Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 18

சரண் நம் தாய்க்குலத்தை யாரோ கடத்தி விட்டார்கள் என்று கூறியதை கேட்டு அதிர்ந்த அமுதன் , தன்னவளையும் தன் வீட்டு பெண்களையும் சூள்ந்திருக்கும் ஆபத்தை ஆராய்ந்து கொண்டே தன் இரு சக்கர வாகனத்தில் , சரண் பகிர்ந்திருந்த விலாசத்திற்கு விரைய , சரணும் , அவனது செல்ல பிராணி மிக்கியும் , கௌரியின் தோழி நித்யாவும் அமுதனுக்காய் காத்திருந்தனர்.

அமுதனை கண்ட மறுநொடி , சரண் அவனை தாவி அணைத்து கொண்டு ” சகல , எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அந்த பேய் பங்களாவ பார்த்தா என் அடிவயிறெல்லம் கலக்குது சகல … ” என்று அவன் பாட்டிற்கு பேச , சரணின் பேச்சில் எரிச்சலுற்ற அமுதன் ” டேய் சரா , இப்படி தலையும் புரியாம , வாலும் புரியாம பேசாதடா. முதல்ல என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு ” என்று வினவ , சரணுக்கோ பயத்தில் நாவெல்லாம் வரண்டு போய் , பேச்சு வருவதற்கு பதிலாக மூச்சு தான் வந்தது. அவன் செய்கையில் கடுப்பான நித்யா , அவனை முந்திக்கொண்டு அமுதனை நெருங்கியவள் 

” அண்ணா , நீங்க சி.பி.ஐ ஆஃபீஸருங்குற உண்மை வந்தி அண்ணிக்கு வல்லி பாட்டி மூலயமா தெரிஞ்சிருச்சு. அது மட்டுமில்லாம , கௌரி அவுங்களுக்கு தெரியாம நடத்துற  தேவன் இல்லத்த பத்தியும் தெரிஞ்சிருச்சு. கூடவே அவ தற்கொலைக்கு முயற்சி பண்ணத இந்த எரும அவுங்க கிட்ட மறைச்சதும் தெரிஞ்சிருச்சு. ஆனா இது எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான விஷயம் ரூபிய பத்தின விஷயமும் , அவள தேடத்தான் நீங்க டெல்லிலயிருந்து வந்திருக்கீங்கன்ற விஷயம் அண்ணிக்கு தெரிஞ்சிருச்சு ” என்று சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து நித்யா இன்று காலையில் நடந்ததையெல்லாம் அமுதனிடம் மட மடவென ஒப்பிக்க துவங்கினாள்.

வல்லி பாட்டி மூலம் உண்மையை அறிந்து கொண்ட வந்திதா , அவரையும் அழைத்து கொண்டு முதலில் சென்று நின்றது  தேவன் இல்லத்திற்கு முன்பு தான். 

காப்பகத்தின் அலுவலக அறையில் , தன் கையிலிருந்த ரூபியின் புகைப்படத்தையே வெறித்து கொண்டிருந்த கௌரியை பார்க்க நித்யாவிற்கு சங்கடமாக இருந்தது. அவளை சமாதானம் செய்யும் பொருட்டு , நித்யா அவள் அருகில் அமர்ந்து தன்னால் முடிந்தளவு ஆறுதல் கூற , கௌரியோ அவள் பேச்சில் ஆத்திரம் போங்க , அவளை நோக்கி திட்ட துவங்கினாள் 

” பேசாதடி , உன்னால தான் ரூபி காணாம போயிட்டா. நம்ம ரூபிய அந்த ரூபன் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்ப வேண்டாம்னு தலப்பாடா அடிச்சுக்கிட்டேன். ஆனா நீ தான் என் பேச்ச மீறி அவள அனுப்பி வச்ச. அதுனால தான் இப்போ இவ்ளோ பிரச்சனை. “

