கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 15 ( 15.2 )
சரணிடம் , ரூபி அவன் நினைப்பது போல் உயிருடன் இல்லை என்னும் உண்மையை கூற முடியாமல் தவித்த அமுதன் , தன் மனதை கல்லாக்கி கொண்டு அவனிடம் ரூபி நன்றாக இருப்பதாகவும் , கூடிய சீக்கிரம் அவளை கண்டு பிடித்து விடுவதாகவும் பொய் உரைத்தான்.
” சரண் நா சொல்றத நல்லா கேட்டுக்கோ , ரூபன் இஸ் எஸ்ட்ரீம்லி டேஞ்சரஸ். நம்ம ரூபி மட்டுமில்லாம , அவனால நிறையா பசங்க காணாம போயிருக்காங்க. அதுவும் அவன் ஸ்பெசிபிக்கா டார்கெட் பண்றது ஆர்பன்ஸ்ஸ தான். ”
” அதெல்லாம் ஓகே சார். ஆனா இந்த ரூபன் தான் இதெல்லாம் பண்றான்னு தெரிஞ்சும் அவன ஏன் அர்ரெஸ்ட் பண்ணாம இருக்கீங்க ? ” என்று வினவ ,
” சரண் , யூ ஆர் எ லாயர். ஒரு குற்றவாளிய புடிக்க எவ்ளோ எவிடென்சஸ் வேணும்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கப்போ நீயே இப்படி பேசுனா எப்படி ? “
” புரியுது சார், பட் ஸ்டில் அந்த நாய புடிச்சு அடி வெளுத்தா தான் , என் ரூபி எங்க இருக்கானு தெரியும் சார். ரூபி எப்படி இருக்கா ? எதுக்காக அவள கடத்தி மறச்சு வச்சிருக்கான் ? இதெல்லாத்தையும் அந்த நாய அர்ரெஸ்ட் பண்ணி விசாரிச்சா தான் சார் தெரியும். “
” சரண் , எனக்கு உன் கோவம் புரியுது. பட் ஸ்டில் ப்ராபரான எவிடென்ஸ் இல்லாம நம்மளால அவன அர்ரெஸ்ட் பண்ண முடியாது. நானும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல அந்த இன்ஸ்டிடியூட்ல வேல பாக்குறேன். ஆனா இந்த ஆறு மாசத்துல ஒரு நாள் கூட ரூபன் இந்த சென்னை பிரான்ச்க்கு வரவே இல்ல. சரி இந்த பிரான்ச்க்கு தான் வரல , மத்த பிரான்ச்க்கு போறானான்னு ச்செக் பண்ணா , அங்கயும் போல. ரூபிய கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நாம முதல்ல இந்த அதி ரூபன்ன கண்டுபிடிக்கனும் போல ”
அமுதனின் கூற்றில் அதிர்ந்த சரண் ” சார் என்ன சார் சொல்லுறீங்க ? அப்போ ரூபனையும் காணுமா ? சார் இங்க என்ன தான் சார் நடக்குது ? அப்போ ரூபன் இன்ஸ்டிடியூட்ட இப்போ யாரு பாத்துக்குறா ? “
” ரூபன் இன்ஸ்டிடியூட்ட இப்போ அவன் சித்தப்பா தினகர் தான் பாத்துக்குறாரு. அப்புறம் ரூபன் காணாம போய்ட்டானானு கேட்டா , என்னை பொறுத்த வரைக்கும் அவன் ஏதோ ஒரு விஷயத்துலயிருந்து தன்ன காத்துக்க தான் ஊர் கண்ணுலயிருந்து மறைஞ்சு வாழுறானோனு தோணுது. அட் தி சேம் டைம் , இத்தன மாசம் நா அவன பத்தி சேகரிச்ச இன்பர்மேஷன்ஸ் வச்சு பாக்கும் போது , அவனுக்கு பின்னாடி யாரோ ஒருத்தர் இருக்காங்க, அவுங்களோட கைய்டென்ஸ்ல தான் அவன் ஏதோ தப்பு பண்ணி கிட்டு இருக்கான். “
” என்ன சார் இது எனக்கென்னமோ நம்மல யாரோ நல்லா சுத்தல்ல விடுறாங்களோன்னு தோணுது ” என்ற சரண் தலையில் கை வைத்து அமர்ந்துவிட , அவனை பார்த்து சிரித்த அமுதன்
” சகல இவ்ளோ நாள் இந்த அமுதனோட கஞ்சன் வர்ஷன தான பார்த்த , இனிமே தான் இந்த அமுதனோட சி.பி.ஐ ஆஃபீஸர் வர்ஷன பாக்க போற. இன்னும் பத்தே நாள்ல அந்த ரூபன்ன கண்டு பிடிச்சு, அவன அர்ரெஸ்ட் பண்ணல , நான் என் வந்திதாவோட புருஷன் இல்ல டா …. ” என்று சதையே இல்லாத தன் தொடையில் தட்டி சபதம் போட , அவன் சபதத்தை கேட்ட சரண் தன் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான்.
