Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 25

நித்யாவை பற்றி கௌரி கூறியதை கேட்டு அனைவரும் குழம்பி , அறையின் ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்து தனி தனியாக புலம்பி தவிக்க , தீடீரென்று வல்லி பாட்டி ” ஐடியா ” என்று கத்த , அனைவரும் அவரை சூழ்ந்துக்கொண்டு அமர்ந்துவிட்டனர்.

” ஸ்ரீஜா இப்படி இந்த அறைக்குள்ளையே அடைஞ்சுக்கிட்டு , ஒன்னு ஒன்னா நினைச்சு நம்மல நாமலே குழப்பிக்கிறதுக்கு , பேசாம அவுங்க ரெண்டு பேரையும் பாலொவ் பண்ணி உண்மைய கண்டுபிடிக்கலாம்ல ” என்ற வல்லி பாட்டியை முறைத்த ஸ்ரீஜன் ” அட நீங்க வேற பாட்டி , அந்த சரண் என்னையும் , அமுதனையும் ஏர்போர்ட்லயிருந்து , இந்த ரூம்குள்ள வர வரைக்கும் விடாம பாலொவ் பண்ணிக்கிட்டு இருக்கான். இதுல எங்கயிருந்து நாங்க அவன பாலொவ் பண்றது. அப்படியே பாலொவ் பண்ண ட்ரை பண்ணாலும் மூணு பேரும் ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி ரவுண்ட் அடிக்குற மாதிரி ஆகிடும். ”  என்க , அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த வந்திதா ” என்ன ஸ்ரீஜன் சொல்லுற ? இந்த சரண் எதுக்கு உங்கள பாலொவ் பண்றான் ? ” என்று வினவ , 

அதற்குள் வல்லி பாட்டி ” நீங்க ரெண்டு பேரும் ரெண்டு பக்கமா பிரஞ்சு அவுங்கள பாலோவ் பண்ணுங்கடா. ஸ்ரீஜா அந்த சரண் பையனுக்கு மட்டும் தான் உன்ன தெரியும் , நித்யா பொண்ணுக்கு உன்ன தெரியாதுல்ல , சோ நீ நித்யாவ பாலொவ் பண்ணு. அதே நேரத்துல , சரணுக்கு இந்த அமுதன தெரியாது. சோ அமுதன் சரண்ண பாலொவ் பண்ணட்டும் ” என்று கூறி முடிக்கும் முன்பே , ஸ்ரீஜனும் , அமுதனும் ஒருசேர ” நோ ” என்று கத்த , அதில் பெண்கள் மூவரும் திகைத்து போயினர்.

” டேய் பிசாசுங்களா எதுக்கு டா இப்படி ஹை பிச்சுல கத்தி என் காது ஜவ்வ கிழிக்க பாக்குறீங்க ? “

” அது ஒன்னுமில்ல கிழவி , இந்த சரண் பையன் வேற பெரிய கிரிமினல் லாயர். ஒருவேள நா அவன பாலொவ் பண்றது தெரிஞ்சு , அடியாளுங்க யாரையாச்சும் அனுப்பி என் கதைய முடிச்சிட்டா ? அதான் எதுக்கு வம்பு , பேசாம நா நித்யாவையே பாலொவ் பண்ணுறேன். ” என்று அசடு வழிந்த அமுதனின் காதை பிடித்து திருகிய வந்திதா ” கேடி பையா , நீ சரண விட்டுட்டு , எதுக்கு நித்யாவ பாலொவ் பண்றேன்னு சொல்லுறேன்னு  எனக்கு நல்லாவே புரியுது. மவனே இந்த ஜென்மத்துல உனக்கு நா மட்டும் தான் பொண்டாட்டி. என்ன தவிர உன் கண்ணு இங்க அங்கன்னு வேற எங்கயாச்சும் அலைபாஞ்சுச்சு , அப்புறம் கண்ண நொண்டி கையில குடுத்துருவேன் ஜாக்கிரத ” என்று அமுதனை மிரட்டியவள் , ஸ்ரீஜன் புறம் திரும்பி ” உனக்கு என்ன பிரச்சனை ? எதுக்கு நித்யாவ பாலொவ் பண்ண மாட்டேன்னு சொல்லுற ? “