” கௌரி , ப்ளீஸ்டி ஏற்கனவே என்னால தான் ரூபிக்கு இப்படி ஆகிடுச்சோன்னு குற்ற உணர்ச்சில தினம் தினம் செத்து புழைச்சி கிட்டு இருக்கேன். ஏன்டி இப்படி நீயும் என்னை உன் வார்த்தையால கொல்லுற ? ” என்ற நித்யா கண்ணில் கண்ணீர் துளித்திருக்க , 

நித்யாவின் நிலையை உணராத கௌரியோ ” எது நா உன்ன கொல்லுறேன்னா ? ஏன் டி சொல்ல மாட்ட ? உனக்கு தான் அம்மா , அப்பா , அண்ணன் , அக்கா , தம்பின்னு அழகா ஒரு குடும்பம்  இருக்கே . அவுங்க கூட சேர்ந்து வாழக்கைய நல்லா சந்தோஷமா அனுபவிக்காம , ஏன்டி என்னை மாதிரியும் , ரூபி மாதிரியுமான அனாதைங்க வாழ்க்கைல விளையாடுற ? ரூபி உன் கிட்ட வந்து அவள அந்த இன்ஸ்டிடியூட்ல சேர்த்து விட சொல்லி கேட்டாளா ? இல்லைல , அப்புறம் ஏன்டி இப்படி பண்ண ? அப்படியே அவ டாக்டர் தான் ஆவேன்னு அடம்பிடிச்சிருந்தாலும் , நானே அவள ட்ரைன் பண்ணிருப்பேன்., என்ன நா ட்ரெயின் பண்ணா , ஆல் இந்தியா ரேங்க் ஹோல்டரா அவ வர முடியாது, ஆனா கண்டிப்பா நம்ம தமிழ்நாட்டுல இருக்க , ஏதோ ஒரு நல்ல கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ்ல கண்டிப்பா சீட் கிடைச்சிருக்கும். இந்நேரத்துக்கு அவ கோட்டும்  ஸ்தெதேஸ்கோப்பும் மாட்டி கிட்டு என் கண்ணுக்கு முன்னாடி டாக்டர் ஆகியிருப்பா. எல்லாத்தையும் நீ தான்டி கெடுத்துட்ட. ஏன் இப்படி பண்ண ? உங்கள மாதிரி ஆளுங்கல்லாம் எங்கள மாதிரி அனாதைங்க மேல இப்படி ஓவரா அனுதாப பட்டு ஏன் இப்படி எங்கள வாட்டி வதைக்குறீங்க ? எங்களக்கு உங்க அனுதாபம் தேவையில்ல , உங்களோட அரவணைப்பு தான் தேவ . அத புரிஞ்சுக்காம ஏன் இப்படி எங்கள மேல உங்க பரிதாபத்த அள்ளி கொட்டுறீங்க ” என்று கௌரி முடிக்கும் முன்பே , வந்திதா அவள் கன்னத்தில் பளாரென்று ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தாள்.

அவள் அடித்த வேகத்தில் கௌரி நிலை தடுமாறி கீழே விழ போக, நித்யா ஓடி வந்து அவளை தாங்கி பிடித்து கொண்டாள். 

” ஏன்டி ஏன் உன் புத்தி இப்படி போச்சு ? நீ அனாதைங்குற உண்மை உனக்கு தெரியவந்தா , நீ எவ்ளோ கஷ்ட படுவன்னு பயந்து தான,  பாட்டி என் கிட்ட உண்மைய சொன்ன அடுத்த நிமிஷத்துலயிருந்து , அந்த உண்மைய இன்னைக்கு வரைக்கும் கட்டி காப்பாத்தி கிட்டு வரேன். அதே நேரம் நீ தனிமைய உணரக்கூடாதுன்னு தான , அப்பா அம்மா குடுக்க முடியாத அன்பக் கூட நா உனக்கு கொட்டி கொட்டி குடுத்தேன்.  உன்ன என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்டேனேடி . நீயும் அக்கா அக்கான்னு என் பின்னாடியே சுத்தி வந்தியேடி, ஆனா அது எல்லாமே நா உன் மேல இருக்க அனுதாபத்துல செஞ்சதுன்னு சொல்லி இப்படி என் அன்ப அசிங்க படுத்திட்டியேடி ? ” என்று ஆற்றாமை தாங்க முடியாத வந்திதா  மீண்டும் அவளை அடிக்க கையோங்க , கௌரியோ , வந்திதா அடிப்பதற்கு முன்பே , அவளே வந்தியின் கையை பிடித்து தன்னை தானே அறைந்து கொள்ள , அவளது சைகையில் பதறிய வந்திதா , அவளை தடுத்தாள்.