அவன் சிரிப்பின் அர்த்தம் புரியாத அமுதன் , ” ஏன் சகல , ரொம்ப நேரமா பிளாஷ் பாக் சொன்னதுல , மெடுல்லா ஆப்லாங்கேட்டா எதுவும் ஓபன் ஆயிடுச்சா ? ” என்று வினவ ,
பதிலுக்கு சரணோ ” அதெல்லாம் இல்ல சகல , நீ ஆரம்பத்துல , நானே பாவம் , அனாதை , கஞ்சன் , போட்டுக்க ஒழுங்கா டிரஸ் இல்ல , சாப்பிட சரியா சாப்பாடு இல்ல , என் நிலமை மாசமா இருக்கு … “
” அடேய் என்னது மாசமா இருக்கேன்னு சொன்னேனா … ” என்று அமுதன் அலற ,
” அட ச்ச , ஐயோ சகல , அது மாசமா இல்ல , மோசமானு சொல்ல வந்தேன் , டங்கு ஸ்லிப்பாகி மாசமானு வந்துருச்சு ” என்று சரண் அசடு வழிய ,
” எப்பா டேய் , உனக்கு டங்கு ஸ்லிப்பாகுற கேப்புல எனக்கு வாழ்க்கையே ஸ்லிப்பாகி இருக்கும் டா .. ” என்ற அமுதன் ஓர் பெரு மூச்சு விட்டு கொண்டான்.
” அது தான் ஆல்ரெடி ஸ்லிப்பாகி கிடக்குதே , இதுக்கு மேலையுமா ஸ்லிப்பாகனும்.. ” என்று சரண் அமுதனை பார்த்து கண்ணடிக்க , பதிலுக்கு அமுதனோ
” அது என்னமோ கரெக்ட் தான் டா. என்னைக்கு நா என் வந்திய பார்த்தேனோ அன்னைக்கே அவ மேல காதல்ல ஸ்லிப்பாகி விழுந்துட்டேன் டா. ” என்ற அமுதன் தன்னவளுடனான முதல் சந்திப்பை நினைவு கூற போக , சரணின் சிறப்பு சத்தம் மீண்டும் அவன் கவனத்தை திசை திருப்பியது.
” ஏன் டா? இல்ல ஏன் ? நா இந்த ஸ்டோரியோட ஹீரோ டா. என்னை ஒரு ரொமான்ஸ் கூட ஒழுங்கா பண்ண விடாம சாவடிக்குற. அங்க அங்க எதிர்ல இருக்குறது , பொண்ணா , பேய்யானு கண்டுபிடிக்க அந்த ஹீரோவெல்லாம் கிஸ் அடிச்சு கிட்டு இருக்கான். இங்க என்ன டானா என் ஆளு கூட பிளாஷ் பாக்ல கூட என்னைய ரொமான்ஸ் பண்ண விடாம சாவடிக்குற ? ” என்று கடுப்பாகி கத்த ,
சரணோ ” ஐயோ சகல , இப்போ என்ன உனக்கு வந்தி அத்தாச்சி கூட ரொமான்ஸ் பண்ணனும் அவ்ளோ தான. சரி விடு உன்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணல. நீ பாட்டுக்கு பிளாஷ் பாக்லையே உன் ஆளு கூட ரொமான்ஸ் பண்ணி கிட்டு இரு. நா என் ஆளுக்கு கால் பண்ணி , உங்க அக்காக்கு நடக்க இருந்த பர்ஸ்ட் நைட் கான்செல் ஆகிடுச்சு. நீ போய் உங்க அக்காக்கு துணையா , அவள கட்டி புடிச்சு தூங்குன்னு மெசேஜ் பண்ணிடுறேன். நீ அப்படி ஓரமா உட்கார்ந்து விடிய விடிய உன் பிளாஷ் பாக்லயே வந்தி கூட ரொமான்ஸ் பண்ணு போ ” என்றவன் தன் அலைபேசியை எடுத்து கௌரிக்கு அழைக்க போக , அமுதனோ பதறி அடித்து அவன் அலைபேசியை அவனிடமிருந்து பிடுங்கினான்.
