கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 22
” அப்போ குடும்பமா சேர்ந்து என்கிட்ட புரூடா விட்டிங்களா ? ” என்ற சரண் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள ,
” டேய் சரா , கொஞ்சம் வெயிட் பண்ணு. பிளாஷ் பாக்க புள்ளா சொல்லி முடிச்சுடுறேன். அப்புறம் உனக்கே புரியும் நாங்க ஏன் உன்கிட்ட உண்மைய சொல்லாம மறைச்சோம்னு ” என்ற அமுதன் , அவன் விட்ட இடத்திலிருந்து துவங்கினான்.
வந்திதாவின் நச்சரிப்பு தாங்காமல் சென்னை விமான நிலையம் சென்றவன் , அங்கிருந்து ஸ்ரீஜனை அழைத்துக்கொண்டு தாஜ் ஹோட்டல் விரைந்தான். முதலில் வந்திதாவிற்காக அவனை அழைக்க சென்றிருந்தாலும் , விமான நிலையத்திற்கும் , விடுதிக்கும் இடையிலான பயணத்தில் ஸ்ரீஜனின் பேச்சில் கவரப்பட்ட அமுதன் , அவனிடம் தான் எழுதிக்கொண்டிருக்கும் கதையை பற்றி விவரிக்க துவங்கினான்.
” சார் உங்கள நா ஒரு கேள்வி கேக்க போறேன். நா இப்போ ஒரு ஸ்டோரி எழுதுறேன். அதுலயிருந்து தான் கேள்வி கேக்க போறேன். சோ பர்ஸ்ட் ஸ்டோரிய எக்ஸ்பிளைன் பண்ணிட்டு அப்புறம் கேள்வி கேக்குறேன்.” என்ற அமுதன் , ஸ்ரீஜனிடம் தன் கதையை விவரிக்க துவங்கினான்.
” சார் நம்ம ஸ்டோரில பர்ஸ்ட் சீன்லையே ஒரு பொண்ண காணாம போயிடுறா . அந்த பொண்ணுக்கு வேண்டப்பட்டவங்க ஒரு ரெண்டு பேர் சேர்ந்து அந்த பொண்ண காணும்னு போலீஸ்ல கம்பிளைன்ட் குடுத்துறாங்க. உங்கள மாதிரி ஒரு ஆஃபீஸர் அந்த கேஸ்ஸ இன்வெஸ்டிகேட் பண்ண வராரு. முதல்ல அந்த பொண்ணுக்கு வேண்ட பட்டவங்க கிட்டயிருந்து இன்வெஸ்டிகேஷன்ன ஸ்டார்ட் பண்றாரு.
இதுல ஹைலைட் என்னனா இவர் இன்வெஸ்டிகேஷன் பண்ண ரெண்டு பேரும் , ஒரே விஷயத்த அவுங்க அவுங்க பெர்ஸ்பெக்டிவ்ல சொல்லுறாங்க. அதுல பர்ஸ்ட் ஆள் என்ன சொல்றான்னா , அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அவள யாரோ கடத்திட்டாங்க , எதுக்காக கடத்துனாங்கன்னு தெரியலன்னு சொல்றான். பதிலுக்கு அந்த போலீசும் , ஒரு வேல அந்த பொண்ணு சூசைட் ஏதாச்சும் பண்ணியிருக்க சான்ஸ் இருக்கான்னு கேக்குறாரு. அதுக்கு அந்த பையன் , நோ சார். ஐம் டாம் ஸுர் அவ ரொம்ப தெளிவான பொண்ணு , சோ சூசைட் எல்லாம் பன்னிருக்க மாட்டா , அந்த பொண்ண யாரோ கடத்திட்டு தான் போயிருக்காங்கன்னு சொல்லுறான்.