” அக்கா , ஏன் அக்கா நா நம்ம அம்மா வயித்துல பிறக்காம போயிட்டேன் … ” என்று அழ துவங்க , அவளது கேள்வியின் காரணம் புரியாமல் , அதே நேரம் அவள் அழுவதை காண இயலாமல் , அவள் கண்களை வந்திதா துடைத்து விட போக ,  அவளை தடுத்த கௌரி ” வேணா அக்கா , நீ இப்படி என் மேல பரிதாப பட்டு அன்பு காமிக்க வேண்டா. நா அனாதைங்குற ஒரே காரணத்துக்காக என் மேல இரக்கப்பட்டு யாரும் பாசம் காட்ட வேண்டாம். தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க …. ” என்று ஏதேதோ பிதற்ற , வந்திதாவிற்கு அவள் பேசுவது ஏதும் புரியவில்லை.

அப்போது தான் வந்திதா ஒன்றை கவனிக்க துவங்கினாள். அவள்  இத்தனை வருடங்களாக கௌரியிடமிருந்து எந்த உண்மையையை மறைத்து வந்தாளோ , அது அவளிற்கு வேறொருவர் மூலம் தெரியவந்திருக்கிறது. 

” கௌரி பர்ஸ்ட் உன்கிட்ட நீ என் கூட பிறந்த தங்கச்சியில்லேன்னு யாரு சொன்னா ? ” என்று வினவியவள் பார்வை , சுற்றி நின்ற வல்லி பாட்டி , நித்யாவிடம் பதிந்திருந்தது.

வந்திதாவின் அனல் பார்வையை தாங்க முடியாத வல்லி பாட்டியும் , நித்யாவும் ஒருசேர ” நாங்க எதுவும் சொல்லல. அதுவுமில்லாம கௌரிக்கு இந்த உண்ம தெரியுங்கறதே எங்களுக்கு இன்னைக்கு தான் தெரியும் ” என்று சத்தியம் செய்யாத குறையாய் அடித்து கூற , ஒருமுறை நன்றாக பட்டுவிட்டதால் வந்திதாவால் அவர்கள் கூறுவதை ஏற்க முடியவில்லை. அவர்களை மீண்டும் சந்தேகப்பார்வை பார்த்து , ஏதோ திட்டப்போக , கௌரியின் பதில் அவளை திசை திருப்பியது. 

” அத்வெய்த ராம சேஷாத்ரி – சார்மேன் ஆப் பயோஸ்பெக் பார்மாசிட்டிக்கல்ஸ் …. அவர் தான் நீ என்கிட்ட மறச்ச ரகசியத்த ஒரு மெடிக்கல் கான்பாரன்ஸ்ல சொன்னாரு. ஏன்க்கா நீ உன் தம்பி பாப்பாக்காக ரொம்ப ஏங்குனீயா ? கடைசியில அந்த குழந்தை இறந்ததும் , நா அனாதைன்னு தெரிஞ்சும் வேறவழியில்லாம என் மேல இரக்கப்பட்டு தான் என்ன உன் தங்கச்சியா ஏத்துக்கிட்டியா அக்கா ? ” என்றவள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக அழத்துவங்க , அவளது இந்நிலையை கண்டு அதிர்ந்த வந்திதா , 