” ஐயயோ இங்க உன் பிரச்சனை , உன் ஆளு பிரச்சனை , நாட்டு பிரச்சனைனு எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணதுல , இன்னைக்கு எனக்கு பர்ஸ்ட் நைட்ங்குறதையே மறந்துட்டேனே டா ” என்று தலையில் கை வைக்க , பதிலுக்கு சரணோ ” என்ன சகல நீ , இப்படி மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டியே ” என்று அவனை கேலி செய்ய , அதில் கடுப்பான அமுதனோ ” அட ச்ச , நா என் பர்ஸ்ட் நைட்ட மறந்ததுக்கு கூட பீல் பண்ணல டா, ஆனா நீ எல்லாம் இப்படி மொக்க காமெடி பண்ணி என்னை கலாய்க்குற நிலமைக்கு வந்துட்டேங்குறத நினைக்கும் போது தான் டா , எனக்கே என் மேல நான் ரியல் ஹீரோவா , இல்ல ரீல் ஹீரோவான்னு டவுட் வருது ” என்று தலையில் அடித்து கொண்டான்.
அமுதனின் செய்கையில் வாய் விட்டு சிரித்த சரண் , ” சரி சகல , மணி இப்போவே பதினொன்றை ஆயிடுச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல கடைக்காரன் கடைய கிளோஸ் பண்ண போறானான். சோ நீங என்ன பண்ற , அதோ அங்க தூரத்துல ஒரு பஸ் ஸ்டாப் தெரியுது பாரு , அங்க போய் உட்கார்ந்து , நிறுத்தி நிதானமா , நீ ரியல் ஹீரோவா , இல்ல ரீல் ஹீரோவான்னு ஆராய்ச்சி பண்ணி கிட்டு இரு போ ” என்று நக்கலடிக்க,
” டேய் என்ன நக்கலா ? போ டா , ஐயா பர்ஸ்ட் நைட்க்கு லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா போவேன் டா. இதோ பாத்தியா , மல்லிகை பூ , அல்வான்னு எல்லாத்தையும் முன்னாடியே வாங்கி வச்சிட்டேன். இன்னைக்கு பர்ஸ்ட் நைட்ல ஐயா பெர்பார்மென்ஸ்ஸ பாத்து என் பொண்டாட்டி மெர்சலாக போறா டா. ” என்ற அமுதன் , தன் காதல் மனைவியுடன் டூயட் பாட கிளம்பினான்.
” சகல , முடிஞ்ச அளவுக்கு இன்னைக்கே நல்லா ஜாலியா இருந்துரு. வந்தி அத்தாச்சிக்கு மட்டும் உன்ன பத்தின உண்மை தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோயேன் , அப்புறம் உன் கதி அதோகதி தான்.” என்று சரண் அமுதனை எச்சரிக்க , அமுதனோ ” என் செல்லத்த எப்படி கன்வின்ஸ் பண்ணனும்னு எனக்கு தெரியும்டா. ” என்று கெத்தாக காலரை தூக்கி விட்டு கொண்டே , தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி ஓடினான்.
” சகல ஆல் தி பெஸ்ட் … பாத்து சேதாரம் எதுவும் ஆகாம பாத்துக்கோ ” என்று சரண் அவனை கேலி செய்ய ,
” அதெல்லாம் அந்த விஷயத்துல ஐயா கில்லி டா… ” என்று தனக்கு தானே பீற்றிக்கொண்டு தன் மனைவியை காண வீட்டிற்கு விரைந்தான்.
———————————————————————————————————————————————–
அமுதன் வீட்டை அடைந்த நேரம் நடுராத்திரி பன்னிரெண்டு மணியை தாண்டியிருக்க , அடி மேல் அடி எடுத்து வைத்து , யாருக்கும் சத்தம் வராமல் பதுங்கி பதுங்கி தன் அறைக்கு செல்ல விழைந்தவனை , பின்னிருந்து ஓர் கை இழுக்க , அமுதனோ தன் மனைவி தான் , தன்னை கூப்பிடுகிறாளோ என்றெண்ணி , அக்கையை பிடித்து இழுக்க , அவன் இழுத்த வேகத்தில் படாரென்று அவன் மேல் அவ்வுருவம் விழ , அமுதனும் ஆசையாய் அவ்வுருவத்தை அணைக்க போக , அவ்வுருவமோ
” அடேய் எடு பட்ட பயலே… என்ன டா பண்ற ? தடி மாடு … குருட்டு முண்டம் , நா உன் பொண்டாட்டி இல்ல டா. ” என்று ஹை பிச்சில் அலறியது.