அடுத்து அந்த போலீஸ் அந்த பொண்ணுக்கு வேண்டப்பட்ட ரெண்டாவது ஆள பாத்து தனியா விசாரிக்கிறாரு. அந்த பையன் கிட்டயும் அதே கேள்விய தான் கேக்குறாரு. ஆனா அந்த பையன் , சார் அந்த பொண்ணு ஆல்ரெடி டிப்ரெஷன்ல தான் இருந்துச்சு. ஒரு வேல நீங்க சொல்ற மாதிரி அந்த பொண்ணு சூசைட் பண்ணியிருக்குறதுக்கு கூட நிறையா சான்ஸ் இருக்கு சார். அண்ட் மோர் ஓவர் அந்த பொண்ணு மெண்டலி ரொம்ப வீக்கா இருப்பா, சோ எனக்கு தெரிஞ்சு அவள யாரும் கடத்திருக்க மாட்டாங்க. நவ் ஐம் டாம் ஸுர் சார் அந்த பொண்ண யாரும் கடத்திருக்க மாட்டாங்க , அவளா தான் ஏதாச்சும் ஒரு கண்காணாத இடத்துக்கு போய் சூசைட் பண்ணிருப்பான்னு சொல்லுறான்.
இவங்க ரெண்டு பேர்க்கிட்டயும் விசாரிச்ச அந்த போலீஸ் ரொம்ப கன்பியூஸ் ஆகிடுறாரு. இந்த ரெண்டு பேரும் ஒரே விஷயத்த தான் ரெண்டு விதமா சொல்லுறாங்க. இப்போ இவுங்க ரெண்டு பேர் சொல்றதுல யார் சொல்றது உண்மை , யார் சொல்றது பொய்ன்னு கண்டுபிடிக்க முடியாம அந்த போலீஸ் மண்டைய பிச்சிக்கிறாரு. இப்போ சொல்லுங்க சார் , அந்த போலீஸ் இடத்துல நீங்க இருந்திங்கன்னா என்ன பண்ணுவீங்க ? ” என்று அவன் கேட்டு முடிக்கவும் , விடுதி வரவும் சரியாக இருக்க , அமுதன் பேசியதை கேட்டதிலிருந்து அத்தனை நேரம் ஸ்ரீஜனின் மனதிலிருந்த குழப்பம் அனைத்தும் பஞ்சாய் பறந்திருக்க, மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த ஸ்ரீஜன் , அமுதனை கட்டியணைத்து , அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவன் ” தாங்க் யூ சோ மச் மேன் …. யூ ஆர் சிம்பிளி சூப்பர்ப் ” என்க , ஸ்ரீஜனின் செய்கையில் பயந்த அமுதன் , அவனை தள்ளி விட்டு ” ஐயோ சார் … நீங்க நினைக்குற மாதிரியான ஆள் நானில்ல. என் உடல் , பொருள், ஆவி எல்லாம் என் வந்தி செல்லத்துக்கு மட்டும் தான். ” என்க ,
அவன் கூறிய தினுசில் தன்னிலை மறந்து சிரித்த ஸ்ரீஜன் , ” யூ நாட்டி பாய்… உன் கூடயிருந்தா என் கவலையெல்லாம் இருந்த இடமே தெரியாம மறைஞ்சு போயிடுது மேன். ஹ்ம்ம வந்திதா நிஜமாவே லக்கி தான். ச்ச பர்ஸ்ட் டைம் நா ஏன் பொண்ணா பிறக்கலைன்னு என்னைய பீல் பண்ண வச்சிட்ட டா ” என்றவன் அவன் தோளில் கை போட , அமுதனோ
” சார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொன்னா, நீங்க என்னடான்னா சம்மந்தமே இல்லாம என்ன என்னமோ பேசுறீங்க ? ” என்று கேட்க , ஸ்ரீஜனோ
