Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 5 ( 5.1 )

வல்லி பாட்டியிடம் சற்றும் சலைக்காமல் அவருக்கு சமமாய் வாயாடி கொண்டிருந்த வந்திதாவையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அமுதன் , அவன் எதிர் பாரா தருணத்தில் வந்திதா அவன் கன்னத்தில் இதழ் பதித்ததில் ஐஸ்கேக்கை வாயில் வைத்தது போல் தன்னவளை கண்டு உருக துவங்கினான். 

 

நேற்று வரை வெல்வெட்  கேக்கும் வேப்பங்கொழுந்தாய் கசக்க.. 

இன்று உன் மென் பட்டு லாவெண்டர் இதழ்களின் ஸ்பரிசத்தில் பாகற்காயும் பனிக்கூழாய் தித்தித்ததேனோ ??

 

 தன்னவளின் இதழ் ஸ்பரிசத்தில் கட்டுண்டு கிடந்த அமுதன் , அப்போது தான் ஒன்றை கவனிக்க துவங்கினான்.

எப்போதும் தன்னை யாரேனும் ஏதும் கிண்டல் செய்தால் , அவர்களிடம் ஏட்டிக்கு போட்டியாய் நின்று அவர்கள் காது  ஜவ்வு கிழியும் அளவு வறுத்தெடுக்கும் வல்லி பாட்டி இன்று வந்திதா செய்யும் அத்தனை அதகளத்திற்கும் சற்று அடக்கி வாசிப்பது அவனுக்கே சற்று அதிர்ச்சியாக இருக்க ,  அதற்கு காரணம் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் வல்லி பாட்டியை வேறு விதமாக உசுப்பேற்றி விட்டான்.

 

” ஏய் வந்தி , என்ன சௌண்டெல்லாம் பலமா குடுக்குற , கொஞ்சம் அடக்கி வாசி மா , இது ஒன்னும் உன் வீடில்ல , இது என் வல்லி பாட்டியோட  சமஸ்தானம். இங்க எல்லாமே வல்லி பாட்டி கன்ட்ரோல்ல தான் இருக்கு. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு நடந்துகிட்டு இருக்க , அதுலயும் வல்லி பாட்டிய வேற வம்பிழுக்குற . இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். எங்க வல்லி பாட்டி பத்தி என்ன நெனச்ச , அவுங்க தான் அல்ட்ரா மாடர்ன் ராஜ மாத்தா சிவகாமி தேவி , அவுங்கல பகச்சிக்காத , அப்புறம் தேவசேனாவ பாஹுபலி கிட்டயிருந்து பிரிச்சு , பாஹுபலிக்கு நம்ம ஷில்லர கட்டிவச்சுருவாங்க. ஜாக்கிரதை” 

 

இங்கே அமுதன் பேச துவங்கிய மறுநொடியே   “சும்மா இருடா மலக்குரங்கே ”  என அவனுக்கு செய்கை செய்ய துவங்கிய வல்லி பாட்டியை தவிர்த்து , தன் காரியமே கண்ணாக அமுதன் அவன் பாட்டிற்கு பேசி முடித்தவன் , அமைதியாக சென்று வல்லி பாட்டியின் தோளில் கைபோட்டு நின்றுகொண்டான்.

 

அத்தனை நேரம் அவன் பேசியதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த வந்திதா , அவன் இறுதியில் கூறிய உவமையை நினைத்து சிரிப்பு வந்தாலும் , அதை பெரும்பாடு பட்டு அடக்கி கொண்டவள், முகத்தை சற்று கடுமையாக மாற்றி , அங்கே மேஜையில் வைத்திருந்த அந்த கோமிய பாட்டில்களையும் , அவள் கொண்டுவந்திருந்த சில கெமிக்கல் பாட்டில்களையும்  எடுத்துக்கொண்டவள் , வல்லி பாட்டியை நோக்கி ஓர் மர்ம புன்னகை சிந்தியவள் , வீட்டை விட்டு வெளியேற வாசலை நோக்கி முன்னேறினாள்.