” அது ஒன்னுமில்ல வந்தி , எங்க அமுதனுக்கு கண்ணு அலைபாயுற மாதிரி எனக்கும் அலைபாஞ்சிற போகுதோன்னு பயமா இருக்கு ” என்று ஸ்ரீஜன் வெட்கப்பட, அமுதனோ ” மச்சி என் இனமடா நீ ” என்று அவனை கட்டிக்கொள்ள ,  வல்லி பாட்டியோ 

” அட கேடி பசங்களா , இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போயிகிட்டு இருக்கு. உங்களுக்கு என்னடா இவ்வளவு ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது. ” என்று அவர்களை பிரித்து நிற்கவைத்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார்.

” ஸ்ரீஜன் ப்ளீஸ் பீ சீரியஸ். இப்போ சரண் ரீசேர்ப்ஷன்ல உங்கள பத்தி தான் விசாரிச்சிகிட்டு இருக்கான். தாங்க் காட் உன் பேர்ல ரூம் புக் பண்ணாம , அமுதன் பேர்ல ரூம் புக் பண்ணிட்டேன். ” என்று வந்திதா ஒரு பெரு மூச்சு விட , ஸ்ரீஜனும் , அமுதனும் அவள் பேசுவதின் உள்ளர்த்தம் புரியாமல் விழிக்க , வந்திதாவோ 

” லிசன் நா சொல்லுறது எல்லாரும் நல்லா தெளிவா கேட்டுக்கோங்க. இனிமேலயிருந்து அமுதன் தான் சி.பி.ஐ ஆஃபீஸர்” 

” எதே இந்த கஞ்ச பையன சி.பி.ஐ ஆஃபீஸர்ன்னு  சொன்னா யாரும் நம்பமாட்டாங்க … அதுவும் சி.பி.ஐ ஆஃபீஸர்னா எவ்ளோ கெத்தா இருக்கனும் , இவன பார்த்தா கெத்து மாதிரியில்ல வெத்து மாதிரியிருக்கு ” என்ற வல்லி பாட்டியை முறைத்த அமுதன் ” ஏய் கிழவி , எதோ ஒரு மூணு மாசமா நா வாடகை குடுக்கல  , அதுக்காக இப்படி தான் பப்ளிக்ல என் இமேஜ டேமேஜ் பண்ணுவியா ? ” என்று அவரிடம் சண்டைக்கு போக , 

இவர்களின் சண்டையில் வெறுப்பான வந்திதா ” ஐயோ உங்க ரெண்டு பேரோட சண்டைய அப்பறமா வச்சிக்கிறீங்களா ? இப்போ முதல்ல நா சொல்ற பிளான்ன கேளுங்க … ” என்று வந்திதா தன் திட்டத்தை விளக்க , கௌரியை தவிர்த்து மற்ற அனைவரும் அவளது திட்டத்திற்கு ஒற்றுக்கொள்ள , முதலில் அவளது திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்த கௌரி , பின் தன் அக்காவின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அவளது திட்டத்தின் படி செயல்பட ஒற்றுக்கொண்டாள்.

வந்திதாவின் திட்டத்தின் படி , முதலில் ஸ்ரீஜன் , சரணின் குருநாதர் வழக்கறிஞர் ப்ரதாப் பன்சாலிற்கு  அழைத்து , சரணிடம் கேஸ் தள்ளுபடியான உண்மையையும் , தன்னை பற்றிய தகவல்களையும் கூற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள , முதலில் அவர் தயங்கினாலும் , பின் ஸ்ரீஜன் மேலிருந்த நம்பிக்கையில் அவன் சொன்னது போல் செய்வதாக வாக்களித்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீஜன் நித்யாவை பின்தொடர துவங்கினான்.

