கஞ்சனடா கவிஞ்சா நீ !!
மினி டீஸர்
ரத்த சிகப்பில் குளித்தது போல் , காணும் இடமெங்கும் ரத்த துளிகள் தெளித்து காய்ந்து போயிருக்க , ஐந்து மாடிகளை கொண்ட அம்மாளிகை தனக்கே உரித்தான ஓர் வித அமைதியை தத்தெடுத்துக்கொண்டு, அதன் வாயிலில் நின்றுக்கொண்டிருந்த வந்திதாவையும் அமுதனையும் பயமுறுத்திக்கொண்டிருந்தது.
வந்திதாவின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய , தன் அருகில் நின்றுக்கொண்டிருந்த அமுதனின் கரங்களை அழுந்த பற்றிக்கொண்டாள்.
அமுதன் முயன்ற வரை தன்னவளுக்கு தைரியம் கூறியவன் , அவள் கரங்களை அழுந்த பற்றிக்கொண்டு அவளுடன் அம்மாளிகையின் நிலக்கதவை அடைந்தான்.
” அமுதா , ப்ளீஸ் வேண்டாம் அமுதா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா. ப்ளீஸ் வேண்டாம் , நாம திரும்பி போய்டலாம் . இதுக்கு மேல போக வேண்டாம் வா ” என்று வந்திதா பயத்தில் அமுதனின் கரங்களை சற்று வேகமாக இழுக்க , அவள் இழுத்த வேகத்தில் அமுதன் நிலை தடுமாறி , பற்றுதலுக்காய் நிலக்கதவை அழுந்த பற்ற , அவன் நேரம் , அதில் தொங்கிக்கொண்டிருந்த , பல சிகப்பு கயிர்களுக்கு நடுவிலிருந்த ஓர் தங்க மந்திர தகுடு , தரையில் விழுந்து சில்லு சில்லாய் நொறுங்கியது.
இதை சற்றும் எதிர்பாராத அமுதன் தரையில் உடைந்து கிடந்த அத்தகுடையே , தொண்டையில் உருண்டோடிய பயப்பந்துகளை அடக்கிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான்.
இத்தனை நேரம் அத்தகுடையே உற்றுநோக்கி கொண்டிருந்த அமுதன் , அப்போது தான் நியாபகம் வந்தவன் போல் தன் அருகில் நின்றுக்கொண்டிருந்த வந்திதாவை நோக்க , அவளோ வியர்வையில் குளித்திருக்க , அவள் கண்களோ நிலகதவிற்கு மேல் மாட்ட பட்டிருந்த ஆறடி உயரத்திலிருந்த அக்கண்ணாடியில் நிலைகுத்தி இருந்தது.
” வந்தி என்னமா ஆச்சு ? ஏன் இப்படி நிக்குற ? என்னம்மா என்னாச்சு ?” என்று அவள் நிலை கண்டு பதறிய அமுதன் அவளை போட்டு உலுக்க , வந்திதாவோ தன் வறண்ட தொண்டையை செருமிக்கொண்டு ஏதோ கூற முயன்றவள் , அது முடியாமல் போக , தன் வழாது கை ஆள் காட்டி விரலை உயர்த்தி அமுதனிடம் அக்கண்ணாடியை காண்பிக்க , அமுதனும் அவள் விரல் சென்ற திசையை நோக்க , அங்கே அவன் கண்ட காட்சி ….
பிறை நிலா போல் பறந்து விரிந்த நெற்றியில் ஓர் கருந்துளை உருவாகி , அதிலிருந்து சதுப்பு நில காடுகளின் சுந்தரி மரங்களின் வேர்களை உரித்துவைத்தது போல் , பச்சை நிறத்தில் நரம்பு முடிச்சுகள் வேர்விட்டுக்கொண்டிருக்க , அந்நரம்பானது ஒற்றை கல் மூக்குத்தி அணிந்த அக்கூர் நாசிகளை பிளந்துக்கொண்டு , லாவெண்டர் நிறத்தில் பளிச்சென்று பரவிக்கிடந்த அத்தடித்த உதடுகளின் வாயிலில் வந்து நிற்க , அவ்வுதடுகளுக்குள் சிக்கி தவித்துக்கொண்டிருந்த இரண்டடி செவ்வந்தி நிற தசை நாக்கு , தண்ணீரிலிருந்து வெளியில் போட்ட மீனை போல் துள்ளி குதித்துக்கொண்டு, வாயிலிருந்து வெளியில் துள்ளி குதிக்க , அதன் வரவிற்காய் காத்திருந்தது போல் , இரண்டு மீட்டர் நீளம் கொண்ட அப்பச்சை நரம்புகள் அந்நாக்கோடு பிண்ணி பிணைந்துக்கொள்ள , கண்ணாடிக்குள் தெரிந்த அக்கோர உருவம் மெல்ல தன் கண்ணை திறக்க , அதில் விழி வெண்படலம் செஞ்சூரியனின் நிறத்தை தன் வசமாக்கி , கருவிழிகளை விடுத்து செந்தூர நிறத்தில் கொண்ட விழிகளுடன் , அனலை கக்கிகொண்டிருந்த அப்பெண் உருவம் அமுதனை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறியது ….
————————————————————————————————————————–
” அடிச்சி கொன்னா ஏன்னு கேக்க நாதியில்லாத அனாத பைய நீ , உனக்கு எதுக்குடா இந்த வெட்டி வீராப்பு ? ” என தன் கையிலிருந்த காகிதங்கள் சிலவற்றை அமுதன் முகத்தில் தூக்கி எறிந்தவன் , அமுதனை நோக்கி ஒரு நக்கல் பார்வை பார்க்க ,
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் “அவன்” முன் விழுந்து கிடந்த அமுதன் , அவன் மேல் கிடந்த அக்காகிதங்களை எடுக்க போராட , அவன் முதுகிற்கு பின் யாரோ ஒருவர் சரியாக குறிபார்த்து விஷம் தடவிய கத்தியை தூக்கி எரிய , அக்கத்தியானது அமுதனின் முதுகு தண்டை அடையும் முன் , அவனுக்கும் கத்திக்கும் நடுவில் வந்து விழுந்த ” அவளின் ” அடிவயிற்று சிதையை கிழித்துக்கொண்டு , அமுதனின் முதுகை உரசிக்கொண்டு பாய்ந்தது.
நொடிப்பொழுதில் நடந்து முடிந்து இத்தாக்குதலை அமுதன் உணரும் முன்பே , அவன் ப்ராணம் காக்க தன் உயிரை மறந்து அவனுக்காய் கத்திகுத்து பட்ட அவ்வுயிர் மெல்ல மெல்ல எமதர்மனின் பாசக்கயிற்றின் நுனிக்கு சென்றுக்கொண்டிருந்தது….
( மிச்சத்த கதையில படிச்சு தெரிஞ்சுக்கோங்க )
மினி டீஸர் எப்படி இருந்துச்சுன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க …