Loading

 அத்தியாயம் -01

  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட அரங்கம் முழுவதும் கரகோஷத்தால் நிரம்பி வழிந்தது. பல முன்னணி கதாநாயகிகள் கதாநாயகர்களை தூக்கி சாப்பிடும் வகையாக தொழில்துறையில் காலை பதித்த ஐந்து வருடங்களில் தனக்கான ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதில் வெற்றி கொடியை நாட்டியது யதுவீர் நந்தனின் பெயர் ஒலித்ததும் அந்த அரங்கம் முழுவதும்  கரகோஷங்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது  .

     தொழில்துறையை சார்ந்தவர்களின் பெயர்களை அறியாமல் இருந்தது போய்  கதாநாயகர்களை விட தூக்கிகொண்டாடும் வகையில் யது வீர் நந்தன் பெயரும் புகழும் பரவி இருந்தது. சிறியவர்கள் முதல் பெரிய  வரை பாரபட்சமே இல்லாமல் தங்கள் மகிழ்ச்சியை அவர்களின் கரகோஷத்தாலும் விசில் சத்தத்தாலும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

   முதல் வரிசையில் வி வி ஐ பி சீட்டில் அமர்ந்திருந்த யது வீரும் கர்வ சிரிப்புடன் மேடை நோக்கி சென்றான். ஆறரை அடி உயரமும் அலை அலையான கேசம் அவன் வசிகரத்தை கூட்டி காண்பித்துக் கொண்டிருந்தது.

  பாடி பில்டர்கள் தோற்றுவிடும் படி இருந்த அவனின் உடற்கட்டை டைட்டான வெள்ளை நிற சர்ட் எடுத்துக்காட்டியது. முதல் இரண்டு பட்டன்கள் திறந்து விடப்பட்டிருக்க அதைக் கண்ட பெண்களிடமிருந்து வந்த ஏக்கமான  உஷ்ண மூச்சி அந்த அரங்கத்தையே வெப்ப படுத்திக் கொண்டிருந்தது.

     மாநிறத்தில் திருத்தமான முக அமைப்புடன் ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் கண்களில் கூர்மையுடன் வேகம் நடையுடன் மேடையை அடைந்தான். உன்னை அப்படியே சாப்பிட்டு விடுவேன் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்த  தொகுப்பாளியின் பார்வையில் எப்போதும் போல் உள்ளுக்குள் எரிச்சல் மண்டினாலும் பத்து வருடங்களாக பிசினஸ் செய்யும் திறமையின் காரணமாக முகத்தில் எந்த உணர்வைகளையும் காட்டாமல் கண்ணுக்கே தெரியாத சிறு புன்னகையுடன் மேடையின் நடுவில் நின்றிருந்தான்.

  இருந்தாலும் கண்களில் அவளுக்கான எச்சரிப்பு தெரிய தொகுப்பாளனியும் அவன் வலையில் மாட்டும் மீன் இல்லை என்பது புரிந்து பெருமூச்சை வெளியிட்டு விட்டு யதுவீர் நந்தனுக்கான விருதை அறிவித்தாள்.

 

  தி பெஸ்ட் பிசினஸ் மேன் இன் தி இயர் கோஸ்ட்  மிஸ்டர் யதுவீர்நந்த சக்ரவர்த்தி என்ற பெயரை கூறியதும் அரங்கம் எங்கும் மக்களின் கூச்சல் சத்தம் எதிரொலித்தது. ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் பிரசாத் விருதை யதுவீருக்கு தர புகைப்பட கலைஞர்களால் உண்டான பிளாஷ் அந்த இடத்தை இன்னும் பிரகாசமாகிக்கியது.

  

ஒரு நிமிடம் முடிந்த பிறகும் அடித்த ஃப்ளாஷ் லைட்டின் வெளிச்சத்தில் போட்டோ எடுப்பவர்களை நோக்கி அந்த பிளாஷ் ஒளியிலும் ஒரு கூர்மையான பார்வையை தான் சிந்தி இருப்பான். அடுத்த நிமிடமே அந்த இடம் காலியானது.இதுதான் யதுவீர் பார்வையாலேயே தான் செய்ய நினைக்கும் செயல்களை மற்றவர்களை செய்ய வைத்து விடுவான்.

   

அழுத்தமானவன். தன்னை எதிர்க்காத வரை அனைவருக்கும் மிகவும் நல்லவன். எதிர்த்தல் அவனைவிட மோசமான எதிரி யாராகவும் இருக்க முடியாது.  அவனை எதிர்த்தவர்களின் அடிமட்டத்திலிருந்து அனைத்தையும் உருவி நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விடுவான். நேர்மையான முறையில் எதிர்த்தால் அதற்கேற்ற போல் நேர்மையான முறையில் மோதுவான்.

   முதுகில் குத்த நினைத்தால் உயிரை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைத்தையும் எடுத்து விடுவான். இளைஞர்களின் ரோல் மாடல். இந்திய பொருளாதாரத்தில் அவனின் நந்தன் குரூப்ஸ் மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.

   

போன் வித் டைமண்ட்ஸ் ஸ்பூனில்  பிறந்தவன். அவனின் தாத்தா நந்தன் சக்கரவர்த்தி ஜமீன் பரம்பரையின் வழியாக வந்தவர்.சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து சொத்துக்களையும் அரசின் இடம் ஒப்படைத்த விட்டு அவர்களின் சொந்த உழைப்பால் உருவாக்கிய குடும்ப சொத்தை வைத்து உருவாக்கியதே நந்தன் குரூப்ஸ்.

  அவர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனும் வகையில் கிட்டத்தட்ட 24 துறையில் வெற்றிகரமாக கால் பதித்து அனைத்திலும் முதல் இடத்தை பதித்துள்ளார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு நந்தன் குரூப்ஸ் யதுவீரிடம் வந்ததிலிருந்து இந்தியா மட்டுமே பரவி இருந்த அவர்களின் தொழிலை அண்டை தேசங்களான நேபாளம் சைனா தாய்லாந்து வியட்நாம் மற்றும் சிங்கப்பூரிலும் நிறுவி அதிலிலும் வெற்றி கண்டுள்ளான்.அனைத்தும் இந்த ஐந்து வருடங்களில் மட்டும் சாத்தியமானது அல்ல அவனின் தந்தையுடன் இருபதாவது வயதில் நந்தன் குரூப்பில் கால் பதித்தான்.

     நந்தனின் வாரிசு என்பதால் மட்டுமே அவனுக்கு இந்த பதவியை தூக்கிகொடுக்கப்படவில்லை.
கடைநிலை ஊழியராய் இருந்தே தற்போது நந்தன் குரூப்ஸ் இன் சேர்மேனாக உள்ளான்.கடந்த இரண்டு வருடங்களாக நந்தன் குரூப்ஸ் தான் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் தொழில்துறையில் முதலிடத்தை பெற்றுள்ளது. அனைத்தையும் அவனின் அறிவு கூர்மையாலும் அயராத உழைப்பால் மட்டுமே ஈட்டினான்.

   

இப்பொழுது இந்திய தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்த நபருக்கு கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருதுக்கான டைமண்ட் கோல்ப் விருதை பெற்றுள்ளான். மேடையில் சிறு உரையை அனைவரின் மனதிலும் பதியும் வகையில் பதித்துவிட்டு புறப்பட்டான்.போவதற்கு முன் தன் அருகில் அமர்ந்திருந்த ராஜனை நோக்கி ஒரு கேலி சிரிப்பை உதித்து விட்டே சென்றான்.

  

அதில் கொதித்துப் போன ராஜனோ கோபத்தில் பற்களை கடித்தவர்.அடுத்த நிமிடமே அலைபேசியில் சிலருக்கு தொடர்பு கொண்டு சில கட்டளைகளை பிறப்பித்து விட்டே வைத்தார். அவர் மனதிலோ ‘பொடி பையன் என்னவெல்லாம் வேலை பார்க்கிறான்’என்று குமுறாமல் இல்லை.

   ராஜனும் தமிழ்நாட்டில் சிறந்த தொழிலதிபர் தான். ஸ்கூல் காலேஜ் தொடங்கி எக்ஸ்போர்ட் இம்போர்ட் கம்பெனி முதற்கொண்டு கிட்டத்தட்ட ஆறு துறையில் கால் தடம் பதித்து சீராக இயங்கி வருகிறார்.

   ஏனோ தனது தொழிலை தமிழ்நாட்டிற்குள்ளே முடக்கி வைத்துள்ளார். விரிவுபடுத்த அவருக்கு விருப்பம் இல்லாமல் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்தவர்.கடந்த ஆண்டு நந்தன் குரூப்ஸ் ஆரம்பித்த நந்தன் தோல் பதனிடும் ஆலையால் பிரச்சனை ஏற்பட்டது.

