கஞ்சனடா கவிஞ்சா நீ
அத்தியாயம் – 1
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்து தென்னிந்திய நட்சத்திரங்களும் கூடியிருந்த அந்த மாபெரும் நட்சத்திர கூடத்தில் , மேடையில் நின்றிருந்த அவ்விழாவின் தொகுப்பாளர் வரிசையாக அந்த வருட விருது பட்டியலை வாசித்துக்கொண்டிருக்க , இங்கே பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த அமுதனின் இதயமோ நொடிக்கு நூறு முறை அதிவேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது , அவன் கண்களோ இம்முறையாவது தன் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்துவிடுமா என்ற ஏக்கத்தை தாங்கியிருந்தது.
அவன் ஷூ அணிந்த கால்கள் பொறுமையை விடுத்து தரையில் தந்தியடித்துக்கொண்டிருந்தது. அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாத இறைவன் இம்முறை நேராக அவனின் விருதை அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு தலைசிறந்த எழுத்தாளர் மூலமாகவே அறிவிக்க விழா தொகுப்பாளரின் மூலம் தூது அனுப்பியிருந்தார்.
” அண்ட் தி பெஸ்ட் ரைட்டர் ஆப் தி இயர் அவார்ட் கோஸ் டூ மிஸ்டர். அமுதன் பார் மூவி பரிசல் … ”
அமுதன் அதை கேட்ட மறுநொடி தனக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு மேடையை நோக்கி முன்னேற , அவன் முதுகில் ஒரு கை படர்ந்தது
” அடேய் அமுதா , எடேய் தூங்குமூஞ்சி பயலே , சீக்கிரம் எழுந்திரிடா, மணி மூணாகுது , இன்னும் என்ன டா தூக்கம் ? ” என்ற காட்டுக்கத்தலில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான் நம் கதையின் நாயகன் அமுதன் என்னும் அமுதவாணன்.
” ஐயோ கிழவி , இப்போ எதுக்கு காலங்காத்தால இப்படி காதுகிட்ட வந்து கத்துற ? ஸ்யபா மனுஷன நிம்மதியா ஒரு கனவு காண விடுறியா ? உன் வீட்டுல வாடகைக்கு இருந்தாலும் இருக்கேன் அதுக்காக இப்படி நடுசாம மூணு மணிக்கு எழுப்பி என் உசுர வாங்குற ” என்று அமுதன் தன் கனவை இப்படி நடுவில் வந்து கலைத்துவிட்டாரே என்று மரகதவல்லி பாட்டி மீது எறிந்துவிழ , பதிலுக்கு வல்லி பாட்டியும்
” ஆமா டா உன் கிட்டயிருந்து வாடகை தான் வாங்க முடியல , கொறஞ்சது உயிரையாச்சும் வாங்கலாமேனு தான் இப்படி உன் கிட்ட வந்து கொஞ்சி குலாவிகிட்டு இருக்கேன். போடா கிறுக்கா , ஒழுங்கா வாடகை கொடுக்குறது கெடையாது ஆனா இந்த வாயிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ” என்று அவன் குழிவிழும் கன்னத்தில் நன்றாக கிள்ளி வைத்தார்.
” ஐயோ கிழவி வலிக்குது விடு, ஸ் ஆ ஆ ” என்று அமுதன் வலியில் கத்த , ” எடேய் எவ்ளோ தைரியமிருந்தா என்னை கிழவினு சொல்லுவ ? ஒழுங்கு மரியாதையா என்னை வல்லி டார்லிங்னு கூப்புடுடா , அப்போ விடுறேன் உன் கன்னத்த ” என்று வல்லி பாட்டி சற்று எகத்தாளமாக கூற , பதிலுக்கு அமுதனோ
” எதே உன்ன போய் டார்லிங்னு கூப்புடனுமா ? கிழவி வரவர உனக்கு குசும்பு ஜாஸ்தியாகிடுச்சு. ஆரி வேல பண்ண ப்ளௌஸ் போட்டா கிழவியெல்லாம் க்ரித்தி ஷெட்டி ஆகிடுவாளா ? காலங்காத்தால கடுப்பேத்தாத கிழவி ” என்று முடிக்கும் முன் , ” அடேய் நீ என்னை கிழவினுக்கூட கூப்புடுக்கோ ஆனா இப்படி சட்டி, பானைனு கிண்டல் பண்ண மவனே உன்கிட்ட இருக்குற அந்த நாலு இத்துப்போன சட்டையையும், பான்டையும் தூக்கி பாத்திரக்காரனுக்கு போட்டு அந்த காசுலயே சட்டி வாங்கி உன் மண்டைய பொளந்துருவேன் , ஜாக்கிரத ” என்று பாட்டி அவன் கூறவருவது புரியாமல் புலம்பினார்.
