Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 28 ( 28.1 )

தலைப்புச்செய்தியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியை கண்டு அனைவரும் அதிர , வந்திதாவும் , கௌரியும் தன் தந்தை தான் அப்பேராசிரியர் என்று உணர்ந்த அதிர்ச்சியில் கண் கலங்கி  நிற்க , ஆனால் அடுத்த நொடியே அவர் செய்த பாவச்செயல்களுக்கெல்லாம் இது தேவை தான் என்று தங்களை தாங்களே தேற்றிக்கொண்டனர். 

குழந்தைகளிடம் நேரம் செலவிட வேண்டிய நேரத்தில் பணம் பணம் என்று அதன் பின் ஓடியதன் விளைவு , ஆதி கேசவனை அவரது மகள்கள் பெயரளவில் மட்டுமே அப்பாவாக கருதியதால் , அவர்களை இச்செய்தி பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் பத்மாவோ தன் கணவனின் உண்மை முகமறிந்த அதிரிச்சியில் மயங்கி விழுந்தார். உடனே கௌரி அவருக்கு சிகிச்சையளிக்க , பத்மா சிறிது நேரத்திற்கு ஆழந்த உறக்கத்திற்கு சென்றார்.

அவரது உடல்நலனை கௌரியிடம் கேட்டறிந்துக்கொண்ட அனைவரும் பத்மாவின் நிலையை எண்ணி வருந்த துவங்கினர். இதில் வல்லி பாட்டி தான் தன்னையே நொந்துக்கொண்டார்.

” ச்ச் எல்லாம் என்னால தான் … நான் தான் தப்பு பண்ணிட்டேன். ”  

” விடுங்க பாட்டி எல்லாம் விதி படி நடக்கணும்னு இருந்திருக்கு … இதுல பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க ? ” என்ற கௌரியை தடுத்த வல்லி பாட்டி 

” அப்படி இல்லடா. நா மட்டும் அன்னைக்கி இந்த ஆதி  திடீர்னு நிறையா ஊர்ல யாருக்கும் தெரியாம பெரிய பெரிய பங்களாவா வாங்குறான். அவன் கிட்ட ஏதோ சரியில்லன்னு உன் அக்கா கிட்ட சொல்லாம இருந்திருந்தா , அவளும் இந்த டிடெக்ட்டிவ் புள்ளைய பார்த்து அத பத்தி பேசாம இருந்திருப்பா. இன்னைக்கி உங்க எல்லாருக்கும் இப்படி ஒரு நிலம வராம இருந்திருக்கும். ” என்று அழ துவங்க , அவர் கூற்றில் அதிர்ந்த கௌரி , வந்திதாவிடம் திரும்பி ,

 ” அக்கா இங்க என்ன தான் நடக்குது ? மாம்ஸ் வேலயில்லாம இருக்காருன்னு தான சொன்ன. இப்போ நியூஸ்ல அவர டிடெக்ட்டிவ்னு சொல்லுறாங்க , அதோட வல்லி பாட்டி வேற ஏதேதோ உளறுறாங்க. ஐயோ இங்க என்ன தான் நடக்குது ? ப்ளீஸ் யாராச்சும் சொல்லுங்க ” என்று கௌரி கத்திக்கொண்டிருக்க ,

 ” எல்லா இந்த பொறுக்கியால தான் ” என்று பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டே அம்மாளிகைக்குள் நுழைந்தார் ஆதி கேசவன் .

 

அவரை அங்கே எதிர் பார்க்காத பெண்கள் அனைவரும் அதிர்ந்து நிற்க , ஆனால் அவரது வரவிற்காகவே காத்திருந்த அமுதன் , ஆதி உள்ளே நுழைந்த மறுநொடி அவர் கன்னத்தில் ஓங்கி பளாரென்று ஓர் அறை  அறைந்தவன் ” ஹவ் டேர் யூ ? எல்லா பொறுக்கிதனத்தையும் நீ பண்ணிட்டு என்னை பொறுக்கின்னு சொல்லுறியா ? ” என்று கத்தியவன் அதோடு  நில்லாமல் , அவர் நெஞ்சிலே ஓங்கி மிதித்தவன் 

