Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 4 ( 4.2 )

 

வல்லி பாட்டி வெட்கபடுவதை உணராமல் , அமுதன் தன் பாட்டிற்கு ஏதோ உலர , அதை கேட்டு கடுப்பான வல்லி பாட்டியும் , வந்திதாவும் ஒரு சேர அவனை காரி உமிழ்ந்தனர்.

” ஏன் டா , நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு ரொமாண்டிக் சீன் பாத்ததுல , வராத வெட்கத்த வெத்தலை பாக்கு வச்சு வரவச்சிருக்கேன் , நீ என்னனா , தரைய பேக்குறேன்னு சொல்லி என்னைய கிண்டல் பண்றியா ? ” என்ற வல்லி பாட்டி அமுதன்  உயரத்திற்கு எம்பி அவன் காதை பிடித்து திருகினார்.

” ஐயோ கிழவி  , வலிக்குது , விடு கிழவி…. ” என வலியில் கத்திய அமுதன் , படாத பாடுபட்டு வல்லி பாட்டியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டான்.

” ஸ்யபா தெய்வமே , நீ இப்படி தரைய சொரண்டுனதுக்கு பேரு தான் வெட்கம்னு எனக்கு தெரியாது.” என்றவனை நம்பாத பார்வை பார்த்த வல்லி பாட்டி ” ஏன் டா , இந்த பீலா விடுற கதையெல்லாம் என் கிட்ட வேண்டாம். இவ்ளோ நேரம் நல்லா அந்த புள்ள உதட்ட கடிச்சு வச்சிட்டு வெட்கம்னா என்னன்னே தெரியாதுனு சொல்ற ? ஏன் நீ அந்த புள்ள வெட்கபட்டு பாத்ததே இல்லையா ? ” என வினவினார்.

அது வரை இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த வந்திதா , இறுதியில் பாட்டி கூறியதை கேட்டு ” ஐயயோ என்னயா தீடீர்னு வண்டிய நம்ம பக்கம் திருப்புறானுங்க. சூனா பானா எப்படியாச்சும் நடுவுல பூந்து ஆட்டத்த கலைச்சி விட்டுடு , இப்படியே போனா உன் அருமை பெருமைக்கெல்லாம் பங்கம் வந்துரும் போலயே ” என்றெண்ணியவள் இருவருக்கும் நடுவில் வந்து ஏதோ கூற வருகையில் , அவளை முந்திக்கொண்ட அமுதன் , தன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க துவங்கினான். 

” ஐயோ கிழவி இவளுக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது கிழவி. அப்படி தான் காலேஜ் படிக்கும் போது ஒரு நாள் என் பிரெண்டு கதிர் இருக்கான்ல அவன் இவ பிரெண்டு கார்த்திகா கிட்ட ப்ரோபோஸ் பன்னிருக்கான் . அந்த பொண்ணும் இவன் லவ்வ அக்செப்ட் பண்ணிட்டு , வெட்கத்துல கன்னம்லாம் செவந்து போயி இந்த மெண்டல் மேதாவி முன்னாடி போய் நின்னுருக்கு. ஆனா இவ இவ … ” என்றவன் அன்று தன் மெண்டல் மேதாவி செய்த ஜாக்கி சான் ஸ்டைலை நினைத்து கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரித்தான். 

இரண்டு வருடங்களுக்கு முன் …

கண்ட நாள் முதலாய் காதல் என்பது போல் , அமுதனின் உயிர்த்தோழன் கதிர்,  கார்த்திகாவை கண்ட மறுகணமே அவள் மேல் கண்மூடி தனமான காதல் கொண்டான். அவளை கண்ட மறுநொடியே அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று வானுக்கும் பூமிக்கும் குதித்தவனை , அமுதன் தான் கார்த்திகாவின் பயந்த சுபாவம் கண்டு ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவளிடம் பேச சொன்னான். 

கதிரும் தன் நண்பனின் அறிவுரையில் இருந்த எதார்தத்தை புரிந்து கொண்டவன் , அவன் கூறியது போலவே ஒரு இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்தான். 

ஆனால் அதற்கு மேல் அவனால் அவன் பொறுமையை இழுத்து பிடிக்க முடியவில்லை , ஆதலால் ஒரு நல்ல நாள் பார்த்து , கையில் ஒரு டெடி பியருடன் கல்லூரி வந்தவன் , நேரே சென்று கார்த்திகாவிடம் ப்ரொபோஸ் செய்துவிட்டான். கார்த்திகாவும் கதிருக்காகவே காத்திருந்தவள் போல் அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். 

காதல் புறாக்கள்  தம் காதல் வெற்றி அடைந்த ஆனந்தத்தில் , இச்செய்தியை  தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ள அவரவர் உயிர்தோழகர்களை காண சென்றனர்.

கதிர் அமுதனை தேடி நூலகம் விரைந்தவன் , அவனிடம் அன்று காலையில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்தவன் , கார்த்திகா அவன் காதலை ஏற்றுக்கொண்டதை மகிழ்ச்சியாய் பகிர்ந்துகொண்டவன் , சந்தோஷத்தில்  தன் நண்பனை ஆரத்தழுவி கொண்டான்.

