Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 7 ( 7.1 )

போகி ஸ்பெஷல் அத்தியாயம்

 

பத்மாவதியின் கதையை கேட்ட வல்லி பாட்டியின் கண்கள் கண்ணீரில் நினைந்திருக்க , அமுதனோ இது அவனுக்கு முன்பே தெரிந்த கதை என்பது போல முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது சிலையாய் நின்றிருந்தான். 

இவர்கள் நிலைமை இவ்வாரெனில், பத்மாவதி பேசியதை அத்தனை நேரம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த ஆதி கேசவனும் , வந்திதாவும்   , இறுதியில் அவர் கூறிய ” தாழ்வு மனப்பான்மை ” என்னும் சொல்லை கேட்டு , எத்தனை அன்பு காட்டியும் பத்மாவின் ஆழ் மனதில் இருக்கும் தனிமையை விரட்ட முடியாமல் போய் விட்டதே என்று வேதனை பட்டனர். 

இவர்கள் ஒருபுறம் இவ்வாறு வருந்த , நம் கௌரியோ ,  இத்தனை வருடங்களாய் தன் முன் அத்தனை கம்பீரமாக வளம் வரும் தன் அன்னைக்குள் இத்தனை சோகங்கள் மறைந்திருப்பதை கண்டு உடைந்து போனாள்.

முதல் முறையாய் தான் அமுதனிடம் இன்று சற்று அதிகமாக பேசிவிட்டோமோ என்று அவள் மனம் வருந்த துவங்க , ஆனால் அவள் மூளையோ , அவள் அக்காவின் வாழக்கை நன்றாக அமைய வேண்டுமெனில் அமுதன் அவள் வாழ்விலிருந்து விலகியாக வேண்டும் என்று ஆபாய மணி அடித்துக்கொண்டே இருந்தது.

மூளைக்கும் மனதிற்கும் நடுவில் சிக்கிய கௌரி தெளிவான ஓர் முடிவெடுக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

 ” என்ன டா இது நா இருக்க இடத்துல இவ்ளோ அழுகாச்சியா இருக்குறதா , நோ நெவர் . ஏய் பத்து சும்மா இப்படி அழுது ஸீன் போட்டா நா சாப்பிடாம போயிடுவேன்னு நினைச்சியா ? இந்த வேலையெல்லாம் என் கிட்ட வேணா. உன் பொண்ணும் , வருங்கால மருமகனும் என் கழுத்துல கத்தி வைக்காத குறையா சம்மந்தம் பேச இங்க கூட்டிட்டு வந்தானுங்க. சரி நா கூட ஏதோ ஜுஜுபி மேட்டர்னு நினைச்சு வந்தா , உன் சின்ன பொண்ணு கௌரி என் காது ஜவ்வு கிழியுற அளவுக்கு , என்னையும் , இதோ இங்க நிக்குறானே இந்த கஞ்ச பயலையும் கிழி கிழினு கிழிக்குது. ஸ்யபா என்னால முடியல டா சாமி. ” என்ற வல்லி பாட்டி நிலைமையை சகஜமாக்க முயன்றார்.

வந்திதாவும் அவரின் பேச்சின் உள் அர்த்தம் உணர்ந்தவள் போல் , தன்னால் முடிந்த அளவு அவ்விடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்ள விழைந்தாள்.

” ஐயோ வல்லி பாட்டி நீங்க எவ்ளோ பெரிய ஆளு. உங்க திறமைக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ” என்றவள் மேலும் ஏதோ பேச வருவதற்கு முன் இடையில் புகுந்த வல்லி பாட்டி 

” அடேய் கவுரவம் கவுரவம்னு சொல்லி என் கவுரவத்த இப்படி நாறடிச்சிட்டியே டா வந்தி ” என்று வைகை புயல் வடிவேலு பாணியில் கூற ,  அத்தனை நேரம் அழுது வழிந்து கொண்டிருந்த பத்மா முதற்கொண்டு அங்கே இருந்த அனைவரும் பக்கென சிரித்துவிட்டனர்.

கௌரியும் கூட தன் குழப்பம் மறந்து சிரித்துவிட்டு , பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டாள்.

கௌரியை ஒரக்கண்ணால் கவனித்து கொண்டிருந்த வல்லி பாட்டி ” அடேய் பம்பர மண்டையா , என் கிட்டயே உன் வேலைய காமிக்குறியா ? இரு டா மவனே ” என்று மைண்ட் வாயிஸில் பேசிக்  கொண்டவர் , அமுதனை நோக்கி கண்ணடிக்க , அவனும் அவரின் கேடி பிளான் புரிந்தவன் போல் ” சரி சரி சிரிச்சது போதும் , அத்தைமா சீக்கிரம் வந்து சாப்பாடு எடுத்து வைங்க , எனக்கு பயங்கரமா பசிக்குது ” என்றவன் நேரே சமயலைறைக்குல் சென்று அவர் சுட்டு வைத்திருந்த உளுந்த வடையை மோப்பம் பிடித்தவன் 

” வாவ் அத்தைமா வட வாசனை ஆள கொள்ளுது . கிழவி , அங்க என்ன வெட்டி பேச்சு பேசிகிட்டு இருக்க , சீக்கிரம் வா இந்த வடைய ஒரு பிடி பிடிப்போம் . சீக்கிரம் வா” என்றவன் வல்லி பாட்டியை அழைத்தான்.

