Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 9 ( 9.2 )

ஒரு மணி நேரமாக,  திரும்பி நின்று , தன் கடந்த காலத்தை பற்றி தன் வருங்கால மருமகனிடம் கூறி கொண்டிருந்த ஆதி கேசவன் , அவனிடமிருந்து எந்த ஓர் எதிர் வினையும் வராமலிருக்க , பட்டென்று திரும்பி பார்த்தவர்அமுதன் அருகில் நின்றிருந்த சரணை பார்த்து அதிர்ந்தவர் , அவர்கள் இருவரையும் சந்தேகமாய் பார்க்க , பதிலுக்கு அவர்களும் அவரை அதே பார்வை பார்க்க , மூவரும் ஏதோ ஓர் ரகசியத்தை தங்களுக்குள் பதுக்கி வைத்திருந்தனர். சரியாக அந்நேரம் பார்த்து அங்கே வந்த வல்லி பாட்டி , ஆதிகேசவனிடம் பட்டென்று சரண்தேவ் – கௌரியின் காதலை போட்டுடைக்க , அந்நேரம் அங்கே வந்த பத்மா , வல்லி பாட்டி கூறியதை கேட்டு அகமகிழ்ந்தவர் ” டேய் சரா , நிஜமாவே நீயும் கௌரியும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறீங்களா ? இத கேக்க எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ? அப்பாடா என் ரெண்டு பொண்ணுங்கள்ள , மூத்த பொண்ணு வந்திய ரெண்டு தெரு தள்ளியிருக்க அமுதனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க போறோம்னா , என் சின்ன பொண்ணு கௌரிய , என் பக்கத்து வீட்டு பையன் சரணுக்கே கல்யாணம் பண்ணி குடுக்க போறேன். அப்பாடா சின்ன வயசுல தான் என் பொண்ணுங்க பக்கத்துலயிருந்து பாத்துக்காம , பணம் பணம்னு அது பின்னாடி ஓடிட்டேன். இனிமேலாச்சும் முடிஞ்ச வரைக்கும் என் பொண்ணுங்கள நல்லபடியா பார்த்துக்கணும் ” என்று தன் தவறுணர்ந்து பேசிய பத்மாவை , அணைத்து ஆறுதல் கூறிய வல்லி பாட்டி , அவர் அருகில் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த ஆதியை நோக்கி அவரது சம்மதத்தை கேட்க , ஆதியோ 

” நம்ம சரண் ரொம்ப நல்ல பையன் தான், அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா அவன் ஒரு வக்கீலாச்சே. அத நினைச்சா தான் எனக்கு எங்கையோ இடிக்குது ” என்று தீவிரமாக கூற , அதை கேட்டு கோவம் கொண்ட பத்மா ” இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சன ? சரண் இப்போ லாயரா இருக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ? ” 

” அது இல்ல பத்மா , லாயர்னா நிறையா பொய் சொல்லுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். அதுனால தான் யோசிக்குறேன் ” என்ற ஆதியை முறைத்த பத்மா , ” யாரு உங்களுக்கு அப்படியெல்லாம் சொன்னது ? அப்படி பார்த்தா என்னை பொறுத்த வரைக்கும் ப்ரோபஸ்சர்ஸ் தான் நிறையா பொய் சொல்லுவாங்க. அதுக்கு வெளியில போய் உதாரணம் தேட தேவையில்ல , அதான் நீங்களே இருக்கீங்களே. என் கிட்ட எவ்ளோ பெரிய உண்மைய மறைச்சியிருக்கீங்க நீங்க … ச்ச உங்களயெல்லாம் ஜென்மத்துக்கும் மன்னிக்க கூடாதுன்னு தான் இருந்தேன். அப்புறம் வல்லி மம்மி தான் , ஆதிகாக இல்லேன்னாலும் உன் பொண்ணுங்களுக்காக நீ அவன மன்னிச்சு தான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. இப்போ கூட நா உங்க கிட்ட பேசிகிட்டு இருக்குறதுக்கு காரணம் , என் பொண்ணுங்களோட வாழக்கை நல்லா இருக்கணுங்குற ஒரே காரணத்துக்காக தான் உங்க கிட்ட இப்போ நா பேசிகிட்டு இருக்கேன் ” என்றவர் அழுகையில் கரைய , அவள் அழுவதை கண்டு அங்கிருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட , பின் ஆதிகேசவன் அவரை பெரும்பாடு பட்டு சமாதானம் செய்தவர்  , வேறுவழியில்லாமல் சரண்தேவ் கௌரியின் காதலுக்கும் பச்சை கோடி காட்டினார்.