” நீ கேட்ட கேள்விக்கான பதில நம்ம ரூம்குள்ள போய் சொல்றேன் ” என்று கண்ணடிக்க , அமுதனோ ” எதே ரூம்குள்ளையா ? சார் நா அந்த மாதிரி ஆளில்ல சார் ” என்று கத்த , ஸ்ரீஜனோ அவன் வாயை பொத்தி , ஹோட்டலுக்குள் அழைத்து சென்றவன் , வந்திதா அவர்களுக்காய் அமுதன் பெயரில் முன்பதிவு செய்திருந்த அறைக்குள் அழைத்து சென்றவன் , அவன் வாயிலிருந்து கையெடுக்காமலேயே ” நீ கேட்ட கேள்விக்கு ஒரு பத்து நிமிஷத்துல பதில் சொல்லுறேன். அது வரைக்கும் சமத்து புள்ளையா , உன் வாய வச்சிக்கிட்டு சும்மா இரு ” என்றவன் அவர்களுக்கு முன்னே அவ்வறையில் கூடியிருந்த வந்திதா , கௌரி மற்றும் வல்லி பாட்டியின் புறம் திரும்ப , அதில் வந்திதாவோ , ஸ்ரீஜன் அமுதனின் வாயை பொத்திக்கொண்டு காதில் ஏதோ ரகசியம் கூறுவதை கண்டு தன்னவனின் மேல் பொறாமை கொண்டவள்
” ஏய் ஸ்ரீஜன் , என் அமுதன என்னடா பண்ணி வச்சிருக்க ? ஒழுங்கா அவன விடு ” என்று அமுதனை தன் பக்கம் நிற்க வைத்துக்கொள்ள , வல்லி பாட்டியோ
” ஏன் தம்பி .. உங்கள பார்த்தாலே ஏதோ பெரிய பதவியில் இருக்க பெரிய ஆஃபீஸர் மாதிரி தெரியுது, ஆனா போயும் போயும் இவன போய் கட்டிபிடிச்சுக்கிட்டு வரீங்க ? ஏன் தம்பி உங்க டேஸ்ட் இவ்ளோ மட்டமா இருக்கு ? ” என்று அமுதனை கேலி செய்ய , அதில் கடுப்பான அமுதனோ ” ஏய் கிழவி , என்ன நீ சந்தடி சாக்குல என்னைய கலாய்க்குற ? ஆமா என் கிட்ட அப்படி என்ன குறைய கண்டுட்ட நீ ? என் கிட்ட அறிவில்லையா ? திறமையில்லையா ? அழகில்லையா ? ”
” எல்லாம் இருக்குடா ஆனா அத எதையுமே நீ யூஸ் பண்றதே இல்ல ” என்று வல்லி பாட்டி நக்கலடிக்க , சுற்றியிருந்த அனைவரும் ஒருமுறை வாய் விட்டு சிரித்தனர்.
பின் கௌரி தான் ” ஷூ ஷூ நானும் பார்த்துகிட்டே இருக்கேன், என் மாம்ஸ்ஸோட வேல்யூ தெரியாம, நீங்க எல்லாரும் அவர கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒருநாள் இல்ல ஒருநாள் என் மாம்ஸ் பெரிய ரைட்டராகி கோடி கோடியா சம்பாதிக்க போறாரு , அன்னைக்கு இருக்கு உங்க எல்லாருக்கும் கச்சேரி. ” என்றவள் அமுதன் புறம் திரும்பி , ” மாம்ஸ் யூ டோன்ட் ஒர்ரி. ஐ வில் டேக் கேர். இந்த கௌரியிருக்க உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது ” என்றவள் அமுதனிடம் ஹாய்- பாய் அடித்துக்கொண்டாள்.
பின் வந்திதா தான் ” சரி சரி உங்க மாமா மச்சினிச்சி கொஞ்சலெல்லாம் முடிஞ்சுதுன்னா , நாம வந்த வேலைய பார்க்கலாமா ? ” என்று வினவ , கௌரியின் முகமும் , ஸ்ரீஜனின் முகமும் சோர்ந்து போனது.