” ஏன்டா அனாதை பசங்கன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா போயிடுச்சா ? நீ கோடி கோடியா சம்பாதிக்க என்னை மாதிரி பசங்க எல்லாரையும் எலி பொறி மாதிரி யூஸ் பண்ணுவியா ? பொறுக்கி நாயே … உனக்கு எவ்ளோ தைரியமிருந்தா அந்த பசங்களோட உயிரோட விளையாடியிருப்ப ? ” என்று மீண்டும் கன்னத்தில் பளாரென அறைய , அவன் அறைந்ததில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டுவதை கூட பொருட்டுபடுத்தாத ஆதி கேசவன் , அம்மாளிகையே அதிரும் அளவு சிரித்தவன் ” ஏன்டா நா ஒன்னும் ஒவ்வொரு வீட்டுக்கா போய் அவுங்க பிள்ளைங்கள கடத்தி ரீசர்ச் பண்ணலையே. இந்த ஒட்டுமொத்த சமுதாயமே வேண்டான்னு தூக்கி எரிஞ்ச அனாதை பசங்கள தான என் ரீசர்ச்கு பயன் படுத்திக்கிட்டேன். இதுக்கு என்னமோ இந்த துள்ளு துள்ளுற …. ” 

” டேய் என்ன திமிரா ? பண்ணது எல்லா அயோக்கியத்தனம் இதுல நீ பண்ண வேலைக்கு விளக்கம் வேற குடுத்திட்டு இருக்கியா ? ” என்று அமுதன் இம்முறை அவன் அடிவயிற்றில் ஓங்கி ஒரு  மிதி மிதித்தான்.

எந்தவித பிரச்சனை வந்தாலும் , ” டேக் இட் ஈஸி ” என்று சிரித்துக்கொண்டே கடந்துவிடும் , கோவம் என்றால் எந்த கடையில் கிடைக்கும் , கிலோ என்ன விலை என்று கேலி பேசும் அமுதனின் , இத்திடீர் பரிமானத்தையும் , அவனது ரௌத்திரத்தையும் கண்டு வந்திதாவை தவிர்த்து சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியிலும் பயத்திலும் மயங்கி விழாத குறையாய் நின்றிருந்தனர்.

” ஆமா திமிரு தான்… அதுக்கு இப்போ என்னாங்குற ? ஏன்டா இந்த சொசைட்டில உங்கள மாதிரி அனாதை பசங்கள யாரு தான்டா ஏத்துக்குறா ? கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேலாகியும் குழந்தை இல்லேன்னா கூட லட்ச கணக்குல காச கொட்டி டெஸ்ட் ட்யூப் பேபி , சர்ரகேட் மதர்  ( வாடகை தாய் )ன்னு இப்படி பல டெக்கினிக் யூஸ் பண்ணி தன்னோட வாரிச பெத்தெடுத்துக்கணும்னு தான் நினைக்குறாங்களே தவிர , யாராச்சும் அப்பா , அம்மா இல்லாம கஷ்டப்படுற குழந்தைங்கள தத்தெடுத்துக்க முன்வராங்களா ? இல்லையே ? சரி அப்படியே ஏதோ ஒன்னு ரெண்டு பேர் அப்படி தத்தெடுத்துகிட்டாலும் , அப்புறம் தனக்குன்னு ஒரு குழந்தை வந்ததும் , அந்த புள்ளைய மறுபடியும் அனாதை இல்லத்துல தான தள்ளுறாங்க. 

இப்படி கேட்பாரற்று கிடக்குற உங்கள மாதிரி பசங்கள என் ரீசர்ச்கு சோதனை எலியா யூஸ் பண்ணதுல என்னடா தப்பு …. ? இந்த ரீசர்ச் மட்டும் கம்ப்ளீட்டாகியிருந்தா இந்நேரத்துக்கு நா கோடிஸ்வரன் ஆகியிருப்பேன்டா. ச்ச உன் டிடெக்ட்டிவ் புத்திய காமிச்சு , நா புதுசா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்க லேப்ப கண்டுபிடிச்சு , இப்படி என் ரீசர்ச் கனவுல மண்ணள்ளி போட்டுட்டியேடா ” என்று ஆதி கேசவன் கத்திக்கொண்டிருக்க , அதை சட்டை செய்யாத அமுதனோ

 ” ஏன்டா நாயே எங்கள பார்த்தா கேட்பாரற்று கிடக்குற மாதிரி தெரியுதா ? மவனே இது வரைக்கும் எப்படியோ .. ஆனா இனிமே என்ன மாதிரி பசங்களுக்கு ஒன்னுன்னா அவங்களுக்காக அண்ணனா நா இருந்து தட்டி கேட்பேன்டா… உனக்கு நா குடுக்குற தண்டனைய பார்த்து இனிமே இந்த உலகத்துல எவனுமே என்னை மாதிரி அனாதை பசங்கள தப்பா யூஸ் பணிக்கணும்னு நினைச்சாலே பயந்து சாகனும்டா .. ” 

