Loading

கங்கா தேவி பாட்டி தன் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் முரளி, வாசுகி மற்றும் ஆர்த்தி அமர்ந்திருந்தனர்.

“முரளி இதுக்கு மேல நாம் தள்ளி வைக்கிறதில் அர்த்தமில்லை. நான் ப்ரகாஷ்கிட்ட பேசிடுறேன். ஆர்த்தி மற்றும் ரிஷி கல்யாணம் சீக்கிரம் நடக்கனும்.”

“சரி மா. நீங்க ப்ரகாஷ்கிட்ட பேசிட்டு சொல்லுங்க. நான் மண்டபம்,பத்திரிக்கை அடிக்கிறது எல்லாம் பார்த்துக்கிறேன்.”

“ஏன் நான் சொன்னது உனக்குப் பத்தலையா?? இல்லை ப்ரகாஷ் என் பேச்சை மீறி நடப்பானு நினைக்கிறாயா??”

“அய்யோ அப்படி இல்லை மா. அது வந்து..”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொன்னது மட்டும் செய் போதும்.”

“சரி மா. நான் எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

“வாசுகி ஆர்த்தியைக் கூட்டிட்டுப் போய் நாம டிரஸ் எடுக்கனும். சீக்கிரம் எல்லாம் நடக்கனும். கொஞ்ச நாளுக்கு நீ எந்த கிளப்பும் போக வேண்டாம் சரியா??”

“சரிங்க அத்தை.” என்று கூறிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

“பாட்டி இதலாம் நடக்குமா??”

“ஏன்டாமா இப்படி கேட்கிற??”

“இல்லை பாட்டி இன்னைக்கு காலைல நடந்ததை நினைச்சாலே பயமா இருக்கு பாட்டி. இப்படி மாட்டிவிட்டுடாளே அந்த சம்யுக்தா.”

“அது மட்டுமா பண்ணா?? என்கிட்டியே சவால் விடுறா உன் கல்யாணத்தை நிறுத்துறேனு.”

“பாட்டி அப்படி நடக்காதுல??”

“நம்மகிட்ட ப்ரகாஷுனு ஒரு துருப்பு சீட்டு இருக்கும்வரை கவலை வேண்டாம். நீ எதுவும் நினைக்காத. உன் கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இப்ப போய் ரெஸ்ட் எடு. அப்புறம் ஆர்த்தி நீயா இனிமே எதுவும் பண்ணி வம்புல மாட்டிக்காத. எதனாலும் நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

அவள் சென்றவுடன் காலையில் நடந்த நிகழ்வைச் சிந்தித்துப் பார்த்தார்.

ஆர்த்தியை அடித்தவுடன் ஆகாஷ் சமியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அப்பொழுது பாட்டி,”எவ்ளோ தைரியம் இருந்தா என் கண் முன்னாடியே என் பேத்தியை அடிப்பான். நீங்களாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க??”

“அப்புறம் என்ன பண்ண சொல்றீங்க?? நீங்க சமியை அடிச்சப்பவும் நாங்க வேடிக்கை தான் பார்த்துட்டு இருந்தோம்.”

“சஞ்சய் என் பேத்தியும் அவளும் ஒன்னா??”

“கண்டிப்பா இல்லை. உங்க பேத்தியை சமியோட கம்பேர் பண்ணா அது சமிக்கு தான் அசிங்கம்.”

“சஞ்சய் வார்த்தைப் பார்த்துப் பேசு. ரிஷி உனக்கு என்னாச்சு?? அவன் உனக்கு மனைவியா வர போறவளை தப்பா பேசுறான் நீயும் பார்த்துட்டு நின்னுட்டு இருக்க??”

“பாட்டி மனைவியா வர போறவ தான். இன்னும் வரலை. இப்போ அவ பண்ண வேலைக்கு நான் யோசிக்கனும் அவளைக் கல்யாணம் பண்றதா வேண்டாமானு.”

“என்ன சொன்ன யோசிக்க போறியா?? அதலாம் இங்க நடக்காது!! உன்ன என் பேத்தி காதலிக்கிறா. அதனால நீ தான் அவ கணவன். அதுல எந்த மாற்றமும் இல்லை. நான் சொல்றது சரி தான ப்ரகாஷ்??” என்று ப்ரகாஷைப் பார்த்துக் கேட்டார்.

