு நிமிஷம் இங்க என்ன நடக்குது?? எனக்கு புரியலை!! நீ என்னடான்னா என்னை மச்சானு கூப்பிடுற!!! ப்ரீத்தி என்னடான்னா என்னை சென்னை ரோமியோனு சொல்றா, அப்புறம் சமு என்னமோ நான் நோய்வாய் பட்ட மாதிரி பாவமா பார்க்குறா. இங்க என்ன தான் நடக்குது ஒன்னும் புரியலை.!!!!”

“ஆகாஷ் என்னோட அண்ணன். அதான் அவன் என்னை வெறுப்பேத்த உன்னை மச்சான்னு கூப்பிட்டான். அப்புறம் நீ என்னை பார்த்த இரண்டாவது நாளே ப்ரோபோஸ் பண்ணல அதான் உன்னை சென்னை ரோமியோனு சொன்னேன். அப்புறம் இந்த பிசாசு நீ என்னை லவ் பண்ணுறல அதான் உன் நிலைமையை நினைச்சு உன்னைப் பாவமா பார்க்குது. போதுமா உனக்கு விளக்கம்.”

“என்னது நீ ஆகாஷ் தங்கச்சியா??”

“ஜெய் உனக்கு என்னாச்சு இன்னைக்கு?? எல்லாத்துக்கும் ஷாக் ஆகுற??” என்று சமி கேட்க, ஏதோ கூற வந்தவன் ஈ என்று இழித்து சமாளித்தான். பின் ஆகாஷும், சமியும் சஞ்சயை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஆகாஷின் அம்மாக்கு அவனை அறிமுகம் படுத்தி வைத்தார்கள்.

இங்கு ப்ரீத்தி அவளுக்கும் சஞ்சய்க்குமான முதல் சந்திப்பை ஞாபகப்படுத்தி பார்த்தாள்.

ஆறு மாதங்களுக்கு முன், ப்ரீத்தி மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வுக்காக தன் கல்லூரி மாணவர்களுடன் வந்தாள். சிறு இடைவெளியில் ப்ரீத்தியும் அவள் தோழியும் ஷாப்பிங் செய்யலாமென வெளியே வந்தார்கள். அங்குள்ள மாலிற்குச் சென்றனர். அதே மாலிற்கு வந்த சஞ்சய் ப்ரீத்தியை உணவகத்தில் பார்த்தான். முதலில் ஒரு சுவாரசத்திற்காக தான் பார்த்தான். பெரிதாக தாக்கம் எதுவுமில்லை. ஆனால் அதே மாலில் இரண்டு மூன்று முறை அவள் இவன் கண்ணில் பட்டாள். அதன் பிறகு அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்ற, தன் நண்பர்களை விடுத்து ப்ரீத்தியையே ஃபாலோ செய்தான். முதலில் கவனிக்காத ப்ரீத்தி ரொம்ப நேரம் கழித்து தான் கவனித்தாள். அவனிடம் சென்று,”ஏய் என்ன எங்களை ரொம்ப நேரமா ஃபாலோ பண்ணிட்டு இருக்க?? எங்க அப்பா போலிஸ். ஆனால் உனக்கு அவர் ரொம்ப அதிகம். நானே போதும். ஒழுங்கா ஓடி போய்டு. சரியா.” என்று அவன் பதிலை கேட்காமலே சென்று விட்டாள். வா மா மின்னல் போல வந்தாள் பட படவென பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். புயல் அடித்து ஓய்ந்தது போல் உணர்ந்தான் சஞ்சய். இருந்தாலும் மணம் தளராமல் திரும்பவும் பின் தொடர்நதான் அவளுக்கு அறியாமல். அவள் ஷாப்பிங் முடித்து அவள் தங்கியிருந்த கல்லூரி விடுதி வாசல் வரை பின் தொடர ஆசைப் பட்டான். ஆனால் அங்கிருந்த காவலாளி அவனைக் கல்லூரி உள்ளே விடவில்லை. அதனால் நாளை பார்க்கலாம் என்று சென்றுவிட்டான்.

