Loading

சம்யுக்தா மற்றும் ஆகாஷ், ரிஷி வீட்டிலிருந்து ஹோட்டலிற்குச் சென்றனர். இரு அறைகள் புக் செய்தனர். முதலில் சம்யுக்தாவின் அறைக்குச் சென்றனர்.

“ஆஷ் என்னடா நீ பேசாம என்னை கூட்டிட்டு வந்துட்ட?? எப்படி நம்ம காரியம் நடக்கும்??”

“சம்யு நீ எதுக்கு டென்ஷன் ஆகுற?? நம்ம காரியம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் நடக்கும். நீ ஃப்ரியா விடு.”

“ஹிம் சரி. ஆகாஷ் கவணிச்சியா??”

“எதை??”

“அட, நாம கிளம்பும் போது அந்த பாட்டி ப்ரகாஷ் அங்கிள்ள(uncle a) ஏதோ பயமுறுத்தின மாதிரி பேசினாங்கள?? கவணிச்சியா??”

“நானும் கவணிச்சேன். அவங்களுக்குள்ள ஏதோ இருக்கு!!! அதை நாம கண்டிப்பா கண்டுபிடிக்கனும்.”

“கண்டுபிடிக்கனும்னா நாம அங்க இருக்கனும். இப்படி ஹோட்டல்ல உட்கார்ந்து இருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது??”

“கவலையை விடு சம்யு!! நான் பார்த்துக்கிறேன் அதை.”

“பார்த்துக்கிட்டா சந்தோஷம்.” அப்பொழுது சஞ்சய் சம்யுக்தாவை அழைத்தான்.

“சொல்லு ஜெய்.”

“சாரி சமு.”

“நீ எதுக்கு ஜெய் சாரி சொல்ற??”

“இல்லை சமு. இந்த ஆர்த்தி இப்படி பண்ணுவானு நான் எதிர்பார்க்கலை.”

“அவ அப்படி பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ ஜெய். விடு நான் எதுவும் தப்பா எடுத்துகலை.”

“நீ சுலபமா சொல்விட்ட ஆனால் எனக்கு கில்டியா இருக்கு.”

“ஜெய் அங்க யாரும் என்ன நம்பாம இருந்த போது நீ என்னை நம்புன!! இப்ப கூட என்ன தப்பா சொன்னவங்க யாரும் என்கிட்ட ஒரு சாரி கூட கேட்கலை. ஆனால் நீ இவ்ளோ வருத்துப் பட்டு பேசுற!! எனக்கு இதுவே போதும். நீ கவலையை விடு.”

“சமு, அண்ணா குற்றவுணர்ச்சியில் இருக்கான். உன்னைப் பார்க்க அவன் சங்கடப் படுறான். நீ அவனைத் தப்பா எடுத்துகாத.”

“ஜெய் அதை விடு.” அப்பொழுது ஆகாஷ் சமுயிடம் இருந்து மொபைலை வாங்கிக் கொண்டு பால்கனி சென்றான். சஞ்சயிடம் ஏதோ பேசிவிட்டு ஃபோனை வைத்தான். பின் உள்ளே வந்தான்.

“என்ன ஏதோ ரகசியம் பேசுன மாதிரி இருந்துச்சு??”

“அதலாம் ஒன்னுமில்லை சம்யு. சும்மா பேசிட்டு வச்சேன்.” பின் சம்யுவை எதுவும் பேச விடாமல் அவன் அறைக்குச் சென்று விட்டான். சம்யுவும் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டாள்.

அடுத்த நாள், வாசுதேவன், யாமினி, லக்ஷ்மி, ராம்குமார் மற்றும் ப்ரீத்தி சென்னை வந்தனர். இன்று அவர்கள் சென்னையில் சம்யுக்தா மற்றும் ஆகாஷ் தங்குவதற்காக வாங்கிய வீட்டில் பால் காய்ச்சுகின்றனர். அதனால் தான் ஆகாஷ் முந்தைய நாள் வந்தான். இது சம்யுக்தாவிற்கு தெரியாது. அவளுக்கு ஸர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று ஆகாஷும் கூறவில்லை. ரிஷி, ஆர்த்தி வீடு இருக்கும் அதே பகுதியில் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு ஆறு வீடு தள்ளி ஒரு வீட்டை வாசு வாங்கியுள்ளார். கீழே மேலே என இரு பகுதி கொண்ட வீடு அது. கீழ்ப் பகுதியில் ஆகாஷும்,சமியும் தங்கிக் கொள்வார்கள். மேல் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளனர்.

ஆகாஷ் சமியிடம் முதலிலே வெளியே போக வேண்டுமென்று சமியிடம் கூறியிருந்தான். அதனால் ரெடியாகி இருவரும் கீழே வந்தனர். லாபிக்கு வந்தவுடன் ஆகாஷ் சமியின் கண்ணை மூடினான்.

“ஆஷ் என்ன பண்ணுற??”