” ஏய் கௌரி , இங்க பாருடா செல்லம். அக்கா உன்ன போய் அப்படியெல்லாம் நினைப்பேன்னா ? உனக்கு யாரோ தப்பு தப்பா சொல்லி கொடுத்திருக்காங்கடா. ” என்று கௌரியை சமாதானம் செய்ய , ஆனால் ஆனால் அவளோ ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் , 

” இல்ல நீ பொய் சொல்லுற …. அப்படி நீ என்னை உன் சொந்த தங்கச்சியா நினைச்சிருந்தா , என் கிட்ட நா ஒரு அனாதைங்குற விஷயத்தை மறைச்சிருப்பியா ? உன் கிட்ட எத்தனை தடவ அன்பு இல்லத்த எதுக்கு விக்குறேன்னு கேட்டுருப்பேன் , அப்போ ஏன் நீ என் கிட்ட உண்மைய சொல்லல ? போக்கா , அந்த ஐயங்கார் தாத்தா சொன்னது தான் கரெக்ட் , உனக்கு என்னை புடிக்கவே இல்ல… உனக்கு மட்டுமில்ல , இதோ இங்க நிக்குறாங்களே , இவுங்களுக்கும் என்னை புடிக்கல . இவுங்களும் ரூபிய தேடத்தான் , அமுதன் மாமா இங்க வந்திருக்காருன்னு எனக்கு சொல்லவே இல்ல. எல்லாரும் நான் அனாதைக்குறதுனால என் மேல இரக்கம் மட்டும் தான் படுறாங்க. 

 நீங்க எல்லாரும் என்கிட்ட நடிக்கிறிங்க … நீங்க எல்லாரும் பொய் சொல்றீங்க …. “

என்று அழுது புலம்ப , அவள் பேச்சில் தெரிந்த அதீத குழைச்சலில் , அவளிடம் ஏதோ சரியில்லை என்பதை புரிந்துக்கொண்ட வந்திதா , அவளிடம் பேச முயல , ஆனால் அவளை முந்திக்கொண்ட நித்யா 

” ஏன் கௌரி இப்படியெல்லாம் நடந்துக்குற ? நாங்க உன் மேல என்னைக்குமே உண்மையான அன்ப தான் வெளிப்படுத்திருக்கோம். அதுவும் வந்தி அண்ணி , எங்க உனக்கு உண்ம தெரிஞ்சா நீ மனசு கஷ்டபடுவீன்னு தான் அண்ணி உன் கிட்ட உண்மைய மறைச்சாங்க. இன்பாக்ட் அமுதன் அண்ணா சி.பி.ஐ ஆஃபீஸருங்குற விஷயம் கூட அண்ணிக்கு தெரியாது. அவுங்க ரொம்ப பாவம்டி. உனக்கும் அவுங்களுக்கும் ஏதோ பெரிய ஆபத்து வரபோதுன்னு தான் அமுதன் அண்ணா உங்க கிட்ட உண்மைய மறைச்சி பொய் சொன்னாரு …. ” என்று அமுதனுக்கு ஆதரவாய் பேசிக்கொண்டே போக , அவள் அமுதன் பேச்சை எடுத்த மறுநொடியே கடுப்பான வந்திதா 

” ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் நித்யா. நா கௌரிகிட்ட உண்மைய சொல்லாம மறச்சதையும் , அந்த அமுதன் என்கிட்ட உண்மைய சொல்லாம மறைச்சி என்னை ஏமாத்துனதையும் ஒன்னா கம்பேர் பண்ற. ஓஹ் நீங்க எல்லாரும் கூட்டு களவானிங்க தான , அதான் அவனுக்கு நீ சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க போல … ஆமா எனக்கு இப்போதான இந்த கிழவி உண்மையெல்லாம் சொல்லுச்சு , ஆனா உனக்கெப்படி எனக்கு உண்மை தெரியுங்குற விஷயம் தெரிஞ்சுது ? ஓஹ் கிழவி அதுக்குள்ள உனக்கு கம்யூனிகேட் பண்ணிடுச்சா ? ” என்று வல்லி பாட்டியை பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்க , அதில் கடுப்பான வல்லி பாட்டி 