வந்திதாவின் திட்டத்தின் அடுத்த கட்டமாக , அமுதன் வேண்டுமென்றே ரூபன் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக சேர்ந்தவன் , ரூபியை பற்றி யாருக்கும் தெரியாமல் விசாரிப்பது போல் நடிக்க துவங்கினான். அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்த சரணும் மெல்ல மெல்ல அமுதன் தான் ரூபி காணாமல் போன வழக்கை விசாரிக்க வந்த சி.பி.ஐ ஆஃபீஸர் என்று நம்ப துவங்கினான். அதற்கு பின் அமுதன் சரணை நெருங்குவதற்காக , வந்திதாவின் திட்டத்தின் படி , வல்லி பாட்டி அமுதனை வந்திதாவின் காதலன் என்று அவளது பெற்றோரிடமும் , சரணிடமும் அறிமுகம் செய்து வைக்க , அமுதனை வந்திதாவின் காதலனாய் எதிர்பாராத சரண் முதலில் அவனை கண்டு அதிர , பின் அமுதனின் கலகலப்பான பேச்சில் கவரப்பட்டவன் அவனிடம் சகஜமாக பழக துவங்கினான்.

அனால் இதில் யாரும் எதிர்பார்காதது போல் , வந்திதாவின் பெற்றோர் , அமுதனை தங்கள் மருமகனாக ஏற்றுக்கொண்டது தான். ஆனால் அதற்கு பின் , அவர்கள் தனியாக ஓர் திட்டம் தீட்டி , வல்லி பாட்டி , அமுதன் , மற்றும் சரணை அவர்களது திட்டத்தில் இணைத்து கொண்டார்கள்.

இத்தனை வருடங்கள் தாங்கள் பணம் தான் பிரதானம் என்று அதன் பின் ஓடியதில் தங்கள் மகள்களிடம் அன்பு செலுத்தாமல் போனதையும் , இன்று அவர்கள் தங்கள் மகள்களின் பாசத்திற்கு ஏங்குவதாகவும் , ஆனால் அவர்கள் தங்களை எதிரி போல் பார்ப்பதை எண்ணி வருத்தம் கொள்வதாக பகிர்ந்து கொண்டவர்கள் . திருமணத்திற்கு பின் எப்படியேனும் அமுதன் வந்திதாவிடம் பேசி அவளை அவர்களிடம் இயல்பாய் பழக வைக்கும் படி அவனிடம் கெஞ்ச. அவர்கள் கெஞ்சுவதை காண இயலாமல் , அமுதனும் அதற்கு ஒத்துக்கொள்வது போல் தலையாட்டிவிட்டு , அதை வந்திதாவிடம் பகிர , அமுதனின் செயலில் கடுப்பான 

வந்திதா , அவனிடம் கோபித்துக்கொள்ள. பின் கௌரி தான் , தங்கள் பெற்றோர் முன் அமுதனை அனாதை என்று திட்டுவது போல் திட்டி , அவர்கள் தங்களுக்கு செய்த துரோகத்தை அதன் மூலம் கிண்டி கிளறி அவர்களை திருந்த வைக்கலாம் என்று யோசனை கூறியவள், அதை செயல்படுத்தவும் தவறவில்லை.

கௌரி நினைத்தது போலவே அவளது பெற்றோரும் அந்நிகழ்விற்கு பின் குற்ற உணர்ச்சியில் தவித்தவர்கள் , அமுதனை அழைத்து மீண்டும் அவனிடம் வந்திதாவை அவர்களுடன் சேர்த்து வைப்பதை பற்றி பேச , சரியாக அந்நேரம் வல்லி பாட்டி சரண் , கௌரியின் காதல் விவகாரத்தை போட்டு உடைக்க , சரணை பற்றியும் , அவனது குடும்பத்தை பற்றியும் நன்கறிந்தவர்கள் , சரணின் காதலுக்கும் பச்சை கோடி காட்டினார்கள்.

 அமுதனிடம் வந்தியை அவர்களுடன் சேத்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது போல் , சரணிடமும் கௌரியை தங்களுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் வைத்தனர்.