அதை கேட்டுக்கொண்டிருந்த அமுதனோ தன் தலையில் அடித்துக்கொண்டு ” ஐயோ கிழவி , அது சட்டியில்ல ஷெட்டி , க்ரித்தி ஷெட்டி , புது நடிகை ஒரு பொண்ணு பாக்க நல்லா இருக்குன்னு சொன்னன்ல அந்த பொண்ணு பேரு கிழவி அது. ஸ்யபா உன் கூட என்னால மல்லுக்கட்ட முடியல ” என்றவனை நோக்கி , ” ஆமா டா என் கூட என் புருஷனாலையே மல்லுக்கட்ட முடியாது ” என்றவர் அவனை பார்த்து கண்ணடிக்க , ” ஐயோ சென்சார் கிழவி இது ஒன்னும் 18+ கதையில்ல , நீ பாட்டுக்கு போற போக்குல எதையாச்சும் கொழுத்தி போட்டுட்டு போகிடாத , அப்புறம் நம்ம கலர் பென்ஸில்கு தான் எல்லாரும் பொங்கல் வைப்பாங்க ” என்று பதறிய அமுதன் வல்லி பாட்டியின் வாயை அடைக்க.
” எடேய் லூசு பெயலே , நா என் புருஷனாலயே என்கிட்ட மல்லுக்கட்டி சண்டைபோட முடியாதுனு சொன்னேன் டா , அதுக்குள்ள நீயேண்டா டபுள் மீனிங்கு போற ” என்ற பாட்டியை நோக்கி ஒரு கும்பிடு போட்டவன் ” ஸ்யபா கிழவி போதும் இதோட இந்த டாபிக்கே ஒரு கும்புடு போட்டுட்டு வேற எதாச்சும் பேசுவோம் ” என்றவன் அப்போது தான் ஏதோ நியாபகம் வந்தவன் போல் ” ஆமா கிழவி கேக்கணும்னு நெனச்சேன் , நீயெல்லாம் முதல் மரியாதை ராதா மாதிரி ப்ளௌஸே போடமாட்ட இப்போ என்ன புதுசா ஆரி வேல செஞ்ச ப்ளௌஸெல்லாம் போட்டுருக்க ? என்ன விஷேசம் ? ” என்று வினவ , பதிலுக்கு வல்லி பாட்டியும்
” அட நீ வேற டா , நம்ம பக்கத்து வீட்டு மல்லிகா இருக்கால்ல , அவ போன வாரம் ஏதோ கல்யாணத்துக்கு போட்டுக்குறதுக்காக நம்ம பக்கத்து தெரு வாணி டைலர் இருக்கால்ல அவகிட்ட இந்த ப்ளௌஸ தெச்சுட்டுவந்தா , சரி ஏதோ பல பலனு இருக்கே ஒருக்கா பார்த்துட்டு தரேன்னு கேட்டதுக்கு அந்த சீன் போட்டா , அதான் அவ அசந்த நேரமா பார்த்து அவ வீட்டுக்குள்ள பூந்து இதுலயிருந்த ஒரு பத்து கல்ல பிச்சுபோட்டுட்டு வந்துட்டேன். நா கூட முதல்ல ஒரு பத்து கல்லுயில்லாததுக்கா அத தூக்கி போட போறானு நெனச்சேன் , ஆனா சரியான முட்டாள்டா அவ , போயும் போயும் அந்த பத்து ஜிகினா கல்லுக்காக ஐநூறு ரூபா குடுத்து தெச்ச ப்ளௌஸ தூக்கி போட போனா , நா சும்மா விடுவேனா அவ கிட்ட அடுச்சு பிடிச்சு வாங்கிட்டேன்ல. இப்போ பாரு ஐநூறு ரூபா ப்ளௌஸ பிரீயா வாங்கிட்டேன் , ஐநூறு ரூபா லாபம் ” என்று பெருமை பீத்திக்கொண்டிருந்தார்.
