Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 14 ( 14.1 )

தேவஸ்வரூபி விளையாட்டாக விட்ட வார்த்தை வினையாக போகிறது என்பதை அறியாமல் , குழந்தை போல் தன் தலையை ஆட்டி ஆட்டி , கௌரியிடமும் , சரணிடமும் கதை அளந்து கொண்டிருந்தாள்.

” ஸ்யபா , என்ன ஒரே கூட்டமா இருக்கு ? அட ச்ச , வெட்டி கதை பேசுறவங்களாம் தள்ளி போங்க ” என்று கையில் ஓர் குலாப் ஜாமூன் டப்பாவுடன் வந்த நித்யா , கௌரியையும் , சரணையும் இடித்து தள்ளி விட்டு , தேவஸ்வரூபி அருகில் வந்தவள் , தன் கையிலிருந்த டப்பாவிலிருந்து ஓர் குலாப் ஜாமூனை எடுத்து , ரூபிக்கு ஊட்டி விட்டாள்.

” தேவ் டார்லிங் , நீ +2 பப்ளிக் எக்ஸாம்ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்துருக்க. கங்கிராஜூலேஷன்ஸ் தேவ் டார்லிங் ” என்று ரூபியை கட்டி அணைத்து கொள்ள , ரூபியோ ” நிஜமாவா அக்கா ? நானா ஸ்கூல் பர்ஸ்ட் வந்துருக்கேன் ? ” என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள். 

” ஓஹ் அந்த சந்தோஷத்துல தான் நீ ஸ்வரூப்ப தூக்கி அந்த சுத்து சுத்துனியா ? என்று கௌரியை பார்த்து சரண் வினவ , ஆனால் கௌரியோ தன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்றிருந்தாள்.

” ஐய டா இப்போ எதுக்கு மூஞ்ச இப்படி கோணையா வச்சிருக்க ? சரி ஓகே , நீ தான் தேவ் டார்லிங்க்கு அவ ஸ்கூல் பர்ஸ்ட் வந்ததுக்கு விஷ் பண்ணனும்னு நினைச்ச, ஆனா உன்ன முந்தி கிட்டு நா விஷ் பண்ணிட்டேன் , அதான ? ” என்று கௌரியை பற்றி நன்கறிந்த நித்யா வினவ , 

 

அதற்கு கௌரி பதில் கூறும் முன்பே , அவளை முந்தி கொண்ட தேவஸ்வரூபி , ” நித்தி அக்கா , நீங்க வேற நம்ம கௌரி அக்கா அதுக்கெல்லாம் கோச்சிக்கிற ஆளா என்ன ? இது வேற மேட்டர் ? ” என்று கண்ணடிக்க ,

பதிலுக்கு நித்யாவும் , ” அது என்ன தேவ் டார்லிங் , எனக்கு தெரியாத மேட்டர் ? ” என்று வினவ,

தன் வாயிலிருந்த ஜாமூனை அதக்கி கொண்டே ” அது ஒன்னுமில்ல அக்கா , நீங்க என்னை வார்த்தைக்கு வார்த்தை தேவ் டார்லிங்னு கூப்புடுறீங்கல்ல. அதுல தான் கௌரி அக்கா கடுப்பாயிட்டாங்க ” என்க 

” உன்ன நா தேவ் டார்லிங்னு கூப்பிடுறதுக்கும் , அவ என்னை கோச்சிக்கிறதுக்கும் என்ன டி சம்மந்தம் ? “

” ஐயோ கடவுளே ! இந்த 90ஸ் கிட்ஸ எல்லாம் ஏன்  டியூப் லைட்டா படச்சு வச்சிருக்க ? ” என்று தலையில் அடித்து கொண்ட தேவஸ்வரூபி , 

” நித்தி அக்கா , நம்ம சங்கு மாம்ஸ்சோட புள் நேம் என்ன ? “

சரண் நித்யாவை முந்தி கொண்டு ” சரண் தேவ் , தி கிரேட் கிரிமினல் லாயர் ” என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள , ” ஆமா ஆமா , இ.பி.கோ செக்ஷன் கூட ஒழுங்கா நியாபகம் வச்சிக்க தெரியாத கிரேட் லாயர்.” என்று நித்யா அவனை கேலி செய்ய , 