 

வந்திதாவின் அச்சிரிப்பிற்கு பின் இருக்கும் உள் அர்த்தத்தை புரிந்துக்கொண்ட வல்லி பாட்டி , அவளை தடுத்து நிறுத்தும் வழி தெரியாமல் தவிக்க , அமுதன்  தான் ” என்ன இவ  நார்மலா  நா ஒரு உருட்டு உருட்டுனாலே இவ பதிலுக்கு வித விதமா உருட்டுவா ,   ஆனா இன்னைக்கு இப்படி பட்டுனு பொட்டிய கட்டிக்கிட்டு கிளம்பிட்டா ?  என்னாச்சு , ஒரு வேல மானுஷி ஷில்லர் வரைக்கும் பேசி  கொஞ்சம் ஓவரா தான் போய்டோமோ ? அது சரி , ஆனா இந்த கிழவி எதுக்கு இப்படி வெறுங்கையில சப்பாத்தி பேசையிது ” என்று புரியாமல் இருவரையும் உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

 

ஆனால் வந்திதாவோ அங்கே இரண்டு ஜீவன்கள் தன்னையே வெறித்துக்கொண்டிருப்பதை  கூட கண்டுக்கொள்ளாமல் அவள் பாட்டிற்கு வீட்டு வாசலை நெருங்கியவள் , திரும்பி நின்று வல்லி பாட்டியை நோக்கி கண்ணடிக்க , வல்லி பாட்டியோ இதற்கு மேல் அவளை விட்டால் தான் இனிமேல் கலி தான் திங்க வேண்டும் என்றுணர்ந்தவர் , ஓடி சென்று அவள் கையை பிடித்துக்கொண்டார்.

 

” அம்மாடி , என்ன டா , பாட்டி வீட்டுக்கு வந்துட்டு ஒரு வாய்  காஃபி கூட குடிக்காம போற ? முதல்ல நீ உள்ள வா , என் கையால உனக்கு ஸ்பெஷலா காஃபி  போட்டு தரேன் வா ” என்று வல்லி பாட்டி அத்தனை மென்மையாக அழைக்க , வல்லி பாட்டியின் இச்செய்கையில் அதிர்ந்த அமுதன் ” அடி யாத்தி கிழவி என்ன தோசைய திருப்பி போட சொன்ன இப்படி தோசை கல்லையே திருப்பி போடுது ” என வாயை பிளந்து கொண்டு நின்றான்.

 

அமுதனின் ரியாக்ஷனை ஓரக்கண்ணால் கவனித்த வந்திதாவோ ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தவள் , வல்லி பாட்டியிடம் திரும்பி ” ஏன் கேடி மேடம் , காஃபில பேதி மாத்திரைய கலந்து கொடுத்து , என்னை திசை திருப்பிட்டு , அந்த கேப்ல நீங்க எவிடென்ஸ டிஸ்போஸ் பண்ண பிளான் பண்றீங்களா ? இந்த வேலையெல்லாம் என் கிட்ட நடக்காது. ” என்றவள் தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டவள் வல்லி பாட்டியை முறைத்துக்கொண்டே நின்றாள். 

 

” ச்ச ச்ச என்ன பாப்பா , பாட்டியை போய் இவ்ளோ அல்பமா நெனச்சிட்ட ? இந்த பாட்டி போய் அப்டி எல்லாம் பண்ணுவேனா ? நீ யாரு என் அமுதனோட வருங்கால பொண்டாட்டியாச்சே அதுவுமில்லாம பெரிய சர்க்காரு உத்யோகத்துல வேற இருக்க , அதான் பாசமா கூப்பிட்டேன் , பழசெல்லாம் மறந்து சமாதானம் ஆயிடலாம் . அதுவும் போயும் போயும் அந்த கோமியத்துக்காக நாம ஏன் அடிச்சிக்கணும் ? ” என்ற வல்லி பாட்டி பேசிக்கொண்டே செல்ல , அவரை இடைமறைத்த வந்திதாவோ 

 

” எதே போயும் போயும் கோமியமா ? ஹலோ கேடி மேடம் , கோமியத்துல எவ்ளோ ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு தெரியுமா ? பசுவோட  தலைமுடி தொடங்கி, சிறுநீர் வரை எல்லாதுலயும்  மருத்துவ குணங்கள் இருப்பதா ஆயுர்வேதம் சொல்லுது .” 