அதில் அனைவரும் மகிழ , சரணும் அமுதனும் ஒருத்தருக்கு ஒருத்தர் தங்களுக்குள்ளே அறிமுகம் செய்துக்கொள்ள , சரணோ அமுதனை உற்று கவனிக்க , அமுதனோ சரணை சந்தேகமாய் முரைத்தான். ஆனால் நொடிப்பொழுதில் இருவரும் தங்கள் முகபாவனைகளை சரி செய்து கொண்டவர்கள் , இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு ” சகல ” என்று உறவு பாராட்ட துவங்கினர்.

அப்போது தான் சரண் திடீரென்று அங்கு எப்படி வந்தான் என்று வல்லி பாட்டி விசாரிக்க , ஆதியும் அதை தெரிந்துக்கொள்ள சரணை கேள்வியாய் நோக்க , சரணோ அவன் தலையை சொரிந்துக்கொண்டே , அத்தனை நேரம் ஆதி அமுதனிடம் பேசிக்கொண்டிருந்ததை , அவன் வீட்டு மாடியிலிருந்து ஒட்டுக்கேட்டு கொண்டிருந்ததாகவும் , ஓர் ஆர்வம் தாங்காமல் , மாடி ஏறி குதித்து அமுதன் அருகில் வந்து நின்று மீதி கதையை கேட்டுக்கொண்டிருந்ததாகவும் கூறினான்.

அதில் வெறியான வல்லி பாட்டி , ” ஏன்டா சங்கு பயலே. நீ கிரிமினல் லாயரா இருப்பன்னு பார்த்தா , இப்படி கிரிமினலா இருக்கியேடா. ஏன்டா கௌரிய பத்தி உனக்கு தான் எல்லாம் தெரியும்ல. அப்புறம் எதுக்கு இந்த ஒட்டுகேக்குறே வேல ” என்று வினவ, 

சரணோ ” அப்படி இல்ல பாட்டி. இந்த அமுதன் சார் வேற புதுசா , சோ மாமா என் கௌரி செல்லத்தோட கதைய அவருக்கு தெளிவா சொல்லுறாரா , இல்ல நடுவுல எதையாச்சும் மிஸ் பண்ணிடுவாரோன்னு பயந்து தான் , நடுவுல அவர் எதையாச்சும் மறந்தா கூட அவருக்கு எடுத்து கொடுக்கலாம்னு தான் இவர் பக்கத்துல வந்து நின்னேன் ” என்க , அமுதனோ , வல்லி பாட்டி அவனை ” சங்கு ” என்று அழைப்பதை புரியாமல் குழப்பமாக பார்த்தவன் , அதை சரணிடமே கேட்டுவிட , பதிலுக்கு சரணும் ”  சுமார் இருவது வருஷத்துக்கு முன்னாடி … ”   என்று தன் காதல் காவியத்தை அவனுக்கு விவரிக்க துவங்க ,  ஆனால் அவனை முந்திக்கொண்டு வல்லி பாட்டி , 

” கௌரிக்கு அப்போ மூணு வயசு , உனக்கு அஞ்சு வயசு , வந்திதாக்கு ஆறு வயசு. உங்க பக்கத்து வீட்லயிருந்த வந்திய உனக்கு ரொம்ப புடிக்கும். எப்ப பார்த்தாலும் அக்கா , அக்கானு அவ பின்னாடியே சுத்திகிட்டு இருப்ப.ஆனா கௌரிக்கு தன்னோட அக்காவ வேற ஒருத்தவன் வந்து அக்கா , அக்கானு கொஞ்சிகிட்டு , எப்ப பார்த்தாலும் அவ கூடையே  விளையாடுறது பிடிக்கல. அதுனால நீ விளையாடுறதுக்காக எப்போ அவங்க வீட்டுக்கு போனாலும் ,உன்ன கடுச்சு வச்சிருவா , பதிலுக்கு நீயும் அவள கில்லி வச்சிருவ . இப்படியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வந்திகாக சண்ட போட்டுருக்கீங்க . 

இப்படியே வருஷம் ஓடிருச்சு. அப்போ நீ எட்டாவது படிச்சிட்டு இருந்த , வந்தி ஒன்பதாவதும் , கௌரி அஞ்சாவது படிச்சிட்டு இருந்தா.அந்த நேரத்துல தான் நீ உங்க அப்பா , அம்மாவோட ராமேஸ்வரம் போயிட்டு வந்துருக்க , அதுவும் வந்திக்கு சங்குனா ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சு அவளுக்காக வலம்புரி சங்கு வாங்கி வந்துருக்க. 