அடுத்த நாள் ப்ரீத்தி எப்பொழுது கல்லூரி விட்டு வருவாள் என்று வெளியே காத்துக் கொண்டிருந்தான். அவனை ஏமாற்றாமல் மதியம் போல் வெளியே வந்தாள். நேற்றைய போல் இன்றும் அவளை பின் தொடர்நதான். அவள் சாப்பிட ஒரு ஹோட்டலுக்குச் சென்றாள் அவள் தோழிகளுடன். இவனும் அதே ஹோட்டலுக்குச் சென்றான். அவர்கள் அமர்ந்திருந்த அதே டேபிளில் இவனும் போய் அமர்ந்து கொண்டான். ப்ரீத்தியைத் தவிர அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்க்க ப்ரீத்தி அவனை முறைத்துப் பார்த்தாள்.

“அறிவில்லையா உனக்கு?? ஒரு வாட்டி சொன்னா புரியாதா?? எதுக்கு என்னை ஃபாலோ பண்ற??” என்று கூறிவிட்டு எழுந்து அங்கிருந்து செல்ல அடி எடுத்து வைத்த பொழுது சஞ்சய் அவளைத் தடுத்து,”ப்ச் அட என்ன மா நீ நான் பேசுறதுக்கு முன்னாடியே இப்படி ஓடுற?? நான் உன்னை எதுவும் பண்ணமாட்டேன் பயப்படாத. இரு இரு நான் பேசி முடிச்சுடுறேன். ஒரு 5 மினிட்ஸ் தான். அதுக்கு அப்புறம் நான் போய்டுவேன். ஸோ ப்ளீஸ் உட்கார். எல்லாரும் நம்மலை தான் பார்க்கிறாங்க.” என்று கூற. அவளும் சுற்றி முற்றி பார்த்து விட்டு உட்கார்ந்தாள்.

“என் பெயர் சஞ்சய். நான் மெ.பி.ஏ ஃப்ர்ஸ்ட்(first) யியர் படிக்கிறேன். நேத்து உன்ன ஃபுட் கோர்ட்ல பார்க்கும் போது சும்மா தான் பார்த்தேன். ஆனால் அதுக்கு அப்புறம் நீயா என் கண்ணுல இரண்டு மூணு வாட்டி பட்ட. அதுக்கு அப்புறம் தான் உன்னை நான் ஃபாலோ பண்ணினேன்.”

“அப்ப என் மேல தான் தப்புன்னு சொல்ற அப்படி தான??”

“அச்சோ அம்மு குட்டி என்ன பேசவிடுறா!!”

“ஏய் இந்த அம்மு குட்டிலாம் வேற யார்கிடட்யாவது வச்சுக்கோ. என்கிட்ட வேண்டாம்.”