அவர் மெதுவாக,”ரிஷி அம்மா சொன்ன மாதிரி தான் நடக்கும். ஆர்த்தி ஏதோ உன் மேல உள்ள பாசத்துல அப்படி நடந்துகிட்டா. அதனால நீ இன்னைக்கு நடந்ததை மறந்துட்டு அடுத்த வேலையைப் போய் பாரு.” என்று ப்ரகாஷ் கூற, ரிஷி ஏதோ கூறும் முன் அவர் அவனைத் தடுத்து,”உன்னை போனு சொன்னேன் ரிஷி.” என்று கோவமாகக் கூற அங்கிருந்து சென்றுவிட்டான் ரிஷி. சஞ்சயும் அவர்களை முறைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.

“அம்மா நீங்க கவலை படாதீங்க. ஆர்த்தி ரிஷி கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.” என்று கூறிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

இதையெல்லாம் ஆகாஷும் சமியும் பார்த்துக் கொண்டு தான் கீழே வந்தனர். அவர்களைப் பார்த்த பாட்டி,”என் பேத்தியை அடிச்சுட்டுல?? உன்ன நான் சும்மா விட மாட்டேன். கண்டிப்பா இதுக்கு உன்ன பதில் சொல்ல வைப்பேன்.”

“ஹா ஹா பாரு ஆஷ் அவங்க பேத்தியை அடிச்சுதுக்கே அவங்க இப்படி ரியாக்ட் பண்றாங்க. நாம அவளோட கல்யாணத்தை நிறுத்தப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க??”

“என்ன சொன்ன கல்யாணத்தை நிறுத்த போறியா?? அதுலாம் உன் கனவுல கூட நடக்காது.” என்று ஆணவத்துடன் கூறினார்.

“அய்யோ அய்யோ(வடிவேல் டோன்). பகல் கனவு காணாதீங்க. கண்டிப்பா உங்க பேத்திக்கு ரிஷிகூட கல்யாணம் நடக்காது.” என்று ஆகாஷ் கூறிவிட்டு சுற்றி முற்றிப் பார்த்து விட்டு,”அப்புறம் ஒரு உண்மையைச் சொல்லவா??” என்ன என்பது போல பார்த்தனர் பாட்டியும் ஆர்த்தியும்.

“நேத்து சமி குடிக்கவே இல்லை. நீயும் அனுவும் பேசிகிட்டதை சமி கேட்டுட்டா. உன்னை உன் போக்கிலே போய் ரிஷிகிட்ட மாட்டிவிடுறது தான் எங்க பிளான். அப்புறம் இன்னைக்கு எங்களுக்கு அந்த வீடியோ குடுத்தது எங்க ஆள் தான். நேத்து சமி பார்ட்டில பார்த்து அவர்கிட்ட சொல்லி உங்களை வீடியோ எடுக்க வைத்தாள். அதே மாதிரி இன்னைக்கு காலைல நாங்க அங்க போகும் போது ஒருத்தர் நாங்க பேசினதை கேட்ட மாதிரி வந்து எங்ககிட்ட அந்த வீடியோவை வாங்கி குடுத்ததும் எங்க ஆள் தான். நேத்து சமி ஆல்கஹாலை சும்மா அவள் மேல தெளிச்சு குடிச்ச மாதிரி நடிச்சா. பார்த்தீங்களா எப்படி ரிஷி இப்ப உன்ன கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறான்லா!!! இது தான் முதல் ஸ்டெப். இனிமே தான் எங்க ஆட்டம் ஆரம்பம். இன்னும் ஒரு மூணு இல்ல நாலு நாள்ல உங்களுக்கு ஒரு ஷாக் வெயிட் பண்ணிட்டு இருக்கு. அது என்னனு யோசிங்க. வா சமி நாம போகலாம்.” என்று கூறிவிட்டு அவர்களை நக்கலாகப் பார்த்துவிட்டு இருவரும் சென்றுவிட்டனர்.

இதை யோசித்துத் தான் இந்த கல்யாணத்தைச் சீக்கிரம் நடத்த நினைக்கிறார் கங்கா பாட்டி.

“அப்படி என்ன ஷாக் குடுக்க போறா?? எதுக்கு ஆர்த்தி கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாங்க?? அந்த சம்யுக்தாக்கும் எனக்கும் நடுவுல எதுவும் பிரச்சனை இல்லையே. இவ இங்க காலேஜ் படிக்க வரும் போது தான் நான் இவளையே பார்க்கிறேன். அப்புறம் எதுக்கு எங்க மேல இவ்ளோ வன்மம்?? இவளாம் எனக்குக் கால் தூசிக்குச் சமம். பார்த்துக்கலாம் இவளா நானானு!!!” என்று நினைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றார்.

இங்கு ரிஷி வீட்டில், ரிஷி மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான். சஞ்சய் அங்கு வந்து,”என்ன அண்ணா இங்க நின்னுட்டு இருக்க??”

