Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

மினி டீஸர் – 2

” வாவ் வாட் அ பியூட்டி ” என்ற சங்கர்ச்சுன் தன் முன்னே நின்றிருந்த கௌரியை பார்த்து வாயை பிளந்தான்.

 

” அடிங்க மவனே நீ மட்டும் நான் சொன்ன வேலைய ஒழுங்கா செய்யல, உன் இடுப்பு எழும்ப உடைச்சு சூப்பு வச்சு குடுச்சிடுவேன் ” என்ற கௌரி ” பெயர பாரு சங்கு, சொங்கு, அர்ச்சு, புருச்சுன்னு ” என தனக்குள் முனுமுனுத்தவள் தன் வேலையை பார்க்க செல்ல,

 

“என் பெயரையா கலாய்க்குற? இரு டி மவளே உன்ன என் வேலைய முடிச்சிட்டு வந்து கவனிச்சிக்குறேன் “என்ற சங்கர்ச்சுன் செல்பவளையே கண்ணில் குறும்பு பொங்க பார்த்தான்.

 

————————————————————-

 

” டேய் சிவஜானம், நீ பண்ண வேலைக்கு நா உன் கிட்னிய உருவி என் வீட்டு ஜானி பப்பிக்கு பெடிகிரியோட சேர்த்து மிக்ஸ் பண்ணி போடல நா சங்கர்ச்சுன் இல்ல டா ” என்று சபதம் போட்டு கொண்டிருந்த சங்கர்ச்சுனை நோக்கி,

 

” டேய் சங்கர்ச்சுன், பதிலுக்கு நா உன் ஈரல உருவி என் வீட்டு மிக்கி பப்பிக்கு பெடிகிரியோட சேர்த்து மிக்ஸ் பண்ணி போடல நா சிவஜானம் இல்ல டா ” என சிவஜானமும் கத்தி கொண்டிருந்தான்.

 

” அடச்சி பைத்தியகார பசங்களா, நா ஒரு ரியல் பேய் உங்க முன்னாடி நின்னு பயமுருத்தி கிட்டு இருக்கேன், நீங்க என்ன டா இப்படி அல்பத்தனமா சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க? இருங்க டா என் இரண்டடி ராட்சச நாக்கை வச்சு உங்கள என்ன பண்ணுறேன் பாருங்க ” என்ற பேய் தன் இரண்டடி தடித்த நாக்கை அவர்களை நோக்கி நீட்ட, சரியாக நேரம் பார்த்து ஜானியும், மிக்கயும் ஒருசேர பேய் முன் பாய்ந்தனர்.

 

” நாயிக்கும் பேயிக்கும் சண்ட, அத ஊரே வேடிக்க பாக்குது ” என்ற குரலை கேட்டு நாயும், பேயும் ஒரு சேர வெறியாகி திரும்பி பார்க்க, அங்கோ நம் சுபம்முவாணி ஏதோ பெரிய காமெடி கூறியது போல் நினைத்து தனக்கு தானே சிரித்து கொண்டிருந்தாள்.

 

———————————————————–

 

” டேய் இத்தன நாள் நான் தூக்கி போட்ட பணத்துக்கு நாக்க தொங்க போட்டுக்கிட்டு வால்லாட்டி கிட்டிருந்த அனாத நாயி நீ, இன்னைக்கு நா கட்டுன சாம்ராஜ்யத்தையே அழிக்க பாக்கறியா?” என்று தன் முன்

சீறிக்கொண்டிருந்த வெள்ளை காட்டெறுமையை நோக்கி,

 

” டேய் பன்னு , அமுதன நீ மொக்க ஹீரோ வா தான பாத்துருக்க, மாஸ் ஹீரோ வா பார்த்தது இல்லையே? இனிமே பார்ப்ப ” என்று சவால் விட்ட அமுதன் தன் கழுத்தில் கிடந்த கூலர்சை எடுத்து கையில் சுற்றிக்கொண்டே தன் அவுடி காரை நோக்கி முன்னேறினான்…

 

 

கேம் முடியல, அடுத்த லெவெலுக்கு போயிருக்கு…..

 

கேம் பிகின்ஸ்….

 

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment