Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 21

வந்திதா தான் இவை அனைத்திற்கும் காரியகர்த்தா என்பதை அறிந்த மறுநொடி அதிர்ச்சியில் சரண் மயங்கி விழ , கௌரி தான் தன்னவனுக்கு என்னானதோ என்று பதறி , முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப , அதில் சுயநினைவிற்கு வந்த சரண் , தன் கண்களை மெல்ல திறந்து எதிரிலிருந்த கௌரியை கண்டவன் , அவளை வாரி அணைத்துக்கொண்டு 

 ” கௌரி …. இங்க என்ன தான் நடக்குது ? எனக்கு ஒன்னும் புரியல. ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சி ? எத்தனை களேபரம் ? ஸ்யபா என்னால முடியல … ப்ளீஸ் நீயாச்சும் உண்மைய சொல்லு … ” என்று புலம்ப , அவனின் தவிப்பை புரிந்துக்கொண்ட கௌரியும் ” சரண் , இங்க நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம் அந்த சேஷாத்ரி பேமிலி தான். ” என்க , சரணோ அவளை தன்னுடன் மேலும் இறுக்கிக்கொண்டு ” எனக்கு ஒன்னுமே புரியல கௌரி … ” என்று மீண்டும் புலம்ப , இவர்கள் இருவரின் சம்பாஷணையை அறையிலிருந்து கேட்டு கொண்டிருந்த  அமுதன் , தன்  கையிலிருந்த பேப்பர் , பேனாவை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு , அவர்கள் இருவரையும் நெருங்கியவன் ,  கௌரியை சரணிடமிருந்து பிரித்து நிற்க வைத்துவிட்டு , 

” இங்க ஒருத்தன் கல்யாணமாகியும் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண முடியாம , ஒத்தையில உட்கார்ந்து கதையெழுதி கிட்டு இருக்கேன். நீ என்னடா இன்னும் கல்யாணம் கூட ஆகாம , என் மச்சினிச்சி கூட எப்ப பார்த்தாலும் இப்படி கம் போட்டு ஓட்டுன மாதிரியே சுத்திக்கிட்டு இருக்க ? ” என்று சரணின் காதை பிடித்து திருக , சரணோ ” டேய் நந்தி … எப்ப பார்த்தாலும் நா ரொமான்ஸ் பண்ணும் போது மட்டும் எங்கயிருந்தாலும் கரெக்ட்டா ஆஜராகி என் ரொமான்ஸ கெடுத்து விடுறதையே புள் டைம் வேலையா பாக்குறியே டா ? இது உனக்கே ஓவரா தெரியல ? ” 

” நா என்னடா பண்ணட்டும் , உன்ன மாதிரி கிடைக்குற கேப்புலயெல்லாம் ரொமான்ஸ் பண்ண நேக்கு வரமாட்டேங்குறதுடா அம்பி ” என்று அவனை கேலி செய்ய , சரண் பதிலுக்கு ஏதோ கூற வர , அவனை தடுத்த கௌரியோ ” மாம்ஸ் ப்ளீஸ் , விளையாட்டுக்கு கூட அந்த ஸ்லாங் பேசாதீங்க. அத கேக்க கேக்க , எனக்கு அந்த சேஷாத்ரி ப்ரதர்ஸோட நியாபகம் தான் வருது …. அவனுங்க கிட்ட மாட்டிக்கிட்ட என் ரூபிக்கு என்னாச்சுன்னு தெரியாம எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. கடவுளே .. என் ரூபிக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது , எனக்கு அவ நல்லபடியா திரும்ப கிடைச்சா போதும் ” என்று ரூபியின் நலனை எண்ணி தவிக்க , 

” கௌரி யூ டோன்ட் ஒர்ரி … வெங்கடராமர் ரொம்ப நல்லவர். என்ன லைட்டா ஜாதி பைத்தியமே தவிர ,  அத்வேய்தன் மாதிரி தப்பானவர் இல்ல. இன்பாக்ட் அந்தாளுக்கு அவர் அண்ணானா ரொம்ப பிடிக்கும். அதுனால தான் அவர் செய்யுற தப்புக்கெல்லாம் துணை போயிட்டு இருக்காரு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரூபி நல்லா தான் இருப்பா. ” என்று அமுதன் அவனுக்கு தெரிந்ததை  பகிர்ந்தவன் ,  ” கௌரி ரூபிய கடத்துனது யாருன்னு தெரிஞ்சா நிச்சயமா நீயும் , வந்தியும் தாங்க மாட்டிங்க அதனால தான் இந்த உண்மைய உன் கிட்ட மறைக்குறேன். ஐம் ரியலி சாரி  ” என்று அவளிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டினான். 

 ” அந்த நம்பிக்கைல தான் மாம்ஸ்  நானும் இருக்கேன்.” 