“சரி சரி நான் இப்ப விஷயத்துக்கு வரேன். சும்மா தான் உன்ன ஃபாலோ பண்ணேன். ஆனால் வீட்டுக்குப் போன பின்னாடி எனக்கு ஃபுல்லா உன்னோட நினைப்பு தான். அப்ப தான் புரிஞ்சது ஐ யம் இன் லவ் வித் யூ. நீ என்ன தப்பா கூட நினைக்கலாம். என்னடா பார்த்தவுடனே இப்படி லவ் சொல்றானேனு!! அதுக்கு தான் இப்ப உன்கிட்ட பேச வந்தேன். நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன். சப்போஸ் எதார்த்தமா நாம பின்னாடி ஒரு நாள் மீட் பண்ணோம்னா கண்டிப்பா உன்னை நான் விட மாட்டேன். நீ தான் என்னோட பொண்டாட்டி. ஒரு வேல இந்த இடைப்பட்ட காலத்துல உனக்கு வேற யார் மேலயாவது காதல் வந்தால் கண்டிப்பா நான் ஒதிங்கிடுவேன். இத சொல்ல தான் வந்தேன். எனக்கு நம்பிக்கை இருக்கு நீ எனக்கு தான்.” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான். ப்ரீத்தியின் தோழிகள் அனைவரும் அவனைப் பாராட்டி தள்ளிவிட்டார்கள். ஆனால் ப்ரீத்தி அவன் கூறியதை நம்பவில்லை. சஞ்சய் கண்டிப்பாக அவளைத் தொந்தரவு செய்வான் என்று எண்ணித் தான் ஆகாஷிடம் கூறினாள். ஆனால் சஞ்சய் அவன் சொல்லை காப்பாற்றினான். இதை நினைத்துப் பார்த்த ப்ரீத்தி ஆகாஷின் மச்சான் என்ற வார்த்தை அவளை நெகிழச் செய்தது. ஆம் சஞ்சய் அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி அவளைப் பார்க்க வராதது அவளை ஈர்த்தது. அதே போல் யாரவது அவளிடம் காதலை சொன்னால் அவள் மனதிற்கு வருவது சஞ்சயின் முகம் தான். இன்று சஞ்சயை கண்டது அவளின் அதிர்ஷ்டம் என்று மிகவும் சந்தோஷப்பட்டாள். ஆனால் இந்த சந்தோஷத்தின் ஆயுள் குறைவு என்று ப்ரீத்தி அந்த நாளின் முடிவில் உணர்ந்தாள். அன்று முழுவதும் சஞ்சய் இவர்களுடன் தான் இருந்தான். ஆனால் ப்ரீத்தியிடம் அவன் அவ்ளோவாக பேசவில்லை. சஞ்சயிடம் தனியாகப் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே போல் அவன் தன் வீட்டுக்குக் கிளம்பும் போது அவளுக்கு அந்த நேரம் கிடைத்தது. அவன் பின்னாடியே போய் அவனைக் கூப்பிட்டாள்.

“சஞ்சய் ஒரு நிமிஷம்.”

“சொல்லு ப்ரீத்தி.”

“என்ன நீ இப்படி பேசுற?? அப்ப நீ அன்னைக்கு பேசுனதெல்லாம் சும்மாவா??”

“என்னாச்சு ப்ரீத்தி உனக்கு?? எனக்கு நீ சொல்றது எதுவும் புரியலை.”

“எப்படி புரியும் உனக்கு?? உன் மனசுல நான் இப்ப இல்லை. அதான் நான் என்ன சொல்ல வரேனு தெரிஞ்சே தெரியாத மாதிரி பேசுற.”

“அய்யோ ப்ரீத்தி நிஜமா எனக்குப் புரியலை.”

“ஏய் நானா வந்து பேசுறேன்ல அதான் நீ இப்படி பேசுற. சரி பரவால லவ்வர்ஸ் குள்ள ஈகோ பார்க்கக் கூடாது. நானே ஒத்துக்கிறேன் ஐ லவ் யூ. போதுமா.” ப்ரீத்தி கூறிவிட்டாள். ஆனால் சஞ்சய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“என்ன எதுவும் பேச மாட்டிங்குற??”

“எனக்கு என்ன பேசனு தெரியலை ப்ரீத்தி. சாரி எனக்குக் கொஞ்சம் டைம் தரியா??”

“என்னது டைம் வேண்டுமா?? அப்ப அன்னைக்கு சொன்னதெல்லாம் பொய்யா??”

“அய்யோ இல்லை ப்ரீத்தி. நான் உன்ன லவ் பண்றேன் அது உண்மை. இந்த ஆறு மாசத்துல உன்னை நினைக்காத நாள் இல்லை. நான் உன்கிட்ட டைம் கேட்டது வேற விஷயத்துக்காக. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”

“நான் ரொம்ப சந்தோஷமா வந்தேன் உன்கிட்ட லவ் சொல்ல. ஆனால் அந்த சந்தோஷம் உன்கிட்ட இல்லை. நீயும் என்னை லவ் பண்ணுற. அப்புறம் எதுக்கு டைம்னு எனக்கு சத்தியமா புரியலை. பட் ஓகே டேக் யூர் ஓன் டைம். பை.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். சஞ்சயும் சோகத்துடன் ப்ரீத்தி சென்ற பின் அவன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். இவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்ட ஆகாஷும் சமியும் தான் பலத்த யோசனைக்கு உள்ளானார்கள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்