   நந்தனின் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு அருகிலே ராஜனின் காஸ்மெட்டிக்ஸ்க்கு பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் விளைநிலங்கள் இருப்பதால் தோல் பதனிடும் தொழிற்சாலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் விளைஞ்சல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட எத்தனையோ தடவை சந்திக்க முயற்சி செய்ய அவனும் அவருக்கு அப்பாயின்மென்ட்டை கொடுக்காமல் போக இறுதியில் அவரே நேரில் சென்று மிரட்டி விட்டு வந்தார்.

  அழுத்தமாக அவன் பார்த்தாலே தவிர வேறு ஒன்றும் பேசவில்லை அதன் பிறகு தோல் பதனிடம் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வர நிலவை சீரானது.

  ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்று நிம்மதியாக இருக்க வழியில்லாமல் அவர்கள் கம்பெனிக்கு எதிராக நந்தன் காஸ்மெட்டிக்ஸ் என்று கம்பெனியை ஆரம்பித்து அதை மூன்றே மாதத்தில் வெற்றிப்பாதையில் ஓட விட்டிருந்தான்.

  எப்பொழுதும் போல் போட்டி கம்பெனியாக வந்ததால் இவர்களின் பங்குகளில் கொஞ்சம் சரிய தன்னை பழிவாங்கவே இவ்வாறு செய்கிறான் என்று நினைத்த ராஜன் மகனிடம் மனம் வருத்தத்துடன் கூறினார்.

   அவர் மகன் விஜய் ராஜன் கொஞ்சம் முன் கோபி யோசிக்காமல் நேராக யதுவீரின் காஸ்மெட்டிக் கம்பெனிக்கு  சென்று அவனை மிரட்டி விட்டு வந்தான். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் விஜய் போகும் கார் மரத்தில் மோதி ஒரு மாதம் படுக்கையில் இருக்கும்படி ஆகிவிட்டது.அனைத்திற்கும் காரணம் யதுவீர் தான் என்பதை உறுதியாக நம்பிய ராஜன் தன் மகன் போல் இல்லாமல் அமைதியாக காய் நகர்த்த  தயாரானார்.

   அதன்படியே எப்படி தன்மகன் காரை யதுவீர் ஆக்சிடன்ட் செய்தானோ அதே போல் அவன் காரையும் ஆக்சிடென்ட் செய்ய இரு டிப்பர் லாரிகளை அவன் காரின் பின்னால் அனுப்பி வைத்தார்.

 

யதுவீர் வாங்கிய அவார்ட்டை தன்னுடைய பிஏ ஆதவன் இடம் கொடுத்துவிட்டு தனியாக தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றான். 24 மணி நேரமும் பிசினஸை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் அவன் மூளைக்கு ஒரு நாளும் சலிப்பு தட்டியதில்லை.

  பதினைந்தாவது வயதிலேயே அவர்களின் பிசினஸின் மீதும் குடும்ப பேரின் மீதும் பெரும் ஈர்ப்பு வந்து விடவே சிறுவயதில் இருந்து அவர்கள் தொழிற்சாலைக்கு சென்று சிறிது சிறிதாக கற்க ஆரம்பிக்க அவன் ஆர்வத்தை கண்ட அவன் தந்தை யதுநந்த சக்கரவர்த்தி தன் மகனிடம் படிப்பை நல்லபடியாக முடித்துவிட்டு வா உனக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுத் தருகிறேன் என்று கூறியதும் தான் தாமதம்.

 

அதன் பிறகு வந்த அனைத்து தேர்வுகளிலும் முதலிடத்தை பெற்று காலேஜ்லையும் யூனிவர்சிட்டி டாப்பராக மாறிய மகனை திருப்தியுடன் பார்த்த யது நந்தனும் வாக்கு கொடுத்த படி  யதுவீரின் இருபதாவது வயதில் பிசினஸை பற்றி கற்றுத்தர அனைத்தையும் தெளிவாக உள்வாங்கி விரைவிலே கற்று தேர்ந்தான்.அதன்படி 25 வது வயதில் அனைத்து பொறுப்புகளும் அவனிடம் ஒப்படைக்கப்பட ஐந்தே வருடத்தில் தனது முத்திரையை அனைத்து இடங்களிலும் பதித்தான்.

  

சிறுவயதில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் யோசித்துக் கொண்டே தனது பிம்டபல்யு x5 யை ஓடிக்கொண்டிருந்தவன். தனது காரை இரண்டு லாரிகள் தொடர்வதை கண்டதும் உதடுகளில் இகழ்ச்சி புன்னகையும் கண்களில் அலட்சியமும் தோன்றியது.