  இந்நிகழ்வை பயன்படுத்தி கொண்ட அமுதன் சரணிடம் நெருங்கி பழக துவங்கி , அவனிடம் அவனது பெற்றோரை பற்றி விசாரிக்க , சரணோ அவர்கள் இருவரும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றும் , 1999ஆம் வருடம் நடந்த கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்கள் என்று பகிர்ந்து கொண்டவன் , நாட்டுக்காக தங்கள் பிராணனை தியாகம் செய்த தன் பெற்றோர் மேல் அவனுக்கு இருக்கும் மதிப்பையும் , மாரியாதையையும் விவரித்தவன் , அவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும் தானும் இந்திய தேசத்திற்கு தன்னால் முடிந்த தொண்டாற்ற வேண்டும் என்பதே அவனது வாழ் நாள் லட்சியம் என்றுரைத்தான்.

இதை ஸ்ரீஜனிடம் பகிர்ந்துக்கொண்ட அமுதன் , சரண் மேல் தனக்கிருக்கும் நல்ல அபிப்ராயத்தை எடுத்துரைக்க , ஸ்ரீஜனுக்கும் சரண் மேல் ஓர் நம்பிக்கை வந்தது. அதே நேரம் ஸ்ரீஜன் நித்யாவை இத்தனை நாட்கள் கண்காணித்ததில் , அவள் அடிக்கடி எங்கோ காணாமல் போவதை கூறியவன் , அவள் எங்கு செல்கிறாள் , என்ன செய்கிறாள் என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை என்று புலம்ப துவங்கினான்.

இவர்களின் உரையாடலுக்கு நடுவிலேயே அமுதனுக்கு நித்யாவிடமிருந்து சரணை தவறாக சித்தரித்து ஓர் குறுஞ்செய்தி வந்தது. மேலும் அக்குறுஞ்செய்தியில் சரண் அமுதனை ரகசியமாக பின்தொடர்வதை பற்றி குறிப்பிட்டிருக்க , நித்யாவிற்கு சரண் அவனை பின்தொடர்வது எவ்வாறு தெரிந்தது என்று குழம்பிப்போன ஸ்ரீஜனுக்கும் , அமுதனுக்கும் அப்போது தான் ஓர் மூன்று மாதத்திற்கு முன் சரணுக்கு விபத்து நேர்ந்ததும் , அப்போது நித்யா தான் அவனுக்கு ஓர் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கௌரி ஒருமுறை பேச்சு வாக்கில் கூறியது நினைவிற்கு வர , இருவரும் விரைந்து சென்று சரணின் வாயை கட்டி அவனை கடத்தி சென்று அமுதனுக்கு நெருங்கிய மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச்சென்று , அவனது வலது கையின் ஹுமெரஸ் என்னும் எலும்பிற்கு அடியிலிருக்கும் சதைக்குள் பொறுத்த பட்டிருந்த  ” எலெக்ட்ரானிக் பக் ” என்னும் இரகசியமாக ஒற்றுக்கேட்க பயன்படுத்த படும் ” கவெர்ட் லீசனிங் டிவைஸ்”ஸை அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெளியில் எடுக்க , இதை சற்றும் எதிர் பாராத சரண் அவ்விடத்திலேயே மயங்கி சரிந்தான்.

அரைமணி நேரத்திற்கு பின் கண்விழித்த சரண் , தன்னருகில் நின்றிருந்த ஸ்ரீஜனையும் , அமுதனையும் கேள்வியாய் நோக்க , ஸ்ரீஜனோ தன்னிடமிருந்த பக் ஜாமெரை சொடுக்கிவிட்டு , அவனிடம் அனைத்து உண்மைகளையும் ஒன்று விடாமல் கூறியவன் , இறுதியாக நித்யா அவனது உடம்பில் பொருத்தியிருந்த கருவியை பற்றியும் விவரித்தவன்  , இத்தனை நாள் அவள் சரண் பிறரிடம் பேசுவதையும் , சரணிடம் பிறர் பேசுவதையும் அவனுக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு கொண்டிருந்திருக்கிறாள் என்று விளக்க , அதை கேட்ட சரணுக்கோ ஒருபுறம் நித்யாவின் துரோகம் கட்டுக்கடங்காத கோவத்தை குடுத்ததெனில் , மறுபுறம் அமுதன் , வந்திதா , கௌரி என்று அனைவரும் அவனிடம் பொய்யுரைத்து ஏமாற்றியது பெரும் வேதனையை குடுத்தது.