வல்லி பாட்டியும் ” எதே உளுந்த வடையா , டேய் நிஜமாவா சொல்லுற ? ” என்றவர் ,  அப்போது தான் ஏதோ நியாபகம் வந்தவர் போல் பத்மாவை நோக்கி ” ஏன் பேபி நீயும் உன் சின்ன பொண்ணு மாதிரி கொலெஸ்ட்ரால் இருக்குன்னு என்னைய வட சாப்பிட விடாம பண்ணிடுவியா ? ” என்று மூன்று வயது குழந்தை தன் அம்மாவிடம் மிட்டாய் கேட்பது போல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க , யாருக்கு தான் மறுக்க தோன்றும்.

” அட என்ன மம்மி நீங்க , இது உங்க வீடு மாதிரி நீங்க என்னவேணும்னாலும் கூச்ச படமா கேட்டு சாப்பிடலாம். சரி வாங்க சாமிக்கு படையல் போட்டுட்டு எல்லாரும் சாப்பிடுவோம். ” என்ற பத்மா வல்லி பாட்டி கையை பிடிக்க , ஆனால் அவரோ கௌரியை பார்த்துக்கொண்டே ” இல்ல மா நம்ம டாக்டரம்மா சொன்னா தான் சாப்புடுவேன் ” என்றவர் கௌரிக்கு பயந்தவர் போல் நடிக்க , பதிலுக்கு பத்மாவும் 

” அட என்ன மம்மி நீங்க , அவ கிடக்குறா , எப்ப பார்த்தாலும் எதையாச்சும் உளறிக்கிட்டு இருப்பா. அவளுக்கு வேற வேலையே இல்ல. நீங்க போய் அவளுக்கெல்லாம் பயந்து கிட்டு , நீங்க வாங்க நாம சாமி கும்புட்டு சாப்பாடு வேலைய பாப்போம் ” என்றவர் தன் கையோடு வல்லி பாட்டியை அழைத்து செல்ல , வல்லி பாட்டியோ பத்மா கவனிக்காத நேரம் கௌரியை நோக்கி பழிப்பு காட்டிவிட்டு சென்றார்.

வல்லி பாட்டியின் குறும்பை கண்டு பொங்கி வந்த சிரிப்பை பெரும்பாடு பட்டு அடக்கி கொண்டிருந்த கௌரி ” இருந்தாலும் கிழவிக்கு கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தி தான் ” என்று வாய் விட்டு கூறியவள் , முறுக்கி கொண்டு அவ்விடத்தை விட்டு செல்ல எத்தனிக்க , சரியாக அந்நேரம் பார்த்து 

” ஆஹா கிழவி என்ன இன்னைக்கு செம பார்ம்ல இருக்க போல , போற நிலைமைய பாத்தா வீட்ல இருக்க யாருக்குமே சோறு கிடைக்காது போல ” என்று அமுதன்” யாருக்குமே சோறு கிடைக்காது ” என்பதை சத்தமாக கூற , அவ்வளவு தான் , இத்தனை நேரம் மூளையா , இதயமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த கௌரி , அட போங்க டா நமக்கு வயிறு தான் முக்கியம் என்னும் முடிவுக்கு வந்தவள் , தன் அக்காவையும் , அப்பாவையும் இழுத்துக்கொண்டு நேரே பூஜை அறை விரைந்தவள் அரக்க பறக்க சாமி கும்பிட்டு விட்டு முதல் ஆளாக பந்தியில் தன் அக்கா அருகில் உட்கார்ந்து கொண்டு கைக்கும் , வாய்க்கும் தொடர்ந்து வேலை குடுக்க துவங்கினாள்.

அதை கண்ட வல்லி பாட்டி ஓர் மெல்லிய சிரிப்புடன் பத்மா அருகில் அமர்ந்து வந்திக்கும் , கௌரிக்கும் பரிமாறியவர் , இடையிடையே பத்மாவிற்கும் அவருக்கு பிடித்த பதார்த்தங்களை எடுத்து ஊட்டிவிட்டவர் , தன்னால் முடிந்த மட்டும் தன்னை சுற்றியிருப்போரை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டிருந்தார்.

இவ்வாறு பெண் குளம் அனைவரும் சாப்பிடுவதிலும் , பரிமாறுவதிலும் பிஸியாகி விட , அதற்காகவே காத்திருந்தது போல் ஆதிகேசவன் அமுதனை தனியே அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றவர், கௌரி பேசியதற்கு மன்னிப்பு வேண்டினார்.