  அதே நேரத்தில் விழாவை விட்டு கிளம்பும் போது பார்த்த ராஜனின் கோவமான முகமும் நினைவு வர அவன் உதடுகளோ அணிச்சியாக சில்லி ராஜன் என்று முணுமுணுத்து  இருந்தது.

 

காரின் வேகத்தை குறைத்தவன்.அவர்கள் தன்னை நெருங்கும் போது வேகத்தை அதிகப்படுத்தி போக்கு காட்டிக்கொண்டே அவர்களை அரை மணி நேரத்திற்கு மேலாக அலைய விட்டான்.அதில் கடுப்பான லாரி டிரைவர்கள் விரைந்து அவனை தாக்க வர அதைப் பார்த்ததும் இதழ்களில் அலட்சிய புன்னகை.

   தன் காரின் வேகத்தை குறைக்க விரைந்து வந்து கொண்டிருந்தவர்களுக்கு காரின் வேகம் குறைக்கப்படவும் தடுமாற அதற்குள் காரை அவன் ஒடித்து  திருப்பியத்தில் எதிரே இருந்த பெரும் ஆலமரத்தில் லாரி மோதி அப்படியே நின்றது. உயர் வேகத்தில் அதனை பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் முன்னாள் இருந்த லாரியின் மீது பட அப்படியே முன்னால் இருந்த லாரி நொறுங்கி சாய்ந்தது.

   அதைப் பார்த்த யதுவிருக்கோ இதழ்களில் வெற்றி புன்னகை தோன்ற அடுத்த நிமிடமே தன் காரை உயர்வேகத்தில் செலுத்தினான். இடையில் போன் கால் வர அதை அட்டென்ட் செய்ததும் எதிர்ப்புறம் கொஞ்சம் குரல் என்ற பெயரில் செயற்கையாக நந்து மாமா என்று அழைத்த அவனின் அத்தை பெண் சௌந்தர்யாவின் குரலை கேட்டு கடுப்பில் பல்லை கடித்தான்.

சௌந்தர்யா பிகேவ் யுவர்செல்ப். ஒழுங்கா பேசு என அதட்ட எதிரில் இருந்தவளுக்கு எப்படியும் முகம் சுருங்கி போயிருக்கும் ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவனுக்கு கவலை இல்லை.செயற்கையான கொஞ்சல் செயற்கையான பாசம் அக்கறை இருப்பது போல் நடிப்பது இது அனைத்தும் அவன் வெறுக்கும் விஷயங்களில் ஒன்று.

   ஆனால் அந்த குணங்களின் மொத்த உருவமாக இருக்கும் சௌந்தர்யா தான் இன்னும் 15 நாட்களில் அவனுக்கு மனைவியாக போகிறாள். அதை நினைக்கவே வேம்பாக கசந்தாலும் தன் தாய் தந்தை ஆசைக்கு கட்டுப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.

   அடுத்தவர்களின் விருப்பத்திற்கு சம்மதிப்பவன் அவன் கிடையாது.அவன் தந்தையும் அதே போல் தான் உனக்கு பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் என்று கூறியிருந்தாலும் அவர் கண்களில் தன் தங்கை மகளை இந்த வீட்டின் மருமகளாக கொண்டு வர வேண்டும் என்ற ஏக்கத்தை கண்டு இதுவரை எதுவுமே கேட்காத தந்தைக்காக அவர் ஆசைப்படி திருமணத்திற்கு சம்மதித்திருந்தான்.

  பணத்தின் மீது பெரும் மோகம் அலட்சியமான பேச்சு சிறிது செயற்கை தன்மையுடன் பேசும் தன்மை இதை தவிர அவளிடம் குறை சொல்லும் படியாக எதுவும் இல்லை. அழகி தான் அதிலும் தன்னை எவ்வாறு அழகாக காட்ட வேண்டும் என்பதை தெரிந்தவள்.

  

இங்கு அதற்குள் சௌந்தர்யாவோ இரண்டு பக்கத்திற்கு அன்று நடந்ததை அவன் காது ஜவ்வு கிழியும் படி கொஞ்சம் குரலில் கூறியிருந்தாள்.அனைத்தையும் கேட்டவனுக்கு தலை வலி வராதது தான் மிச்சம். அவன் நினைத்ததோ அவளை மாற்றி விடலாம் என்று ஆனால் இங்கே அவளோ எவ்வளவோ அதட்டி கூறியும் அவள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

  வேலை நேரத்தில் ஆபீஸ்க்கு கால் செய்வது ஆபீஸ்க்கு வருவது என்று இருக்கக் கூடாது என்று சொன்னாலும் அப்போதுதான் முன்னாள் வந்து நிற்பாள். ஏன் இவ்வாறு செய்தாய் என்று தீ பார்வை   பார்த்தாலும் அசட்டு சிரிப்பை சிந்தி மறந்து விட்டேன் என்று கொஞ்சியபடி அதற்கு மேல் அவள் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது.