நம் தேவஸ்வரூபியோ ” என்ன அக்கா நீங்க , தமிழ்நாட்டுலையே வக்கீல் வண்டுமுருகனுக்கு அப்புறம் , அந்த திறமை இருக்க ஒரே லாயர்  , நம்ம சரண் மாம்ஸ் தான். அவர் வக்கீல் வண்டுனா , இவர் வக்கீல் சங்கு ” என்று கூறி கை தட்டி சிரிக்க , அவளுடன்  நித்யாவும் , கௌரியும் சேர்ந்து சிரிக்க , சரண் தன் முகத்தை கோவமாக வைக்க முயன்றவன் , ஆனால் அதில் தோற்று , தன் முன்னே சிரிக்கும் மூன்று தேவதைவுகளுடன் தானும் இணைந்து சிரிக்க துவங்கினான்.

நித்யாவோ அத்தனை நேரம் சிரித்து கொண்டிருந்தவள் , அப்போது தான் ஏதோ நியாபகம் வந்தவள் போல் 

” ஆனா எனக்கு ஒரு டவுட்  தேவ் டார்லிங் , இப்போ எதுக்கு சரண் புள் நேம் கேட்ட ? “

பதிலுக்கு ரூபியோ  , ” ஸ்யபா , நீங்க என்னை தேவ் டார்லிங்னு கூப்புடுறீங்க , ஆனா இங்க ஒருத்தவங்க , சரண் மாம்ஸ அப்படி கூப்பிடனும்னு ஆசை படுறாங்க. சோ நீங்களும் தேவ் டார்லிங்னு சொன்னா , மேடம்க்கு பொசஸ்ஸிவ் ஆகுது ” 

ரூபியின் கூற்றை நம்பாத சரண் ,” அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது ஸ்வரூப் , அவுங்க தாத்தாவோட பேரு கூட தேவன் தான். சோ நித்யா எப்போலாம் உன்ன தேவ் டார்லிங்னு கூப்பிடுறாளோ , அப்போலாம் அம்மணிக்கு அவுங்க தாத்தா நியாபகம் வந்து சோகமாயிடுறாங்க.” என்று சரண் தன்னவளை பற்றி எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் கூற , அவன் பதிலில் கடுப்பான கௌரியோ , அவனை நெருங்கி அவன் மண்டையில் நங்கென்று கொட்டியவள் ,

” மக்கு , மக்கு , நா பிறக்குறதுக்கு முன்னாடியே இறந்து போன ஒருத்தர நினைச்சி நா ஏன் டா பீல் பண்ண போறேன் ? இன்பாக்ட் , அவர் முகம் கூட எனக்கு நியாபகம் இல்ல ” 

” என்ன கௌரி சொல்லுற ? உங்க தாத்தா நியாபகமா தான இந்த காப்பகத்துக்கு ” தேவன் இல்லம்”னு பெயர் வச்ச ? “

” நா சொன்னேனா , இல்ல நா சொன்னேனா , என் தாத்தா நியாபகமா தான் அந்த பெயர் வச்சேன்னு. மட சாம்பிராணி , சரண் தேவ்ல இருந்து ” தேவ் ” எடுத்து , ஸ்வீட்டன்ல இருந்து ” ன் ” எடுத்து , ” தேவன் “னு வச்சேன்.இது கூட புரியாத பேக்கா இருக்கியே டா. ” 

” அப்போ நீ என்னை , நீ என்னை …. லவ் பண்றியா கௌரி செல்லம் ? “

கௌரி அவன் கேள்வியில் வெக்கி , அவ்விடத்திலிருந்து தலை தெறிக்க ஓட , தேவஸ்வரூபியும் , நித்யாவும் , அவளை துரத்தி துரத்தி கேலி செய்தனர்.