” ஹா ஹா ஹா … டேய் உன்ன அண்ணா அண்ணான்னு வாய் நிறைய கூப்பிட்டு சுத்துனாலே உன் உடன்பிறவா தங்கச்சி  நித்யா அவளையே உன்னால காப்பாத்த முடியல .. இதுல கண்ணுக்கு தெரியாத தங்கச்சிங்களையும் , தம்பிங்களையும் எப்படிடா காப்பாத்த போற ? ” என்று வினவிய ஆதி அதோடு நில்லாமல்  ” ச்சு பாவம் பெரிய உத்தமபுத்திரி மாதிரி என் பிரெண்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் , என் அமுதன் அண்ணா , வந்தி அண்ணிக்கும் , என் வல்லி பாட்டிக்கும் துரோகம் பண்ண மாட்டேன்னு கடைசி வரைக்கும் சீன் போட்டா .. அதான் வச்சேன்ல ஆப்பு ..  நா வச்ச ஆப்புல இந்த ஸ்ரீஜன் மூலமா நீயே அவள கொள்ளுற மாதிரி ஒரு நிலம வந்துருச்சில்ல … இதான்டா இந்த ஆதி கேசவனோட ட்விஸ்ட்டு  … மவனே ஆரம்பத்துலயிருந்தே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டா வச்சு என் மண்டைய காயவிட்டீல … ஸ்யபா டேய் என்ன நடிப்புடா சாமி .. நீ எவ்ளோ பெரிய டிடெக்ட்டிவ்னு இப்போ தான்டா புரியுது …. நா கூட உன் கஞ்சதனத்த பார்த்து நிஜமாவே நீ அப்பாவின்னு நினைச்சிட்டேன்டா .. ஆனா நீ அப்பாவி இல்ல அடப்பாவின்னு இப்போ தான புரியுது .. உன்ன மாதிரி அனாதை பசங்களோட வாழ்வாதாரத்துக்கு வெளியே கஞ்சனாவும் , கவிஞ்சனாவும் இருந்து உதவி பண்ண நீ , உள்ளுக்குள்ள  யாருக்கும் தெரியாம ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜென்சி நடத்திக்கிட்டு இருக்க டிடெக்ட்டிவ் அமுதவாணன் அந்த பசங்களோட பாதுகாவலன் … வாவ் கேட்கறதுக்கு சூப்பரா இருக்கு … ஆனா இவ்ளோ பிளான் பண்ணி என் முகத்திரைய கிழிச்ச உன்னால நித்யாவ காப்பாத்த முடியலையே … ” என்று ஆதி நக்கலாக பேசிக்கொண்டிருக்க , பாய்ந்து வந்து அவனது கழுத்தை நெரித்த ஸ்ரீஜன் 

” யூ ***** என் நித்யாவ என்னடா பண்ண ? யூ ப்ளடி ******* நீ தான் என் நித்யாவ என்னமோ பண்ணிட்ட … சொல்லுடா என் நித்யாவுக்கு என்னாச்சு ??? ” 

” அட பொறுங்க தம்பி … உங்க கிட்டயிருக்க பெரிய பிரச்சனையே இந்த அவசரக்குடுக்கதனம் தான். அப்பவே என் மாப்பிள்ள அமுதன் நித்யாவ கொள்ள வேணாம் , என்னை புடிச்சதுக்கு அப்புறம் அவள போலீஸ்ல ஹாண்ட் ஓவர் பண்ணிடலாம்னு சொன்னாரு , ஆனா நீ தான் ” எதிரிய எதிர்ல வச்சிக்கலாம் , ஆனா துரோகிய தூரத்துல கூட வச்சிக்க கூடாதுன்னு சினிமா வசனமெல்லாம் பேசி , நீ உயிருக்கு உயிரா காதலிச்ச புள்ளையவே கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு பட்டுனு போட்டு தள்ளிட்ட …. ச்சோ ச்சோ ஆனா பாவம்டா நித்யா … இப்படி எந்த தப்பும் செய்யாம உண்மையா இருந்ததுக்கு அல்பாயுசுல போயிட்டா .. அதான நல்லவங்களுக்கு காலமே இல்ல … ச்சோச்ச்சோ சோ சாட் … ” என்று வேண்டுமென்றே அவர்களை வெறுப்பேற்றிய ஆதியை இம்முறை பளாரென்று அறைந்திருந்தது சாட்ஷாத் அவரது மனைவி பத்மா என்னும் திருமதி பத்மாவதி ஆதிகேசவன் தான்.

நித்யாவிற்கு நடந்தது என்ன ?

அனந்த ரூபனும் , ரூபியும் எங்கே ? மற்ற பிள்ளைகளின் நிலையென்ன ? போலீஸின் கைகளில் ஆதிகேசவன் அகப்படுவானா  ? அத்வேய்தராம சேஷாத்ரி எங்கே சென்றார் ? 

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு … 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment