Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 11 ( 11.2 )

சரண் தன் மனதை இத்தனை நாள் அரித்துக்கொண்டிருந்த கேள்விகளையெல்லாம் ஒரே மூச்சாக கேட்டு முடித்தவன் , அமுதனிடமிருந்து வர போகும் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அவன் கேள்விகளை எல்லாம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த அமுதனும் 

” நீ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உனக்கே பதில் தெரியும் சரண்” என்றவன் சரணை அழுத்தமாய் ஓர் பார்வை பார்க்க , சரணுக்கோ , அமுதனுக்கு அவனை தான் யாருக்கும் தெரியாமல் பின்தொடர்வது தெரிந்து விட்டதோ என்று பேய் முழி முழித்தான்.

 ” என்ன மிஸ்டர் சரண்தேவ் , உங்க சாயம் இவ்ளோ சீக்கிரம் வெளுத்து போகும்னு நீங்க நினைக்கல போல ” என்று அமுதன் நக்கலடிக்க , 

 

சரணோ ” வாவ் சகல , அது எப்படி சகல இவ்ளோ சீக்கிரத்துல என் சாயத்த வெளுக்க வச்ச ” என்று பதிலுக்கு நக்கலடிக்க , அமுதனோ ” சோ சிம்பிள் … பீகாஸ் ஐம் எ சி.பி.ஐ ஆஃபீஸர் ” என்றவன் சரணை பார்த்து கண்ணடிக்க , அந்நேரம் பார்த்து அறையிலிருந்து வெளியில் வந்த வல்லி பாட்டி , 

 

சரணிடம் , அவனும் , கௌரியும் , அவளது தோழி நித்யாவும் சேர்ந்து நடத்தும் ” தேவன் இல்லம் ” காப்பகத்தை பற்றி விசாரிக்க , சரணோ அமுதனை பார்த்து ஒரு மார்கமாக சிரித்தவன் 

 

” என்ன நம்ம வல்லி பாட்டி கிட்டயிருந்து எல்லா டீடைல்ஸையும் கரந்துடீங்க போல ” என்று வினவ , பதிலுக்கு அமுதனோ ” சரா பீ சீரியஸ் … எனக்கு வல்லி பாட்டி ” தேவன் இல்லம் “பத்தி அவுங்களுக்கு தெரிஞ்ச விஷயத்த தான் சொன்னாங்க. பட் அத மட்டும் வச்சுக்கிட்டு என்னால இந்த கேஸ இன்வெஸ்டிகேட் பண்ண முடியாது. ஐ நீட் யுவர் ஹெல்ப் , பீகாஸ் நீ தான் இதுல ஸ்ட்ரயிட்டா இன்வால்வ் ஆகியிருக்க. சோ நீ தான் எல்லா உண்மையையும் சொல்லணும் ” என்று அமுதன் கட்டளையாய் கூற , 

 

சரணோ ” சொல்ல முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவிங்க சி.பி.ஐ ஆஃபீஸர்” என்று வினவ , 

 

அமுதனோ ” சோ சிம்பிள் , நீ தான் கலப்ரிட்னு சொல்லி கேஸ கிளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன் ” என்று பயமுறுத்த , சரணும் வேறு வழியின்றி தனக்கு தெரிந்ததையெல்லாம் விவரிக்க துவங்கினான்.

 

சரண் கூறியதை கேட்க கேட்க , வல்லி பாட்டியின் கண்கள் ” தேவஸ்வரூபி “யை நினைத்து கலங்க துவங்கியது.

 

சரண் கூறியதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அமுதன் , அவன் கையில் ஒரு கோப்பை திணிக்க , அதை திறந்து பார்த்தவன் , அதில் ” தேவஸ்வரூபியின் ” புகைப்படம் தென்பட , அவனது கண்களும் அவனை அறியாமல் கலங்க துவங்கியது.

 

” சரண் கன்ட்ரோல் யூவர்செல்ப் … கூடிய சீக்கிரமே நா இந்த கேஸ சால்வ் பண்ணிடுவேன். யூ டோன்ட் வொரி.” என்று அமுதன் சரணுக்கு ஆறுதல் கூறி கொண்டிருந்தான். 

 

இங்கே பொய்யாய் சிலர் 

மெய்யாய் சிலர் 

இரண்டுக்கும் நடுவில் பலர் 

பொய்யும் மெய்யும் இணைய காத்திருக்க 

நடுவில் ரகசியம் ரகசியமாய் நுழைந்தது 

ரகசியமாய் இருக்கும் ரகசியம் 

ரகசியத்திற்குள் பல ரகசியங்களை 

பதுக்கி வைத்திருக்க 

ரகசியம் ஆழ செல்ல செல்ல 

எங்கும் இருள் எங்கும் இருள் 

இருளை தாண்டி ரகசியம் 

வெளிவருமா ? 

இல்லை  ரகசியமான இருளுக்குள் 

ரகசியம் ரகசியமாக 

மறைந்து போகுமா ? 

மறந்து போகுமா ? 

மன்னித்து போகுமோ ? 

கடந்து  போகுமா ?

இல்லை மடிந்து போகுமா ? 

வெளிச்சத்தை நோக்கி ரகசியம் காத்திருக்கிறது , நாமும் காத்திருப்போம் . அதுவரை ரகசியம் ரகசியமாகவே இருளுக்குள் பதுங்கி போகட்டும்.

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. என்னடா பென்ஜிலா கௌரி விஷயம் மட்டும் சஸ்பென்ஸா போயிட்டு இருக்கு😮😮😮