கௌரியின் வெட்கத்தை வைத்தே அவள் தன் மேல் கொண்ட காதலை உணர்ந்து கொண்ட சரண்  , காதல் வானில் சிறகில்லாமல் பறக்க துவங்கினான்.

இது ஒருபுறமிருக்க , நம் ரூபியோ , தான் ஸ்கூல் பர்ஸ்ட் வந்தது , தன் ஆசை அக்கா , அவள் காதலை முதல் முதலாய் ஒற்றுக்கொண்டது என்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் , இல்லத்தில் இருக்கும் சிரார்களுடன் தன் ஆசை தீற ஆட்டம் போட்டவள் , மான் குட்டி போல் துள்ளி குதித்து இல்லத்தை சுற்றி சுற்றி வந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு பின் …

சோகமே உருவாய்  ஓர் மூலையில் அமர்ந்திருந்த தேவஸ்வரூபியை , கௌரியும், சரணும் சேர்ந்து தேற்றி கொண்டிருந்தனர். 

” ஸ்வரூப் பாப்பா  , இப்போ என்ன ஜஸ்ட் ஒரு பத்து மார்க்ஸ் வித்தியாசத்துல எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காம போயிடுச்சு , அவ்ளோ தான இதுக்கு போய் ஏதோ கப்பல் கவுந்த மாதிரி கன்னத்துல கை வச்சி கிட்டு உட்கார்ந்து  இருக்க ? ” என்று சரண் ஒருபுறம் தேவஸ்வரூபியை சமாதானம் செய்ய ,

மறுபுறம் கௌரியோ , ” ரூபி செல்லம் , நீங்க எவ்ளோ பிரேவ் கேர்ள். இதுக்குலாம் போய் பீல் பண்ணுவீங்களா ? நீட் அலோன் இஸ் நாட் யுவர் லைப் , இட்ஸ் ஜஸ்ட் பார்ட் ஆப் யுவர் லைப் . நமக்கு கடவுள் நாம ஆசை பட்டத குடுக்க மாட்டேங்குறாருன்னா , அத விட பெருசா ஒன்ன  நமக்கு கிப்ட் பண்ண போறாருன்னு அர்த்தம். ” என்றவள் தேவஸ்வரூபியின் தலையை வருடி கொடுத்தாள்.

அழுது அழுது வீங்கியிருந்த தன் கண்களை கசக்கி கொண்டே கௌரியின் மடியில் தலை வைத்து படுத்த தேவஸ்வரூபி ” அக்கா , நா , எனக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கலன்னு  அழுகல. நீங்க , என் ரூபி செல்லம் கண்டிப்பா என்னை விட பெரிய டாக்டரா வருவான்னு என் மேல வச்சிருந்த நம்பிக்கைய , என்னால காப்பாத்த முடியாம போயிடுச்சேனு தான் அழுகுறேன். ” என்று மீண்டும் தேம்பி தேம்பி அழுக , அவள் அழுவதை காண இயலாமல் , கௌரியும் அழுகையில் கரைந்தாள்.

தன்னால் தான் , தன் செல்ல அக்கா அழுகிறாள் என்பதை புரிந்து கொண்ட ரூபி , ” அக்கா , ஐம் சாரிக்கா. என்னால உன்ன பெருமை படுத்த முடியல , சரி அது கூட பரவால்ல , ஆனா எவ்ளோ ஸ்டராங் கேர்ள் நீ , உன்னயும் அழுக வச்சிட்டேன் … ஐம் சாரிக்கா … எப்பவும் ஜாலியா சிரிச்சு பேசி , எல்லாரையும் சிரிக்க வைக்குற உங்களையும் அழுக வச்சிட்டேன் சாரி மாம்ஸ் ” என்றவள் இருவரையும் கட்டி கொண்டு அழ , அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் கௌரியும் , சரணும் தவித்தனர்.