“அமைதியா வா சம்யு.” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் தன் கையை எடுத்தான். சமி அங்கிருந்த அனைவரையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். வேகமாக ஓடிப் போய் வாசுவை அனைத்து,”பாப்ஸ் எப்ப வந்தீங்க??”

“ஓய் நாங்களும் இங்க தான் இருக்கோம்.” என்று ஆகாஷின் தந்தை ராம்குமார் கூறினார்.

“அப்பா அவளுக்கு நாமளாம் கண்ணுக்கு தெரிய மாட்டோம். மாமா மட்டும் தான் தெரிவார்.” என்று ப்ரீத்தி கூறினாள்.

“மாம்ஸ் அப்படிலாம் இல்லை.” என்று அனைவரிடமும் கொஞ்சி விட்டு யாமினியை வந்து கட்டிக் கொண்டாள்,”யாம்ஸ் உன் திட்ட நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா!!”

“பொய் சொல்லாத!! உன்னைபீ பத்தி எனக்குத் தெரியாது. விட்டது தொல்லைனு நிம்மதியா இருந்துருப்ப”

“யாம்ஸ் அப்படிலாம் சொல்லாத. உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.”

“போதும் போதும் கொஞ்சுனது வாங்க போகலாம். ஏற்கனவே லேட் ஆகிடுச்சு.”

“எங்க போறோம்??” என்று சமி கேட்க, ஆகாஷ்,”உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கு. அதுக்கு தான் போறோம். போனதும் உனக்கு தெரிஞ்சுரும்.” என்று கூறிக் கொண்டு அழைத்துச் சென்றான் ஆகாஷ்.

ரிஷி வீட்டில் நடந்தது வாசுவுக்கும் ராம்கும் மட்டும் தான் தெரியும். இருவரும் பயங்கர கோவத்துடன் தான் இருந்தார்கள் பாட்டி மேல் சமியை அடித்ததற்காக. ஆகாஷ் தான் இருவரையும் அமைதிப் படுத்தி வைத்தான்.

சமி, ரிஷி வீடு இருக்கும் பகுதிக்கு கார் செல்வதைப் பார்த்து ஆகாஷிடம்,”ஆகாஷ் இங்க எதுக்கு வந்தோம்?? அதுவுமில்லாம இது ஜெய் வீடு இருக்குற ஏரியா!! அவங்க வீட்டையும் கிராஸ் பண்ணியாச்சே??”

“அட கொஞ்ச நேரம் அமைதியா வா. ஜஸ்ட் டூ மினிட்ஸ்.” என்று ஆகாஷ் கூற, சமி அமைதியாக வந்தாள். சரியாக இரண்டு நிமிடத்தில் கார் நின்றது. சமியும் காரிலிருந்து இறங்கி அந்த வீட்டைப் பார்த்தாள். வாசு இன்னொரு காரில் வந்தார். வந்தவர் சமியிடம் போய் அவள் தோளில் கை போட்டு,”என்ன பாப்பு இந்த வீடு எப்படி இருக்கு??”

“பாப்ஸ் இந்த வீட்டை வாங்கிட்டீங்களா??”

“ஆமாடா எத்தனை நாள் நீ இன்னொருத்தர் வீட்டுல இருப்ப?? முதல்ல நீ மட்டும் தான் இருந்த. இப்ப ஆகாஷும் உன்கூட தான் இருப்பேன்னு சொல்லிட்டான். அதான் உங்களுக்காக வீடு பார்த்தேன். இதே ஏரியால நமக்கு கிடைச்சுருச்சு. அதான் வாங்கிட்டேன். உனக்கு ஸர்ப்ரைஸா இருக்கட்டும்னு உன்கிட்ட சொல்ல கூடாதுனு சொல்லிட்டேன். எப்படி இருக்கு??”

“ஸூப்பர் பாப்ஸ்.”

“வா உள்ள போகலாம்.” அனைவரும் உள்ளே சென்றனர்.

இங்கு ரிஷி வீட்டில், சஞ்சய் தயாராகி கீழே வந்தான். அவனைப் பார்த்து நளினி,”என்ன சஞ்சய் இவ்ளோ சீக்கிரம் எங்க போற??”

“அம்மா நேத்து ஆகாஷ் ஃபோன் பண்ணிருந்தான். அவனும் சமுவும் நம்ம வீடு தள்ளி பத்தாவது வீட்டில் தான் இருக்க போறாங்க. அவங்க இரண்டு பேருக்காக வாசு அங்கிள் வாங்கிருக்காரு. இன்னைக்கு அங்க பால் காச்சுருங்கா. அதான் என்னை கூப்பிட்டாங்க. நான் அங்க தான் போறேன்.”

“என்னடா இத்தனை நாள் நம்ம வீட்டுல இருந்துட்டு புது வீடு பால் காச்சுராங்க ஆனால் நமக்குச் சொல்லவே இல்லை. என்ன பொண்ணு!!!”