அக்குரலிலேயே அது யாரென்று புரிந்து கொண்ட அமுதன் , அவ்வுருவத்திடமிருந்து இரண்டடி தள்ளி நின்றவன் ” ஏய் கிழவி… ச்ச என் பொண்டாட்டின்னு நினைச்சு தெரியாம உன்ன கட்டி புடிச்சுட்டேன். அதுக்கு ஏன் இந்த அளறு அலறுற ? ஆமா இவ்ளோ நேரமாச்சு இன்னும் தூங்காம , என் ரூம் வாசல்ல நீ என்ன பண்ற ? “
என்று வினவ , அவன் செயலில், தன் தலையில் அடித்துக்கொண்ட வல்லி பாட்டி ,
” ஏன் டா , எரும . பர்ஸ்ட் நைட் அதுவுமா வீட்டுக்கு லேட்டா வந்ததும் இல்லாம , இருட்டுல பொண்டாட்டிக்கும் எனக்கும் கூட வித்தியாசம் தெரியாம , என்னை கட்டி புடிக்க வந்துட்டு துரை இவ்ளோ வக்கணையா கேள்வி கேக்குறீங்களா ? “
வல்லி பாட்டியின் கேள்வியில் அசடு வழிந்த அமுதன் ” அது ஒன்னுமில்ல பாட்டி. என் செல்லத்துக்கு அஷோக்கா பொங்கல் ரொம்ப பிடிக்கும், சரி அவளுக்கு புடிச்சத வாங்கி குடுக்கலாம்னு பார்த்தா , ஊர்ல இருக்குற எல்லா கடையும் ஏறி இறங்கிட்டேன்.
எவன கேட்டாலும் மில்க் மெய்ட் பொங்கல் இருக்குங்குறான் , சேமியா பொங்கல் இருக்குங்குறான், பூசணி பொங்கல் இருக்குங்குறான் , தர்பூசணி பொங்கல் இருக்குங்குறான் , அவல் பொங்கல் இருக்குங்குறான், திணை பொங்கல் இருக்குங்குறான், நவதானிய பொங்கல் இருக்குங்குறான், சரி அத விடுங்க இளநீர் பொங்கல் கூட இருக்குங்குறான், ஆனா நா கேட்ட அஷோக்கா பொங்கல் மட்டும் இல்லேன்னு சொல்லிட்டான். அப்புறம் நானே அந்த பொங்கல் ரெசிபிய படிச்சு, எனக்கு தெரிஞ்ச ஸ்டைல்ல அஷோக்கா பொங்கல் பண்ணேன், ஆனா அந்த பொங்கல் திடீர்னு அல்வா வா மாறிடுச்சு. சரி நமக்கு அஷோக்கா தான் முக்கியம் அது பொங்கலா இருந்தா என்ன , அல்வாவா இருந்தா என்னன்னு , என் செல்லத்த பாக்க அந்த அல்வாவோட ஓடி வந்துட்டேன். அவளுக்கு அல்வா பண்ணதுல தான் லேட் ஆயிடுச்சு பாட்டி ” என்று அவன் போக்கில் வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட்டான்.
பதிலுக்கு வல்லி பாட்டியோ அவனை பார்த்து நக்கலாக சிரித்தவர் ” ஏன் டா டேய் , இன்னும் என்னை நீ பைத்தியக்காரனாவே நினைச்சுகிட்டு இருக்கல்ல ” என்று வினவியர் , அவன் முதுகிலேயே நாலு அடி போட்டு அவனை முதல் இரவு அறைக்கு அனுப்பி வைத்தார்.
அமுதன் அறைக்குள் நுழைந்த மறுநொடி அவன் மேல் ஓர் போர்வை வந்து விழுந்தது.