எப்போதும் குழந்தைகளுக்கு துணையாய் அவர்களுடன் தங்கும் நித்யாவும், அந்நேரம் பார்த்து அவள் அப்பா , அம்மாவை காண அவள் சொந்த ஊருக்கு சென்றிருக்க , எங்கே ரூபியை தனியாக விட்டால் , தவறான முடிவேதும் எடுத்து விடுவாளோ என்று பயந்த கௌரியும் , சரணும் , இரண்டு நாட்கள் ஆசிரமத்திலேயே தங்கி , ரூபியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் ஏதேனும் ஓர் சாக்கு சொல்லி எப்போதும் தன்னுடன் இருந்து கொண்டிருப்பதிலேயே , அவர்களின் பயம் அறிந்த தேவஸ்வரூபி , அவர்கள் இருவரின் பயத்தை போக்குவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்க , சரியாக அந்நேரம் பார்த்து அவர்களது காப்பக பொது தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.

காப்பகத்தின் உரிமையாளராக கௌரி அழைப்பை எடுத்து பேச , மறுபுறமோ 

” ஹலோ மேடம் , நீங்க மிஸ் . தேவஸ்வரூபியோட கார்டியன் நித்யா தான ? “

” நோ , நா நித்யா இல்ல , கௌரி பட் நானும் தேவஸ்வரூபியோட கார்டியன் தான்  .. மே ஐ நோ வூ இஸ் திஸ் ? ” 

” மேடம் நாங்க ரூபன் கோச்சிங் இன்ஸ்டிடியூட்லயிருந்து கால் பண்ட்றோம். தேவஸ்வரூபி இந்த தடவ நீட் எக்ஸாம் எழுதியிருந்தாங்கல்ல ? அவுங்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைச்சிருச்சா ? “

” ஹலோ , நீங்க எதுக்கு அதெல்லாம் கேக்குறீங்க ? “

” கூல் மேடம் கூல். ஆக்ஷுவலா லாஸ்ட் மந்த், எங்க இன்ஸ்டிடியூட்ல நெஸ்ட் இயர் நீட் ரீப்பிட்டர் பேட்ச்ல ஜாயின் பண்றதுக்கு ஒரு டெஸ்ட் வச்சோம் . அதுல நித்யா மேடம் , தேவஸ்வரூபிய என்றொல் பன்னிருந்தாங்க. இப்போ அந்த டெஸ்ட்கான ரிசல்ட் வந்துருக்கு. தேவஸ்வரூபி எங்க சென்னை பிரான்ச்சுலயே நம்பர் ஒன் ரேங்க் வாங்கியிருக்காங்க. அது மட்டுமில்லாம , எங்களுக்கு ராஜஸ்தான் ( கோட்டா ) , நாமக்கல் , கோயம்பத்தூர் , டெல்லிலயும் பிரான்ச் இருக்கு. அந்த பிரான்ச் ஸ்டூடெண்ட்ஸ் கூட கம்பேர் பண்ணும் போதும்  தேவஸ்வரூபி டாப் பைவ் ரேங்க்குள்ள வராங்க. அதான் சப்போஸ் அவுங்களுக்கு  இந்த தடவ எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கலன்னா , எங்க கோச்சிங் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து ஒன் இயர் நல்லா படிச்சு அகைன் நீட் எக்ஸாம் ரிப்பீட் பண்ற ஐடியா ஏதாச்சும் இருக்கான்னு என்கியூரி பண்ண தான் மேடம் கால் பண்ணேன். “

” இல்லங்க  எங்களுக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்ல “

” இல்ல மேடம் , தேவஸ்வரூபிய பத்தி எங்க எம்.டி மிஸ்டர் அதி ரூபன் சார் கிட்ட , எங்க பாகல்ட்டி டீம் பேசுனாங்க. எங்க எம்.டிக்கும் ரூபிய ரொம்ப புடிச்சிருக்கு. அவுங்கள மிஸ் பண்ணிட கூடாதுங்குறதுல்ல ரொம்ப தீவிரமா இருக்காரு  “

” ஹலோ வாட் ரப்பிஷ் இஸ் திஸ் ? “

” சாரி மேடம் , ஐ மென்ட் லைக் , டெஸ்ட்ல அவுங்க பெர்பார்மன்ஸ் ரொம்ப புடிச்சி போயிடுச்சு , சோ அவுங்க எங்க இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிச்சாங்கன்னா , அவுங்க மெடிக்கல் ட்ரீமும் நினைவாகும் , அட் தி சேம் டைம்எங்க இன்ஸ்டிடியூட்க்கும் எங்க ஸ்டுடென்ட் நல்ல பொஷிஷன்க்கு போறது பெருமை தான மேடம்.