இங்கே கார்த்திகா கதிர் குடுத்த டெடி பியரை தன் கல்லூரி பையில் பத்திரப்படுத்தியவள் , தனக்கு தானே சிரித்துக்கொண்டே வந்தவளுக்கு தன் காதல் விவகாரம் தன் தந்தைக்கு தெரியவந்தால் என்ன நடக்கும் ? என்ற பயம் நெஞ்சை கவ்வ , சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்திருந்த அவளது முகம் நொடிப்பொழுதில் மிமோசா பியூடிக்கா போல் சுருங்கிவிட  , அவள் கண்களோ ஏஞ்சல் நீர்விழிச்சி போல், சோடியம் குளோரைடு கலந்த உவர்நீரை தெரிக்கவிட்டு கொண்டிருந்தது.  

அப்போது தான் தன் பிரக்டிகல் கிளாஸ் முடித்து லேப் கோர்ட்டை கிழட்டி கொண்டிருந்த வந்திதாவின் கண்ணில், கலங்கிய விழிகளோடும் , கதிர் என்னும்  ரோடு சைடு ரோமியோவால் செர்ரி நிறத்தில் சிவந்திருந்த கன்னங்களோடும் , எதையோ கண்டு அரண்டவள் போல் வரும் கார்த்திகா தென்பட்டாள்.

கார்த்திகாவை அந்நிலையில் கண்ட வந்திதா , எப்பொழுதும் போல தனக்கு தானே ஒரு கணக்கு போட்டுக்கொண்டவள் விரைந்து கார்த்திகாவை நெருங்கியவள் அவள் கைகளை சற்று வன்மையாக பிடித்து தன் புறம் இழுத்தவள் , ” யாருனு சொல்லு ” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்க , கார்த்திகா அவள் இழுத்த வேகத்திலேயே தடுமாறியவள் , இறுதியாக அவள் கேட்ட கேள்வியில் ஒன்றும் புரியாமல் பதட்டத்தில் பட்டென்று அமுதன் பெயரை கூறிவிட்டாள். 

அமுதன் பெயரை கேட்ட மறுநொடி சில்லி சாஸை வெறுமனே அருந்தியவள் போல் , கார்த்திகாவை தர தரவென இழுத்துக்கொண்டு , நூலகம் விரைந்தவள் , அங்கே கதிருடன்  சிரித்துப்பேசிக்கொண்டிருந்த  அமுதனை அதே காரத்தோடு நெருங்கிய வந்திதா , யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் அவன் கன்னத்தில் பளாரென்று  அறைய , அமுதனின் இடது கன்னம் ரெட் வயின் நிறத்தை பூசிக்கொண்டது. 

இவ்வாறு தன் கடந்த காலத்தின் சில பக்கங்களை புரட்டிய அமுதன்,  வல்லி பாட்டியிடம் தன் காதல் தாரிகையின் வீர தீர செயல்களை பகிர்ந்துகொண்டவன் , அன்று வாங்கிய அறைக்கு இன்று தன் தேவதையிடம் அதே கன்னத்தில் வேறொன்றுக்கு ஹஸ்கி வாயிசில் பேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அவளும் அவன் கேட்பதின் அர்த்தம் புரிந்து , தன் உதடு குவித்து அவனுக்காய் ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட , ஆனால் என்ன செய்வது அங்கு தான் நம் நந்தி ( வேற யாரு எல்லாம் நம்ம வல்லி பாட்டி தான் ) குறுக்கே வந்துவிட்டாரே. 

  ” ஏன்டி உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா , என் அமுதன அடிச்சிருப்ப ? என்ன அவன அடிச்சா கேக்கறதுக்கு ஆள் இல்லனு நெனச்சியா ? நா இருக்கேன் என் அமுதனுக்கு … ” என்ற  வல்லி பாட்டி  வந்திதாவிடம் அமுதனுக்காய்  வரிந்து கட்டிக்கொண்டு சென்றார்.

 இத்தனை நாட்கள் வெறும் வாய் வார்த்தைக்காக  “உனக்கு நான் இருக்கேன் ” என்கிறார் என்றெண்ணிய அமுதனுக்கு , இன்று என்றோ ஓர் நாள் தன்னை அடித்ததற்காய் வந்திதாவிடம்  வல்லி பாட்டி தனக்காக பேசுகிறார் என்பது உரைக்க , அதனூடே அவன் அவரிடம் கூறும் பொய்களும் சேர்ந்து அவன் நினைவலைகளை தாக்க , அமுதனின்  மனம் குற்ற உணர்ச்சியில் இறுகிப்போனது. 

நிலைமை சற்று காரமாகவும் , காட்டமாகவும் போவதை இருவரின் இரு வேறு முக பாவனைகளை வைத்தே கண்டுக்கொண்ட வந்திதா , அவ்விடத்தை மீண்டும் தித்திப்பாக்கும் பொருட்டு , வல்லி பாட்டியை திசை திருப்பினாள். 