” ஐயோ கிழவி சரியான கஞ்சம் கிழவி நீ. ஊர சுத்தி உன் புருஷன்தான் வீடு வாங்கிவச்சி, உனக்கு எல்லா ஷேப்டியும் செஞ்சுவச்சிட்டு தான கைலாசம் போனாரு , அப்புறம் எதுக்கு உனக்கு இந்த புத்தி ? இதுல பத்தாததுக்கு நெறையா சைடு பிசினெஸ் வேற பண்ணிக்கிட்டு இருக்க , அதுலயும் உன் கருமிதனத்த காமிச்சு நல்லா லாபம் சம்பாதிக்கிற , அப்புறம் ஏன் உனக்கு இந்த வேல ? ” என்றவன் கேட்டு முடிப்பதற்கு முன் அமுதன் காதை பிடித்து நன்றாக திருகிய வல்லி பாட்டி
” அடேய் நா கஞ்சமா ? அத யாரு சொல்றது ? உன்ன விட ஒரு கஞ்சக்கருமி இந்த உலகத்துலயே இல்ல டா. மூணு மாசமாச்சு நீயும் எனக்கு வாடகை குடுத்து , நானும் வாடகை எங்கனு கேட்க வரும்போதெல்லாம் , உடனே எனக்கு எதாச்சும் எடுபிடி வேலை செஞ்சு என் கவனத்த வாடகைலயிருந்து திருப்பிவிட்டுற. நானும் உன்ன மூணு வருஷமா பாத்துக்கிட்டுதான் இருக்கேன் அந்த தெருமுனைல இருக்க லட்சமி கையேந்தி பவன்ல தான் காலையும் , ராத்திரியும் சாப்பிடுற, அதுக்கும் சரியா காசுகுடுக்காம அந்த லட்சுமி சொல்ற வேலையெல்லாம் செஞ்சு அக்கா , அக்கானு சொல்லி கடன தீத்துக்குற, சரி சாப்பாடுதான் இப்படினா ட்ரெஸ்சு அதுக்கும் மேல , ஒரு நாலு பான்ட் சட்டைய வச்சுக்கிட்டே ஒரு வருஷத்துக்கு ஓட்டுற , தீபாவளி , பொங்கலுக்கு கூட ஒரு நல்ல சட்டை எடுக்குறது இல்ல , உன் ப்ரெண்டு கதிர் தான் பிடிவாதம் பிடிச்சு எடுத்து கொடுப்பான். இதுல துரை என்னை கஞ்சம்னு சொல்ற , படவா ”
” பின்ன என்னை என்ன கிழவி பண்ண சொல்லுற. நா பிறக்கும் போதே என் அம்மா இறந்துட்டாங்க , சரி அம்மாதான் இப்படினா அப்பா அம்மா இறந்த சோகத்துலையே குடிச்சு குடிச்சு எனக்கு மூணு வயசா இருக்கும் போதே என்னை தவிக்கவிட்டுட்டு என் அம்மாகூட டூயட் பாட சொர்கத்துக்கு ஸ்ட்ராயிட்டா டிக்கெட் வாங்கிட்டு போயிட்டாரு. சுத்தி இருந்த சொந்தமும் இந்த பாரத்த யாரு சுமக்குறதுனு ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுட்டாங்க. அப்புறம் என்ன கஷ்டப்பட்டு ஸ்கூல் வரைக்கும் போராடி படிச்சேன் , ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்தும் இன்ஜினீயரிங் படிக்க முடியல , யாரோ ஒரு புன்னியவான் குடுத்த டொனேஷன்ல பி.ஏ தமிழ் படிச்சு முடிச்சேன். படிப்பு தான் முடிஞ்சிருச்சுல இனிமே நீயே உன் வாழ்க்கைய பாத்துக்கோனு நா இருந்த ஆசிரமத்துலையும் வெளிய அனுப்பிட்டாங்க.