அவர்கள் இருவரின் வாடிய முகத்தை கண்ட அமுதனும் , வல்லி பாட்டியும் , என்ன ஏதென்று விசாரிக்க , வந்திதா தான் , தேவஸ்வரூபி காணாமல் போனது பற்றியும் , அதே போல் டெல்லியிலிருக்கும் ரூபன் இன்ஸ்டிடியூட்டின் கிளை இன்ஸ்டிடியூட்டில் படித்த ஸ்ரீஜனின் தம்பி நிரஞ்சனும் அதே போன்று காணாமல் போனதை பற்றியும் விளக்கினாள்.
” ஏய் ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் ” என்று அவனை தடுத்த சரணை முறைத்த அமுதன் ” ஏன்டா ஒரு பிளாஷ் பாக்க ஒழுங்கா சொல்ல விட மாட்டியா ? ” என்று கடியாக , அவனை கண்டுக்காத சரணோ ” எனக்கு ஒரு டவுட். வந்திதா அத்தாச்சிக்கு கௌரி ” தேவன் இல்லம்”ங்குற பெயர்ல ஒரு காப்பகம் வச்சு நடத்துறதே தெரியாது. இதுல எப்படி அவுங்களுக்கு எங்க ரூபிய பத்தியெல்லாம் தெரிஞ்சுது ? அதுவுமில்லாம கௌரி ஒரு காப்பகம் வச்சு நடத்துற விஷயத்தையே வல்லி பாட்டிக்கும் , உனக்கும் நா தான் சொன்னேன். அப்புறம் எப்படி உங்களுக்கு வந்திதா அத்தாச்சி சிம்பிளா தேவஸ்வரூபிய காணும்னு சொன்னவுடனே புரிஞ்சுது ? முதல்ல உங்களுக்கு தேவஸ்வரூபினா யாருன்னே தெரியாது ? அப்புறம் எப்படி இது பாசிபில் ? லாஜிக் இடிக்குதே ? ” என்று வினவ ,
அவன் கேள்வியில் வாய்விட்டு சிரித்த அமுதன் ” ஏன் டா யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா ? உன் லாயர் மூளைய யூஸ் பண்ணவே மாட்டியா ? தன்னோட அக்கா தான் உலகமேன்னு வளந்த பொண்ணு நம்ம கௌரி. ஒரு ட்ரெஸ் எடுக்கணும்னா கூட அக்கா ஒப்பீனியன் கேக்காம எடுக்க மாட்டா. அப்படி இருக்கப்போ , காப்பகம் ஓபன் பண்றதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம் , அத எப்படிடா அவ வந்திதாக்கு தெரியாம செய்வா ? சுத்தமா லாஜிக் தெரியாத பசங்களா இருக்கீங்களேடா ” என்று அமுதன் சரணை கிண்டலடிக்க , அதை சட்டை செய்யாத சரணோ
” டேய் அமுதா , என்னடா உளறுற ? வந்திதாவுக்கு தேவகி பாட்டி சாகறதுக்கு முன்னாடி தான கௌரி ஒரு ஆர்ப்பன்னு தெரிய வந்துச்சு , அதுல தான எங்க இந்த உண்மை கௌரிக்கு தெரிஞ்சா வருத்தப்படுவானு , அந்த அன்பு இல்லத்த வித்தாங்க. கௌரி கூட அன்பு இல்லத்த பத்தி வந்திக்கிட்ட பேச போனாலே , எங்க அக்கா அழுகுறாங்கன்னு சொன்னா , அதுனால தான நான் அந்த ஸ்காலர்ஷிப்ல வந்த பணத்த வச்சு , அந்த அன்பு இல்லத்த வாங்கி , வேற நேம் வச்சு நடத்தலாம்னு ஐடியா குடுத்தேன். கௌரி கூட என் நேம்லயிருக்க” தேவ்” + அவ என்னை செல்லமா கூப்பிடுற ஸ்வீட்டன்லயிருந்து ” டன் “னையும் மிக்ஸ் பண்ணி தான் ” தேவன் இல்லம் “ன்னு அந்த காப்பகத்துக்கு நேம் வச்சேன்னு சொன்னா ? ” என்ற சரணை நோக்கி கேலி பார்வை பார்த்த அமுதன்