ஊர்லேர்ந்து வந்த கையோட அத வந்தி கிட்ட காமிக்க வந்துருக்க , வந்தியும் அந்த சங்க பார்த்து ரொம்ப சந்தோஷமாயிட்டா, நீயும் கௌரிய வெறுப்பேத்த இதான் சாக்குன்னு வந்தி அக்கா , வந்தி அக்கானு அந்த சங்குல நல்லா காது ஜவ்வு கிழியுற அளவுக்கு ஊதியிருக்க, அதுல கடுப்பான கௌரி என் அக்கா நீ எதுக்கு அக்கா , அக்கானு சொல்லுற ? இரு டா உன் மண்டைய புலக்குறேனு , நீ வாங்கிட்டு போன சங்க வச்சே உன் மண்டைல ஒரு போடு போட்டுருக்கா. அந்த மார்க்கு தான்  உன் வலது புருவத்துக்கு மேல இன்னும் கூட அழியாம நல்லா அச்சா பதிஞ்சு போயிருக்கு. 

அன்னைக்கு அவ உன்ன அடிச்சதுக்கு வந்தி அவ கிட்ட கோச்சிக்கிட்டு ரெண்டு நாள் பேசாம இருந்துருக்கா. உன்னால தான் அவ அக்கா அவ கிட்ட முதல் தடவையா கோச்சிக்கிட்டானு உன் மேல தானாவே ஒரு வெறுப்ப வளர்த்துக்கிட்டா. முதல்ல நீயும் எதுக்கு வம்புன்னு அத்தனை நாள் வந்திய அக்கானு கூப்பிட்டவன் , அதுக்கு அப்புறம் அத்தாச்சினு கூப்பிட ஆரம்பிச்சிருக்க. நீ எவ்ளோ தான் ஒதுங்கி ஒதுங்கி போனாலும் கௌரி உன்ன தேடி வந்து வம்பிழுத்து கிட்டே இருந்துருக்கா . அவ தொல்லை தாங்காம நீயும் பதிலுக்கு சண்ட போட ஆரம்பிச்சிருக்க, இப்படியே ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்ட போட்டுக்கிட்டே இருந்திருக்கிங்க, ஆனா ஒரு கட்டத்துல உனக்கு மோதல் காதலா மாறிடுச்சு.” என்றவர் ஒரே மூச்சாக அவன் காதல் கதையையும் ,  அவனுக்கு ” சங்கு ” என்ற பட்ட பெயர் எவ்வாறு வந்ததென்றும் கூற , அதில் கடுப்பான சரண் ” என்ன கிழவி நீ எவ்ளோ ரொமான்டிக்கான என் லவ் ஸ்டோரிய இப்படி எல்.கே.ஜி புள்ள ரயிம்ஸ் ஒப்பிக்குற மாதிரி சொல்லுற ? ” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.

அதில் கடுப்பான வல்லி பாட்டி ” ஸ்யபா சரா முதல்ல நாம அமுதனுக்கும் வந்திதாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுக்கு அப்புறம் தான் உன் ரூட்டு கிளியர் ஆகும். இப்படியே நின்னு நீ அவள கிள்ளுன கதை பதிலுக்கு அவ உன்ன கடிச்சு வச்ச கதைனு பேசிகிட்டு இருந்தா , அப்புறம் நீயும் உன் சகலையும் சேர்ந்து நேரா கைலாசா தான் போகணும் ” என்க 

” எது கைலாசா வா ? அப்போ எங்களுக்கு டபுள் ஓகே. நாங்க போய் எங்க நித்தி மாப்பி கூட ஜாலியா என்ஜாய் பண்ணுறோம்  ” என்று அமுதனும் , சரணும் ஒரு சேர வழிய ,

“நாம என்ன சொல்ல வந்தா இவனுங்க என்ன புரிஞ்சுகிறானுங்க ” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு தலையில் அடித்துக்கொண்ட வல்லி பாட்டி ” டேய் அது கைலாசா இல்ல டா , கைலாசம். நா தான் ஒரு ப்லொவ்ல சொல்லிட்டேன் , நீங்க என்ன டா நித்யானந்தா வரைக்கும் போய் யோசிக்கிறீங்க ? ” என்று வினவ,

” எது ப்லொவ்ல சொன்னியா ? கிழவி வர வர உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிட்டு இருக்கு, ஒரு நாள் இல்ல ஒரு நாள் கைலாசம் போன உன் புருஷன் திடீர்னு  உன் முன்னாடி வந்து நிக்க போறான், அன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி ” என்ற அமுதனை அலட்சிய படுத்திய வல்லி பாட்டி 

” டேய் வெட்டி கதை பேசுனது போதும். முதல்ல போய் நா சொன்ன வேலைய பாரு” என்று  சரணை விரட்டி அனுப்பிய வல்லி பாட்டி , சரணிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று காத்துக்கொண்டிருந்தார்.

வல்லி பாட்டியின் திட்டம் நிறைவேறுமா ?

அமுதன் வந்திதா திருமணம் நடைபெறுமா ?

சரணின் காதல் கைகூடுமா ?

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      🙈🙈🙈🙈na vanthuten😝😝😝😝😝 bgm podu… bgm podu….. tan tan taaan😎😎😎😎😎