அப்போ தான் என் கதிர பார்த்தன், எனக்குன்னு யாருமே இல்லங்குற ஏக்கத்துல இருந்த எனக்கு, உனக்கு துணையா நா இருக்கேன்னு வந்தான். அதுவும் இந்த கடவுளுக்கு பொறுக்கல போல , இந்த தடவை கதிர் அப்பா ரூபத்துல வந்து எனக்கு குடைச்சல் குடுத்தாரு, ஆனா கெட்டதுலையும் ஒரு நல்லது மாதிரி அன்னைக்கு அவர் என்னை அசிங்கப்படுத்த போயி தான எனக்கு இப்படி ஒரு ஸ்வீட் வீட்டுக்காரம்மா கிடைச்சாங்க. என்ன வல்லி டார்லிங் நா சொல்றது கரெக்ட்டுதானே ” என்று அமுதன் வல்லி பாட்டியை பார்த்து கண்ணடிக்க ,
” எடேய் என்னது வீட்டுக்காரியா ? இது மட்டும் கைலாசம் போன என் புருஷன் முனிவேலுக்கு தெரிஞ்சுது என்னையும் , உன்னையும் சேர்த்து துண்டு துண்டா வெட்டி குழம்பு வச்சு குடிச்சுருவாரு டா ” என்று வல்லி பாட்டி அதிர
” ஐயோ சென்சார் கிழவி உனக்கு எப்பவுமே அதே நெனப்பு தானா ? நா வீட்டுக்காரம்மானு சொன்னது ஹவுஸ் ஓனர் அர்தத்துல , நீ நெனைக்குற மாதிரியெல்லாம் இல்ல. ஆனாலும் கிழவிக்கு ஆசைய பாரு ” என்று அமுதன் வல்லி பாட்டியின் கொமட்டில் குத்தினான்.
” அது சரி டா , நீ ஏன்டா இந்த எப்பாசி , டிப்பாசி பரீட்சையெல்லாம் எழுதி பெரிய ஆபிஸர் ஆகக்கூடாது? ”
” என்னது எப்பாசி , டிப்பாசி பரீட்சையா ? அது என்ன பரீட்சை எனக்கு தெரியாம ? “
“அதான்டா இந்த கலெக்டராகுறதுக்கு எழுதுவாங்களே அந்த பரீட்சைடா , இதுகூட தெரியாம என்னதான் பிள்ளையோ போ “
” ஐயோ கிழவி அது எப்பாசி , டிப்பாசி இல்ல , யூபிஎஸி , டிஎன்பிஎஸி பரீட்சை. சொல்றத தெளிவா சொல்லு, எப்பா உன் கிட்ட பேசுனா எனக்கு தெரிஞ்சதும் மறந்துரும் போல ”
” அது என்னமோ என் வாயில நுழையில , அதான் ஏதோ ஒன்னு வாயில வந்தத சொன்னேன். சரி டா , நீ இப்போ பேச்ச மாத்தாத , நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ”
” அட நீ வேற கிழவி ஏன் கடுப்ப கிளப்புற , அதெல்லாம் முயற்சி பண்ணி பார்த்துட்டேன், ஒன்னும் வேலைக்காகல. பத்தாததுக்கு எனக்கு அனாதைங்குற பட்டத குடுத்த இந்த சமூகம் தான் ” எப்.சி “ங்குற ஜாதியையும் குடுத்துருக்கு , இந்த ஜாதியோட எக்ஸாம் எழுத போனா , நீதான் எப்.சியாச்சே உனக்கெதுக்கு இடஒதுக்கீடு , கீழ்ஜாதி பசங்கள ஒருகாலத்துல என்ன பாடு படுத்துனீங்க அதுக்கு ப்ராயச்சித்தமா தான் இந்த எக்ஸாம்லயெல்லாம் அவுங்களுக்கு அதிகமா இடம் குடுத்துருக்கோம் , அதுனால உன் ஜாதிக்கு ஏத்த மாதிரி ஒரு கோயில்ல குருக்கல்லா சேர்ந்துக்கோனு அனுப்பி வச்சிட்டானுங்க.
சரி நானும் எதுக்கும் ஒரு முறை முயற்சி பண்ணி பார்ப்போம்னு எனக்கு தெரிஞ்ச ஒரு கோயிலுக்கு போய் என் நிலைமைய எடுத்துச்சொல்லி வேல கேட்டேன், அதுக்கு அவனுங்க
” அட அம்பி என்ன தான் நீ நம்மவால்ல ஒருத்தரா இருந்தாலும் , குலம் , கோத்திரம் தெரிஞ்சிருந்தாலும் அத உறுதிப்படுத்த உன் ஆத்துலயிருந்து யாருமே இல்லயேடா ? இப்படி குலம் , கோத்திரம் உறுதிப்படுத்திக்க முடியாத உன்ன மாதிரி ஒரு அனாதை பிள்ளையாண்டால நம்பி எப்படிடா அம்பி அம்பாளுக்கு அபிஷேகம் பண்ணுற புனிதமான வேலைய குடுக்கமுடியும். அப்புறம் நம்மவா எல்லாரும் என்ன கோச்சிப்பா டா. அதுனால உனக்கு வேலையெல்லாம் தரமுடியாது டா அம்பி , போயிட்டு வா ” அப்படினு சொல்லி மூஞ்சுல அடிச்ச மாதிரி துரத்தி விட்டுட்டானுங்க.