” டேய் சரா. இப்போ எனக்கு ஒரு பெரிய டவுட். நீ படிச்சுதான் லாயர் ஆனியா ? இல்ல பிட் அடிச்சு பாஸ் பண்ணியா ? ” என்று நக்கலடிக்க , அதில் கோவம் கொண்ட சரணோ ” ஏன்டா இப்போ நா கேட்ட கேள்விக்கும் நீ கேக்குற கேள்விக்கும் என்னடா சம்மந்தம் இருக்கு ? ” என்று வினவ ,
பதிலுக்கு அமுதனும் ” என்ன சம்மந்தம் இருக்கா ? அடேய் அந்த அன்பு இல்லம் பில்டிங் அப்புறம் தோட்டமெல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட கால் ஏக்கர் வரும்டா. அந்த இல்லத்தோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி வரும்டா. நம்ம கௌரிக்கு அந்த லண்டன்காரன் ஸ்காலர்ஷிப்பா குடுத்தது வெறும் முப்பது லட்சம்டா. முப்பது லட்சத்த வச்சுக்கிட்டு ஒரு கோடி மதிப்பிருக்க காப்பகத்த எப்படிடா வாங்க முடியும் ? கொஞ்சமாச்சும் லாஜிக்கோடு பேசுடா ” என்க , அவன் கூறியதிலிருந்து நிதர்சனத்தை புரிந்துக்கொண்ட சரண் , “பே”வென விழிக்க , அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த அமுதன் ”
உண்மைய சொல்லனும்னா , தேவகி பாட்டி அந்த ஜோசியன் கிட்ட ஏமாந்ததுலயிருந்து எல்லா விஷயத்துலையும் ரொம்ப கவனமா இருக்க ஆரம்பிச்சாங்க. தான் செஞ்ச தப்ப தன்னோட அடுத்த தலைமுறை என்னைக்கும் செஞ்சிட கூடாதுங்குற விஷயத்துல ரொம்ப கராரா இருந்தாங்க. அதோட விளைவா , வந்தி அண்ட் கௌரி ரெண்டு பேருக்குமே எந்த ஒரு சூழ்நிலையிலையும் நமக்கு ரொம்ப நெருக்கமான உறவுகள் கிட்ட நாம எதையும் மறைக்கவும் கூடாது , பொய் சொல்லவும் கூடாதுன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க. அதுனால தான் வந்திக்கு கௌரி ஒரு ஆர்ப்பன்னு தெரியவந்த அடுத்த நாளே கௌரிய கூப்பிட்டு அவளுக்கு பக்குவமா எடுத்து சொல்லியிருக்கா. ஆனா கௌரியால அத உடனே அக்செப்ட் பண்ணிக்க முடியல. பட் ஸ்டில் நாளாக நாளாக அவ கொஞ்ச கொஞ்சமா நிதர்சனத்த புரிஞ்சுகிட்டு வாழ ஆரம்பிச்சிட்டா.
அப்போ தான் நீ அவ லைப்ல வந்துருக்க. உன்ன அவளுக்கு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த விஷயத்த முதல் முதல்ல வந்திதா கிட்ட தான் சொல்லியிருக்கா. வந்திக்கும் இதுல சந்தோஷம் தான். நீ அவ பார்த்து வளந்த பையன் , அதுனால அவளுக்கு அப்புறம் நீ கௌரிய நல்லா பார்த்துப்பேன்னு நம்புனா. பட் தேவகி பாட்டி அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்பிடாதேன்னு போதிச்சிட்டு போனது , அவள உறுத்த ஆரம்பிச்சிருக்கு.