” ஹலோ கேடி மேடம் , என்ன வாய் ரொம்ப தான் நீளுது. ஆமா நா தான் உன் அமுதனுக்கு  கன்னத்துலையே நாலு  குடுத்தேன். அதுக்கு இப்போ என்னங்குற ? ஓஹ் நீ அந்த காட்சிய லைவ்வா பாக்கலையேன்னு பீல் பண்றியா ? சரி பரவால்ல விடு , நீ இவ்ளோ ஆச படுற , அதுக்காகவாச்சும் அந்த சீன ரீகிரேட் பண்றேன். ஹலோ மிஸ்டர் அமுதன் இந்த பக்கம் வந்து நில்லுங்க , அப்ப தான் உங்க மேல நல்லா போர்ஸா குடுக்க சரியா இருக்கும். எம்மா கேடி மேடம் தள்ளி நில்லுமா அப்புறம் அவனுக்கு குடுக்குறது தப்பி தவறி உன் மேல விழுந்துற போகுது. ” என்ற வந்திதா வல்லி பாட்டியை நோக்கி கண்ணடித்தாள்.

அதை கேட்ட வல்லி பாட்டிக்கு மூக்கிற்கு மேல் கோவம் வர , தன் மொத்த கோபத்தையும் அமுதனின் மேல் காட்ட துவங்கினார்.

” டேய் அமுதா , இங்க என்ன தான் டா நடக்குது? அவளுக்கு எவ்ளோ திமிர் இருந்தா , என் வீட்டுக்குள்ளையே வந்து என் அமுதனயே அடிப்பேன்னு சொல்லுவா ? ” 

” ஹலோ கேடி மேடம் , உங்க வீட்ல இருக்குறவன அடிக்கிறதுக்கு உங்க வீட்டுக்கு வராம , எதிர்த்த வீட்டுக்கா போக முடியும் ? ” என்ற வந்திதா , ஏதோ பெரிய காமெடி சொன்னது போல் தனக்கு தானே கைதட்டி சிரித்துக்கொள்ள , வல்லி பாட்டியோ 

” ஏன் டா அமுதா , உன் டேஸ்ட் ஏன் டா இவ்ளோ மட்டமா போச்சு ? நல்லா புடிச்சிருக்கான் பாரு …” என்று தலையில் அடித்துக்கொண்டார்.

” ச்ச ச்ச அப்படி எல்லாம் என் மெண்டல் மேதாவிய குறை சொல்லாத கிழவி, அவ எவ்ளோ பெரிய மேதாவி தெரியுமா ? எங்க யூனிவர்சிட்டி கோல்டுமேடலிஸ்ட் அவ , ஆனா என்ன கொஞ்சம் அடிக்கடி மூளை மட்டும் கழண்டு விழுந்துரும். மத்தபடி என் ஆளு சூப்பர் தான். அவ்ளோ ஏன் எங்க காம்பினேஷன் எவ்ளோ செம்மையா இருக்கும் தெரியுமா ? ” என்ற அமுதன் தன்னவளை பற்றி பெருமை பீத்திக்கொண்டே சென்றான்.

” டேய் போதும் போதும் ரொம்ப லெங்த்தா போய்கிட்டு இருக்கு , இத்தோட இந்த மேட்டர முடிச்சிடுவோம் ” என்ற வல்லி பாட்டியிடம் , ” என்னது மேட்டரா ? ” என்று அமுதன் வாயை பிளக்க , இது தான் நேரம் என்று அமுதனை நெருங்கிய வந்திதா அவன் கன்னத்தில் தன் பல்தடம் பதியும் அளவு கடித்து வைத்தவள் , அதற்கு மருந்தாய் ஓர் முத்தமும் வைத்தாள்.

வந்திதாவிடமிருந்து இதை சற்றும் எதிர்பாராத வல்லி பாட்டி அவளையே வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருக்க , அவரது மனமோ தாயில்லா பிள்ளைக்கு இன்று தாயாகவும் , தாரமாகவும் ஒரு தேவதையே கிடைத்திருப்பதை நினைத்து ஆனந்த கூத்தாடியது.

நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நடத்துமாம் ….

தொடரும் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Archana

      அப்பாடா கவிஞ்சாவே படிக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன் 😌😌😌😌😌 ரியலி சூப்பரா கொண்டு போறீங்க சிரிப்புக்கு பஞ்சமில்ல🤣🤣🤣🤣🤣பாட்டி vs கேடி காம்போநல்ஔஆ இருக்கு.

      ஸ்ட்ராங்கான பேஸ் வித் சோஷியல் கன்டென்டே ஃபன்னாவும் கொண்டு போற விதம்😍😍😍😍 wow சும்மா மிரசல் தான்.

      பார்ட் பார்ட்டா கொடுக்கிறதே சேர்த்து ஒரே யூடியா கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்🙃🙃🙃🙃

      இந்த பையன் ஏன் கஞ்ஜூஸா இருக்கான்னு யோசிக்க வெக்குது🤪🤪🤪🤪🤪 சிரிப்பு சிரிப்பா படிச்சுட்டே வர இடத்திலே இந்த எபிலே ட்விஸ்ட்டோட முடிச்சது ஷாக்கிங்கா இருக்கு😶😶