 

 அமுதனுக்கு அப்போது தான் வந்திதாவின் திடீர் வருகையின் காரணம் புரிந்தது. தான் கோமியம் எடுத்து வர தாமதம் ஆனதால் வல்லி பாட்டி வாடிக்கையை விடக்கூடாது என்னும் எண்ணத்தில் வீட்டிலிருந்த கோமியத்தில் தண்ணீர் கலந்து விற்றிருக்கிறார். ஆனால் அவர் நேரம் , அதை பூட் சேப்டி ஆஃபீஸ்ரான ( உணவு பாதுகாப்பு அதிகாரி ) வந்திதா வீட்டிற்கு விற்றுவிட்டார் போல , அதன் விளைவு தான் , இப்படி காலையிலேயே வந்திதா ஜங்கு ஜங்கென்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருக்கிறாள். 

 

அவள் பேசியதை கேட்ட பின்பு வல்லி பாட்டிக்கே  ஒரு மாதிரி ஆகிவிட , முதல் முறையாக தன் தவறை நினைத்து வருந்தினார். இருந்தும் அவளிடம் இத்தனை எளிதில் தன் தவறை ஒற்றுக்கொண்டால் அது வல்லி பாட்டி இல்லையே. 

 

” ஏம்மா, ஒரு கோமியத்துக்கு போய் இவ்ளோ தம் கட்டி பேசணுமா ? ” என்று வல்லி பாட்டி ஆரம்பிக்க , அவரை ” மறுபடியும் முதல்ல இருந்தா ” என்னும் ரீதியில் அமுதன் நோக்க , வந்திதாவோ மீண்டும் தன் சொற்பொழிவை துவங்க ஆயத்தமானாள்.

 

 

” ஏன் பாட்டி நா இவ்ளோ சொல்லியும் நீங்க புரிஞ்சிக்க மாட்டிங்களா ? ” என்று தொடங்கிய வந்திதாவை இடைமறைத்த வல்லி பாட்டி ” பாட்டி ஏதோ தெரியாம கைத்தவறி கொஞ்சமே கொஞ்சமா கோமியத்துல  தண்ணீ ஊத்திட்டேன் ” என்றவரை முறைத்தவள் 

 ” எது ஒரு லிட்டர் கோமியத்துல மூணு லிட்டர் தண்ணி ஊத்துறது தான் உங்க ஊர்ல கொஞ்சமே கொஞ்சமா ? “

 

பதிலுக்கு வல்லி பாட்டியும் தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ” ஹி ஹி , அது இருட்டுல பாட்டிக்கு கண்ணு தெரியல டா , அதான் தண்ணீ கொஞ்சம் அதிகமா போயிடுச்சு. ஆனா உன் பேச்ச கேட்டதுக்கு அப்புறம் என் மரமண்டைக்கு நல்லா விளங்கிடுச்சு. நீ வேனா பாரு , இன்னைக்கு சப்ளை பண்ற பத்து லிட்டர் பாலுல அஞ்சு லிட்டர் தண்ணிக்கு மேல ஊத்தவே மாட்டேன். ” என்றவரை வெட்டவா குத்தவா என்னும் ரீதியில் முறைத்த வந்திதாவோ 

 

” ஏன் கேடி மேடம் , அஞ்சு லிட்டர் ரொம்ப கம்மியா இருக்க மாதிரி இருக்கே , நீங்க வேணா ஒரு பத்து லிட்டர் ஊத்துங்க ” என்றவளிடம் 

 