அண்ட் மோர் ஓவர் பீஸ் பத்தியெல்லாம் நீங்க கவலை பட வேணாம் , அவுங்கள கம்ப்ளீட்டா எங்க ரூபன் சார் நல்லா பாத்துப்பாரு. எங்க ரூபன் சார்க்கு நேச்சுரலாவே ஹெல்பிங் டென்டெண்சி அதிகம். அதுவும் ரூபி ஒரு ஆர்ப்பன்ங்குறதனால , அவுங்க மேல சாருக்கு ஒரு தனி அஃபக்ஷன் வந்துருச்சு. அந்த பொண்ண எப்படியாச்சும் நல்லா படிக்க வச்சு , பெரிய டாக்டராக்கணும்னு ஆசை படுறாரு. “

” ரூபி ஆர்ப்பன்ங்கறதுனால உங்க எம்.டிக்கு இரக்கம் வந்துச்சா ? இல்ல ஒரு ஆர்ப்பன்ன படிக்க வச்சோம்னு சொல்லி உங்க இன்ஸ்டிடியூட்ட ப்ரொமோட் பண்ணிக்குறதுக்கு ஐடியா வந்துச்சா ? “

” மேடம் எங்க எம்.டிய பத்தி அப்படியெல்லாம் பேசாதிங்க. ஹி இஸ் எ ஜெம். “

” தெரியுது  , உங்க எம்.டி எவ்ளோ பிசினெஸ் மைண்டெட்னு. ஏங்க நா தெரியாம தான் கேக்குறேன் , உங்க எம்.டிக்கு அவ்ளோ இறக்க குணம் இருந்ததுன்னா , அவர் ஒரு அனாதை இல்லத்தையே தத்தெடுத்து அதுல இருக்குற எல்லா பசங்களையும் படிக்க வைக்கலாம்ல.ஆனா அத விட்டுட்டு எதுக்கு ஸ்பெசிபிக்கா எங்க ரூபிக்கிட்ட மட்டும் அவர் இறக்க குணத்தை காட்ட விரும்புறாரு ? “

” மேடம் நீங்க தேவையில்லாத விஷயத்தை பத்தி பேசுறீங்க”

” அட எது தேவையில்லாத விஷயம் ? எங்க ரூபி ஏற்கனவே நல்லா படிக்குற பொண்ணு. இந்த தடவ ஏதோ அவ நேரம் ஒரு பத்து மார்க் வித்தியாசத்துல சீட் கிடைக்காம போயிடுச்சு. ஆனா இது தான் சான்ஸ்னு மார்க்கெட்டிங் பண்ண வந்துருவீங்களே. வை மா போன்ன ” 

அத்தனை நேரம் கௌரியும் , அவனது காரியதரிசியும் தொலைபேசியில் உரையாடுவதை ஸ்பீக்கரில் போட்டு கேட்டு கொண்டிருந்த, ரூபன் கோச்சிங் இன்ஸ்டிடியூட்டின் எம்.டி அதி ரூபன் , தன் கையிலிருந்த அவனது அத்தையின் புகைப்படத்தையும் , மறு கையிலிருந்த ரூபியின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து முற்றிலும் குழம்பி போய் அமர்ந்திருந்தான்.

யார் இந்த அதி ரூபன் ?

இவனது வரவால் , ரூபியின் வாழ்வில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் என்ன ?

தொடரும் …..

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. 😡😡😡😡 ரொம்ப ஓவரா பேசுனே கதம் கதம் தான் ஜாக்கிரதை உன்னாலே தான் ரூபிக்கு என்னமோ ஆகிடுச்சு போல😤😤😤 மவனே நீ மட்டும் அமுதன் கிட்டையும், சரண் கிட்டையும் சிக்கின காலி தான்.