” ஒரு நிமிஷம் .. ஒரு நிமிஷம் … ” என்று இம்முறை சரணுக்கு பதிலாய் கௌரி அமுதனை இடைமறைக்க , அமுதனோ அவள் கேட்க போகும் கேள்வியை முன்பே அறிந்தவன் போல் , சரணை அவளிடம் கோர்த்துவிட்டான். சரணோ ” எனக்கு எல்லா உண்மையும் முன்னாடியே தெரியும் கௌரி. நீ என்கிட்ட பொய் சொன்னத தெரிஞ்சுக்கிட்ட அடுத்த செகண்ட் உன் மேல எனக்கு பயங்கரமா கோவம் வந்துச்சு. ஆனா என்னைக்காச்சும் ஒருநாள் நீயா வந்து என்கிட்ட உண்மைய சொல்லுவன்னு நினைச்சேன். அதுனால தான் அமுதன உன் கிட்ட எனக்கு உண்மை தெரியும்ங்குறத சொல்ல வேண்டாம்னு சொன்னேன். ஆனா நீ கடைசி வரைக்கும் உண்மைய சொல்லவே இல்ல கௌரி …. இப்போ கூட அமுதன் உண்மைய சொல்லும் போது தான் நீயும் அவனுக்கு ஆமா சாமி போடுறியே தவிற , நீயா வந்து என் கிட்ட உண்மைய சொல்லவே இல்ல. உன் அக்கா சொன்னத வேத வாக்கா பாலொவ் பண்ணிருக்க , பட் ஏன் கௌரி என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட நீ யோசிச்சே பாக்கல. உன் மேல நா வச்சிருந்த நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்ட … ” என்றவன் அமைதியாய் நிற்க , கௌரியோ தன்னிலை விளக்கம் குடுக்க வர , அவளை தடுத்த சரணோ ” பாஸ்ட் இஸ் பாஸ்ட் கௌரி. ஒரு உறவுக்கு அடித்தளமே ” லாயல்ட்டி ” தான். எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும்  நாம நம்ம உறவுகளுக்கு உண்மையா தான் இருக்கனும் . இதுக்கு மேல நடந்தத பத்தி பேசவேணாம் … இனிமேலாச்சும் ஒருத்தர் கிட்ட ஒருத்தர் மனசு விட்டு பேசி , எதையும் மறைக்காம இருப்போம். ” என்றவன் அவ்விடத்தை விட்டு நகர போக , அவனை தடுத்த அமுதன் , ”  சரா நாம எல்லாருமே சூழ்நிலை கைதிகள் தான். கௌரி வேணும்னே உன் கிட்ட பொய் சொல்லல … ” என்று கௌரிக்கு பரிந்து பேச போக , அவனை தடுத்த சரண் ” ப்ளீஸ் அமுதா, இந்த டாபிக்க இதோட விட்டுடலாம்… ” என்றவன் இத்தனை நேரமிருந்த கலகலப்பு மாறி , சோர்ந்து போய் அங்கிருந்த ஓர் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான்.