” அப்படியா கண்ணு சொல்லுற , சரி விடு உனக்கும் வேணாம் , எனக்கு வேணாம் , நாம ஒரு பதினஞ்சு லிட்டரா ஊத்துவோம். ஆமா டா உங்க வீட்ல மொத்தம் எத்தன பேரு ? அப்பா , அம்மாவெல்லாம் வந்திருந்தாங்கல்ல , எங்க காணும் , ஒரு வேல லேட்டாகுதுனு கிளம்பிட்டாங்க போல . சரி டா , இனிமே இந்த ஆவின் பால் , ஆரோக்கிய பால் , அமலா பாலயெல்லாம் குடிச்சு உடம்ப கெடுத்துக்காத , பாட்டி நானே உங்க வீட்டுக்கும் பிரஷ் பசும்பாலா சப்ளை பண்ணுறேன். காச பத்தி நீ ஒன்னும் கவலை பட வேணாம் , நீ தான் நம்ம அமுதனோட வருங்கால பொண்டாட்டியாச்சே , அதுனால உனக்கு மட்டும் நா டிஸ்கோண்ட் தரேன். ” என்ற வல்லி பாட்டியிடம் 

 

” ஓஹ் நீங்க பால் வியாபாரமும் பண்றீங்களா ? சரி சரி நீங்க பால்ல தண்ணீ ஊத்தறதுக்கு முன்னாடி , கொஞ்சம் என் கூட வாங்க நா உங்கள மாமியார் வீட்டுல தள்ளிவிட்டுட்டு , உங்களுக்கு கூழோ ,கஞ்சியோ ஊத்திட்டு போறேன் ” என்ற வந்திதா , வல்லி பாட்டியின் கையை பிடிக்க சென்றாள். 

 

” ஐயயோ, அம்மாடி ராசாத்தி நா தெரியாம பேசிட்டேன் மா , அதுக்கு  போய் என் இப்படி கோவிச்சுக்குற ? இந்த வயசுல மாமியார் வீட்டுக்கு போனா ஊர் உலகம் என்னை என்ன பேசும் ? வேண்டாம் டா , பாட்டி பாவம்ல ” என்று கெஞ்சிய வல்லி பாட்டியை , மேலும் கீழும் பார்த்த வந்திதா 

 

” ஆமா பாட்டி உங்கள பார்த்தாலும் பாவமாதான் இருக்கு , ஆனா என்ன செய்யிறது கடமைனு வந்துட்டா இந்த வந்திதா , ஆண்டவனே தப்பு பண்ணாலும் விட மாட்டா . இருந்தாலும் உங்களுக்காக பாவம் பாக்குறேன் . சரி இப்ப நாம ஒரு டீல் பேசலாமா ? ” 

 

” என்ன டீல் ? என் கிட்ட காசெல்லாம் இல்லமா , நானே அன்னாடங்காச்சி ” என்று புரூடா விட துவங்கிய வல்லி பாட்டியை 

 

” ஸ்யபா கேடி மேடம் , உங்க கஞ்ச புராணத்த கொஞ்சம் நிறுத்துறீங்களா ? நீங்க கோடி கோடியா வச்சிருந்தாலும் வெறுங்கையில காக்கா ஓட்டுற ஆளுனு எனக்கு நல்லாவே தெரியும் . நா காசு கேக்கல , வேற ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச போறேன் . அதனால கொஞ்ச நேரம் உங்க வாய்க்கு ஜிப்ப போட்டு மூடுங்க”   என்ற வந்திதாவையே சற்று பீதியோடு பார்த்துக்கொண்டிருந்த வல்லி பாட்டி இதற்கு மேல் பேசினால் அவளிடம் நன்றாக வாங்கிக்கட்டி கொள்ள வேண்டும் என்றெண்ணி அமைதியானார்.

 

” இந்த வயசுல மாமியார் , ஐ மீன் போலீஸ் ஸ்டேஷன் போனா , உங்களுக்கு தான் கஷ்டம். சோ நீங்க மாமியார் வீட்டுக்கு போகாம இருக்கணும்னா , என்னை என் மாமியார் வீட்டுக்கு , ஐ மீன் என் புகுந்த வீட்டுக்கு  அனுப்பி வைக்க நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் ” என்ற வந்திதாவை புரியாத பார்வை பார்த்த வல்லி பாட்டி , செய்கையிலேயே அவளை மேலும் தொடருமாக கூறினார். 