சோ வல்லி பாட்டிய அப்ரொச் பண்ணியிருக்கா. ஆனா இந்த கிழவி பெரிய சி.ஐ.டி ரேஞ்சுக்கு ஒரு ஐடியா குடுத்திருக்கு. தேவகி பாட்டி அவுங்க பேத்திங்கள கவனிக்காம பணம் தான் பிரதானம்னு போன அவுங்க மகன், மருமக மேல கோச்சிக்கிட்டு , அவுங்க மேல சொத்த எழுதி வைக்காம , எல்லா சொத்தையும் வந்தி , கௌரி பெயர்ல சரி சமமா பிரிச்சு எழுதி வச்சாங்க. அதுல இந்த அன்பு இல்லம் வந்திதா பெயருல இருந்துச்சு.
இந்த கிழவி ஐடியா குடுக்குறேங்குற பேருல கௌரிய உன் கிட்ட, வந்தி அன்பு இல்லத்த வித்துட்டதா பொய் சொல்ல சொல்லியிருக்கு. முதல்ல தயங்குன கௌரி , அப்புறம் பாட்டி சொன்னா நல்லதுக்கா தான் இருக்கும்ன்னு , இந்த கிழவிய நம்பி உன் கிட்ட பொய் சொல்லியிருக்கா. சப்போஸ் நீ பணத்துக்காக தான் கௌரி பின்னாடி சுத்தறவன்னா இருந்தா , கண்டிப்பா இந்த மேட்டர் தெரிஞ்சா , கௌரிய கிழட்டி விட்டுட்டு போயிடுவேன்னு இந்த கிழவி சொல்லியிருக்கு. ஆனா நீ அடிச்ச அந்தர் பல்டிய பார்த்து எல்லாரும் ஷாக் ஆகியிருக்காங்க. அப்போ வந்தி தான் சரி அந்த இல்லத்த நா உன் பெயர்லயே எழுதி வச்சிடுறேன், நீ இந்த சரணையே லீகல் அட்வைசரா வச்சுக்கோன்னு சொல்லியிருக்கா.
சோ பைனல்லா வந்தியோட பெயர்லயிருந்த அன்பு இல்லத்த தான் , கௌரியோட பெயருக்கு மாத்தி ரெஜிஸ்டர் பண்ணது. என்னதான் இருந்தாலும் இந்த காப்பகத்தோட பவுண்டர் தேவன் தாத்தாங்குறதுனால அவர் பெயரையே நம்ம கௌரி இந்த காப்பகத்துக்கு வச்சிட்டா. ஆனா ஒன்னு டா , அந்த இல்லத்த கௌரி பெயர்ல ரெஜிஸ்டர் பண்ணும் போது , எங்க நீ அந்த பட்டா , தாய் பத்திரம்னு எதையும் படிச்சு உண்மைய தெரிஞ்சுக்குவியோன்னு வந்தி ரொம்ப பயந்துட்டா. ஆனா நீ அதக்கூட ஒழுங்கா படிக்காம, உன் ஆள பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டே இருந்திருக்க. இந்த விஷயத்துல உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா ” என்று அவனை தோளோடு அணைத்துக்கொண்டான்.
அமுதன் கூறியதை கேட்டு அதிர்ந்திருந்த சரண் , ” அட பிராடு பயலுங்களா .. எனக்கு தெரியாம என் முதுகுக்கு பின்னாடி இவ்ளோ பிளான் போட்டுருக்கீங்களா ? டேய் அமுதா , நா சிவில் லாயருக்கு படிச்சா எங்க பக்கம் பக்கமா டாக்குமெண்ட் படிக்க விட்டுருவாங்களோன்னு பயந்து தான் கிரிமினல் லாயருக்கு படிச்சதே. இன்பாக்ட் தேவன் இல்லம் ரெஜிஸ்டிரேஷன் அன்னைக்கு பேப்பர் ஒர்க்ஸ் பாத்தது கூட என் பிரண்டு தான். அந்த நாய் என் கிட்ட ஓனர் நேம் சொல்லாம , இடத்துல எந்த வில்லங்கமும் இல்ல தாராளமா வாங்கலாம்ங்கறத மட்டும் தான் சொன்னான். அண்ட் ஓனர் கூட ஏதோ பாரின்ல இருக்காங்க , சோ நேர்ல வந்து சைன் பண்ண முடியாதுன்னு சொல்லி , அவுங்க லாயர் கிட்ட பேப்பர்ஸ்ல சைன் பண்ணி குடுத்து விட்டுட்டாங்கன்னு சொன்னான். நானும் என் கௌரி செல்லத்த சைட் அடிச்சிக்கிட்டு இருந்ததுல அத பெருசா எடுத்துக்கல. ஆனா இன்னைக்கு தான்டா தெரியுது , அதுக்கு பின்னாடி எவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருந்துருக்குன்னு.