“அம்மா என்ன உங்களுக்கு அம்னீஸ்யாவா?? நேத்து அவளை நாம அவ்ளோ அவமானப் படுத்தினோம். அதுக்கு நாம அவகிட்ட ஒரு சாரி கூட கேட்கலை. இதுல நீங்க அவளை எப்படி திட்டலாம்??” உண்மை நளினிக்குச் சுட, அமைதியாகி விட்டார். அதைக் கேட்டுக் கொண்டே வந்த ரிஷிக்கும், பிரகாஷுக்கும் குற்றவுணர்ச்சியாக இருந்தது. அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் சஞ்சய்.

ஃபுல் ஃபர்னிஷ்ட் வீடாக எல்லாத்தையும் ரெடியாக வைத்திருந்தார் வாசு. அந்த வீட்டின் அழகு சமியை கவர்ந்தது. அவளுக்கு மிகவும் பிடித்தது. யாமினியும், லக்ஷ்மியும் பால் காச்சி அனைவருக்கும் குடுத்தனர். பின் ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்தனர். சில மாதங்களுக்குப் பிறகு முழு குடும்பமும் இருந்ததால் எல்லாரும் சந்தோஷமாகப் பேசி மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில் வாசுவும், ராம்குமாரும் ஆகாஷை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்பொழுது எதிரில் சஞ்சய் வந்தான்.

“வா சஞ்சய். உன்னைச் சீக்கிரம் வர சொன்னா இவ்ளோ லேட்டா வர??”

“சாரி ஆகாஷ். இன்னைக்கு எந்திரிக்க லேட் ஆகிடுச்சு. அங்கிள் எப்படி இருக்கீங்க??”

“நான் நல்லா இருக்கேன் பா. நீ எப்படி இருக்க??”

“நானும் நல்லா இருக்கேன் அங்கிள்.”

“என் பாப்புக்கு உண்மையான ஃபிரண்ட்ஸ் இதுவரை இல்லை. எல்லாரும் எங்க பணத்தைப் பார்த்துத் தான் அவகிட்ட பழகிருக்காங்க. அதனால அவ யாரையும் கிட்ட சேத்துக்கிட்டது கிடையாது. உன்னைப் பத்தி அவ நிறையச் சொல்லிருக்கா. நேத்து ஒரு பிரச்சனைனு வந்த போது நீ அவகூட இருந்திருக்க தாங்க்ஸ் சஞ்சய்.”

“அங்கிள் பெரிய வார்த்தைலாம் சொல்லாதீங்க. என் ஃபிரண்ட் அவ. அதனால் நான் அவகூட கண்டிப்பா இருப்பேன் அங்கிள்.”

“தாங்க்ஸ் பா. இவன் ராம் என் நண்பன். ஆகாஷோட அப்பா.”

“ஹலோ அங்கிள்.”

“ஹலோ பா. ஆகாஷ் எல்லாத்தையும் சொன்னான். உங்க வீட்டுல இப்படி பண்ணுவாங்கனு நான் எதிர்பாக்கலை. எங்க சமியை இதுவரைக்கும் ஒரு சுடு சொல் சொன்னது கிடையாது. ஆகாஷ் அந்த பாட்டி யாரு??”

“ஆர்த்தியோட பாட்டி அப்பா. பேர் கங்கா தேவி.”

“புனிதமான பேர் ஆனால் செய்வது எல்லாம் கேடி தனம். இருக்கு அந்த அம்மாக்கு. இதுக்கு அந்த அம்மாவ பதில் சொல்லாம விட போறது இல்லை.”

“விடு ராம். பார்த்துக்கலாம். வா நாம இப்ப போய்டு வந்துடலாம்.”

“சரி ஆகாஷ் நாங்க கொஞ்சம் வெளில போய்டு வரோம். நீ உள்ள போ பா.”

“சாரி அங்கிள். பாட்டியை மீறி எதுவும் எங்க வீட்டுலையும் நடக்காது. அதான் அங்கிள் பிரச்சனை. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அங்கிள்.”

“விடு பா. நீ என்ன பண்ணுவ!! இதலாம் நடக்கனும்னு இருந்துருக்கு. ஆனால் கண்டிப்பா அந்த அம்மாவ நாங்க சும்மா விடமாட்டோம்.”

“சரி நல்ல நாள்ள எதுக்கு இதை பேசிகிட்டு. விடுங்க பார்த்துக்கலாம். நீ உள்ள போ பா.”

“வெளில கிளம்பிட்டீங்களா??”

“ஆமா பா. பிஸ்னஸ் விஷயமா மினிஸ்டர பார்க்கனும். அவர் இந்த டைம்ல தான் வர சொன்னார். அதான் நாங்க கிளம்பிட்டோம்.”

“ஓ சரி அங்கிள்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் சஞ்சய். அப்பொழுது எதிரில் ப்ரீத்தி வந்தாள். அவளைப் பார்த்து சஞ்சய் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று விட்டான். ப்ரீத்திக்கும் சஞ்சயைப் பார்த்து அதிர்ச்சி தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்