திடீரென்று தன் மேல் போர்வை வந்து விழுவதை கண்டு அதிர்ந்த அமுதன் , தன் மனைவியை தேட , அவளோ ஒரு தலையணையையும் எடுத்து அவன் மேல் வீசினாள். அவள் வீசிய வேகத்திலேயே தன் மேல் கடும் கோவத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அமுதன் , அவளை நெருங்கி , பின்னிருந்து அனைத்தவன் , அவள் திமிர திமிர , அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு மெத்தையில் இட்டான்.
வந்திதாவோ முதல் இரவிற்கு கூட இத்தனை தாமதமாக வருகிறானே என்ற கோவத்தில் , முகத்தை உம்மென்று வைத்து கொண்டு வேறு புறம் திரும்பி படுக்க , அமுதனோ அவள் முகத்தை மென்மையாய் பற்றி தன் புறம் திருப்பியவன் , அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனின் செய்கை வந்திதாவிற்கு பிடித்திருந்தாலும் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற , மீண்டும் தன் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.
குழந்தை போல் அவள் வீம்பு பிடிக்கும் செய்கையில் தன்னை மறந்து அவளை ரசித்த அமுதன் , இம்முறை அவள் கன்னத்தை சற்று அழுத்தமாக பற்றி தன் புறம் திரும்பியவன் , அவள் காதருகே குனிந்து பாட துவங்க , அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுக்க நினைத்த வந்திதா அவன் பாட்டுடன் சேர்த்து அவனையும் கேலி செய்தாள்.
” எம்புட்டு இருக்குது ஆச … “
” என்ன ஒரு பத்து கிலோ இருக்குமா ?… “
அவள் கேலியை எல்லாம் சட்டை செய்யாது , அமுதன் தன் பாட்டிற்கு , பாட துவங்கினான்.
” உன்மேல அத காட்டப்போறேன் “
” ஆமா ஆமா நீயே சரியான கஞ்ச பையன் , எதையும் மொத்தமா காட்டாம டிஸ்க்கவுண்ட்ல தான் காட்டுவ “
” உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே … “
” ஐய டா , நீ பண்ண வேலைக்கு உம்முன்னு இல்லாம , அத்தான் அத்தான்னு கொஞ்சி கிட்டு கும்முனா இருக்க முடியும் … “
” கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி … “
” எத , பர்ஸ்ட் நைட் பிளான் மொத்தத்தையும் கொட்டி கவுத்துட்டு , இப்போ நா கொட்டி கவுக்குறேன்னு சொல்ற .. ”
” தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம் … “
” அடிங்க ஹனிமூனுக்கு மூணார் போலாம்னு சொன்னதுக்கு காசில்லன்னு சொன்ன கஞ்ச பையன் நீ , இப்போ என்னமோ மொத்த உலகத்தையும் பார்த்திடலாம்னு புரூடா விடுற ? “
” முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட, வெஷம் போல ஏறுதே சந்தோசம் … “
” டேய் நா என்ன டா க ….. ” என்று தொடங்கியவள் , அப்போது தான் குனிந்து தன்னிலையை கவனித்தாள்.
தன் கணவன் , அவன் பாட்டில் தன்னை திசை திருப்பி விட்டு , அவன் பார்த்த கேடி வேலையை புரிந்து கொண்டவள் , ” கேடி பையலே ” என்று அவனை செல்லமாக திட்டியவள் , தன் மேல் போர்வையை போத்தி கொள்ள விழைய , அவள் காதல் கணவனோ , அவள் கையிலிருந்த போர்வையை தட்டி விட்டவன் , தானே தன்னவளுக்கு போர்வையாகி போனான்.
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
உறைந்து மறைந்து கரைந்து போக
உறைபனியில் உல்லாசமாய்
ஊர்வலம் சென்ற நிலவு பெண்ணும்
நம் கூடலில் வெட்கி
தன் ஆதவனை தேடி சென்றுவிட
சுதந்திரம் சுதந்திரம் …..
சுதந்திரம் சுகந்தமாக
சுகந்தத்தை பறிக்க
சூரியன் மின்னல் போல் உதித்து வர
சுற்றம் மறந்து
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
மீண்டும் உறைந்து மறைந்து கரைந்து போக
முடிவில்லா சலிப்பில்லா பயணம்
மீண்டும் மீண்டும் …
தொடரும் தொடரும் ….
தொடரும் ….
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …
கஞ்சனுக்கு ரொமன்ஸா டா உண்ணை தெரிஞ்சா செத்தான்🤣🤣🤣🤣🤣🤣
வந்திக்கு உண்மை தெரியும் போது அமுனோட நிலமை 🤣🤣🤣