பட் ஸ்டில் நா இதெல்லாம் கூட தங்கிப்பேன்டா , ஆனா அவ தாத்தா பெயர காப்பகத்துக்கு வச்சிட்டு , என் பெயர தான் வச்சிருக்கேன்னு சொல்லி என்னை பைத்தியக்காரனாக்குன உன் மச்சினிச்சிய மட்டும் நா மன்னிக்கவே மாட்டேன் ” என்று சரண் கோவமா திரும்பி அவ்விடத்தை விட்டு வெளியேற முயல , அவனை நெருங்கிய கௌரியோ , தங்களை சுற்றி அத்தனை பேர் இருப்பதையும் கண்டுக்கொள்ளாது
” ஐம் சாரி சரா. ஐ வாஸ் ஹெல்ப்லெஸ். அக்காவுக்கும் , வல்லி பாட்டிக்கும் நீ காசுக்காக என் பின்னாடி சுத்துறவன் இல்லேன்னு புரூவ் பண்றதுக்கு உன் கிட்ட பொய் சொல்றத தவிர எனக்கு வேற ஆப்ஷன் இல்ல. எனக்கு தெரியும் நா உன்கிட்ட பொய் சொன்னது தெரிஞ்சதும் நீ எந்தளவுக்கு மனசு கஷ்டப்படுவேன்னு … ஆனா என் பேமிலிக்கு முன்னாடி நீ என் மேல வச்சிருக்க உண்மையான காதல்ல நா புரூவ் பண்ணிட்டேன். ஐம் சோ ஹாப்பி …. இனிமே யாருக்காகவும் எதுக்காகவும் உன் கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியமில்ல … ” என்று கௌரி தன் பக்க நியாயத்தை சரணிடம் விவரித்து , அவனிடம் இத்தனை நாள் , பொய் சொல்லியதற்கெல்லாம் மன்னிப்பு வேண்ட , சரண் அவள் காதலை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள , அதில் கடுப்பான கௌரியோ
” இவ்ளோ சொல்றேன் அப்பவும் முகத்த ஏன்டா இப்படி தூக்கி வச்சிருக்க. ஏற்கனவே நீ சுமாரா தான் இருப்ப , இதுல மூஞ்சையும் இப்படி வச்சிக்கிட்டேன்னா அப்புறம் உன் முகர கட்டைய பார்க்க சகிக்காது ”
” அதான என் மூஞ்சு சுமாரா தான இருக்கு. அப்புறம் அது எப்படி போனா உனக்கென்ன … ” என்று சரண் முடிக்கும் முன்பே ,
” பிக்காஸ் ஐ லவ் யூ டா மை ஸ்வீட்டன்” என்றவள் , நொடியும் தாமதியாது அவன் இதழை தன் இதழ் கொண்டு சிறைசெய்திருந்தாள் அவனது காதல் கள்ளி கௌரி என்னும் கௌரி துர்கா.
தொடரும் ….
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….
இன்னும் இந்த உலகம் என்னையே பைத்தியமா நினைச்சுட்டு இருக்கு😭😭😭😭😭
Pavam adiyae vanthi unnakaga feel pannathuku saranukachum feel panni irupen en chlm pavam