” ஆமா நா தான் சொன்னேன் , அதுக்கு என்ன இப்ப ? இங்க பாரு , நாம எல்லாருமே  நமக்கு நெருக்கமானவங்க கிட்ட சில விஷயங்கள மறைச்சிருக்கோம் , ஆனா அது எல்லாமே அவங்க நல்லதுக்காக தான் செஞ்சிருக்கோம் … சும்மா அமுதன குறை சொல்லிட்டு திரியாத ” என்று அவளுக்கு அறிவுரை வழங்க அதில் கோவம் கொண்ட வந்திதா , ” சும்மா அவனுக்கு ஜால்ரா தட்டுறத நிறுத்துங்க … எனக்கு எது நல்லதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்…. ” என்று அவர் முகத்தில் அடித்தது போல் கூற , அவள் பேசியதை கேட்டு கோவம் கொண்ட வல்லி பாட்டி ”  வந்தி நா பேசுறது எதுவும் உனக்கு இப்போ புரியாது , ஆனா அத புரிஞ்சிக்குற நேரம் வரும்போது நீ ரொம்ப வருத்தப்படுவ ” என்று அவளை எச்சரித்தார்.

இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க , நம் கௌரியின் வாயிலிருந்து உதிரம் கொட்ட துவங்கியது … கௌரியின் நிலையை கண்டு பதறிய வந்திதா அழத்துவங்க , அதே சமயம் , இத்தனை நேரம் இவர்கள் உரையாடலை வல்லி பாட்டியின் அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்த பத்மாவும் , தன்னால் தான் தன் மகள்களுக்கு இந்நிலைமை என்று பதறி போனவர் , விரைந்து தன் வண்டியை எடுத்துக்கொண்டு தேவன் இல்லம் நோக்கி விரைந்தார்.

கௌரியின் நிலையை கண்டு பதறிய வந்திதா , நித்யாவை பிடித்து உலுக்க , அவளை பரிசோதித்த நித்யா , ” அண்ணி , பல்ஸ் ரொம்ப குறைஞ்சு கிட்டே வருது … ஐ டோன்ட் ஹவ் மை மெடிக்கல் கிட் நவ் … சோ வி ஷூட் டேக் ஹர் டு தி ஹாஸ்பிடல் … ” , என்று மூவரையும் அவசர படுத்த , சரியாக அந்நேரம் பார்த்து , பத்மாவும் தன் மகிழுந்தில் தேவன் இல்லம் வந்திறங்க , கௌரியின் நிலை கண்டு அதிர்ந்தவர் , வந்தி , நித்யாவின் உதவியுடன் அவளை தன் மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு , வல்லி பாட்டியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி பயணமாக , நித்யா அவர்களுக்கு முன் தன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு , அவர்களுக்காய் காத்திருக்க துவங்க , ஆனால் அவர்கள் வந்த பாடில்லை.

அதே நேரம் , நித்யாவின் அலைபேசிக்கு ஓர் புதிய எண்ணிலிருந்து , அவர்கள் நால்வரையும் தான் கடத்தி வைத்திருப்பதாகவும் , உடனே சரணையும் , அமுதனையும் அழைத்துக்கொண்டு இக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருக்கும் விலாசத்திற்கு விரைந்து வந்து சேருமாறு ஓர் குறுஞ்செய்தி வந்தது.

இதை அனைத்தையும் விவரித்து முடித்த நித்யா , தன் தோழியின் நிலையை எண்ணி அழத்துவங்க , அமுதனோ , இது அழுவதற்கான நேரமில்லையென்றும் , இனி தான் அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று நித்யாவிற்கு அறிவுரை வழங்கி விட்டு , அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஓர் இரண்டடி தள்ளியிருந்த மாளிகையை நோட்டம் விட்டவன் , அம்மாளிகையின் தோற்றம் கண்டு பயத்தில் அரண்டு போனான்.

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்