சரணின் நிலையை கண்டு , அவனிடம் பொய் உரைத்ததற்காய் , தன்னை தானே நொந்துக்கொண்ட கௌரி, அவனிடம் இனிமேல் எப்போதும் பொய்யுரைக்க கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டவள் , அமுதனிடம்  நித்யாவிற்கு எதிராய் வேறேதும் ஆதாரம் கிடைத்ததா என்று வினவ , அமுதனோ 

” அட நீ வேற கௌரி , அந்த நித்யா நாங்க சரண் கிட்டயிருந்த பக்க எதுட்டோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு , என் வெட்டிங்க்கு முன்னாடி நாள் , நா ரூபன் இன்ஸ்டிடியூட் போனப்போ , என்ன மீட் பண்ண வந்தவ , ஏதோ எமர்ஜென்சின்னு சொல்லி என் மொபைல்லயிருந்து யாருக்கோ கால் பண்ணி பேசிட்டு , மொபைல ரிட்டர்ன் பண்ணவ , சரண பத்தி என் கிட்ட தப்பா பேச அராம்பிச்சா . நானும் அவ சொல்றதயெல்லாம் நம்புன மாதிரி நடிச்சேன் . அப்படியே கொஞ்ச நேரம் என் கிட்ட பேசிகிட்டு இருந்துட்டு அவ கிளம்பிட்டா. நா உடனே என் மொபைல செக் பண்ணேன் , அப்போ தான் அவ அதுல சரணுக்குள்ள இம்பிளான்ட் பண்ண அதே மாதிரியான ஒரு டிவைஸ என் மொபைலையும் இன்சர்ட் பண்ணிருந்தத கண்டுபிடிச்சேன். 

உடனே ஸ்ரீஜன் , வந்திதா அப்புறம் நம்ம சரணுக்கும் இந்த விஷயத்த கன்வே பண்ணேன். ஸ்ரீஜன் தான் இந்த டிவைஸ் வச்சே அவள ட்ராப்  பண்ணலாம்னு ஐடியா குடுத்தான். அவன் குடுத்த ஐடியா படி , முதல்ல நானும் சரணும் அந்த காஃபி ஷாப்ல எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணி , நித்யா மேல எங்களுக்கு சந்தேகமே இல்லாத மாதிரி அவள நம்பவச்சோம். அவளும் நாங்க பேசுனத நம்பி , அவளோட நெஸ்ட் பிளான் படி யாருக்கும் தெரியாம அவ வீட்டுக்கு போனா. நம்ம ஸ்ரீஜனும் அவள பாலொவ் பண்ணி போயிருக்கான். அவுங்க அப்பா அவள வீட்டுக்குள்ள சேர்க்காததுனால அவளே வீட்டு காம்பௌண்ட்ட எகிறி குதிச்சுதான் போயிருக்கா , ஸ்ரீஜனும் அதே மாதிரி அவ வீட்டுக்குள்ள நுழைஞ்சு அவள பாலொவ் பண்ணப்போ , அவ மறைஞ்சு மறைஞ்சு ஒரு ரூமுக்குள்ள நுழையுறத பார்த்து , அவனும் பின்னாடியே போயிருக்கான். அங்க அவ யாரோ ஒருத்தர் கிட்ட ரொம்ப ரூடா பேசிக்கிட்டு இருந்துருக்கா. இருட்டுல ஸ்ரீஜனுக்கு அது யாருன்னு தெரியல. அவ ஏதோ சொல்ல பதிலுக்கு அந்த ஆள் மறுத்து பேசியிருக்காங்க. அதுல கோவம் வந்த நித்யா , அந்த ஆள திட்டிட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டா. அவ போனதுக்கு அப்புறம் அந்த ஆள் யாருன்னு பார்க்க ஸ்ரீஜன் அவுங்க பக்கம் போயிருக்கான். ” என்று அமுதன் முடிக்கும் முன்பே , 

” அது வேற யாருமில்ல …. நான் தான் அந்த ஆளு ” என்று அதிரூபன் கௌரி முன்பு வந்து நிற்க , அவனது குறளிலிருந்து வித்யாசத்தை கண்டு அதிர்ந்த கௌரி ” மாம்ஸ் இவரு … இல்ல … இல்ல … இவுங்க ட்ரான்ஸ்ஜெண்டரா ” என்று வினவ , அமுதனோ ” ஆமா கௌரி இவுங்க திருநங்கை தான் … ” என்று கூற , கௌரிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது.

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. தல சுத்துது டா தல சுத்துது🥵🥵🥵🥵