என்னத்த கிழவி சொல்றது , எல்லா பக்கமும் ஒரே பிக்களும் புடுங்கலுமா இருக்கு. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிடுறேன் , மேல்ஜாதி காரனுங்க எல்லாரும் கோடீஸ்வரனும் கிடையாது, அதே மாதிரி கீழ்ஜாதி காரனுங்க எல்லாரும் ஏழையும் கிடையாது. இங்க பேர், புகழ் , மரியாதைனு இது எல்லாத்துக்கும் பணத்த பாப்பானுங்க, ஆனா படிப்பு, வேலைனு சேரும்போது மட்டும் ஜாதிய பாப்பானுங்க. என்ன விட கம்மியா மார்க் எடுத்தவனுங்க எல்லாம் நல்லா கவர்மெண்ட் வேலையில செட்டில் ஆகிட்டானுங்க, கேட்டா ஜாதி கோட்டானு சொல்லுவானுங்க , ஆனா என் நிலமைய பாரு “ என்று அமுதன் எப்போதும் எதிரில் இருப்பவர் காதிலிருந்து ரத்தம் வரும்வரை புலம்புவது போல் இன்றும் புலம்பிக்கொண்டிருக்க நம் வல்லி பாட்டியோ அவன் புலம்ப துவங்கிய மறுநொடியே ஆழ்ந்த நித்திரைக்கு சென்றவர் , இப்போது நன்றாக குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
அவர் குறட்டை சத்தத்தில் தான் தன் நிலை பெற்ற அமுதன் ” இந்த கிழவிக்கு கிண்டல பாத்தியா ? நா இங்க எவ்ளோ எமோஷனலா என் கஷ்டத்த எல்லாம் வாய் விட்டு புலம்பிகிட்டு இருக்கேன் , இது என்னனா நல்லா கொரட்ட விட்டு ஒய்யாரமா தூங்கிட்டு இருக்கு ” என்று மனதிற்குள் வல்லி பாட்டியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்த வேலை
” வல்லி பாட்டி , வல்லி பாட்டி. எங்க அப்பார்ட்மெண்ட்ல இன்னைக்கி புதுசா நாலு பேர் குடிவராங்க , அவுங்க கணபதி ஹோமம் பண்ண கோமியம் வேணும்னு நேத்தே கேட்டுருந்தேனே பாட்டி, எங்க கோமியம் கிடச்சிருச்சா? “என்ற பக்கத்து தெரு அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்யும் கனகாவின் குரலில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தார் வல்லி பாட்டி.