   அதற்கு மேல் அவளின் கிளி பிள்ளை மொழியை கேட்க முடியாமல் அப்படியே கட் செய்து வைத்தவன்.தலையை அழுத்தமாக கோதிக் கண்டு காரை ஓரமாக நிறுத்தினான். இந்த திருமணம் தேவைதானா என்று இத்தோடு நூறாவது முறையாக தோன்றுவிட்டது.

   பிசினஸ் அனைத்திலும் ஜெயித்தவன்.வாழ்க்கையில் எப்படியும் தோற்க மாட்டான்.ஆனால் பரஸ்பரமாக சௌந்தர்யாவிடம் எந்த உணர்வும் தோன்றாதது தான் இங்கு பிரச்சினையாக இருக்கிறது. அனைத்தையும் யோசித்தவன். தூரத்தில் கேட்ட இடி சத்தத்தில் திரும்ப எதிரே தெரியும் காட்சிகளை கண்டு கண்களை இமைக்க முடியாமல் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    30 வருடங்களாக தோன்றாத உணர்வு மின்சாரம் பாய்ந்தது போல் தோன்றியது.அவனின் இறுக்கிய முகம் தன்னிச்சையாக இளக இதழ்களில் சிறு புன்னகை கூட எட்டிப் பார்த்தது. எவ்வளவு நேரம் எதிரே தெரியும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தானோ அவன் காரின் பின்னால் கட்டுப்பாடு இன்றி வந்த லாரி ஆனது அவன் காரின் மீது மோத உயர் வேகத்தில் வந்த லாரியின் விசையால் அவன் கார் இரண்டு குட்டி கரணம் அடித்து அங்கிருந்த ஒரு பெரும் பாறையில் மோதியது.

   விலை உயர்ந்த கார் என்றாலும் ஹர்பேக் வந்திருந்தாலும் இரண்டு முறை அடித்த குட்டி கரணங்களால்   ஒன்றும் ஆகாத கார் பாறையில் மோதியதும் முன் பக்கம் முழுவதும் நொறுங்கியது. ஹர்பேக்கை கிழித்துக்கொண்டு காரின் பாகங்கள் அவன் உடலை துளைக்கும் முயற்சி செய்து கொண்டிருந்த பின் தலையிலையோ பலமான அடிபட்டு நெற்றியில் ரத்தம் வடிந்தது.

  

கால் நொறுங்கிய காரின் அடிப்பாகத்தில் நன்றாக மாட்டிக்கொண்டு இருந்தது.  கைகளிலோ காரின் பாகங்கள் பட்டு பல இடங்கள் கிழித்து ரத்தம் சொட்டு கொண்டிருந்தது. பிரதான சாலை என்பதால் மக்கள் உடனே கூடி விட அந்த பக்கமாக ஒரு ஆம்புலன்ஸ் போகவும் உடனே நிறுத்திய நல்லுள்ளங்கள்.

  அவனை காரில் இருந்து வெளியே எடுத்தார்கள். பார்த்தவுடன் ஆழமான காயம் என்று தெரிந்தாலும் விட்டு செல்ல மனமில்லாமல் அனைவரும் ஆம்புலன்ஸ்சில் அவனை ஏற்ற அவன் கண்களோ அரை மயக்கத்தில்  எதிரில் எதையோ தேடி அது இல்லாமல் போக ஏமாற்றத்துடன் கண்ணை மூடியவனின் உதடுகள் வலியிலும் ஹனி என்று முணுமுணுக்க அப்படியே ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றான்.

 ஹலோ நட்புக்களே…

 1.  நான் உங்களின் முரடனின் தேவதை 360. கதைய படிச்சு பாத்துட்டு உங்களோட அன்பான விமர்சனங்களை சொல்லுங்க 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
15
+1
1
+1
2

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Indhu Mathy

   நைஸ் ஸ்டார்ட்…. 🤩
   அப்படி என்ன பார்த்தான்…. பொண்ணா… 🤔 கவனக்குறைவால இப்போ accident ஆயிடுச்சு… 😨