” சாரி அமுதா . இந்த கௌரி எப்பவும் இப்படி தான் மத்தவங்க மனச புரிஞ்சிக்கவே தெரியாது. எப்ப பார்த்தாலும் அடுத்தவங்க மனசு புண் படுற மாதிரியே பட்டு பட்டுனு பேசிடுவா . நீ அவ பேசுனத எல்லாம் மனசுல வசிக்காத” என்றவர் மீண்டும் ஒரு முறை அமுதனிடம் மன்னிப்பை யாசித்தார்.

பதிலுக்கு அமுதனோ ” அட என்ன மாமா நீங்க , கௌரி யாரு ? என் மச்சினிச்சி தான ? அதெல்லாம் நா ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். ஆனா நீங்க பேசுறது தான் ரொம்ப தப்பா இருக்கு மாமா ” என்றவன் ஆதி கேசவனை உற்று நோக்க , ஆதிக்கோ அவன் பேசுவது ஒன்றும் புரியவில்லை.

” என்ன அமுதா ? நா என்ன தப்பா பேசுனேன் ? இப்ப கூட உனக்கு சப்போர்ட் பண்ணி தான கௌரிய திட்டுறேன். அப்புறம் என்ன ? ” என்றவர் அமுதனை புரியாத பார்வை பார்த்தார்.

” இது தான் மாமா எனக்கு உங்க கிட்ட புடிக்கல. இப்படி உங்கள சுத்தியிருக்க எல்லாருக்கும் சப்போர்ட் பண்றதுக்காக உங்க பொண்ணு கௌரிய வார்த்தையால எத்தனை தடவ வதைச்சிருக்கீங்க ? ” என்ற அமுதன் இம்முறை ஆதிகேசவனை நன்றாக முறைக்க , ஆதிக்கு தான் உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுருக்கென்று குத்தியது.

” என்ன மாமா ? உண்மைய சொன்னா  உங்களுக்கு குற்ற உணர்ச்சி குத்துதோ ? ஏன் மாமா வந்தி , கௌரி ரெண்டு பேருமே உங்க பொண்ணுங்க தான , அப்புறம் ஏன் மாமா ஒரு பொண்ணுக்கு பாசத்தையும் , இன்னொரு பொண்ணுக்கும் வெறுப்பையும் அள்ளி கொட்டுறீங்க ? ” 

அமுதன் பேசியதை கேட்க கேட்க ஆதி கேசவனுக்கு யாரோ ஒருவர் ஈட்டியால் தன் நெஞ்சை குத்தி கிழிப்பது போல் வலித்தது.

” மாமா , நா உங்களுக்கு ஒரு உண்மைய சொல்லட்டா ? இன்னைக்கு கௌரி இப்படி இருக்கான்னா அதுக்கு நீங்களும் உங்க அப்பா , அம்மாவும் மட்டும்  தான் காரணம் ” என்ற அமுதனை இடைமறைத்த ஆதி கேசவன் ” போதும் அமுதா இதுக்கு மேல என்னால எதையும் கேட்க முடியாது. இப்படி என்னை வார்த்தையால குத்தி கிழிக்கிறத நிறுத்து ” என்று கத்துவதையும் பொருட்டு படுத்தாமல் ,

” அப்படி என்ன மாமா கௌரி மேல உங்களுக்கு வெறுப்பு. ஓஹ் ஒரு வேல அவ அனாதையா இல்லாம உங்களுக்கு பொறந்த பொண்ணா இருந்திருந்தா வந்தி மேல வச்ச அதே பாசத்தை அவ மேலயும் வச்சிருப்பீங்கள்ல? அது கரெக்ட்டு தான , என்ன தான் இருந்தாலும் கௌரி உங்க பொண்ணு இல்ல , அவளும் என்னை மாதிரி அனாதை தான. என்ன  அவளுக்கும் எனக்கும் ஒரு சின்ன வித்யாசம் தான் , அவள சுத்தி எல்லாரும் இருந்தும் அனாதையா இருக்கா  , நா சுத்தி யாருமில்லாம அனாதையா இருக்கேன், மத்தபடி ரெண்டு பேருமே அன்புக்கு ஏங்கி தவிக்கிற அனாதைங்க தான ? ” என்ற அமுதன் அவனையும் மீறி கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே ஆதி கேசவனை நோக்க , அவரோ அமுதன் கேட்ட கேள்விகளில் , பல வருடங்களுக்கு முன் தான் செய்த பிழையை எண்ணி,  இன்று முதல் முதலாய் , குலுங்கி குலுங்கி அழ துவங்கினார்.

கௌரி, ஆதி கேசவன் – பத்மாவதி தம்பதிக்கு பிறந்த பெண் இல்லையா ? 

யார் இந்த கௌரி ?

தொடரும் …..

உங்கள் கருத்துகளை  ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கௌரி ஆதி,பத்து பொண்ணு இல்லையா😱😱😱😱😱 இந்த விஷயம் கௌரிக்கு தெரியுமா. ஒருவேளை தெரிஞ்சிட்டு தான் இவ்வளவு கடுப்ப இருக்குற மாறி சுத்திட்டு இருக்காளா.