 

” அது ஒண்ணுமில்ல பாட்டி , எங்க வீட்ல ஒருத்தருக்கு நான் அமுதன விரும்புறது புடிக்கல. இன் பாக்ட் அவுங்களுக்காகதான் நாங்க இத்தனை நாள் பிரிஞ்சு இருந்தோம், ஆனா இதுக்கு மேல என்னால முடியாது, சோ நீங்க தான் ” அவுங்க ” கிட்ட பேசி , எனக்கும் அமுதனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும். ” என்ற வந்திதாவை இடைமறைத்த வல்லி பாட்டி ” ப்பூ இவ்ளோ சின்ன மேட்டரா , நா கூட நீ டீல்னு சொன்னவுடனே ஏதோ லட்சம் லட்சமா லஞ்சம் கேக்க போறேன்னு நெனச்சேன். ஸ்யபாடி, இதெல்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டர் கண்ணு . அதுவும் உங்க அப்பா , அம்மாவெல்லாம் பார்த்த அவ்ளோ சாதுவா தெரியுறாங்க , அதெல்லாம் நா பேசுனா கேட்பாங்க. ” என்று இல்லாத காலரை வல்லி பாட்டி தூக்கிவிட்டுக்கொள்ள , 

 

அமுதனோ , வந்திதா அந்த ” அவுங்க ” ” அவுங்க ” என்று சொல்லும்போதே கைகாலெல்லாம் வெடவெடக்க , பயத்தில் நாக்கெல்லாம் தந்தியடிக்க , வல்லி பாட்டியை பாவமாக பார்க்க துவங்கிவிட்டான்.

 

வல்லி பாட்டி அத்தனை நேரம் வந்திதாவிடம் கதையளந்து கொண்டிருந்தவர் , அப்போது தான் அமுதனின் முக மாறுதல்களை ஊற்று நோக்கினார். 

 

” ஏய் அமுதா , நீ ஏன் இப்படி பயந்து நடுங்குற ? இதெல்லாம் எனக்கு கை வந்த கலை. எலே டோன்ட் ஒர்ரி பீ ஹாப்பி ” என்று அமுதனின் பயத்திற்கான உண்மை காரணம் தெரியாமல் அவனை உற்சாகப்படுத்த , அமுதனோ ” இப்படி வாண்ட்டடா வந்து  மாட்டிக்கிட்டியே கிழவி ” என மைண்ட் வாய்ஸில் வல்லி பாட்டிக்காக வருந்தியவன், வெளியிலோ ” கிழவி இனிமே தான் நீ  பல சிறப்பான, தரமான  சம்பவங்கள பாக்கப்போற. கெட் ரெடி !  அடை (  அடி ) மழை வெளுத்து வாங்க போகுது போ ” என்றவன் வல்லி பாட்டியை ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.

 

வல்லி பாட்டியும் அவன் கூறுவதின் அர்த்தம் புரியாமல் , வந்திதாவையும் , அமுதனையும் அழைத்துக்கொண்டு அவள் கூறிய அந்த ” அவுங்களை ” பார்க்க வந்திதா வீட்டிற்கு செல்ல , பாவம் அவர் அறியவில்லை , அந்த ” அவுங்க ” கையில் அருவாளுடன் அவர்களுக்காய் காத்துக்கொண்டிருக்கிறார் என்று.

 

 தொடரும் …

Advance Happy New Year Friends !!

அடுத்த வருஷம் மீட் பண்ணுவோம்…

ஸ்டோரி எப்படி போகுதுன்னு மறக்காம கமெண்ட்ஸ்ல சொல்லுங்க , காமெடினு ஏதோ try பண்றேன் , ஆனா அது காமெடி மாதிரி இருக்கானு தெரியல , படிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வருதா , இல்ல cringe ah feel
aagudha ? 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Super pa .. nalla poghuthu…. Nic comedy… Antha avar yar vanthiyoda grandpa va irukumo…

      1. Author

        Thank you so much sangu ji …
        Andha avar yaaru nu next ud la solliruken …