” ஏய் கிழவி நீ இன்னும் இந்த கோமியம் பிசினெஸ விடலையா ? ” என்று வினவிய அமுதனிடம்
” அடேய் கொஞ்ச நேரம் அமைதியா இருடா. உன்ன இவ்ளோ சீக்கிரம் எழுப்புனதே எனக்கு கோமியம் பிடுச்சு குடுக்க தான் , அத மறந்துட்டு இவ்ளோ நேரம் உன் கிட்ட வெட்டி கதை பேசிகிட்டு இருந்துட்டேன். ஐயோ நேத்து வெறும் ஒரு பாட்டில் கோமியம் தான் பிடிச்சு வச்சேன் , அத வச்சு எப்படி டா நாலு வீட்டுக்கு குடுக்குறது. டேய் அமுதா என் செல்லம்ல , ரெண்டு தெரு தள்ளியிருக்க அந்த மைதானத்துல நெறையா மாடுங்க அசைபோட்டுக்கிட்டு படுத்து கிடக்கும் சீக்கிரம் போய் கோமியம் புடிச்சிட்டு வா டா. ”
” எதே நா போயி கோமியம் பிடிச்சிட்டு வரணுமா ? என் ரேஞ்சுக்கு நா போயி கோமியம் புடிக்கணுமா? ஒரு வருங்கால எழுத்தாளர போயி கோமியம் புடிக்க சொல்லுற ” என்று அவன் பெருமை பீத்திக்கொண்டிருக்கும் போதே
” ஒரு பாட்டில் கோமியம் முப்பது ரூபா , நாலு பாட்டில் கோமியம் நூத்தியிருபது ரூபா. இப்போ சொல்லு போவியா ? மாட்டியா ? ” என்று வல்லி பாட்டி அவன் வீக் பாயிண்டில் அடிக்க ,
” சரி சரி நீ இவ்ளோ கெஞ்சு கேட்டும் போகலேன்னா நல்லா இருக்காது. நீ கெஞ்சி கேக்குறதுனால தான் போறேன் சரியா , அதுக்காக நான் காசுக்காக போறேனு என்னை பத்தி நீ சில்லியா நெனச்சுடாத ” – அமுதன்
” நா கெஞ்ஜியே கேட்கலையே , அதுவும் நீ இவ்ளோ கஷ்டப்பட்டுலாம் போக தேவையில்ல. விடு நா கனகா கிட்ட கோமியம் கிடைக்கலன்னு சொல்லிடுறேன் விடு ” – பாட்டி
” ஐயோ கிழவி நேரம் பார்த்து பழி வாங்காத, நானே போறேன். அந்த பாட்டில்ல எடுத்துட்டு வா ”
” அது அப்படி வா வழிக்கு , இந்தா புடி ” என்று இரண்டு பாட்டில்களை எடுத்து வந்து அவன் கையில் திணிக்க ,
” என்ன கிழவி , நாலு பாட்டில்னு சொன்ன , ரெண்டு பாட்டில்தான் குடுக்குற ” என்று வினவிய அமுதனிடம்
” ஏன்டா மூணு வருஷமா என் வீட்டுல வாடகைக்கு இருக்க , இன்னுமா என் தொழில் ரகசியம் புரியல ” என்று கண்ணடித்த பாட்டியிடம்
” ஐயோ கிழவி ஒரு காலத்துல பால்ல தான் தண்ணி ஊத்தி வித்து ஊர ஏமாத்திகிட்டு இருந்த , இப்போ என்னடானா கோமியத்துலையும் தண்ணி கலக்க போறியா. ஐயோ கடவுளே , உன் கேடி வேலைக்கு ஒரு எல்லையே இல்லாம போய்கிட்டு இருக்கு. “
” போ டா கிறுக்கு பயலே இதெல்லாம் ஒரு ராஜதந்திரம் டா , அதெல்லாம் உனக்கு புரியாது. நீ முதல்ல போயி கோமியம் பிடிச்சிட்டு வா , சீக்கிரம் ” என்று வீட்டின் பின்வாசல் வழியாக அவனை விரட்டிய வல்லி பாட்டி , வீட்டின் முன்வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த கனகாவிடம் கதையளக்க துவங்கினார்.
வல்லி பாட்டியிடம் பாட்டிலை வாங்கிகொண்டவன் அவர் கூறியது போல இரண்டு தெரு தள்ளியிருக்கும் அந்த மைதானத்தை அடைந்தான். அப்போது மணி சரியாக விடியற்காலை நான்காகியிருக்க , இன்னும் விடிந்தும் விடியாத நிலையில் சுற்றி எங்கும் சற்று வெளிர்கருமை நிறம் படர்ந்திருந்தது.
அமுதனும் இது தான் சரியான நேரமென்று சுற்றி ஒருமுறை அவனை தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட , அங்கே அவனுக்கு எதிரில் வந்த ஒரு மினிலாரியில் அவன் கண்ட காட்சி அவனையும் அறியாமல் அவனுக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.
அப்படி அமுதன் அந்த மினிலாரியில் என்ன தான் கண்டான் ?
தொடரும் ….
Title ku etha mathiri kanjana irukan hero… What to do …. Iruntha selavu panna mattana…. Pavom epdi thn daily kalatha ootturano….. Seekaram writer aganum…. Rmba arumaiya iruku sis … Second part seekaram podunga….
Thank you so much …. Indha storyku vandha first comment ungalodadhu dhaan. namma hero kitta kaasu irundhaalum avan kanjan dhaan , becoz design appadi … second epi ippo dhaan post panen …
Story Yoda sekaram connect aga mudiyuthu sis…. All the best….