“யுகி போய்டாளா??”

“ம் போய்டா அண்ணா. நீங்க ஏன் அண்ணா இப்படி பண்ணுனீங்க??”

“எனக்கும் தெரியலை. நான் ஏன் இவ்ளோ கோவப்பட்டேனு!!”

“கோபத்தை விடுங்க. ஏன் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவுக்கு வந்தீங்க?? இப்படி அவசரப்படுற ஆள் நீங்க இல்லையே!!”

“ஆமா சஞ்சய், யுகி விஷயத்துல இப்படி நான் நடந்துக்கிட்டேனு எனக்கே ஆச்சர்யமா இருக்கு!!! அவ இப்படி பண்ணானு ஒரு உணர்ச்சி வேகத்துல அவகிட்ட கத்திட்டேன். இப்ப அவளை நான் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்??”

“நீங்க ஃபேஸ் பண்ணி தான் ஆகணும். அவகிட்ட ஒரு சாரி கூட நீங்க கேட்கலை.”

“ஹிம் தெரியும். அவகிட்ட பேச எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”

“அண்ணா நீ நீயா இல்லை. என்னாச்சு??”

“அதான் தெரியலை. யுகி இங்க இருந்தவரைக்கும் எனக்கு எதுவும் தெரியலை. ஆனால் அவ இங்க இருந்து போறேனு சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு.”

“குற்றவுணர்ச்சியா இருக்கா??”

“அதுவும் இருக்குடா. ஆனால் இது வேற. எனக்குச் சொல்ல தெரியலை.”

“அண்ணா நீ சமியை லவ் பண்றியா??”

“டேய் என்னடா இப்படி கேட்கிற??”

“சரி சொல்லு ஒரு வேலை ஆர்த்தி நேத்து பார்ட்டில குடிச்சுரிந்தா நீ சமிக்கு ரியாக்ட் பண்ண மாதிரியே ரியாக்ட் பண்ணிருப்பியா??” சஞ்சய் அவ்வாறு கேட்கவும் ரிஷி யோசித்தான்.

“சொல்லு அண்ணா!! ஏன் அமைதி ஆகிட்ட??”

“தெரியலை. ஆனால் நான் இவ்ளோ ஹார்ஷா பிஹேவ் பண்ணிருக்க மாட்டேனு தோணுது.”

“இதுலயே தெரியலையா அண்ணா நீ சமியை லவ் பண்றனு!!”

“என்னடா சொல்ற?? நான் எப்படி யுகியை?? அப்போ ஆர்த்தி??”

“அண்ணா ஆர்த்தியை நீ கல்யாணம் பண்ண ஓகே சொன்னது அப்பாக்காக!! நீ அப்படி ஆர்த்தியை கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டிருந்தா ஏன் இன்னைக்கு அவகிட்ட நீ இந்த கல்யாணம் முதல்ல நடக்குதான்னு பார்க்கலாம்னு சொன்ன??”

“அது அவ தப்பு பண்ணா. அதான் அப்படி சொன்னேன்.”

“தப்பு பண்ணிருந்தா நீ கோவப்பட்டு அவளை சத்தம் போட்டிருக்கலாம். அத விட்டுவிட்டு எப்படா சான்ஸ் கிடைக்கும்னு இருந்ததை போல நீ ஏன் செஞ்ச??”

“அப்படிலாம் இல்லை சஞ்சய்.”

“அண்ணா அப்பாக்குனு யோசிக்காத. உனக்கு பிடிக்குமானு பாரு. உன் லைஃப் ஆர்த்திகூட சந்தோஷமா இருக்குமானு யோசி!! உனக்கு சமி மேல காதல் வந்துருச்சுனு எனக்கு புரியுது. நீ யார்கிட்டயும் கோவப் படமாட்ட. ஆனால் சமி மேல அவ்ளோ கோவப் பட்ட. அவளுக்கு அவளோட ஞாயத்தைச் சொல்ல நீ டைம் கூட தரலை. ஏனா உன்னால அவளை தப்பா நினைக்க முடியலை. அந்த கோவம் தான் உன்ன அப்படி பிஹேவ் பண்ணவச்சுருக்கு!!”

“தெரியலை சஞ்சய்.”

“அண்ணா நான் இவ்ளோ சொன்னதுக்கு அப்புறம் நீங்க உறுதியா அப்படி இல்லை. எனக்கு சமி மேல எந்த இன்ட்ரெஸ்டும் இல்லைனு சொல்லலை. இதுல இருந்தே தெரியுது. அதனால யோசி அண்ணா.” என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்