” வாட் அப்போ அந்த வெங்கடராம சேஷாத்ரி ரியல் கலப்ரிட் இல்லையா ? ” என்று சரண் வாயை பிளக்க , 

கௌரியோ ” அட நீ வேற சரா ,அந்த கிழவன் சரியான  அண்ணன் பைத்தியம் .  அண்ணன் மேலயிருந்து பாசத்துல அவுங்க அண்ணன் அத்வேய்தன் என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டியிருக்கான். மத்தபடி அந்த கிழவனுக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்ல ” என்க , 

அதில் குழம்பிய சரண் , அமுதனை நெருங்கியவன் ” அமுதா , இங்க என்ன தான் நடக்குது ? ப்ளீஸ் எல்லா உண்மையையும் சொல்லிடு …. இதுக்கு மேலயும் ஐ கான்ட் கன்ட்ரோல் மைசேல்ப் … எனக்கு ரூபிய நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு …. அத விட ஒரு பெரிய டென்ஷன் இதோ இங்க செத்து கிடக்குறாளே நித்யா , இவள மாதிரி எத்தன பேர் என் முதுகுல குத்திருக்காங்களோன்னு நினைச்சு பாக்கவே எனக்கு ரொம்ப பயமா இருக்கு … ப்ளீஸ் சகல .. உண்மைய சொல்லிடு ” என்ற சரணின் கண்களில் தெரிந்த உறுதியிலேயே அவனது நிலையை உணர்ந்த அமுதன் , தன் விளையாட்டுத்தனத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவன் ஸ்ரீஜனை சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க துவங்கினான்.

நான்கு மாதங்களுக்கு முன் …. 

” டேய் அமுதா … மணி ஒன்பதாகுது … இன்னும் என்னடா தூங்கிகிட்டு இருக்க ? தூங்கு மூஞ்சி பயலே சீக்கிரம் எழுந்திரிடா … ” என்று வல்லி பாட்டி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அமுதனை போட்டு உலுக்கி கொண்டிருக்க , கண்களை திறக்க முடியாமல் திறந்தவன் ” ஐயோ கிழவி , உனக்கு வேற வேலையே இல்லையா ? ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற ? ” 

” எதே நா டார்ச்சர் பண்றேன்னா ? டேய் படுவா , உன் செல்லு அரைமணி நேரமா விடாம நொய் நொய்ன்னு அடிச்சி என்னை சீரியல் பாக்க விடாம உயிர வாங்குதுடா. ஒழுங்கா அந்த செல்ல எடுத்து பேசு , இல்லாட்டி ஆப் பண்ணி போடு. ஸ்யபா மனுஷிய நிம்மதியா ஒரு சீரியல் பாக்க விடுறது கிடையாது, இதுல துரைய நாங்க தான் டார்ச்சர் பன்றோமா … ” என்று தலையில் அடித்துக்கொண்டு வல்லி பாட்டி சென்று விட , 

” ச்ச இந்த கிழவி காலைலயே ஆரம்பிச்சிருச்சா ? ஸ்யபா மனுஷன கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுறது கிடையாது. ” என்று வல்லி பாட்டியை திட்டிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்த அமுதன் , தன் காலை கடனை முடித்துக்கொண்டு , அலைபேசியை ஆராய , அதில் வந்திதாவிடமிருந்து அத்தனை அழைப்புகள் வந்திருப்பதை கண்டு அதிர்ந்த அமுதன் , அவளுக்கு அழைத்து என்ன ஏதென்று விசாரிக்க , வந்திதாவோ , டெல்லியிலிருந்து தன் நண்பன் ஸ்ரீஜன் வந்திருப்பதாகவும் , அவனை சென்னை விமான நிலயத்திலிருந்து அழைத்து வருமாறு கூற. அதை கேட்டு  கடுப்பான அமுதன் 

” ஐயடா மேடம்க்கு என்னை பார்த்தா டிரைவர் மாதிரி தெரியுதா ? என்னாலயெல்லாம் உன் பிரெண்டுக்கு டிரைவர் வேலை பார்க்க முடியாது. ஆமா அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ? அவனாவே டிரைவ் பண்ணிட்டு வர மாட்டானா ? ” 

” அமுதா உன் கிட்ட ஆர்க்யூ பண்றதுக்கு என் கிட்ட டைம்மில்ல. இட்ஸ் ஆல்ரெடி லேட். ஜஸ்ட் டூ வாட் ஐ சே. அண்ட் ஒன் மோர் திங் , எல்லார் கிட்டையும் ஜாலியா பேசி விளையாடுற மாதிரி ஸ்ரீஜன் கிட்ட பேசிடாத. ஹி இஸ் எ சி.பி.ஐ ஆஃபீஸர். ” 

” எதே சி.பி.ஐ ஆஃபீஸரா ? ஓஹ் சி.பி.ஐ ஆஃபீஸர்னா நாங்க பயந்துருவோமா ? எந்த தப்பும் பண்ணாதப்போ நா ஏன் அந்த ஆஃபீஸர பார்த்து பயப்படனும் ? யாருனே தெரியாத ஒருத்தருக்காக நா என்னோட சுயத்தையெல்லாம் விட்டு குடுக்க முடியாது , நா இப்படி தான். என்னை சுத்தி இருக்கவங்ககிட்ட ஜாலியா பேசி ,  என்னால முடிஞ்ச வரைக்கும் அவுங்கள ஹாப்பியா வச்சிக்க தான் பாப்பேன். ” என்று அமுதன் தன் அருமை பெருமைகளை அளந்து விட்டு கொண்டிருக்க , அதில் கடுப்பான வந்திதா ” ஐயோ அமுதா, சீரியஸ்னெஸ் புரியாம விளையாடாதடா. நீ முதல்ல போய் ஸ்ரீஜன்ன பிக் அப் பண்ணிக்கிட்டு தாஜ் ஹோட்டல் போ. நா நம்ம கௌரியையும் , வல்லி பாட்டியையும் கூட்டிகிட்டு உனக்கு முன்னாடி ஹோட்டலுக்கு போய் உன் பேர்ல ஸ்ரீஜனுக்கு ரூம் புக் பண்ணி வச்சுறேன். என் செல்ல அமுதால்ல … ப்ளீஸ்டா நா சொன்னது பக்காவா செஞ்சிடு, சொதப்பி வச்சிடாத ” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு கௌரியை அழைத்துக்கொண்டு வல்லி பாட்டியின் வீட்டிற்கு வந்தவள் அமுதனை கிளப்பிவிட்டு , வல்லி பாட்டியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தாஜ் ஹோட்டலை நோக்கி புறப்பட்டாள்.

” ஏய் ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் ” என்ற சரணின் குரலில் , பிளாஷ் பாக்கை நிறுத்திவிட்டு அமுதன் அவனை நோக்க , சரணோ ” எனக்கு ஒரு டவுட். இந்த வல்லி பாட்டி , தேவகி பாட்டி அவுங்கள வந்திதாவையும் , கௌரியையும் தள்ளியிருந்தே பாத்துக்க சொன்னாங்கன்னு தான சொன்னாங்க. இப்போ நீ என்னடான்னா வந்தி வல்லி பாட்டிய கூட்டிட்டு ஹோட்டல் போனான்னு சொல்லுற ? அதுவுமில்லாம அன்னைக்கு அந்த கோமியம் மேட்டரப்போ தான ரெண்டு பேரும் பர்ஸ்ட் டைம் பாத்துக்குற மாதிரி சீன் போட்டாங்க , அப்புறம் என்ன நீ இப்படி சொல்லுற ? லாஜிக் இடிக்குதே ? ” என்று வினவ , 

அவன் கேள்வியில் வாய்விட்டு சிரித்த அமுதன் ” ஏன்டா யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா ? உன் லாயர் மூளைய யூஸ் பண்ணவே மாட்டியா ?  தேவகி பாட்டி அவுங்க செஞ்ச தப்ப நினைச்சு அவ்ளோ பீல் பண்ணி, இனி அவங்கள  வல்லி பாட்டிய தவிர்த்து வேற யாரும் அரவணைக்கவும் , பாதுகாப்பு குடுக்கவும்  முடியாதுன்னு நினைச்சு தான் அவுங்கள பார்க்க போயிருக்காங்க. அப்படி இருக்கப்போ , அவுங்களோட பெஸ்ட் பிரெண்டான வல்லி பாட்டிய போய் அவுங்க பேத்திங்கள எப்படிடா தள்ளிநின்னு பார்த்துக்க சொல்லுவாங்க ? சுத்தமா லாஜிக் தெரியாத பசங்களா இருக்கீங்களேடா ? ” என்று நக்கலடிக்க , 

அதில் வெறுப்பான சரணோ , கௌரியிடம் திரும்பி , ” இவன் சொல்றதெல்லாம் உண்மையா ? அப்போ வல்லி பாட்டிய உனக்கு முன்னமே தெரியுமா ? ” என்று வினவ , அக்கேள்விக்கு கௌரி பதிலளிக்கும் முன்பே

” டேய் அவ நா தூக்கி வளர்த்த பொண்ணுடா. என் வலது தோள்ல கௌரியையும் , இடது தோள்ல வந்தியையும் போட்டு வளர்த்தேன்டா. எங்களுக்குள்ள தொப்புள் கொடி பந்தம் தான் இல்லையே தவிர , அவுங்க ரெண்டு பேரும் என் ரெண்டு கண்ணுங்கடா. புள்ளையில்லாம மலடியா சுத்திகிட்டு இருந்த எனக்கு அம்மாவாவும் , பாட்டியாவும் ப்ரோமோஷன் குடுத்தவங்கடா. இவுங்க ரெண்டு பேரும் என் குலசாமிங்கடா. ” என்றவர் கௌரியை அணைத்துக்கொள்ள , அவரது கண்கள் தான் பெறாத பிள்ளைகளை நினைத்து கலங்க , வல்லி பாட்டியின் தூய அன்பை கண்டு அங்கிருந்த அனைவரது கண்களும் பனித்திருந்தது.

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. சைட் கேப்புல எங்களே ஏன் டா கலாய்க்குற🤣🤣🤣🤣 சரி மீதியே சீக்கிரம் கண்டின்யூ பண்ணு சுகர் பாடி தாங்காது 🤧🤧🤧